Sunday, 31 January 2021

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியை கண்டுக்கமாட்றான்'னு.. மட்டம் தட்டுவாங்க..!!

2, பொண்டாடியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி வாரான்.. பொண்டாட்டி தாசன்'னு கட்டம் கட்டுவாங்க..!!

3, அது போகட்டும்.. ஒரு பொண்ணை பார்த்து.. அழகா இருக்கே'னு சொன்னா.. அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுறாங்க..!!

4, கண்டுக்காம போன.. அழகை ரசிக்க தெரியாத ஜடம்..ன்னு அமுக்கி வைப்பாங்க..!!

5, ஏதாச்சும் அழுதோம்..ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரு'னு சொல்லுவாங்க..!!

6, திடமா இருந்தா.. நெஞ்சில ஈவு இறக்கம் இல்லாத அரக்கன்'னு வாருவாங்க..!!

7, பொண்டாடியை கேட்டு முடிவெடுத்தா.. தானா முடிவு எடுக்க தெரியாத.. முட்டாள்'னு பட்டம் கட்டுவாங்க..!!

8, சரி'னு நாமளே ஒரு முடிவெடுத்தா.. ஆம்பளை'ங்கற அதிகாரம்..ன்னு திட்டுறாங்க..!!

9, ஏதாவது பிடிச்சத வாங்கிட்டு போய் கொடுத்தா.. என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறிங்க..? அப்படி'னு ஒரு நக்கல்..!!

10, ஒன்னுமே வாங்கிட்டு போகலை'னா.. ஒரு முழம் பூவு'க்கு கூட.. நான் விதியத்து போய்டேனா..ன்னு மூக்கை சிந்திட்டு.. விக்கல் வேற..!!

11, ஒரு குறிக்கோளோடு உழைச்சா.. வேலையை கட்டிக்கிட்டு.. மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி.. ன்னு ஒரு ஏசல்..!!

12, சரி'ன்னு சினிமாவுக்கு அழைச்சிட்டு போனா.. அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணும்'ங்க.. எப்படி உழைச்சி முன்னேறி.. கார் பங்களா வாங்கி இருக்கான்.. பாத்தீங்களா..? ன்னு.. ஒரு பூசல்..!!

13, இதையெல்லாம் கேட்டு.. சகிப்பு தன்மை வந்து.. வாழ்க்கையே வெறுத்து.. தற்கொலை செய்து கொள்ளலாம்'னு முடிவெடுத்தா.. இத பாரு.. வாழ்வதற்கு பயந்து கொண்டு.. தற்கொலை செய்ய பாக்குறான்.. பயந்தா கொள்ளி பய.. ன்னு சொல்லுவாங்க..!!

14, சரி'ன்னு இது போல.. பூசல்களை கேட்டும் கேக்காமல் தன் வழியே ஒரு ஆண் நடந்து போனா.. இதப் பாரு நாம பேசுற பேச்சுக்கு.. இதே வேற எவனா இருந்தா தூக்குல தொங்குவான்.. இவன் ஒரு மானாங்கெட்ட பய.. ன்னு சொல்லுவாங்க..!!

அன்பு நண்பர்களே...
இத பார்த்து நல்லா இருக்கு'னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம் அப்படி'னு சொல்லுவாங்க..!!

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்'னு எழுதினா.. உலகம் தெரியாத பைத்தியகாரன்..ன்னு சொல்லுவாங்க..!! 

பொதுவா ஆண்களுக்கு பிரச்சினை.. இருந்து கொண்டே தான் இருக்கு..!!

Best regards,

மாரடைப்பால் மரணம்

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக
இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/41/43/46
இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர்.
தயவு செய்து யாரும் புரோட்டாவும்
முட்டையும் அதிக அளவில் தினமும்
உட்கொள்ள வேண்டாம்... பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு
பாதிப்பு அதிகம்.
திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு/)
தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால் பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர் தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்.
புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!
புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு, புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.
இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக இளைஞர்களைக் கவரும் புரோட்டா பலவகை இதன் விற்பனை நாளுக்கு நாள் உயர்ந்தே வருகிறது.
ஆனால் இந்த புரோட்டாவினால் உடலுக்கு தீங்கு வரும் என்று உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மைதாவில் உள்ள தீங்குகளைப் பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகள் மைதா பொருட்களுக்கு தடைவிதித்துள்ளன.
புரோட்டா மட்டுமல்லாமல் இன்னும் பல வகை உணவுகள் இந்தக் கொடிய மைதாவால் செய்யப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையால் மைதா மாவினால் செய்யப்பட்ட உணவு புழங்கத் தொடங்கின. புரோட்டாவும் பிரபலமடைந்தது.
மைதாவில் நார்ச்சத்து எதுவும் கிடையாது. அதனால் நமக்கு செரிமான சக்தி குறைந்து விடுகிறது. குறிப்பாக இரவில் புரோட்டா சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, மைதா மாவினால் தயாரிக்கப்படும் ரொட்டிப் பொருள்கள், கேக் வகைகள் போன்றவைகளை நாம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
நன்றாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். 
ஆனால் அதிலிருந்து மைதா தயாரிக்க கோதுமை மாவில் ‘பெண்ஜையில் பெராக்ஸைடு’ என்னும் ரசாயனம் சேர்க்கப்படுகிறது.
இந்த ரசாயனம்தான் நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். புரோட்டீன் சத்துடன் சேர்ந்து கணையத்தை சேதமாக்கி நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது. அதுமட்டுமல்ல, அலோக்கான் என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்கவும், ஆர்ட்டிஃபிசியல் கலர், மினரல் ஆயில், டேஸ்ட் மேக்கர், சாக்கரின் சர்க்கரை அஜினேமோட்டோ போன்றவை சேர்க்கப்படுவதால் புரோட்டா இன்னும் அபாயகரமாகிறது. மைதா சாப்பிடுவது இந்தியாவில்தான் அதிகம்.
உலகளவில் சர்க்கரை நோயாளிகளும் நம் நாட்டில்தான் அதிகம். மேலும் சிறு நீரகம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களும் இதனால் வருவதாக கூறுகிறார்கள்.
கேரளாவில் இந்த விசயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தொண்டு நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிப்பது கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் இயங்கும் மைதா வர்ஜனா சமிதி ஆகும். பாலக்காடு மாவட்டம் முழுவதும் மைதாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களிலும் அங்கு பிரச்சாரம் தொடர்கிறது.
இனிமேலாவது நம் பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு, சோளம் உட்கொண்டு அந்நிய உணவான மைதா என்கிற ரசாயனம் கலந்த புரோட்டாவை புறம் தள்ளுவோம். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறையையும் காப்போம்...புரோட்டாவும் முட்டையை சேர்த்து சாப்பிட கூடாது. புரோட்டாவை புரந்தள்ளுவோம் 🤝🏼🤝🏼🤝🏼🤝🏼அனைத்து குரூப்பில் பகிரவும் அப்பாவி மக்கள் ஏமாற வேண்டாம்

Best regards,

பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

 பாட்டி அடிக்கடி சொல்லுவாள்

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

கால் மேல் காலைப் போடாதே
காலையில் அதிகம் தூங்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுதே கிடக்காதே

மலஜலம் அடக்கி வைக்காதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அதிகமாகப் பேசாதே

எண்ணெய் தேய்க்க மறக்காதே
சந்தியில் நீயும் உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

தீய வார்த்தை பேசாதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பத்தை மறக்காதே

எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே
எந்தன் குடியில் மூத்தோரே
எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே
என்றும் வளமாய்த் தீர்வோரே

என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே

Best regards,

Friday, 29 January 2021

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா?
வாழ்ந்து கெட்டவர்கள். வாழ்வைத் தொடர நேரும் அவலம். அதை விடக் கொடூரமான விசயம் எதுவுமில்லை.

கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்.
"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள்.

1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன் 
என் வீட்டிற்கு 
ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..?

2 )ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். 
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
எவ்வளவு பெரிய நடிகர்..! 
எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
 படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! 
எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

3) என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. 
ஒரு நடிகை. 
ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா அரசி.  
 என்னைப் பார்க்க வந்தவர், 
'வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்' என்று மெல்லிய குரலில் சொன்னார்.

4)சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.
ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.
'ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில் நிலையத்தில் அவர் ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையைக் காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன் அந்தப் பழைய நிகழ்வுகளை:-

1)கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.

2)என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.

3) நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

4)எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களை விடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், 'நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!

எதுவும் மரணம் வரைதான். இதுதான் மனிதவாழ்க்கை.

இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம் மரணத்தை விடக் கொடூரமானது. சமயங்களில் மரணம்தான் விடுதலையோ என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது..
ஆம் வாழ்ந்தவனின் நினைவுகள்போதும் அவனை வறுமையில் கொல்ல....
இருக்கும் வரை ......

பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்...
முடிந்தவரை உதவி செய்யுங்கள்...
முதியவர்களிடம் கனிவு காட்டுங்கள்...
இன்று நாம் செய்வது நாளை நமக்கு கிடைக்கும்..‌‌.
மனதில் கொள்ளுங்கள்...


Best regards,

Friday, 15 January 2021

வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?

வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?

1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.

சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது,  வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்”  என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.

அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,

கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.

அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.

சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.

சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.

சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.

1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.

2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.

அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.

அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;

ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்;

19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.

6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.

இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.

அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,

இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.

67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,

74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.

வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.

சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்,

திருமணம் நிலை குலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்.

அங்கு போல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்.

குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.

வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது.

ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன.

சேமிப்பும் குறைகிறது.

எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல.

உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம்.

ஆதலால் தான் நம்  வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்,

(கிளப்பு கடைகளில்) சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்.

ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...",

Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,

மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,

இது ஒரு பேராபத்து...

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்...

முன்பெல்லாம் நம் முன்னோர்கள்,

யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள், ஆகையால்  வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.

அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்.

காலையில் எறும்புக்கும்,

பகலில் காக்கைக்கும்,

இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்.

குடும்பமாய் இருங்கள்.

ஒற்றுமையாய் வாழுங்கள்...


 படித்ததில் பிடித்தது....
regards,

நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன். புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.

நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன். புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.

புத்தர் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். யாரோ வேட்டையாடுபவர்களின் அம்பானது அவனது உடலில் பாய்ந்திருந்தது.

அவன் உயிருக்குப் போராடுகிறான். அவன் ஒரு தத்துவவாதி. புத்தர் அவனிடம் "இந்த அம்பை உனது உடலில் இருந்து எடுத்துவிட முடியும். அதை எடுப்பதற்கு என்னை அனுமதி"என்று கேட்டார்.

அந்த மனிதன் "கூடாது, தயவுசெய்து இதற்குக் காரணம் யார் என்று முதலில் எனக்கு தயவு செய்து கூறுங்கள்? எனது விரோதி யார்? இந்த அம்பு ஏன் எனது உடலைத் துளைத்தது? என்ன கர்மத்தின் பலன் இது? இந்த அம்பில் விஷம் தடவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கூறுங்கள்"என்று கேட்டான்.

அதைக்கேட்ட புத்தர் "விசாரணையை நீ பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்த அம்பை வெளியே எடுக்க விடு. ஏனெனில் நீ இப்போது சாவின் விளிம்பில் இருக்கிறாய். முதலில் இந்த விசாரணைகள் எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் இந்த அம்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என்றால் நீ உயிர்பிழைக்கப் போவதில்லை." என்று பதில் கூறினார்.

இந்தக் கதையை புத்தர் நிறைய தடவை கூறியுள்ளார். இதன் மூலம் அவர் கூறுவது என்ன?

நாம் அனைவரும் சாவின் விளிம்பில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம். மரணத்தின் அம்பு உன்னை ஏற்கனவே துளைத்து விட்டது. நீ அதை அறிந்திருக்கலாம். அல்லது அறியாமல் இருக்கலாம். மரணத்தின் அம்பு ஏற்கனவே ஊடுருவி விட்டது.

அம்பு கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கஷ்டம் இருக்கும். நீ படும் துன்பம் மரணத்தின் அம்பு உனக்குள் ஊடுருவிச் சென்று விட்டதாகக் காட்டுகிறது.

எனவே, "இந்த உலகைப் படைத்தது யார்? ஏன் படைத்தான்? நான் ஏன் படைக்கப்பட்டேன்? எனக்குப் பல பிறவிகள் உண்டா? அல்லது ஒரு பிறவிதானா? நான் இறந்த பிறகு உயிரோடு இருப்பேனா அல்லது இல்லையா?" என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்காதே.

அதனால்தான் புத்தர், "பிறகு விசாரணை செய்து கொள். முதலில் துன்பம் என்னும் இந்த அம்பு வெளியே எடுக்கப் படட்டும்"என்று கூறுகிறார்.

மேலும் புத்தர் சிரித்துக் கொண்டே, "இந்த அம்பு வெளியே எடுக்கப்பட்ட பின்னர் இதைப் போன்று விசாரணை செய்கின்ற யாரையும் நான் ஒருபோதும் கண்டதில்லை." என்று கூறினார்.

--ஓஷோ--

Best regards,

மாட்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! 🐂

மாட்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! 🐂




🐄 உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டு பொங்கலாகும். இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப்பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
கால்நடைகளை அழகுப்படுத்துதல் :

🐄 மாட்டு பொங்கல் அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். கால்நடைகளுக்கு பொங்கல் கொடுக்கும் போது பொங்கலோ பொங்கல்! மாட்டு பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக! என்று கூறுவார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.

🐄 இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

🐂 ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.

Best regards,

புரிந்துகொள்ளுங்கள் பெண்களே

 புரிந்துகொள்ளுங்கள் பெண்களே.... 💃





👨‍👩‍👧‍👦தகப்பனின் சொத்தில் பெண்களுக்கு பங்கு கொடுக்க தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...

👨‍👩‍👧‍👦ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்-தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக்கொள்வார்கள்... அதன் பிறகு.. அவர்கள் பங்காளிகள் மட்டுமே.. இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும்.. அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துகொள்வதோடு சரி.. மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும்.. பின் வசூலிக்கப்படும்.. சமயங்களில் வட்டியுடன்...

👨‍👩‍👧‍👦ஆனால் பெண்களுக்கு பாகம் எதுவும் கொடுப்பது இல்லை... மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள்.. நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல் நீளும்... பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக இருக்கும்... அதோடு விடுவது இல்லை... சீமந்தம், புள்ளை பேரு.. பெயர் சூட்டுதல் தொடங்கி... அந்த பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்...

👨‍👩‍👧‍👦எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்கு போயிருக்கும்...

👨‍👩‍👧‍👦இதை எந்த ஆணும் கணக்கு பண்ணி பார்த்து "இல்லை இல்லை... நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்கு கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடன வாங்கியோ.. தமக்கு கிடைத்த சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையை பூர்த்தி செய்வான்...

👨‍👩‍👧‍👦நியாயமாக வரதட்சிணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான்... தந்தையின் சொத்தை பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தை கொடுத்துவிட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம்.. கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்.. அப்படியே இருந்தாலும் அதை கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக்கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம்... ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை...

👨‍👩‍👧‍👦வேறு வீட்டில் வாழப்போகும் பெண்ணுக்கு கடைசி வரை பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழிதான் சீர் செனத்தி எல்லாம்... அப்படி பாகமாய் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டுவிட்டால் அந்த பெண் ஆதரவற்று போவாள்... இவனும்.. எனக்கு தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழி கொடுக்காமல் அந்த உறவை பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களை பாகமாய் பிரித்து கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டுவிட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுத்தார்கள்...

👨‍👩‍👧‍👦பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று அரசு அறிவாளியாய் யோசித்து கொண்டுவந்த சட்டம் அந்த உறவை முறிக்கும் முட்டாள்தனம் என்பது உணராத பெண்கள் தான் சொத்தில் பங்கு எங்கள் உரிமை என்று போராட கிளம்புகிறார்கள்... ( எங்கோ ஒரு சகோதரன் ஒன்றும் செய்யாமல் ஏமாற்றிவிட்டான் என்பதற்காக வழக்கு தொடுப்பவர்களை சொல்லவில்லை...)

👨‍👩‍👧‍👦நீயும் அவன் கூட தான பொறந்த... உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையான்னு உசுப்பி விடுற அரசோ- போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க.. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான்.. ஏன்னா அவன் தான் சக உதிரன்.

Best regards,

சூரரைப் போற்று

சூரரைப் போற்று 🔥





🌹தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி,கேரளா மலைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடி, வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஒரு ஆறு தான் முல்லை ஆறு.

🌹அப்படி வீணாக கடலில் கலந்த தண்ணீரை மேற்கு நோக்கி,அதாவது தமிழகத்தை நோக்கி திருப்பினால்,வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும்,அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும்,கிழக்கு நோக்கி செல்லும் முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை மேற்கு நோக்கி,தமிழ்நாட்டை நோக்கித் திருப்ப ஒரு திட்டம் போடப்பட்டது.

🌹அருமையான அந்தத் திட்டம்,திட்டம் என்றளவிலேயே காகிதத்திலேயே நின்றுவிட்டது.

🌹காரணம்,அந்தத் திட்டத்தில் இருந்த மிகக் கடினமான சவால்கள்.

