Thursday, 6 June 2019

சபலம் சபலம் சபலம் சபலம் சபலம்

சபலம் சபலம் சபலம் சபலம் சபலம்😳🤔

நேர்மைக்கு கிடைத்த பரிசு👌👏💪👍🙌🙏

மதிய வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அந்த பிரபல நிறுவனத்தின் உள்ளே இன்டர்வியூக்காக நடந்தேன். அந்த நிறுவனத்தின் ‘HR’ இளைஞனாய் இருந்தான்.

“என்ன மிஸ்டர் கோபால், உங்க
வயசு 35-னு உங்க பயோடேட்டால இருக்கே. நிஜமாவா.?

“உண்மைதான் சார்.”

“இவ்வளவு வயசாகியும் நீங்க இன்னும் வேலை தேடிட்டு தான் இருக்கிங்களா.? எனக்கு வியப்பா இருக்கு.”

“அப்படி இல்ல. இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனில பத்து வருசமா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கம்பெனி திடீர்னு நஷ்டமடைஞ்சதால மூடிட்டாங்க. அதனால தான் வேற வேலை தேட வேண்டியதானது.”

“ஓ.. அப்படியா.? எங்க கம்பெனில பொதுவா யங்ஸ்டரா தான் வேலைக்கு எடுப்போம். உங்களுக்கு 35 வயசுங்குறீங்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு."

“பரவாயில்லை சார். நான் வேலை செய்ய தயாரா தான் இருக்கேன்.”

அந்த HR வாலிபன் ஆழ்ந்து யோசிப்பது போல பாவனை செய்தான்.
“ஓகே கோபால், நீங்க பயோடேட்டா தந்துட்டு போங்க நாங்க தேவைப்படும் போது கால் பண்றோம்..”

“ஓகே. தேங்க் யூ..”

“ம்ம்ம்.. வெல்கம்.”

எனது பைலை எடுத்துக்கொண்டு நடந்தேன். என் தலை விண் விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது. நான் கடந்த சிலமாதங்களாகவே வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். வயதைக் காரணம் காட்டி பெரும்பால இடங்களில் தவிர்த்து விடுகின்றனர்.

எல்லாம் ஒழுங்காக தான் சென்று கொண்டிருந்தது முன்பு வேலை செய்த இடம் நஷ்டமாகி மூடப்படும் வரை. அந்த வேலையை நம்பி வாங்கிய லோன்கள் இப்போது என் கழுத்தை நெறிக்க துவங்கியிருந்தன. வங்கியில் இருந்து அடிக்கடி லோனை கட்டச் சொல்லி நோட்டிஸ் வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு கடன்கள் வேறு. கையிலிருந்த கொஞ்சுண்டு சேமிப்பும் வீட்டு செலவுகளில் கரைந்து கொண்டிருக்க, நாளைகள் என்னை திகிலூட்டிக்கொண்டிருந்தன.
ஒரே மகனின் டியூசன் செலவு, பள்ளிச் செலவுகள், மேலும்... மேலும்... கடவுளே.. எப்படி சமாளிக்க போகிறேன்...?

தலைவலி இன்னும் கூடியது. காப்பி சாப்பிடலாம் போல இருந்தது. பேருந்து செலவுக்கு போக மீதி இருக்கும் தொகையில் ஒரு காப்பி குடித்து விட்டு பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். பெட்ரோல் விற்கும் விலைக்கு லோன் போட்டு வாங்கிருந்த இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படாமல் வீட்டில் சும்மாவே கிடக்கிறது. பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. பேருந்து ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் என் காலை எதுவோ உரசியது. குனிந்து பார்த்தேன். தோளில் மாட்டிக்கொள்ளும்படியான ஒரு பை கிடந்தது. எனக்கு முந்தின இருக்கையும், பிந்தின இருக்கையும் காலியாக கிடந்தது. நடத்துனர் ஓட்டுனருடன் பேசிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த மிகச் சில பயணிகளும் வெளியே வேடிக்கை பார்த்தப்படி இருக்க. எனக்கு சபலம் தட்டியது. மெதுவாக குனிந்து எடுத்து திறந்து பார்த்தேன்.

எனக்கு குப்பென வியர்த்தது...! பையில் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் மூன்று கிடந்தன. நான் சட்டெனப் பையினை மூடினேன். சுற்றிலும் நோட்டமிட்டு யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டு, எனது பையில் மறைத்துக் கொண்டேன். எனக்குப் படபடப்பாக இருந்தது. இது தவறு என மனம் எச்சரித்தது. காவல் நிலையம் போய் ஒப்படைத்து விடலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் கட்ட வேண்டிய லோன்களும், வட்டிகளும், இத்யாதி செலவினங்களும் என்னை பயமுறுத்தின.

