விழிப்புணர்வு செய்தி
♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன் வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.
♈சார்ஜ் போட்டபடி பேசியதால், போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு
♈இரவில் சார்ஜ் போட்ட போன் வெடித்து குடிசை தீப்பிடித்து இருவர் பலி
♈இது போல் நாம் அடிக்கடி பல செய்திகளை பார்த்திருப்போம்.
♈ஆனால் நாம் முறையாக செல்போன் பற்றிய தகவல்கள் தெரியாதால் தான் இது போல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி
நடக்கின்றன.
♈சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது.
♈உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் அடிக்கடி வெடிக்கின்றது,
♈சில இடங்களில் போன் வெடித்து பலருக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன.
♈மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்
மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் :
🏼🏼🏼🏼🏼🏼🏼🏼
1⃣எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2⃣மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்,
3⃣போலி சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் இதனால் சில நேரங்களில் போன் வெடிக்கும்.
4⃣மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
5⃣போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.
6⃣ போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது
7⃣பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.
8⃣போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.
9⃣பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்
🔟சார்ஜ் போட்டப்படி கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்றவைகள் செய்யாதீர்கள்.
1⃣1⃣ஈரக்கையுடன் மொபைல் போன் உபயோகிக்காதீர்கள்
1⃣2⃣கழிவறை மற்றும் குளியல் அறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள்.
1⃣3⃣மொபைல் போன் சார்ஜ்ஜில் இருக்கும் போது தலையணை க்கு கீழே வைக்க கூடாது ஏனெனில் சூடு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
1⃣4⃣மழைகாலத்தில் வெளியே செல்லும் போது
செல்போன் ஈரம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
1⃣5⃣சார்ஜ் போட்டு கேம் விளையாட யாரும் முயற்சிக்க கூடாது அப்படி செய்தால் விபரீதம் ஏற்படும் என்று நமக்கு தெரிந்தும் தொடர்ந்து பலர் இதுபோன்ற தவறுகளை செய்வதால் விபத்து ஏற்படுகிறது.
Best regards,
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com