🌹எந்த விதமான வசதிகளும் இல்லாத,முறையான பாதை கூட இல்லாத அடர்த்தியான வனப்பகுதி,வன விலங்குகள்,மலேரியா போன்ற கொள்ளை நோய்களைப் பரப்பும் கொசுக்கள்,அட்டைப் பூச்சிகள்.... என நீண்ட சவால்களுக்குப் பயந்து அந்த அணை கட்டும் திட்டத்தில் எந்தப் பொறியாளருமே ஆர்வம் காட்டவில்லை.

🌹இப்படியான ஒரு சூழ்நிலையில் சவால்களை உடைத்து அணையை சாத்தியமாக்கும் ஒரு சாகசக்காரனை பிரிட்டீஷ் அரசு வலை வீசித் தேடிக் கொண்டிருந்தது.

🌹1885 களில் சென்னை மாகாணத்தில் ஓரிடத்தில் கிரிக்கெட் போட்டி நடத்திக் கொண்டிருந்த "அவரின்" காலில் வந்து அந்த வலை வந்து விழுந்தது.

🌹To,

🌹Mr."கர்னல் ஜான் பென்னி குவிக்" என்று தொடங்கிய அந்த கடிதம்,

🌹"மிஸ்ட்டர்,ஜான்,

🌹மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்,ஒரு அணையைக் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.உடனடியாக மதுரைக்கு வரவும்.. "

🌹--அவரது கைகளுக்குக் கிடைத்தது.

🌹கிரிக்கெட் பேட்டை கீழே வைத்துவிட்டு இன்ஜீனியரிங் டிராப்ட்டரை கையில் எடுத்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினார் பென்னி குவிக்.அவரிடம் அணை கட்டும் திட்டத்திற்கான வரைவு உட்பட பல விவரங்கள் தரப்பட்டது.

🌹1887 ல் அணை கட்டும் பணி தொடங்கியது.

🌹தொடங்கியது என்ற இந்த வார்த்தையை எளிதாக வாசிப்பதைப் போல இருக்கவில்லை அந்தப் பணி.எந்தவொரு பொருள் தேவைப்பட்டாலும்,அந்த சிறியதோ,பெரிதோ,அது மதுரையில் இருந்து தான் வர வேண்டும்.கடுமையான காட்டுப் பகுதியின் வழியாக,வர பல நாட்களாகும்.இப்படியான சூழ்நிலையில் அணை கட்டும் பணி தொடங்கியது.

🌹எக்காரணம் கொண்டும் அணை கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும்.நமக்கு இருக்கிறதோ இல்லையோ,தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்....என்பன போன்றவைகளில்,தான் கட்டப் போகும் அணையை விட உறுதியாக இருந்தார்,பென்னி குவிக்.

🌹அணை கட்டும் பணியும் வேகமாக வளர்ந்தது.பாதி அணை கட்டி முடிவடைந்த நிலையில் காட்டில் கடுமையான மழை வெளுத்தெடுத்தது.அந்த மழையில் பாதி கட்டப்பட்ட அணை உடைந்து,வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.சர்வ நாசம்.மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

🌹மனம் தளரவில்லை பென்னி குவிக்.மீண்டும் தொடங்கினார்.

🌹ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்த அணைக்கான சவால்,இம்முறை வன விலங்குகள் வடிவத்தில் வந்தது.மிகப் பெரும் யானைக் கூட்டம் வந்து அணையை முட்டி,மோதி,உடைத்துச் சிதைத்துப் போட்டன.

🌹இரண்டாவது முறையாக துவங்கிய இடத்திலேயே பூஜ்ஜியத்தில் வந்து நின்றார் பென்னிகுவிக்.

🌹மூன்றாம் முறை பணியைத் தொடங்கலாம் என்று நினைத்த பென்னி குவிக்கின் படைகளை மலேரியா தாக்கியது.

🌹இப்படி தொடர்ச்சியான துன்பங்களைப் பார்த்த பிரிட்டீஷ் அரசு,அணை கட்டும் பணியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து பென்னி குவிக்கை திரும்ப அழைத்தது.

🌹சென்னையில் வைத்து நடந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் கூட்டத்தில் பென்னி குவிக்கிடம் அணை கட்டும் பணியை அப்படியே நிறுத்திவிட்டு,நீங்கள் வடஇந்தியாவில் பணிக்குச் செல்லுங்கள் என்ற உத்திரவு தரப்பட்டது.

🌹ஆனால் அந்த உத்திரவை பென்னி குவிக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

🌹"நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே.ஆகையால் நான் வந்து சென்றதன் அடையாளமாக மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறேன்.அந்த அணை கட்டப்பட்டால்,அதனால் பல லட்சக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும்.லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.எனவே நான் என் சொந்தத் பணத்தில் அணையைக் கட்டப் போகிறேன்..."

🌹--என்று கூறிவிட்டு வெளியேறினார்.

🌹வெளியே வந்தவர்,உடனடியாக தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கு-அயர்லாந்துக்கு கப்பலேறினார்.அங்கு சென்று தனக்கு சொந்தமானது என்றிருந்த சகலத்தையும் விற்றார்.எதையும் விடவில்லை.தன் பாட்டனார் தனக்குத் தந்த வீட்டையும் விற்றார்.ஓரளவிற்குப் பணம் கிடைத்தது.எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்தார்.

🌹மீண்டும் அணையைக் கட்டும் பணியைத் தொடங்கினார்.இம்முறை இயற்கை ஒத்துழைத்தது.அணை வேகமாக வளர்ந்தது.

🌹கடல் மட்டத்தில் இருந்து 2980 அடிகள் உயரத்தில்,

🌹அடர்ந்த காட்டின் நடுவே,

🌹முல்லை என்ற ஒரு காட்டாற்றின் போக்கை மாற்றியவாறு,

🌹146 அடிகள் கொள்ளளவுடன்,

🌹1895 ல் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக எழுந்து நின்றது.





🙏 பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு,179 வது பிறந்தநாள் வாழ்த்துகள்.. 

Best regards,

தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !

தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !... 👩‍👦





👩‍👩‍👧‍👦அண்ணன்,
தம்பி, அக்கா,தங்கை,
சின்ன அண்ணன்,பெரிய அண்ணன், சின்ன அக்கா,பெரிய அக்கா,
சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு,மாமன் பொண்ணு,
மாமன் பையன்...

👩‍👩‍👧‍👦இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 ஆண்டுகளுக்கு மேல் யாருடைய காதிலும் பாசத்தோடு விழாது.

👩‍👩‍👧‍👦யாரும் கூப்பிடவும் மாட்டார்கள் !

👩‍👩‍👧‍👦அகராதியில் இருந்தே கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடலாம்!!! 

👩‍👩‍👧‍👦 காரணம்!!!
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான் ! 

👩‍👩‍👧‍👦அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்? 

👩‍👩‍👧‍👦பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர் வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத் தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை ! 

👩‍👩‍👧‍👦திருமணத்தின் போது 
அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் 
இருக்கப்போவது இல்லை !

👩‍👩‍👧‍👦மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப் போவது இல்லை, 

👩‍👩‍👧‍👦குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள் ? 

👩‍👩‍👧‍👦கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.

👩‍👩‍👧‍👦இனி யார் போவார் ?

👩‍👩‍👧‍👦ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி 
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.

👩‍👩‍👧‍👦ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாரும் இன்றி அவதிப் பட போகிறார்கள்.

👩‍👩‍👧‍👦அப்பா, அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை, 

👩‍👩‍👧‍👦அந்த ஒரு குழந்தையும் 
வெளியூருக்கோ, 
இல்லை தனிக்குடித்தனமோ சென்று விட்டால் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏன் என்று கேட்க நாதி அற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள் ! 

👩‍👩‍👧‍👦உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு 
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும் 
இதே நிலைதான் !

👩‍👩‍👧‍👦உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?! 

👩‍👩‍👧‍👦சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் 
எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள்தானே வயதான காலத்தில் அப்பா, அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடி வருவார்கள்! 

👩‍👩‍👧‍👦கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரை விட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு ஒன்று என்றால் அத்தனையும் மறந்துவிடக்கூடது  விட்டு முதலில் வந்து நிற்பார்கள்! 

👩‍👩‍👧‍👦ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்து பாருங்கள்! 

👩‍👩‍👧‍👦 பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

👩‍👩‍👧‍👦 ஆனால், உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்துவிடக் கூடாது!

👩‍👩‍👧‍👦கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன் 
ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், 

👩‍👩‍👧‍👦வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு 

👩‍👩‍👧‍👦ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள் ? ? ?

👩‍👩‍👧‍👦ரத்தம் ஏற்றுக் கொள்ளும் உறவு முறையில் திருமணம் செய்யுங்கள்.

👩‍👩‍👧‍👦மக்கள் மாறினால் இனி நீங்கள் உலர்ந்து போன உபயோகமற்ற இத்துப் போன தனி மரம்தான்.
ஜாக்கிரதை !!!



