Friday, 20 December 2013

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை இப்படியும் பெண்களா? உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம் !!

ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை இப்படியும் பெண்களா? உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம் !!
நியூசிலாந்தில் இந்திய வாலிபர் ஒருவரை உறவுக்கு அழைத்துச் சென்ற இரு இளம் பெண்கள் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வருபவர் அமந்தீப்சிங்(22). திருமணமான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்(25) என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டார். போகும் வழியில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சில் கிரிஸ்டலை, அமந்தீப் சிங்குக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னர் குறுஞ்செய்தி மூலமாக இருவரின் நட்பு மேலும் நெருக்கமானது. ஒரு கட்டத்தில், கிரிஸ்டல் போக்கை, அமந்தீப் சிங் உறவுக்கு அழைத்தார். முதலில் மறுப்பது போல் பாவனை காட்டிய கிரிஸ்டல், திடீரென்று அமந்தீப் சிங்கிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளளார்.

அதில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் தனது வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கிரிஸ்டல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி நள்ளிரவில் அமந்தீப் சிங் தனது காரில் கிரிஸ்டல் வீட்டிற்கு தனியாக சென்றுள்ளார். கிரிஸ்டலின் வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் உடன் இருந்தார். “கெய்ட்டி கடற்கரைக்கு சென்று நாம் 3 பேரும் உல்லாசமாக இருக்கலாம்” என்று அமந்தீப் சிங்கிடம் கிரிஸ்டல் கூறவே அமந்தீப் சிங், 2 பெண்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கடற்கரைக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையில் அமந்தீப் சிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்த பொலிசார், கெய்ட்டி கடற்கரையில் உள்ள ஒரு புதர் மறைவில் இருந்து அமந்தீப் சிங்கின் அழுகிப்போன பிரேதத்தை கடந்த ஜனவரி மாதம் 24ம் திகதி கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில் அமந்தீப் சிங் அடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அவரை கிரிஸ்டலும், அவரது தோழியும் அடித்து கொன்றுவிட்டு, அமந்தீப் சிங்கின் கிரெடிட் கார்டு மற்றும் காரை இருவரும் திருடிச் சென்றதையும், அந்த கிரெடிட் கார்ட் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து 2 பெண்களும் பணம் எடுக்க முயன்றதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிசார், கிஸ்போர்ன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பொலிஸ் தரப்பு சாட்சியாக அமந்தீப் சிங் மற்றும் கிரிஸ்டல் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த 166 குறுஞ்செய்திகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விபச்சாரத்திற்காக அந்த வாலிபரை ஆசைகாட்டி வரவழைத்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் அடித்துக் கொன்றுவிட்டு, காரையும், கிரெடிட் கார்டையும் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களுக்கும் தலா 8 ஆண்டு 8 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி முர்ரே கில்பர்ட் தீர்ப்பளித்துள்ளார்