Sunday, 3 February 2019

தப்பு கணக்கு போடாதீங்க

தப்பு கணக்கு போடாதீங்க

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

நான் பொறுமையாக காத்திருந்தேன்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

Best regards,

Saturday, 2 February 2019

குட்டி_கதை

#குட்டி_கதை
#அமைதி

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது. இந்த ஓவியத்தை வரைந்தது யார்?

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?. மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!

சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம் கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.

அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல.

 ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒரு நாள் விடியும், என்று விடாமுயற்சியுடன

் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,எனக்கு நேரும் மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது

 என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

Best regards,

Friday, 1 February 2019

அதன் தமிழாக்கம்.

அதன் தமிழாக்கம்.

அரசியல்வாதிகளுக்கு ஓய்வூதியத்திற்கு ஏதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த காரணத்தை பகிர்ந்து மற்றும் ஆதரவு தாருங்கள்....(இது உங்கள் கடமையும் கூட.)

தற்பொழுது தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்கள் ஆகிய ஆசிரியா்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இதோ உங்கள் மதிப்பீட்டுக்காக அனுப்பியுள்ளோம்.

இந்தியாவின் அன்பும் மரியாதைக்குரிய குடிமக்களே ... நீங்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டுமென கோரியுள்ளோம்.

நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் தொடர்புகளில் உள்ள அனைவருக்கும் இதை பகிருங்கள்/ அனுப்புங்கள்.

மூன்று நாட்களில் இந்த செய்தி முழு இந்தியாவில் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் குரலை உயர்த்த வேண்டும்.

2018 முன்னேற்றம் சட்டம் (2018 Improvement Act).

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை பெறக்கூடாது. -ஏனெனில். அரசியல் என்பது வேலை அல்லது வேலைவாய்ப்பு அல்ல, மாறாக அது ஒரு இலவச சேவை , பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ஒரு அரசியல் தேர்தல் என்பது, அதன் மறுசீரமைப்புக்கு ஓய்வூதியம் கிடையாது,ஓய்வும் கிடையாது.ஆனால் தற்போது அவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள், அதுவும் வெறும் 5 ஆண்டுகள் சேவைக்கே.
(ஆனால் அவர்கள் மீண்டும் அதே நிலைமையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம் வாய்ப்புகள் பல உள்ளது.)

இதில் இன்னொரு விசயம் அல்லது குறைபாடு என்னவென்றால், ஒரு நபர் முதலில் ஒரு கவுன்சிலராக இருந்திருந்து, பின்னர் அவா் ஒரு சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் அவரே ஒரு  நாடாளமன்ற உறுப்பினர் ஆனார் என்றால் அவர் மூன்று மூன்று ஓய்வூதியங்களை பெறுகிறார்.(பெறுவதற்கு உரியவராகிறாா்).

இது இந்த நாட்டு குடிமக்களுக்கு இழைக்கப்படும் ஒரு பெறும் துரோகம் ஆகும், உடனடியாக நாம் கைகொர்த்து ஒன்று சோ்ந்து இதை தடுத்து நிறுத்த போராட வேண்டும்.

மத்திய ஊதிய கமிஷனில், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உதவித்தொகை அடிக்கடி உயா்த்தப்பட்டு வருகிறது .... இது உடனே வருமான வரிக்கு கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சம்பளத்தையும் உட்பட சலுகைகளையும் தன்னிச்சையாக
தங்களுக்கு தானே ஒற்றுமையுடன் வாக்களித்து  எற்றி கொள்கின்றனா், முக்கியமாக இந்த  விசயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

எம்.பி.க்கள் சுகாதார பாதுகாப்பு முறை திட்டம் அகற்றப்பட வேண்டும்
அவர்களின் சிகிச்சைகளுக்கும் ஆரோக்கிய கோளாறூகளுக்கு எந்த வித சலுகைகளும் தரபட கூடாது.ஒரு சாதாரன குடிமகனுக்கு கிடைப்பது போல அது சமமாக இருக்க வேண்டும். *(தற்போது அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை வெளிநாடுகளில் செய்யப்படுகிறது .. இனி அவர்கள் வெளிநாட்டில் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்).

மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி மசோதா போன்ற அனைத்து சலுகைகளும் முடிவுக்கு வர வேண்டும். (இதுபோல் மேலும் பல சலுகைகள் கிடைப்பதும் மட்டும் அல்லாமல் அதை அடிக்கடி அவர்களே தன்னிசையாக தொடர்ந்து
எற்றி கொண்டே வருகிறாா்கள்)

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், தண்டனை பதிவுப் உள்ள சந்தேகிக்கப்படும் நபர்களும்  கடந்தகால அல்லது தற்கால கிரிமீனல் குற்றம் சாட்டப்பட்வர்கள் அரசியலில் பங்கு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகளால் ஏற்படும் நாட்டின் நிதி இழப்பு, அவர்களிடமிருந்தே மீட்கப்பட வேண்டும், இதில் நாட்டின் குடிமக்களுக்கு உள்ள விதியே அவர்களுக்கும் பொறுந்துமாறு அமைக்க வேண்டும்.

குடிமக்களிடமிருந்து எல்.பி.ஜி. எரிவாயு மானியத்தை அகற்றி உள்ளாா்கள்.. ஆனால் நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ களுக்கு ஏந்த மானியம் ரத்து அல்லது திரும்பப் கூட பெறப்படவில்லை.

பாராளுமன்றத்தில் பணியாற்றுவது ஒரு கௌரவம்,இது கொள்ளையடிப்பதற்கு ஒரு இலாபகரமான வேலை அல்ல.

இலவச இரயில் மற்றும் விமானப் போன்ற டிக்கட் சலூகைகளை உடனே நிறுத்த வேண்டும்.

சாதாரண மனிதன் ஏன் அவர்களின் கேளிக்கைகளின் வரிகளையும் தன் தொளில் சுமக்க வேண்டும்?

ஒவ்வொரு நபரும் குறைந்தபட்சம் இருபது பேருக்கு ஸேர் செய்தால், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த செய்தியை பெற மூன்று நாட்கள் மட்டுமே ஆகும்.இந்த பிரச்சினையை எழுப்ப சரியான நேரம் இது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மேலே உள்ளதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், ஸேர்  செய்யுங்கள்.

இல்லையெனில்,உங்கள் இஷ்டம்.

நீங்கள் என் 20+ ல் ஒருவர்...தொட்ர்ந்து  பகிரவும்.

நன்றி
ஜெய்ஹிந்த் வன்தேமாதரம்...🙏


Best regards,