💥 தனி மனித மாற்றமே
நம் சமுதாயத்தின் மாற்றம்......

Best regards,

வேலுநாச்சியார் சிவகங்கை சீமை

 அது 17ம் நூற்றாண்டு, வேலுநாச்சியார் வீழ்த்தபட்டு மருது சகோதரர்கள் சிவகங்கை சீமையினை ஆண்டு கொண்டிருந்த காலம், ஆற்காடு நவாபின் சார்பாக வெள்ளையர்கள் தமிழகமெங்கும் வரிவிதித்த காலம்

அப்பொழுது இராமநாதபுர சேது மன்னர்களின் வரிசையில் அந்த மன்னர் பதவிக்கு வந்தார் அவர் பெயர் முத்துராமலிங்க சேதுபதி

சேதுபதி வம்சம் என்பது பாண்டிய சீமையில் தனித்து நின்ற வம்சம், சேது பூமி எனும் அந்த ராமநாதபுர வம்சத்துக்கு தனிபெரும் கவுரவமும் வரலாறும் உண்டு, கச்சதீவு அவர்கள் சொத்தாகவே இருந்தது, கிழக்கே குவிக்கபடும் முத்துக்களும் கடல்வழி வாணிபமும் வரியும் வைகையின் நீர்வளமும் அவர்களை செழிப்பாக வைத்திருந்தது

ஒரு கட்டத்தில் அவரையும் வெள்ளையன் துணையோடு அடக்கி கப்பம் வசூத்தான் ஆற்காடு நவாப், வெறுவழியின்றி அதை ஏற்றும் கொண்டார், வெள்ளையனும் மிக தந்திரமாக தன் தளபதி ஒருவனை அவரை கண்காணிக்க அவர் அருகே அமர்த்தியிருந்தான் அவன் பெயர் மார்ட்டின்ஸ்

சேதுபதி அன்று கப்பம் கட்ட காரணம் அந்த சேதுபூமி இஸ்லாமிய மயமாகிகொண்டிருந்தது, ஹிஜிர் காலண்டர் ஆர்காடு இஸ்லாமிய பணம் என அது வேகமாக இஸ்லாமியம் ஆயிற்று

மன்னர் அதை தந்திரமாக தடுக்க கப்பம் கட்டி இந்து பூமியாக மாற்றி கொண்டார்

சேதுபதி மன்னரின் முன்னோர் செய்த புண்ணியத்தில் அவருக்கொரு திவான் கிடைத்தார் அவர் பெயர் முத்திருளப்ப‌ பிள்ளை.

அவர் திருநெல்வேலி பகுதியின் ஏழை பிள்ளை, ராமநாதபுரம் பக்கம் உச்சிநத்தம் எனும் ஊரில் ரெட்டியாரிடம் கணக்குபிள்ளையாக சேர்ந்தவர். அபாரமான திறமைசாலி, வருமானம் பெருக்கும் அனைத்து வழிகளும் அறிந்த நிர்வாகி, பண்ணையாரான ரெட்டியிடம் இருந்த அவரின் திறமை அறிந்த சேதுபதி மன்னன் முத்துராமலிங்கம் அவரை தன் திவான் ஆக்கினார்

திருமலை நாயக்கனுக்கு கிடைத்த வடமலையான் பிள்ளை போல சேதுபதிக்கு முத்திருளப்ப பிள்ளை கிடைத்தார்

அவர் பெயர் முத்தருளப்ப பிள்ளை என்பதும் பின் முத்திருளப்ப பிள்ளை என்றாயிற்று என்கின்றது சில ஆய்வு

திவான் ஆனபின் முத்திருளப்ப பிள்ளை அசத்தினார், மிக சரியான சுங்க சாவடி வசூல், கிராமம் கிராமாக ஜாரி மகமை எனும் வரி வசூல், வணிக பொருள் வசூல், டச்சுக்காரரிடம் இருந்து வரி என மிக சீரான முறையில் செல்வம் குவித்தார்

இந்த மகமை வசூல் என்பது கோவில்கள் திருபணிக்கானது, இதனால்   இராமேஸ்வரம் திருக்கோயிலின் 3வது பிரகாரம் சிறப்பாய் முடிந்தது அந்தத் திருப்பணியில் ஈடுபட்டதற்காக, அவரது திருஉருவத்தை கீழக்கோபுர வாசலில் நிறுவியுள்ளதை இன்னும் காணலாம் 

அப்படியே சேது மன்னர்களின் குடும்ப கோவிலான  திருமருதூர் என்ற‌ நயினார் கோவில் ஆலயத்தையும் திருப்பணி செய்வதற்குச் சேதுமன்னர் இவரை நியமித்திருந்தார் என்பதை அங்குள்ள கல்வெட்டு சொல்கின்றது

இந்த திவான் முத்திருப்ப பிள்ளைதான் காவேரிபோல் வைகையினை வற்றாமல் ஓடும் பெரும் நதியாக மாற்ற எண்ணினார், வரலாற்றில் வைகை என்பது மிக சீராக பயன்பட்ட நதி, அதன் வரைபடத்தை பார்த்தாலே உங்களுக்கு விளங்கும்

ஆம் அது மதுரையினை தாண்டி மிகபெரும் ஏரிகளை நிரப்பியபடி கடலில் சென்று கலக்கும் வகையானது, பாண்டியர்களின் நீர்மேலாண்மை அப்படி இருந்தது

பாண்டியர்களின் மதுரை ராஜ்ஜியத்தை நாயக்கர் கைபற்றினர், ஆனால் சேர அரசு அப்படியே நீடித்தபொழுது வைகையில் நீர்வரும் பல ஓடைகள் சேரநாட்டுக்கு அதாவது கேரளாவுக்கு திருப்பபட்டன இதனால் வைகை அடிக்கடி வறண்டது

வைகையின் நீரை பெருக்கும் திட்டத்தை மன்னர் சேதுமதி இருளப்ப பிள்ளையிடம் வழங்கினார், முத்திருப்ப பிள்ளை வைகையின் மூலம் சென்று மலையில் அதற்கான வழிகளை தேடினார்

அப்பொழுதான் அங்கு ஓடு பெரியாறு எனும் ஆறை கண்டார், அது 5 சிறு ஆறுகளை கொண்டு 56 கிமீ ஓடிவந்து  முல்லை எனும் இன்னொரு ஆறை 6வதாக இணைத்து கேரளாவுக்குள் ஓடிகொண்டிருந்தது

இதை தடுத்து நிறுத்தி கிழ்க்கே திருப்பி வைகையில் கலந்தால் வைகை செழிக்கும் என ஆலோசனை சொன்னார் முத்திருளப்ப பிள்ளை, மன்னன் சேதுபதி அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்

ஆம் முதன் முதலில் முல்லை பெரியாரை  வைகையில் திருப்பும் வழியினையும் அணை கட்டவேண்டிய சரியான இடத்தையும் சொன்னது முத்திருளப்ப பிள்ளையே

இது நடந்தது 1792ம் ஆண்டு

அப்பொழுது வைகை செழிக்க மன்னர் அவசரபட்ட காரணம் சேதுநாட்டில் ஏற்பட்ட வறட்சி, இந்த அணை கட்டபட்டால் வறட்சி நீங்கும்

இங்கு இரு சிக்கல் எழுந்தது முதலாவது நான் கொடுக்கும் கப்பம் எம்மக்களுக்காகவே இதனால் அணைகட்டும் பெரும் செலவில் பிரிட்டிஷ் நவாப் கூட்டாட்சி பங்குதரவேண்டும் அல்லது கப்பம் கோரகூடாது என்றார் மன்னர்

இரண்டாவது பஞ்சம் வந்ததால் அங்கு கொள்ளைவிலைக்கு தானியங்களை விற்க வந்த வெள்ளையனை துணிவுடன் தடுத்து மக்கள் நலம் முக்கியம் என்றார் மன்னர்

இது போக கப்ப பணத்தை அதிகபடுத்தினர் பிரிட்டிஷார் காரனம் ஐரோப்பாவில் நெப்போலியன் ஏற்படுத்திய அதிர்வு அப்படியே திப்பு சில்தான் கொடுத்த மிரட்டல்

இவர்களை சமாளிக்க கூடுதல் வரிகேட்டனர் பிரிட்டிசார், மக்களோ பஞ்சத்தில் வாட அது முடியாது அணை முக்கியம் உங்கள் தானியங்களுக்கு நான் வரி விதிப்பேன் என மிரட்டவும் செய்தார்

ஒரு கட்டத்தில் மக்களுக்காக சிந்தித்த மன்னரை தன் கையாளான மார்ட்டின்ஸ் மூலம் அகற்றி சிறைவைத்தனர் வெள்ளையர்

