Monday, 3 October 2011

கண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள்

iPhone மற்றும் கணினியைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பது ஒருவரது கண்களைப் பழுதாக்குகின்றன என்று தான் பொதுவாகக் கூறப்படும்.

ஆனால் அவை ஒருவரது கண்களின் பார்வையை முன்னேற்றுகின்றன என்று கூறப்படுவது புதிய விடயந்தான்.

நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும் ஒரு மூளைப்பயிற்சி மென்பொருளாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கண்ணாடி பயன்படுத்தி வாசிப்பவர்களால் அதன் பாவனையைக் குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.

GlassesOff என்ற மென்பொருளின் பரீட்சார்த்தமானது அதிசயிக்கத்தக்க விளைவுகளைத் தந்துள்ளது என நம்பப்படுகிறது.

பயிற்சியின் பின்னர் கண்ணாடி பயன்படுத்துபவர்களால் 2 வரிகளுக்கும் மேலாகக் கண்ணாடியில்லாமல் வாசிக்கமுடிகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மென்பொருள் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வெளிவிடப்படவுள்ளது.

ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசி மென்பொருளாகவே வருமென்றும் அதன்பின்னரே கணினிகளுக்கென இவை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த மென்பொருள் அமெரிக்க நிறுவனமான Ucansi இனால் உருவாக்கப்படுகின்றது.

இது மூளையைத் தூண்டிவிடுகின்றது. இதில் முதலில் ஒரு சாம்பல்நிறத் திரையைப் பார்க்கலாம். அதில் ஒரு வெள்ளை வட்டம் இருக்கும்.

அடுத்து விரைவாகப் பல இடங்களில் பல விம்பங்கள் தோன்றும். இவற்றில் சில வெற்றிடமாகவும் சில கலங்கலான கோட்டுவடிவங்களாகவும் இருக்கும்.

இதன் இலக்கு வெற்றிடமான விம்பங்களைத் தெரிந்தெடுத்து அந்த வட்டத்தில் வைப்பதுதான்.

ஒருவர் நன்றாகச் செயற்படச் செயற்பட இப்பணி வேகமாகவும் சிரமமானதாகவும் மாறும். கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்தப் பரீட்சார்த்தத்தில் சராசரி 51 வயதானவர்கள் 40 பாடங்களில் பங்குபற்றினார்கள்.

முதல் 3 மாதங்களுக்கும் இதன் விலை 60 பவுண்களாக இருக்கும் என அந் நிறுவனம் கூறுகிறது.

இந்நிலையில் வாரத்தில் 3 தடவைகள் 15 நிமிடங்களிற்கு ஒரு வாடிக்கையாளர் பயிற்சியளிக்கப்படுவார்.

அதன்பின்னர் இதன் கட்டணம் மாதாந்தமாக இருக்கும். பிரித்தானியர்கள் வழமையாக ஒரு வருடத்தில் கட்பார்வை உற்பத்திகளுக்காக 2.7 பில்லியன் பவுண்களைச் செலவழிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Sunday, 2 October 2011

ஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா?

ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம்?. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.

இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.

சிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள்.

எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.

பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள். 85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.


Saturday, 1 October 2011

‘உறவுக்கு’ ஆயிரம் காரணங்கள்!

ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.

ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் 'பார்ட்டி'யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம்.

மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன 'ஸ்கேனரில்' விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் -எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன் சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது.

இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது.

இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா ...என்று 'பாப்பையா' ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்!