வீடு வந்து சேரும் வரை மனதில் ஆயிரம் ‘காச்மூச்’ கத்தல்கள். வியர்வை வேறு ஆறாகச் சொட்டியது. வீட்டுக்குள் நுழைந்து பணத்தை பீரோவில் பத்திரமான இடத்தில் வைத்தேன்.

“ஏங்க வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்கீங்க.? என்றாள் சுபா என் இல்லத்தின் அரசி.

'சொல்லிவிடலாமா இவளிடம்.?'

“சுபா, ஒரு நிமிஷம் அந்த கதவை சாத்திட்டு வா.”

“எதுக்கு.?"

“சொல்றேன். போ.. சாத்திட்டு வா”

'என்னாச்சு இவருக்கு.?' அவள் திரும்பிப் பார்த்தபடி போய், கதவைச் சாத்திவிட்டு வந்தாள்.

"ம்ம்.. சொல்லுங்க.”

“இப்படி உக்காரு." என்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். பணத்தைக் கண்டு விழி விரித்து.

“ஏதுங்க இது.? கடன் வாங்கினிங்களா,.?"

நான் நடந்ததெல்லாம் சொல்லி முடித்தேன்.

“யாரு தவற விட்ட பணம் இது.?"

“எனக்கு தெரியல. நான் யாரவது தேடி வருவாங்கன்னு பஸ் ஸ்டாப் வரும்வரை காத்திருந்தேன். வந்தா கொடுக்கலாம்னு. ஆனா யாரும் வரல.” எனப் பொய் சொன்னேன். சொல்லிவிட்டு பணத்தை எண்ண துவங்கினேன். மூன்று லட்சம் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

“சுபா இன்னும் சில மாசத்துக்கு நமக்கு கவலையே இல்ல. செலவுக்கெல்லாம் இது போதும்.”

அவள் அமைதியாக இருந்தாள்.

“சுபா ஏதாவது பேசேன்.”

“நமக்கு இந்த பணம் வேணாம்ங்க.”

“சுபா என்ன சொல்ற.? கடவுளா பார்த்து தான் நம்ம கஷ்டம் தீர இந்த பணத்தை தந்துருக்காரு.”

“உங்க சபல புத்திக்கு கடவுள பழி சொல்லாதிங்க.” சுபா சீறினாள்.

“சுபா இங்க பாரு. எனக்கு இன்னும் வேல கிடைக்கல. கட்டவேண்டிய லோன்களும், கடன்களும், செலவுகளும் நம்ம கழுத்த நெறிக்க ஆரம்பிச்சுருச்சு. அப்படி இருக்கயில இந்த பணம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கும் பாரு.”

“அதுக்காக இன்னொருத்தர் பணத்துல நாம சொகுசா இருக்குறதா.?” அது தப்பு. அதுக்கு பதிலா நாம கஷ்டப்படலாம்.”

“அப்போ செலவுகளுக்கு என்ன தாண்டி பண்ணுறது.?" என நான் குரலை உயர்த்த...

சுபா படக்கென எழுந்து தன் ‘தாலியை’ கழட்டி “இந்தாங்க. இதை அடகுல வைங்க. எனக்கு மஞ்சளும், கயிரும் போதும்.

“சுபா என்ன காரியம் பண்ண.” என நான் அதிர்ந்தேன்.

“அடுத்தவங்க பணத்துல வயுறு நிறைக்கிறத விட இது எவ்வளவோ மேலங்க. போங்க. இந்த பணம் யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்துட்டு வந்துருங்க.. அப்படி கொடுத்துட்டு வந்து தான் நீங்க மறுபடி இந்த வீட்டுல நுழையணும். என ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். உள்ளே அவள் குமுறும் சத்தம் கேட்டது. என் கையில் அவள் கழற்றிக் கொடுத்த தாலி கனத்தது. நான் தொய்வுடன் அந்த பையினை எடுத்து ஆராய்ந்தேன். ஒரு விசிட்டிங் கார்டு கிடந்தது நான் அந்த முகவரியை நோக்கி நடந்தேன்.

நான் அந்த பங்களாவுக்குள் நுழைந்தேன். அழைப்பு மணியை அழுத்த ஒரு பெரியவர் வந்து கதவைத்திறந்தார். விஷயத்தை அவரிடம் சொல்லி
பணப்பையை அவரிடம் கொடுக்க. அவர் ஆச்சரியமடைந்து என்னை உள்ளே அழைத்து காப்பி கொடுத்து உபச்சரித்தார்.

“எனக்கு கொஞ்சம் மறதி தம்பி. வழக்கமா போற என்னோட கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதான் பஸ்ல வந்தேன். வரும்போது பணத்த அங்கயே போட்டுட்டேன். வீட்டுக்கு வந்த பின்னாடி தான் நினைவுக்கு வந்தது. திருப்பி கிடைக்காதுன்னு தான் நெனைச்சுட்டு இருந்தேன். உங்களை போல நல்லவங்களும் இருக்காங்க. அதான் தவறவிட்ட பணம் திரும்ப வந்துருக்கு.” என்றபடியே என்னைப் பற்றி விசாரித்தார். நான் என்னைப் பற்றி சொன்னேன்.