இதில் ஒரு கொடுமையும் நடந்தது சிவகங்கை சீமைக்கும் சேதுநாட்டுக்கும் ஒரு பகை உண்டு, சிவகங்கை சீமை சேதுவின் ஒரு பகுதி என அதை தன் சாம்ராஜ்யமாக கருதினார் மன்னர், இதனால் மருது கோஷ்டியும் உதவிக்கு வரவில்லை, போரும் சிறையுமாக 48 வயதிலே இறந்தார் முத்துராமலிங்க சேதுபதி

அத்தோடு இருளப்ப பிள்ளையின் முல்லை பெரியாறு கனவு முடிந்தது ஆனால் அவர் கொடுத்த திட்டம் அப்படியே இருந்தது

முத்துராமலிங்க சேதுபதிக்கு பின் அவர் அக்கா  மங்களேஸ்வரி நாச்சியார் என்பவரை அரசியாக முடிசூட்டினர் பிரிட்டிசார் 

100 வருடங்கள் கடந்தன‌

அந்த வழியில் வந்தவர்தான் முத்து விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி 1888ல் அவர் சமஸ்தான பொறுப்புக்கு வந்தார், இவர் சென்னையில் படித்த பட்டதாரி

அவர் சேதுபதி மன்னர்களின் இந்து பக்தி மொத்தமாய் கலந்த பிறப்பாய் இருந்தார், முன்னோர்கள் செய்த திருப்பணிகளை தொடர்ந்து செய்தார்

நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் கோவில் கட்டுமானம், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் குட முழுக்கு, கோதண்டராமர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், இராமநாதபுர அரண்மனை இராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் சீரமைப்பு. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில் என ஏகபட்ட திருபணிகளை செய்தார்

1890களில் மிஷனரிகளுக்கும் மதமாற்ற கும்பலுக்கும் பெரும் சவாலாக திகழ்ந்தார்

தன் முன்னோரான அந்த முத்துராமலிங்க சேதுபதி கனவான முல்லை பெரியாறு அணையினை கட்ட முடிவெடுத்தார் விஜயரகுநாத சேதுபதி ஆனால் ஆங்கிலேயரிடம் இருந்து சாதகமான பதில் இல்லை

ஆங்கிலேயர்கள் இங்கு சுரண்டி பிழைக்கும் வியாபாரம் செய்ய வந்தவர்கள், இங்கு நல்லது செய்யவேண்டிய ஆசையும் அவசியமும் அவர்களுக்கு இல்லை என்பதால் மறுத்தார்கள், எனினும் இந்தியா ஓரளவு விழிப்படைய ஆரம்பித்த நேரம் சுதந்திர குரல் சிந்தனைகள் ஒலித்த நேரம் என்பதால் கொஞ்சம் சிந்தித்தனர்

ஆனால் அனுமதி தருவோம் காசுதரமாட்டோம் என்பது போல் இருந்தது அவர்கள் செயல்

கடைசியில் மன்னரே அணைகட்டலாம் என்றும், அதற்கான அனுமதியினை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் இருந்து பிரிட்டிஷ் அரசு பெற்றுதரும் என்றும் முடிவாயிற்று.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் வருவதால் விசாக திருநாள் மகாராஜாவின் திவான் V ராம் ஐயங்காருக்கும் மதராஸ் மாகாணத்தின் செயலாளர் J C ஹன்டிங்டன் என்பவருக்கும் இடையே 999 வருட குத்தகைக்கு 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுக்கபட்டது

அதாவது நீர் வரத்து இருப்பது தமிழக பகுதி நீர்பிடிப்பு பகுதி தமிழக பகுதி ஆனால் அணை கட்ட இருப்பதும் நீர் தேங்ககும் பகுதியும் திருவாங்கூர் சமஸ்தானக்கானது

இந்த 999 குத்தகைக்கு ஏக்கருக்கு 5 ரூபாய் என அன்றே கொடுத்தவன் விஜயபாஸ்கர தொண்டைமான் ஆங்கிலேயன் சல்லிகாசு கொடுக்கவில்லை

மன்னன் அசரவில்லை முன்னோர்கள் கட்டாத அணையினை தான் கட்டுவதாக எழும்பினான், இருளப்ப பிள்ளையும் தன் கொள்ளுதாத்தா முத்துராமலிங்க சேதுபதியும் தன்னை வழிநடத்துவதாக எண்ணி அவர்களை வணங்கி தொடங்கினான்

அணை கட்டுவது என்பது அவனின் மொத்த ராஜ்ய சொத்துக்களுக்கு ஈடான செலவாய் இருந்தது, அவன் அசையவில்லை

அன்று பிரிட்டிஷார் பினாமிகளாக செட்டியார்கள் இருந்தார்கள், பர்மாவில் இருந்து தொடங்கிய உறவு அது, வெள்ளையரின் பணத்தை செட்டியார்கள் மூலம் சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கி அணைகட்ட தொடங்கினான் அந்த உத்தமன்

1893 ஜூலை 21 ல் கடன் 20 லட்சம், 1894 கடனுக்கு அடகு வைத்தவை முழ்க திவாலாகிறது,  1985ல் ஏலம் விடப்பட்டது. 

ஒரு வருடத்திலே கடன் மூழ்குவதும் மன்னன் திவால் நிலைக்கு வருவதும் வெள்ளையனின் மறைமுக விளையாட்டு, வங்கி போன்ற கடன் நிலையங்கள் அவன் கட்டுபாட்டிலேதான் இருந்தன‌

ஆனால் அணை வேலை ஓரளவு நடந்தது, போர்த்துகீஸ் மற்றும் டச்சு தொழில்நுட்பத்தில் அணை எழும்பிற்று எனினும் முழுமையாக பூர்த்தி ஆகவில்லை

பூர்த்தி ஆக வெள்ளையன் விடவுமில்லை, தன் அரசில் ஒரு மன்னன் அணைகட்டுவது தங்களுக்கு அவமானம் என கருதி மறைமுகமாக தடுத்தனர்

மன்னனின் சொத்தெல்லாம் அரசுக்கு சென்றது, எஞ்சியிருக்கும் சில சொத்துக்களுக்கு தன் மழலை ராஜேஸ்வர சேதுபதியினை வாரிசாக்கி அதையும் தர்ம ஸ்தாபனமாக மாற்றிவிட்டு இறந்தான் பாஸ்கர சேதுபதி

அப்பொழுது அவருக்கு வயது வெறும் 35

இன்றைய பணத்தில் பல்லாயிரம் கோடி பணம் மற்றும் 500 பேர் சாவு என்பதோடு அணையின் அத்தியாயம் அன்று முடிந்தது

ஆம் அவர் அந்த முத்துராமலிங்க சேதுபதியின் மறு அவதாரம், அணைகட்ட முயன்று தோற்று 100 வருடம் கழித்து வந்து மறுபடியும் தோற்று 40 வயதுக்குள்ளே இறந்த அந்த மறுபிறப்பு

(ரஜினியின் லிங்கா கதை இந்த பாஸ்கர சேதுபதி பற்றியதே, ஆனால அதை வாய்விட்டு சொல்ல இயக்குநருக்கோ ரஜினிக்கோ மனமில்லை

ஏனென்றால் அதுதான் சினிமா உலகம், அவர்கள் அப்படித்தான்.)

விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்காது, அதுவும் நல்லோர் கண்ட கனவு ஒரு காலமும் தோற்காது

மன்னன் தொடங்கி வைத்த அணை என்னாயிற்று என ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் வரை செய்தி எட்டிற்று

வேண்டா வெறுப்பாக அணைகட்ட பென்னிகுயிக் என்பவனை இழுத்து வந்தனர் அவன் தன் அறிவில் ஒரு அணையினை ஆங்கிலேயன் ஒதுக்கிய பணத்தில் கட்டினான் அது நிலைக்கவில்லை

நிலைக்கவில்லை என்பதை விட பென்னிகுயிக்கின் திட்டம் சரியில்லை என்பதே பொருள்

அரசு பணத்தை வீணாக்கினான் பென்னிகுயிக் என சொல்லி திட்டத்தை நிறுத்தியது வெள்ளை அரசு, ஏனோ அது கட்டபடுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை

தோற்றுபோன பொறியாளன் என்றால் எதிர்காலம் பாதிக்கபடும் என கருதி இன்னொரு பொறியாளனிடம் வடிவம் பெற்று தன் சொத்துக்களை போட்டு எப்படியோ கட்டிமுடித்தான் பென்னிகுயிக்

அவன் புதிதாக கட்டியது கொஞ்சமே அதற்கான அடித்தளம் பாஸ்கர சேதுபதியால் மிக வலுவாக இடபட்டிருந்தது, பெனிகுயிக் செலவழித்தது சொற்பமான பணமே, 1895ல் அணை பயன்பாட்டுக்கு வந்டது

இன்று கம்பீரமாக நிற்கின்றது அந்த முல்லை பெரியாறு அணை

அதற்கு பென்னிகுயிக்கும் ஆங்கில அரசும் காரணம் என சொல்லி பென்னிகுயிக்கு சிலை வைத்து அவனுக்கு மணிமண்டபமும் கட்டி கொண்டாடுகின்றது தமிழக அரசு

