Wednesday, 9 October 2019

அருமையான தகவல்... அனைவருக்கும் பகிருங்கள். . . .மிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான Online புகார் :

அருமையான தகவல்... அனைவருக்கும் பகிருங்கள். . . .மிக மிக முக்கியமான செய்தி :  ATM / BANK சம்பந்தமான Online புகார் :

இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான்  சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10-ம் தேதி,மே 10-ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28-ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.

பின்னர் ஜூன் 18-ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும். இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html.

பொது நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர் :

Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613
E-Mail: sanctuarylegal@gmail.com
Web : www.sanctuarylegal.in

Best regards,

Thursday, 3 October 2019

செல்போன் திருடுவது எப்படி?.. சென்னையில் 6 மாத பயிற்சி+ வேலை+ சம்பளம்.. அதிர வைக்கும் கும்பல்

செல்போன் திருடுவது எப்படி?.. சென்னையில் 6 மாத பயிற்சி+ வேலை+ சம்பளம்.. அதிர வைக்கும் கும்பல்

 
சென்னை:

 செல்போன்களை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமைப்பது எப்படி, ஆங்கிலம் கற்பது எப்படி, மெக்கானிஸம் படிப்பது எப்படி, இந்தி கற்பது எப்படி, மேக்கப் போடுவது எப்படி என இப்படியே பட்டியல் நீளும் அளவுக்கு நாம் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இப்படி எல்லாவற்றுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையில் சென்னையில் ஒரு கும்பல் செல்போனை திருடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
சென்னை யானைக்கவுனி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒருவரை போலீஸார் ரகசியமாக பின்தொடர்ந்தனர். அப்போது சோழவரத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்ற அவர் அங்கு வைத்திருந்த செல்போனை அங்கிருந்த நபரிடம் கொடுத்தார்.


தினசரி நாளிதழ்கள்
உடனே போலீஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீட்டில் சோதனையும் நடத்தினர். அப்போது அந்த வீட்டில் தெலுங்கு மொழியிலான தினசரி நாளிதழ்கள் இருந்தன. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

செல்போன் திருட்டு
ஆந்திராவில் உள்ள விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோழவரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியபடி செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.


6 மாத பயிற்சி

ஆந்திராவில் இருந்து இளைஞர்களை அழைத்து வரும் கும்பல் அவர்களுக்கு செல்போன் திருடுவது எப்படி என்பது குறித்து 6 மாத பயிற்சி வகுப்பை அளித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களுக்கு தெலுங்கு பேப்பரை வாசித்து கொண்டே செல்லும் இந்த கும்பல் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருட்டு கும்பல்
செல்போன்களை திருடி வரும் இளைஞர்களுக்கு மாதச் சம்பளத்தையும் ரவி கொடுத்துள்ளார். இந்த போன்களை ஆந்திராவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் திருட்டு கும்பலின் தலைவன் ரவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Best regards,

Tuesday, 1 October 2019

மருத்துவமனைகளின் மறுபக்கம்

மருத்துவமனைகளின் மறுபக்கம்👀

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,  இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம்.  மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் இரண்டு மருத்துவர்கள் மூலம். மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே,  “ Dissenting Diagonisis" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்:

' மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது'  என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில், இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் அருண் காத்ரே மற்றும் அபய் சுக்லே முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட,  அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள். 

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை. பரிசோதனை சாலைகள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை. மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை... லாபம்.. லாபம்... லாபம்... மேலும் லாபம் மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்:

ஒரு பிரபலமான மருத்துவமனை,  தன் மருத்துவமனையில் வேலை பார்த்த சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது.  " இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான  சான்று" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல. லாபத்திற்காக தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

சுக்லே, “ எனக்கு தெரிந்த ஒருவர்,  தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன்  என்னும் மருத்துவர், “ எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம்.  x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

" தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது...?

 என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது என்கிற விபரங்களே, இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை...?

Best regards,