Friday, 13 December 2013

திருநங்கைகள் பற்றி தெள்ளத்தெளிவோம்!


காவல் பணிக்கு சிறப்பான தகுதியுடையவர்கள் திருநங்கைகளே என்ற முடிவுக்கு வந்து, பணி நியமணம் செய்திட அரசுக்குப் புரிந்துரை செய்கிறேன்.

திருநங்கைகளின் சிறப்பு தகுதிகள்!

பிறப்பால் ஆண் என்பதால் உடல் வலிமை மிக்கவர்கள்.

மனதளவில் பெண்களின் குணம் என்பதால் ஓரளவுக்காவது இரக்கக்குணம் இருக்கும்.

காவல் பணியில் உள்ளோருக்கு ஆணைப் போல உடல் வலிமையும், பெண்ணைப் போலவே இரக்கக் குணமும் அவசியம்தானே!

தகுதியின் அடிப்படையில் அனைத்து திருநங்கைகளுக்கும் காவல் பணி என்னும் போது வாரிசு, சொந்த பந்தங்களுக்காக வருவாய்க்கு மிஞ்சிய சொத்தைக் கையேந்தி பிச்சை எடுத்து சேர்க்க வேண்டிய அவசியமேதும் இல்லை.

இதனால், பணத்தைக் கொடுத்து அல்லது பாசத்தைக் காட்டி பணிய வைப்பதும் சாத்தியமல்ல.

திருநங்கைகளுக்கு ஆண், பெண்ணுக்குரிய குடும்ப பொறுப்பு என்னும் சுமை இல்லாததால், காவல் கடமையில் முழு கவனமாய், திறம்பட செயல்பட முடியும்.

சாதி, மத உணர்வுகள் இருக்காது. இன உணர்வு இருக்கும். ஆனாலும், அதனால் ஆபத்து எதுவும் இல்லை.

காவல்துறை உயர் அதிகாரிகளின் பாலியல் ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி. இல்லையென்றால்…?

பெண் காவலர்களைப் போல, இவர்களைப் பாதுகாக்க ஆண் காவலர்கள் தேவையில்லை.

மனைவி, வாரிசு போன்ற பந்தங்கள் இல்லாததால், திருநங்கைகளின் இறப்புக்குப் பிறகு பெருமளவிலான ஓய்வூதியம் அரசுக்கு மிச்சம்.

காவலர் என்பதால் சட்ட அங்கீகாரமும், சமூக அங்கீகாரமும் கிடைத்து விடும். பணத்திற்காக பாலியல் தொழிலுக்குப் போக வேண்டிய அவசியமில்லை.

இதனால், திருநங்கைகளால் ஏற்படும் பாலியல் தொழில் முற்றிலும் ஒழிந்து விடும். ஒட்டு மொத்தத்தில் பாலியல் தொழில் உடனடியாக பாதியாக குறைந்து விடும்.