இன்று பென்னிகுயிக் என்பவனுக்கு பிறந்த நாள், இது அரசுவிழாவாம்

இதை செய்தது யாரென்றால் திராவிட அரசுகள், ஏன் அவை இப்படி செய்தன என்றால் திராவிட சித்தாந்தமே ஆங்கிலேயனை வழிபட்டு அவன் சொன்னதை உண்மை என நம்பிய கூட்டத்தின் உருவாக்கம்

காங்கிரஸும் திமுகவும் வெள்ளையனின் வாரிசுகள் என்பதால் வெள்ளையன் பென்னிகுயிக் இங்கு சிலையாக நிற்கின்றான் அவனுக்கு தமிழக அரசின் கொண்டாட்டமும் உண்டு

ஆனால் தமிழக இந்து மன்னன் முத்துராமலிங்க சேதுபதியினையும் அவனின் கொள்ளுபேரன் விஜய பாஸ்கர சேதுபதியினையினையும் நினைத்து பார்க்க யாருமில்லை

என்று தமிழகத்தில் காங்கிரசும் திமுகவும் இல்லாத, தேசிய அபிமானமும் இந்து அபிமானமும் கொண்ட இயக்கம் வலுபெறுமோ அன்று பென்னிகுயிக் மண்டபம்  சேதுபதி மண்டபம் என மாற்றபடும்

அவன் சிலைக்கு பதிலாக சேதுபதி மன்னர்களான முத்துராமலிங்க சேதுபதி , விஜயபாஸ்கர சேதுபதி மற்றும் முத்திருளப்ப சேதுபதி ஆகியோரின் சிலைகள் நிறுவபடும்

ஆம் இங்கு மறைக்கபட்டதும் புதைக்கபட்டதும் ஏராளம், எக்காலமும் இங்கு தமிழன் ஒரு இந்தியன் என்பதும் இந்திய மன்னர்களில் அவன் தனித்து இந்துவாக இருந்தான் என்பதும் வெளிவரகூடாது என்ற சதிகார சிந்தனை கொண்டோரின் வில்லதனங்கள் ஏராளம்

சேதுபதி மன்னர்கள் ஏன் அணைகட்ட முயன்றார்கள் என்றால் கோவில்கள் அமைப்பதும் ஏரி குளம் வெட்டுவதும் அவர்கள் சேவையாய் இருந்தன‌

அவர்களை பற்றி சொன்னால் இந்துபக்தி வளரும், தேசாபிமானம் பெருகும், இப்படிபட்ட நல்லவர்களை வெள்ளையன் பாடாய் படுத்தினான் என்ற வரலாறு வெளிவந்துவிடும் அதில் காங்கிரஸ் கொள்கையும்,  திராவிட சிந்த்தாந்தமும் பல்லிளிக்கும் என பல காரணங்களால் அது மறைக்கபட்டு வெள்ளையனே நல்லவன் அவனே அணைகட்டினான் என இங்கு நிறுவியும் விட்டார்கள்

வரலாற்றில் எவ்வளவோ உண்மைகள் புதைக்கபட்டன, அதில் ஆழகிடப்பது முத்துராமலிங்க சேதுபதி, இருளப்ப பிள்ளை, விஜயபாஸ்கர சேதுபதி ஆகியோரின் உழைப்பும் மக்கள் அபிமானமும்

முல்லைபெரியாரின் அடிதளத்தில் அவர்கள் மனம் புதைத்தது போல அவர்களின் பெயரை புதைத்துத்தான் பென்னிகுயிக் சிலை எழும்பி நிற்கின்றது

ஒரு காலம் வரும், அன்று பென்னிகுயிக் சிலை வீழ்த்தபட்டு சேதுபதி பெயரும் சிலையும் கம்பீரமாக எழுந்து நிற்கும்

முல்லை பெரியாறு அணைக்கே அந்த முத்திருளப்ப பிள்ளை பெயர் சூட்டபடும், ஆம் முதன் முதலில் அந்த அணை பற்றி மிக தீர்க்கமாக சொன்னவன் அவனே, அது அமைய காரணமும் அந்த நெல்லையின் பிள்ளையே... ஸ்டான்லி ராஜன்...

Best regards,

Thursday, 14 January 2021

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அன்பு நெஞ்சங்களே!

🌷 சொந்த பந்தங்களே!!

🌺 நட்பு வட்டங்களே!!!



💥 தங்களனைவருக்கும் எமது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...


🏡 தைப்பொங்கல்

🌹தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரிய பகவானை போற்றி வணங்கி வழிபடும் பொங்கல் திரு நாளாக கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மெருகோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். பெண்கள் தான் அந்த விடியலின் விளிம்பில் என்ன சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு ( நான் 126 புள்ளி வச்சு இல்ல கோலம் போட்டேன் போன்ற பறைசாற்றல்களும் கூட இருக்கும். ) தேடிப்பிடித்து பசுஞ்சாணம் கொண்டுவந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாது சமர்த்தாக வைப்பார்கள். பின்னே இதெல்லாம் ஏனோதானோவென செய்ய முடியாது இல்லையா? 

🌹வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் படர்ந்திருக்கிற பூசனிக்கொடியில் கதிரவனை வரவேற்க இதழ் விரிக்கலாமா என தயக்கத்திலிருக்கும் பூசணிப் பூக்களை, அதன் பட்டுப் பூவுடலில் முத்து முத்தாக நிற்கும் பளிங்குப் பனித்துளிகள் சிதறிவிடாமல், அவைகளுக்கு வலி தெரியாமல் மென்மையாகப் பறித்துக் கொண்டு வந்து சாண உருண்டைகளில் செருகி, சற்று எட்ட நின்று பெண்கள் அழகு பார்ப்பதும் கூட அந்தப் பொழுது புலராத வேளையில்தான்.

🌹பச்சரிசி மாவைக் கரைத்து, காவிக் கட்டியை கரைத்து வண்ணப் பொடிகளை சிறுசிறு வட்டில்களில் எடுத்துக் கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச் செருகிக் கொண்டு முன் அறை, சமையல் அறை, நடுக்கூடம் உள் அறை, மாடிப்படி, மொட்டை மாடி, முற்றம் என வீட்டில் ஒரு இடம் பாக்கியில்லாமல் உட்கார்ந்து, எழுந்து தன் கைத் திறமைகளை காட்டும் விடலைப் பெண்களுக்குத் தான் என்ன குதூகலம்!
மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாக பொழிகிறான். அதே போல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காக கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.

🌹”பரியே பொருள் யாவிற்கும் முதலே” என்கிற முறுக்குமீசைக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப் படுத்தி வணங்குதல் கடைப் பிடிக்கப்படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்கு துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சளைத் தரவும் வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.

🌹சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கூட்டி ( கிராமங்களில் தான் பெரும்பாலும் அப்படி… நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் தான்.) மாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறி போல தோகையுடன் கூடிய கரும்புகளை நிறுத்தி இருப்பார்கள். அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு, கரும்புச் சாறில் செய்தவெல்லம் இட்டு, பாலூற்றி, பசு நெய் விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க… ஆயிற்று பொங்கல் பொங்கி வழிய ” பொங்கலோ பொங்கல் ” என்ற உற்சாக குரல்கள் பீறிட பொங்கல் தயார். குடும்பமே கூடிநிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து, கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்கு பூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல்செய்து வணங்குவார்கள். 

🌹எண்சாண் உடம்பும் பூமிதனியில்பட விழுந்து பரிதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்.

🥀 பொங்கலோ பொங்கல்! 

🌹பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும் 
தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில்
மங்குக தீமைகள் பொங்குக வளமைகள்
விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள்
நீங்குக கயமை நிலவுக வாய்மை
நல்குக வெற்றி நலிக தீதென்றும்
நிறைக நிம்மதி நீடுக ஆயுள்



🙏நிலமே செழித்து நீர்வளம் பெருகுக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்!


Best regards,

Wednesday, 13 January 2021

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள்......

ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள்...... 💥


💥மொத்த தற்சார்பும் (self-dependence) Close.

💥 படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு



🐂1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி. 

🐂 மாட்டுவண்டி எங்க தாத்தா ???

🐂 மாடு இல்லையே பா..!! 

🐂2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.

🐂 ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?

🐂மாடு இல்லையே பா..!! 

🐂3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது. 

🐂 மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?

🐂மாடு இல்லையே பா..!! 

🐂4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.

🐂 மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant  என்ன ஆயிற்று ? 

🐂மாடு இல்லையே பா..!! 

🐂5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே - 

🐂 மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??

🐂மாடு இல்லையே பா..!! 

*********

🐂 உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது என்று  திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் பசுவதை கூடங்கள் (cow slaughter houses) அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) -  பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.  

