Monday, 4 February 2013

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்...



சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது, வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள்.

அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது.

உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள். ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது. அவ்வாறு உள்ள பொருட்களின் வாசனை, சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தெளிவற்ற மனம் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்யும். இப்போது அந்த மாதிரியான உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் வாசனைப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா

காபி:
உண்மையில் காப்பியின் சுவையை விட, அதன் நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதன் நறுமணமே உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, அதிக புத்துணர்ச்சியை தரும்.

லாவெண்டர்:
லாவெண்டரின் மணமானது டென்சனால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. எனவே அதிகமாக டென்சன் அடையும் போது, அப்போது லாவெண்டர் எண்ணெயை தலைக்கு தடவி, ஊற வைத்தால், மனம் அமைதியடையும்.

சிட்ரஸ் :
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், குமட்டல் வருவதை தடுக்கும். மேலும் இந்த நறுமணம் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தரும்.

யூகலிப்டஸ் :
அதிகமான குளிர்ச்சியினால், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் போன்றவை இருந்தால், அதனை சரிசெய்ய, 2 துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை சிறு துணியில் விட்டு, அதனை அவ்வப்போது நுகர வேண்டும்.

ஆல்கஹால்:
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆல்கஹால் மிகவும் ஆபத்தானது. ஆனால் அதனை அத்தகையவர்கள் நுகர்ந்து பார்த்தால், இரத்த அழுத்தமானது சீராக இருக்கும்.

மல்லிகை :
தூக்கம் சரியாக வரவில்லையா? அதற்கு தூக்க மாத்திரை போடாமல், மல்லிகையை நுகர்ந்தால், நல்ல அமைதியான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

புதினா :
புதினாவின் நறுமணம் புத்துணர்ச்சி மற்றும் தெளிவான மனதை தரும். மேலும் இதன் மணமானது படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அவற்றை படிக்கும் போது நுகர்ந்தால், படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும்.

ரோஜா:
இரவில் தூங்கும் போது மனம் வருத்தத்தால், கெட்ட கனவுகள் வருகிறதா? அப்படியெனில் இரவில் தூங்கப் போகும் போது, ரோஜாவை நுகர்ந்து பார்த்து, மனம் அமைதியடைந்து, இரவில் நல்ல இனிமையான கனவுகள் வரும்.

சாக்லேட்:
சாக்லேட்டின் நறுமணத்தை நுகர்ந்து பார்த்தால், உடலில் உள்ள வலியானது பறந்து போய்விடும். அதிலும் மனஅழுத்தத்தினால் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தாலல்இ அப்போது சிறிது சாக்லேட்டை நுகர்ந்து பாருங்கள்.

சந்தனம்:
சந்தனம் என்று சொன்னாலே, அது மனமை அமைதிப்படுத்தும் என்று நன்கு தெரிகிறது. எனவே தெளிவாக மனம் மற்றும் ஆர்வத்தை அதிகப்படுத்த, இந்த பொருள் சிறந்தது.

குங்குமப்பூ :
பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி. அது என்னவென்றால், மாதவிடாய் வருவதற்கு முன்னர், பெண்கள் ஒருவித மனஅழுத்தத்திற்கு உள்ளாவார்கள். ஆகவே அத்தகைய மனஅழுத்தத்தை போக்க குங்குமப்பூவை நுகர்ந்தால், தவிர்க்கலாம்.

Sunday, 3 February 2013

கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்... அதிகம் இருக்கும் உணவுகள்...


உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.

தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம். அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது.

ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும்.

ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா

பால்:
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர்:
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

மத்தி மீன்:
மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ் :
பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

உலர் அத்திப்பழம் :
அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள் :
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

கடல் சிப்பி :
பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

பாதாம் :
பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால்:
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.

எள் :
பொதுவாக எள்ளை அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.

பிரேசில் நட்ஸ்:
6 பிரேசில் நட்ஸில் 45 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த நட்ஸிலும் அதிகமான புரோட்டீன் உள்ளது.

உலர்த்திய மூலிகைகள்:
நிறைய உலர்த்திய மூலிகைகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எப்படியிருப்பினும் இத்தகைய மூலிகைகளை அப்படியே சாப்பிட முடியாது. ஆனால் அவற்றை சூப், குழம்பு போன்றவற்றில் தினமும் சிறிது சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

டோஃபு:
டோஃபு என்பது சோயா பாலினால் உருவான ஒரு வகையாக சீஸ். பொதுவாக சோயா பாலிலும் கால்சியம் அதிகம் இருக்கும். எனவே இந்த டோஃபுவிலும் நிச்சயம் கால்சியம் அதிகம் இருக்கும்.

ஆரஞ்சு :
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

சாலமன்:
சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.

சோயா பால் :
சோயா பாலில் சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.

ஓட்ஸ்:
ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

அறுகீரை (Arugula) :
இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

வெள்ளை காராமணி:
பொதுவாக பீன்ஸில் கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

If you like Health supplements for calcium, i suggest you to go for Coralcalcium like seaweeds, algae etc. which are natural and highly beneficial for mankind.

Saturday, 2 February 2013

பார்த்துக்கங்க, நானும் ஏழைதான், ஏழைதான், ஏழைதான்.....


இது “தி அதர் சைட்” எனும் மாத இதழ் வெளியிட்டிருக்கும் ஏழை கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியல்:



1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.


7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.

21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.


NOTE: இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள்
சேர்க்கப்படவில்லை. Spectrum scam money not included…………