“அப்படியா..?" என்று யோசித்தவர்

“தம்பி, என்னோட நிறுவனத்துல வேலை செய்ய விருப்பமா...? ஒரு வாரத்துக்கு முன்னாடிதான், எங்க நிறுவனத்து மேனேஜர் ரீடைர் ஆனார். அவரோட இடத்துக்கு யாரைப் போடலாம்னு நெனைச்சுட்டு இருந்தேன். நீங்க ஏன் அந்த வேலைல சேரக்கூடாது.? நீங்க நாளைல இருந்து அங்க ஜாயின் பண்ணிக்கோங்க... இது என் நிறுவனத்தோட விசிட்டிங் கார்டு... வேற யாராவது உங்க சூழ்நிலைல இருந்திருந்தா இந்த பணம் திரும்ப வந்திருக்காது. இந்த வேலை உங்க நேர்மைக்கு தர்ற பரிசு..." என்று புன்னகைத்து விசிட்டிங் கார்டினை நீட்ட...
என் கண்ணில் கண்ணீர் வந்தது...
அந்த கண்ணீரில் என் ‘சுபாவுக்கு’ ஆயிரம் முத்தங்களும், நன்றிகளும் இருந்தது.


திருக்குறள் :

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவ தெவன்

விளக்கம் :

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட முடியுமோ?....
நட்புடன்! !!!!!!

Best regards,

Wednesday, 5 June 2019

அதிமுக #ஆட்சியின் #அவல #நிலை

#அதிமுக #ஆட்சியின் #அவல #நிலை
இந்த பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,

1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8) Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala

நம்மையெல்லாம் எதிரியாக பாவித்த, நாம் நம்முடைய எதிரியாக வரித்துக்கொண்ட ஜெயலலிதா செய்யத்துணியாத தமிழ் துரோகத்தை, நாமெல்லாம் துச்சமாக எண்ணும், கோமாளிகள் என கேலி பேசும் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் செய்திருக்கிறார்கள்.

சில தவறுகளை நம்மால் திருத்தவே முடியாது. அப்படியான தவறு தமிழகம் 2016 தேர்தலில் செய்தது. அந்த தவறு கூட இந்த கேட்டை தந்திருக்காது ஜெயா உயிரோடு இருந்திருந்தால்.

அந்த தவறை திருத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பை 2019ல் பயன்படுத்தி இருந்தால் கூட இந்த துரோகத்தில் இருந்து தப்பியிருக்கலாம். அதையும் மானாமதுரை, பரமக்குடி, அரூர் உள்ளிட்ட 9 தொகுதி மக்கள் கெடுத்தனர்.

விளைவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது இறங்கியிருக்கிறது.
இன்று 29.05.2019  தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர்  பதவிக்கு  தமிழக முதல்வரால்  பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது இதில்  ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்  இடம் பெற்றுள்ளனர்

தமிழ்நாடு அரசு  2016இல் செய்த திருத்தம் என்பது

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான்.

மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.

இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என சலுகை அளிக்கிறது தமிழ்நாடு அரசு.

அதன் அடிப்படையில் தான் தமிழக மின்வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேலையில் தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கிய தமிழக அரசே  தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது.

ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற பல மாநிலங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது நாம் கேட்பதில் தவறில்லை.

கேட்டால் கிடைக்காது அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இந்த நிலையை மாற்றிட முடியும்.

இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம்.

இப்போது TNEB -ல்

நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் .

#தமிழகஅரசுவேலை #தமிழருக்கே

 மாணவ, மாணவிகளே இனியும் நீங்கள் விழிக்கவில்லை என்றால் உங்களின் உரிமை பறிபோகும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.

Best regards,

DikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள் ஆசிரியர்கள் நம் ஹீரோஸ்'

DikshA இந்திய தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு 'எங்கள் ஆசிரியர்கள் நம் ஹீரோஸ்'

DIKSHA மேடையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பரிந்துரைக்கப்படும் பள்ளி பாடத்திட்டத்திற்கு தொடர்புடைய கற்றல் பொருள் ஈடுபடும் வழங்குகிறது. பாடநூல் திட்டங்கள், பணித்தாள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு உதவக்கூடிய ஆசிரியர்கள், அனுபவமிக்க வகுப்பறை அனுபவங்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள், படிப்பினைகள் மாற்றியமைக்கலாம் மற்றும் நடைமுறை பயிற்சிகள் செய்யுங்கள். பெற்றோர்களுக்கு வகுப்பறை நடவடிக்கைகள் மற்றும் பள்ளி மணி நேரத்திற்கு வெளியே வெளிப்படையான சந்தேகங்களைத் தொடரலாம்.