🐂விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான். இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்.. 

🐂 சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?

🐂காளை மாடு இல்லையே பா..!! 

*********
🐂 ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.

🐂 அனைவரும்  சிந்திக்கவே இந்த பதிவு....  விழிப்போம் உயர்வோம்....

Best regards,

Tuesday, 12 January 2021

விவசாய குடும்பத்தில் பிறந்த என் உறவுகளே...!

விவசாய குடும்பத்தில் பிறந்த என் உறவுகளே...!

தயவு செய்து முழுவதும் படியுங்கள்...

தாங்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள்...
வாக்களியுங்கள்...
தவறில்லை அது உங்கள் விருப்பம்..

ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள *வேளாண் சட்ட மசோதா பற்றி முழுமையாக  தெரியாமல் பதிவு செய்யாதீர்கள்....

டெல்லியில் நமக்காக போராடும் போராட்டகார்களை கொச்சைப்படுத்தாதீர்கள்...

போராடியவர்கள் பின்னால் காங்கிரஸ், திமுக கூட இருக்கலாம்...

தவறில்லை...

ஆனால் போராடியவர்களின்  நோக்கத்தை பாருங்கள்...

மீண்டும் சொல்கிறேன் நீங்கள் எந்த கட்சியிலும் இருங்கள், வாக்களியுங்கள்...
 தவறில்லை...

ஆனால் வேளாண் சட்ட மசோதாவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும்   ஆதரிக்காதீர்கள்...

அது முழுக்க முழுக்க விவசாயத்திற்கும்,  விவசாயிகளுக்கும்  எதிரானது...எட்டு சுற்று பேச்சுவார்த்தை*
நடந்தும் அரசாங்கத்துக்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்னதான் பிரச்சினைகள்? என்று ஒரு நிமிடம்-ஒரே ஒரு நிமிடம் யோசித்திருப்பீர்களா?

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாதவரை எங்கள் சடலங்கள்கூட வீடு திரும்பாது என்று விவசாயிகள் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் போட்ட சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனும் அரசாங்கம் போராடும் விவசாய சங்கத்தை உடைக்கப் பார்க்கிறது

இரண்டு தரப்பும் இப்படி விடாப்பிடியாக முரண்டு பிடிக்க காரணம் என்ன?

Contract Farm சட்டத்தை ஆதரிக்கின்றவர்கள் சொல்கிற இரண்டு  விசயங்கள்...

1.கஷ்டப்பட்டு விளைய வைத்த பொருளை இனி நஷ்டத்துக்கு இடைத்தரகர்களிடம் அள்ளிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை

2.ஏதோ ஒரு கம்பெனியுடன்
Contract Farm சட்டப்படி ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் விதை,உரம் மற்றும் விவசாய செலவுக்கான பணம் மட்டுமல்ல விளைந்த பொருளை கம்பெனியே எடுத்துக்கொண்டு காசை கொடுத்துவிடும்.
இதைக் கேட்பதற்கு என்னவோ திகட்டிபபோன தேனும் பாகும் கடைவாயில் வழிகிற மாதிரித்தான் இருக்கும். ஆனால்... அதற்குள்ளிருக்கும் விஷம்?

ஆளை மயக்கும் விளம்பரத்துக்கு அடியில் *Coditions apply என்ற சுருக்குகயிறு வைத்த மாதிரி...

#முதலில் நிலம்#

1). விவசாயத்திற்கு முன் பணம் கொடுப்பார்கள் என்பது உண்மைதான். எவ்வளவு தெரியுமா?

வெறும் பத்து சதவிகிதம் மட்டும்தான்.

உதாரணமாக ஒரு போகம் விளைச்சலுக்கு ஒரு இலட்ச ரூபாய் செலவாகுமென்றால் பத்தாயிரம் ரூபாய் மட்டும் முன்பணமாக  தருவார்கள்.
 பாக்கி 90 ஆயிரம் ரூபாயை விவசாயி தன் பாக்கெட்டிலிருந்துதான் போடணும். 

ஒரு தடவை விளையவில்லை என்றால் அடுத்த தடவையும் விவசாய செலவுக்கு பணம் கொடுப்பார்கள்
ஆனால் முன்பணமாக பெற்ற அந்த ரூ.10,000 பணம் அப்படியே நிலுவையாக  தொடரும்.

தொடர்ந்து பத்து நிலுவைத்தொகை  பாக்கி நிற்குமானால் ஒப்பந்தம் செய்து கொண்ட நிலம் ஒப்பந்த கம்பெனிக்கு சொந்தமாகிவிடும்

அந்த விவசாயி அந்த ரூ.1,00,000 பணத்தை வேறுவழியில் தயார் செய்து கொடுத்தாலும் அந்த Contract Company அந்த பணத்தை பெற்றுக்கொண்டு நிலத்தை விவசாயிக்கு தரவேண்டியது  அந்த  Contract Company விருப்பத்தைப் பொருத்தது.

#அடுத்தது விதை#

2.)விதை எப்படிப்பட்ட விதை தெரியுமா?

ஒரு முறைக்கு மேல் மறு முறை கருத்தரிக்காத மலட்டு விதை.

காரணம்?

எந்த விவசாயியிடமும் எந்த விதையும் தங்கி விடக்கூடாது எப்போதும் தன்னை (Contract Company) சார்ந்தே இருக்க வேண்டுமென்ற சூழ்ச்சி.

கான்ட்ராக்ட் விவசாய ஒப்பந்த சட்டப்படி கம்பெனி என்ன விதைபொருள்கொடுக்கிறதோ அதை மட்டுந்தான் விளைவிக்க முடியும்.

* ஒரு உதாரணத்திற்கு, ஐம்பது அரளிக்கொட்டையும் குண்டுமணியும் விதைத்து விடு என்று Contract Company சொன்னாலும் விதைத்துத்தான் ஆக வேண்டும்.

Because You are Contract With The Corporate Company

#அடுத்தது உரம்#

3).நம் வயலில் என்ன விதைக்க வேண்டும் என்பதை மட்டுமல்ல எந்த வகையான உரம் தெளிக்க வேண்டும் என்பதையும் ஒப்பந்தம் செய்து கொண்ட Contract Company தான் முடிவெடுக்கும்

அநத உரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதுதான் அதிர்ச்சியும் ஆபத்துமாக இருக்கிறது.

குறிப்பாக காலங்காலமாக நெல் பயிருடும் மண்ணில் அந்த மண்ணுக்கு எதிர்மறையான உரங்களை உபயோகப்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவதால் நாளடைவில் மண் மலட்டுத்தன்மை அடைந்து விடும்.

காசும் விதையும் உரமும் கொடுத்து ஒப்பந்தம் போடும் Contract Companyக்கு மகசூல் முக்கியமல்ல.

மண்ணை மலட்டுத்தன்மையாக்கி அதன்மூலம் மகசூலை குறைத்து நாளடைவில் விவசாயியை கடனாளியாக்குதுதான்

4). இடைத்தரகர் இல்லாமல் ஒப்பந்தம் போட்ட கம்பெனியே விளைபொருளைவிலை கொடுத்து வாங்கிக்கொள்ளும்.

இதுவும் உண்மைதான். Contract Farm Actடின்படி வெளியில் தெரியாத Conditions Apply

ஒப்பந்த கம்பெனி விவசாயியிடமிருந்து எடுத்துச்சொல்லும்பொருளுக்கு தரமும் விலையும் நிர்ணயிக்கும் கால அவகாசம் 90 நாட்கள்.

உதாரணமாக குப்புசாமி என்ற விவசாயியிடமிருந்து 50 மூட்டை நெல்லை Contract Company எடுத்துக்கொண்டுபோகிறானென்றால் 90 நாட்கள் கழித்து

நெல் காய்ந்து போனதால் Quantityயும், கருக்காயாக இருப்பதால் Qualityயும் குறைந்து விட்டது என்று கூறி 25 மூட்டை நெல்லுக்கு மட்டும் காசை கொடுத்தால்

எங்காவது கோயில் குளத்துல போயி மண்ணை வாரி தூத்தலாமே தவிர ஏன் என்று கேள்வி கேட்க முடியாது.

Because You Contract With The  Contract Company. 

ஏதோ புதிய வேளாண் சட்டத்தால் கார்பரேட் கம்பெனிகள் அருவா கம்போடு வந்து நாளையே விவசாயிகளை அடித்து அவர்களின் நிலங்களை பறித்துக்கொள்ளும் என்று அர்த்தமல்ல

விவசாயியே வேண்டாம்டா சாமின்னு கார்பரேட் கம்பெனிக்காரன்கிட்டேயே நிலத்தை கொடுத்துட்டு கும்பிட்டு விழுந்துட்டுப் போகின்ற நிலை வரும்

என்பதை உலகெங்கும் பரவிக்கிடக்கும் பஞ்சாபிகள் அந்தந்த நாடுகளில் இந்த Contract Farm Act சட்டங்களின் மூலம் Contract Companyகள் எப்படியெல்லாம் நிலங்களை பறித்துக்கொண்டு விவசாயிகளை நடுத்தெருவில் விட்டது என்பதை பஞ்சாப் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துச் சொன்னதால் விழிப்படைந்த பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் ...
இழப்பதற்கு இனி எதுவுமில்லையென்று வீதிக்கு வந்து விட்டார்கள்..!!

