Sunday, 9 June 2019

கலங்காதே மனமே.!? ...

கலங்காதே மனமே.!? ...

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் ப்ரஹ்லாதன் மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
ராஜா அரிச்சந்திரன் மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
பீஷ்மர் மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் குந்திதேவி மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் குசேலர்
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
சூர்தாஸர் மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை...

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
குணவதிபாய் மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
சாருகாதாஸர் மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
ஜயதேவர் மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
சஞ்சயன் மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
பூந்தானம் மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
தியாகராஜர் மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள் மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
கூரத்தாழ்வான் மனம் கலங்கவில்லை...

எப்படி முடிந்தது இவர்களால்..?

ரகசியம்...

தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

ஆழ்ந்த நம்பிக்கை...

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

முதல் வழி...
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

இரண்டாம் வழி...
(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

மந்திரமாக இருக்கலாம்...

கீர்த்தனைகளாக இருக்கலாம்...

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் "அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..." இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

விடாது நாம ஜபம் செய்வோம்...

திடமாக பகவானை வழிபடுவோம்...

அன்பே கடவுள் என போற்றுவோம்...

உறுதியுடன் உண்மையாக இருப்போம்...

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

Best regards,

Saturday, 8 June 2019

புறம் பேசாதீர்

புறம் பேசாதீர்

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.
ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.
பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.
ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.
தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.
நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!


Best regards,

Friday, 7 June 2019

உடம்பின் நடுப்பகுதி வயிறு

உடம்பின் நடுப்பகுதி வயிறு.
அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.
இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.
😊
தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள்
மரணம் வரும்.
😊
ஒரு மனிதன்
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான்
இந்த நாற்பது.
😊
நிறைய வேலை செய்வதால் 
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.
😊
என்ன நடக்குமோ என்ற 
பயமும் கவலையும்தான்
மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.
😊
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை 
சீராக நிறைவேற்றுங்கள்.
😊
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
😊
தினசரி மத்தியானம்
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.
😊
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.
😊
மனம் தளராமல் தினந்தோறும் ஆண்டவனை நினையுங்கள்.
இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் அபபனே.
என்னை எந்த தவறும்  செய்ய விடாதே அப்பனே."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
😊
ஒவ்வொரு நாளும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.
😊
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
நூறு வயது வரை பென்ஷன் வாங்கலாம்.
😊 ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.
😊
அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !
முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்
மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும், மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது
வாழ்க வளமுடன்
வேண்டும் சுபம்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
🙏🙏🙏🙏🙏
படித்தாலும் புரியாத புத்தகம் பெண்..
படிக்க தவறிய புத்தகம் தந்தை...
படிக்க விரும்பும் புத்தகம் அன்னை...
படித்தது புடித்து போகும் புத்தகம் மழலை...
தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை...

Best regards,