Monday, 8 February 2016

தை அமாவாசை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

தை அமாவாசை முன்னிட்டு திருவிளக்கு பூஜை :
தை அமாவாசை என்பது கடந்த 06/02/1989க்கு பிறகு , அதாவது 26 ஆண்டுகள் கழித்து , வருகிற திங்கட்கிழமை அரசமரம் பூமிக்கு கிடைத்த நாள் ; 08/02/2016 ஆம் தேதி சிவ வாரம் வியதீபாத நாம யோகம் பலிச்சக்கரவர்த்தியின் திருவோணம் நட்சத்திரத்தில் வருகிறது . இதை முன்னிட்டு வருகிர சனி , ஞாயிறு , திங்கள் அதாவது 06/02/2016, 07/02/2016, 08/02/2016 ஆகிய நாட்களில் இல்லத்தில் செய்யப்படும் திருவிளக்கு பூஜையாகும் .
தாய்மார்கள் , சகோதரிகள் அனைவரும் தங்கள் இல்லத்தில் இந்த திருவிளக்கு பூஜையை செய்யலாம் . இப்படி ஒரு நட்சத்திர அமைப்பு இனி அடுத்து 26 ஆண்டுகள் கழித்து தான் வரும் . பூஜையின் போது குங்குமதிற்கு பதிலாக மஞ்சளில் 108 திருவிளக்கு போற்றிகள் சொல்லி பூஜை செய்யவும் .
இந்த திருவிளக்கு பிரார்த்தனை முக்கியமாக கணவன் மணைவியின் சந்தோஷமான இல்லற வாழ்க்கைாக , பிறிந்து வாழும் கணவன் மணைவி மீண்டும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதற்காக , திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்க பெற மற்றும் குடும்ப வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்திற்காகவும் நடத்தப் படுகிறது .
இந்த மூன்று தினங்களும் மாலை மணி 6க்கு மஞ்சள் , குங்குமம் , மலரினால் அலங்கரித்த திருவிளக்கில் நெய் விட்டு ஏற்றி , மற்ற பூஜை பொருட்கள் வைத்து , 108 போற்றிகள் சொல்லி மஞ்சளால் அர்ச்சனை செய்யவும் .

அன்னை மஹாலெட்சுமியின் கிருபையால் அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும் .

Best regards,