இதை எல்லாம் விலாவாரியாக எடுத்துச்சொல்லி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தமிழக ஊடகங்கள்

ஒரு நாளைக்கு ரஜினிகாந்த் எத்தனை தடவை ஒன்னுக்குப் போறான், கமலஹாசன் இப்ப எவளை வைத்திருக்கின்றான், நடிகை வனிதா இப்ப லவ் பன்றது எத்தனையாவது லவ்னு பிரேக்கிங் நியூஸ் போட்டுக்கிட்டு இருக்கானுக...

சாப்பிட அமரும்போது, அந்த உணவை உற்பத்தி செய்த விவசாயிகளான எங்களை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்

   ##நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான்,
நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும்.##

   ##நாங்கள் ஒருவேளை உணவு உண்டால் தான்,
நீங்கள் மூன்று வேளையும்  உணவு உண்ண முடியும்.##

   ##நாங்கள் பழைய சோறாவது உண்டால் தான்,
நீங்கள் அறுசுவை உணவை உண்ண முடியும்.##

   ##விளைநிலம் இல்லையேல்
விவசாயம் இல்லை.##

   ##விவசாயம் இல்லையேல்
விவசாயி இல்லை.##

   ##விவசாயி இல்லையேல்,
உணவு இல்லை.##

   ##உணவு இல்லையேல்,
உலகமே இல்லை.##
 
    #இப்படிக்கு,#

###ஊருக்கே சோறு போடும் ஏழை விவசாயி### Please support our nation farmers.

Best regards,

Monday, 11 January 2021

நல்லதங்காள்

 நல்லதங்காள் 🌹




அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.

நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். 

-------------

மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான் அண்ணன் நல்லதம்பி.  கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. 

காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.

பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.

நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.

வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். 

கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.

------------------

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

அழுதுபுரண்டு அழுதாள்...
ஆபரணம் அற்று விழ.
முட்டி அழுதாள்...
முத்து மணி அற்று விழ.

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.

----------------

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். 

நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னான்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

----------------

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?

என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். 

“சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.

----------------------

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

''கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?''

என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்

என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். 

ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.

பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். ''அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க'' என்று கெஞ்சினாள்.

மூளி அலங்காரி, ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள்.  திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். எரிக்க  ஈரமட்டைகளை கொடுத்தாள்.  நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.

ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

------------------

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

''பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!''

என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

''அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்''
என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம். 

அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்...

“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். 

கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். 

அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். 

அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

---------------

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. 

காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். 

''என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே!'' என்று கெஞ்சினான்.

''தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்''

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். 

இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். 

நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.

------------------

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. 

காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.

மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள். 

மூளி கூசாமல் பொய் சொன்னாள்.
“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்தது  நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். 

அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். 

நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். 

''அய்யோ........'' தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். 

பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். 

நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான். 

தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். 

இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது. 

அதைவிடக்கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது!

Best regards,

என்று தணியும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் குமுறல்?!

என்று தணியும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களின் குமுறல்?!

கஜானா நிரம்ப டாஸ்மாக் கடை, ரசிகர்கள் மனம் மகிழ திரையரங்க திறப்பு, தேர்தல் வசூலுக்கு வியாபாரிகள் தயவு வேண்டும் என அனைத்து வணிக நிறுவனங்களும் திறப்பு... இதிலெல்லாம் வராத கொரோனா, கல்வி நிலையங்களில் வந்துவிடும் என்பதால், அவற்றை மட்டும் திறப்பதில்லை.  எல்லாவற்றிலும் மல்லுக்கட்டும் எதிர்க்கட்சியும், இந்த விஷயத்தில் மட்டும் மவுனம் சாதிக்கிறது.

தமிழகத்தில், ஒரு கோடியே 31 லட்சத்து 86 ஆயிரத்து 526 பள்ளி மாணவர்களும், 15 லட்சத்திற்கும் மேலான கல்லூரி மாணவர்களும் உள்ளனர். இது, தமிழக மக்கள் தொகையில் 19.58 சதவிகிதம்.  ஆனால் எந்த அரசியல் கட்சியும் இவர்கள் நலனில் அக்கறை காட்டத் தயாராக இல்லை. 

அனைவருக்கும் கல்வித் திட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் 37,217 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் உள்ளன.  இதில் தனியார் பள்ளிகளில் மட்டும், 48 லட்சத்து 69 ஆயிரத்து 279 மாணவர்கள் படிக்கின்றனர். ஏறத்தாழ 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஆசிரியர்கள், தனியார் பள்ளி வேலையை நம்பி உள்ளனர்.  

தமிழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள், 449 பாலிடெக்னிக் கல்லூரிகள், 566 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் 37 பல்கலைக்கழகங்கள் உள்ளன.  இதில் 15 லட்சத்திற்கும் மேலாக மாணவர்கள் படிக்கின்றனர்.  இதில் அரசால் 11 பொறியியல் கல்லூரிகளும், 47 பாலிடெக்னிக் கல்லூரியும், 79 அரசு அறிவியல் கல்லூரிகளும் நடத்தப்படுகின்றன. ஏனைய அனைத்து கல்வி நிறுவனங்களும், தனியார்களாலேயே நடத்தப்படுகிறது. இந்த தனியார் கல்லூரிகளை நம்பி 1,10,000ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அவர்களின் குடும்பங்களும் உள்ளன.

மார்ச் மாதத்திற்கு பிறகு மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், இன்று வரை திறக்கப்படவில்லை. அரசு திறக்க நினைத்தாலும் எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. கல்விக் கட்டணம் குறைப்பு, கட்டவேண்டிய நாட்களில் தளர்வு, கட்டாவிட்டால் கட்டாயப்படுத்த முடியாத நீதிமன்ற உத்தரவு, இவை அத்தனையும் பாதிப்பது, அந்த வருமானத்தை நம்பியுள்ள 2 லட்சத்து பத்தாயிரம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தையும் என்பது, யாரும் உணராத, உணர்ந்தாலும் கண்டு கொள்ளாத விஷயம். 

பெரிய அளவில் சங்கம் கூட இல்லாமல், தன் வறுமையை உரக்கச் சொல்ல முடியாத, கையறு நிலையில் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று தான் முன்னோர்கள் சொன்னார்களே தவிர, பிச்சை எடுத்தும் கற்றுக்கொடு என்று சொல்லவில்லையே! கல்வி போதிப்பதை தவிர மற்ற பணிகளை அறியாத தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் நிலை, அவர்களின் துயரம், கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. 

தனியார் பள்ளிகள், அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்டாலும் மாணவர்களின் கட்டணத்தை வைத்து ஆசிரியர்களின் சம்பளம் தருவதாகவும், அதனால் பல மாதங்கள் சம்பளமே இல்லாமலும், அதன் பின்னர் இன்றுவரை 50 சதவீத ஊதியம் பெற்றுக் கொண்டு, முன்னர் இருந்ததை விட அதிக வேலைப் பளுவுடன், மன அழுத்தத்துடன் நடைபிணமாக நடமாடி வருகிறார்கள். இதைப் பற்றி, ஆள்வோரும் கண்டுகொள்ளவில்லை, சமூக நீதிப் போராளிகளும் குரல் கொடுக்கவில்லை, 

அடுத்து நாங்கள் மக்கள் துயர்துடைக்க 30 நாள், 90 நாளில் வருவோம் என கட்டியம் கட்டும் எதிர்க்கட்சிகளோ, மக்கள் நலனில் மக்களுக்காக என மார்தட்டும் ஆளும் அரசோ அக்கறை காட்டவில்லையென்றால் இந்த இரண்டு லட்சம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களும், மாற்றி வாக்களிக்க முடிவு செய்தால், ஓட்டு மட்டும் நஷ்டம் அல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கேடு என்பதை உணர்வோம். 

உடனடியாக அரசு, அவர்கள் குறைகளைக் களைய, பள்ளி கல்லூரிகளை திறந்து, அவர்களை வாழ்வின் விளிம்பில் இருந்து காப்பாற்றலாம். எளிதில் கொரோனா பரவும் என நம்பினால், இந்த ஆசிரியர்களுக்கு, நிலைமை சரியாகும் வரை ஊக்க தொகை தந்தால், உங்களுக்கு ஓட்டும் கிடைக்கும்; ஆசிரியர்களுக்கு நோட்டும் கிடைக்கும்.  

Dr.R.காயத்ரி
கல்வியாளர்.

Best regards,