பயன்பாடு சிறப்பம்சங்கள்
• ஆசிரியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறந்த இந்திய உள்ளடக்க படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஊடாடத்தக்க பொருள் ஆராயுங்கள். இந்தியாவில், இந்தியாவுக்கு!
• பாடநூல்களில் இருந்து QR குறியீடுகள் ஸ்கேன் மற்றும் தலைப்பு தொடர்புடைய கூடுதல் கற்றல் பொருள் கண்டறிய
• இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் கூட ஆஃப்லைனில் உள்ளடக்கத்தை சேமித்து, பகிர்ந்து கொள்ளுங்கள்
• பாடசாலை வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கு பொருத்தமான பாடங்கள் மற்றும் பணிப்புத்தகங்களைக் கண்டறியவும்
• ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு அல்லது மராத்தி மொழிகளில் அனுபவத்தை அனுபவிக்கலாம்.
• வீடியோ, PDF, HTML, ePub, mobi போன்ற பல உள்ளடக்க வடிவங்களை ஆதரிக்கிறது - விரைவில் மேலும் வடிவங்கள் வரும்!

ஆசிரியர்களுக்கான நன்மைகள்
• உங்கள் வர்க்கத்தை சுவாரஸ்யமாக்குவதற்கு ஊடாடும் மற்றும் ஈடுபடும் கற்பித்தல் விஷயங்களைக் கண்டறியவும்
• மாணவர்களிடம் கடினமான கருத்துகளை விளக்குவதற்கு மற்ற ஆசிரியர்களிடம் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும்
• உங்கள் தொழில்முறை அபிவிருத்திக்கு மேலும் பாடநெறிகளுடன் சேரவும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுங்கள்
• உங்களுடைய கற்பித்தல் வரலாற்றை ஒரு ஆசிரியராக உங்கள் வாழ்க்கையில் காணலாம்
• அரச துறையிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பெறுக
• நீங்கள் கற்பித்த ஒரு தலைப்பின் உங்கள் மாணவர்களின் புரிதலை சரிபார்க்க டிஜிட்டல் மதிப்பீடுகளை நடத்துங்கள்

மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு நன்மைகள்
மேடையில் தொடர்புடைய பாடங்கள் எளிதாக அணுக உங்கள் பாடநூலில் QR குறியீடுகள் ஸ்கேன்
• நீங்கள் வகுப்பில் கற்கும் பாடங்கள் மீளாய்வு செய்யுங்கள்
• புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் தலைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியவும்
• பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் பதில் சரியானதா இல்லையா என்பதில் உடனடி கருத்துக்களைப் பெறுங்கள்.

DIKSHA க்கான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டுமா?
• ஆசிரியர்கள் ஒரு எளிதான மற்றும் ஈடுபடும் வகையில் கருத்துக்களை வழங்க உதவுங்கள்
• மாணவர்களுக்கும் வகுப்புக்கு வெளியேயும் கற்றுக் கொள்ள உதவுங்கள்.
• உயர் தரமான கற்றல் பொருள்களை மாணவர்களுக்கு வழங்குவதில் ஈடுபடுங்கள்
• இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக நீங்கள் விரும்பினால், கீழே பகிர்ந்துள்ள விவரங்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த முன்முயற்சியை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) ஆதரித்து, இந்தியாவில் தேசிய கல்வி கவுன்சில் (NCTE) தலைமையிலானது.

DIKSHA பற்றி
DIKSHA என்பது மாநில, ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (TEI) மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றால் பயிற்றுவிப்பதற்காக ஆசிரிய-மையப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கான தனிப்பயனாக்கத்தக்க தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகும். ஆசிரியர்கள் டி.கே.எஸ்.ஏ.ஏ.வை அனைத்து பாடங்களிலும் உயர் தரமான போதனை, கற்றல் மற்றும் மதிப்பீடு வளங்களை அணுகவும், ஆங்கில மற்றும் பல இந்திய மொழிகளிலும் அனைத்து தரங்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்கள் தங்களது முழு தொழிற்பாட்டிற்காக மேடையில் பயன்படுத்தலாம் - அவர்கள் TEI களில் மாணவர் ஆசிரியர்களாக இருந்து ஓய்வுபெறும் வரை - பிடிக்கவும், அங்கீகரிக்கவும், தங்கள் வேலைகளை, பங்களிப்புகளையும், சாதனைகளையும் பகிர்ந்து கொள்ளவும் முடியும். டி.கே.ஷே.ஏ.ஏ தளத்தை 'எமது ஆசிரியர்கள் எமது ஹீரோஸ்' என்ற கைகளை பலப்படுத்துகிறது.
 http://diksha.gov.in/explore

Best regards,