Thursday, 31 January 2019

ஊழியர்களை மோசடி செய்யும் தமிழக அரசு

நன்றி : நக்கீரன்

ஊழியர்களை மோசடி செய்யும் தமிழக அரசு


 ஆட்சியில் இருப்பவர்கள் தங்களை மிகப்பெரிய அதிகாரம் கொண்டவர்களாக காட்டிக்கொள்ள என்ன செய்வார்கள் தெரியுமா?

தங்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை சவட்டி எடுப்பார்கள். தங்களைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காக தண்ணியில்லாத காடு, வேலையில்லாத இலாகா என்பவற்றை உருவாக்கி வைத்து ஊழியர்களை பழிதீர்ப்பார்கள்.


இப்போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தையும் பல கட்ட முயற்சிகள் தோற்றதால்தான் நடத்துகிறார்கள். ஆனால், அவர்களுடைய போராட்டத்தை சம்பள உயர்வு போராட்டமாக திசைதிருப்ப ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மை அதுவல்ல என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியது அவசியம்.

தமிழக அரசாங்கத்தை இனிமேல் தனியார் நிறுவனங்களைப் போல காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுத்து நடத்த ஒரு மாபெரும் சதித்திட்டத்தை அரசாணை 56 மூலமாக  அரசு நிறைவேற்றி இருக்கிறது.

இந்த அரசாணை 56 என்ன சொல்கிறது தெரியுமா? தற்போது மூன்றரை லட்சம் அரசு ஊழியர் காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களையும்,  இனிமேல் காலியாகிற பணியிடங்களையும் அவுட்சோர்சிங் முறையில் தினக்கூலி அடிப்படையில் ஆட்களை சேர்த்து நிரப்ப வழி அமைக்கிறது.



இது, அடுத்த தலைமுறையினரை படுபாதாளத்தில் தள்ளிவிடும். வேலை வாய்ப்புகளை அழித்துவிடும் என்பதால் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள்.

அதுபோல, அரசாணை 100 மற்றும் 101 ஆகியவைகளும் ஆபத்தான அரசாணைகள்தான்.  ஒரே வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளுடன் இணைக்க இந்த அரசாணைகள் வழி செய்கின்றன. இப்படி இணைப்பதன் மூலம், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது என்பதாலும், பள்ளிகளில் ஆட்குறைப்பு செய்ய நேரும் என்பதாலும் இந்த ஆணைகளையும் ரத்து செய்யும்படி போராடுகிறார்கள்.

புதிதாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்ற முடிவு நல்லதுதான். ஆனால், அந்த வகுப்புகளை எடுப்பதற்காக மாண்டிசோரி பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுத்து, இடைநிலை ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கும் அரசு முடிவையும் எதிர்த்து போராடுகிறார்கள்.

சம்பள உயர்வுக்காக போராடுகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள்? அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வுக்காக போராடவில்லை. தங்களுக்கு சேரவேண்டிய 21 மாத சம்பள நிலுவைத் தொகையைத்தான் கேட்கிறார்கள். அது என்ன நிலுவைத் தொகை?

7 ஆவது சம்பளக் கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க பரிந்துரை செய்தது. அதன்படி, 1.1.2016 முதல் புதிய சம்பள விகிதம் ஏற்கப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த சம்பள விகிதத்தை 1.10.2017 வரை, 21 மாதங்களாக கொடுக்காமல் பிடித்தம் செய்து வைத்திருக்கிறது. எங்களுக்குச் சேர வேண்டிய சம்பளத்தைத்தான் கேட்கிறோம்.




இப்போதும் 21 மாதங்களாக எந்த முடிவும் சொல்லாமல் எங்களுக்குச் சேரவேண்டிய நிலுவைத் தொகையை இழுத்தடிக்கிறது அரசு என்கிறார்கள்.  இருக்கிறதா இல்லையா என்பதைக்கூட சொல்ல மறுக்கிறது அரசு.

இதேபோல்தான் 1.7.2003-லிருந்து 5 லட்சத்து 4 ஆயிரம் ஊழியர்களிடம் பென்சனுக்காக பிடித்தம் செய்த 10 சதவீத சம்பளம் 28 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு பென்சன் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் ஜெயலலிதா. பழைய பென்சன் திட்டத்துக்கு பதிலாக புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதி அளித்தார்.

அதாவது புதிய பென்சன் திட்டம் என்பது ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 28 ஆயிரம் கோடி ரூபாயுடன் அரசு தனது பங்கிற்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து இபிஎஃப்பில் செலுத்த வேண்டும். இப்படிப்போடப்படும் தொகையில் ஒரு பகுதி பணிக்கொடையாகவும், மீதமுள்ள தொகை பென்சனாகவும் கிடைக்கும்.

ஆனால், அந்தத் தொகையை கட்ட அரசிடம் பணம் இல்லை என்கிறார்கள். இபிஎஃபில் கட்ட வேண்டும் என்றால் 28 பிளஸ் 28 – 56 ஆயிரம் கோடி ரூபாயும், அதற்கு வட்டியாக 14 ஆயிரம் கோடி ரூபாயும் வேண்டும். அதாவது 70 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும். அரசுக்கு அந்த சிரமம் வேண்டாம் என்றுதான் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும்படி கேட்கிறோம். பழைய பென்சன் திட்டத்திற்கு அரசு சார்பில் பணம் போட வேண்டியதில்லை. வட்டியும் 7 ஆயிரம் கோடி இருந்தால் போதும். அதாவது, மொத்தத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் போதும். இதன்மூலம் அரசுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம்தான்.

ஆனால், இதைக்கூட செய்ய முடியாது என்று அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்பதுதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு சொல்லப்படும் விளக்கம்.

இனியாவது இத்தகைய போராட்டங்களில் உள்ள நியாயங்களை உணரவேண்டும். வெறுமனே போராட்ட உணர்வுகளை எதிர்த்தால், நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். நிரந்தர வேலைவாய்ப்புகளை ஒழித்துவிட்டு, கார்பரேட் கம்பெனிகளைப் போல அரசுகள் மாறவும், கார்பரேட் நிறுவனங்களின் ஊழியர்களைப் போல பணிப்பாதுகாப்பு இல்லாத அடிமைகளாக எதிர்கால சந்ததிகள் மாறவும் வழி அமைத்துவிடும் என்பதை உணர்ந்தால் சரி.

Best regards,

”கைது, சிறை, பிணை”

”கைது, சிறை, பிணை”

சல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட அரச வன்முறை தொடங்கி தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரச வன்முறை வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைக்குவரை நீதி கிடைக்காமல் செய்தது போல் நம் ஆசிரியர் இனத்தையும் வஞ்சித்துவிட்டது நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த நம் அரசு...

    தெரிந்தோ தெரியாமலோ நம் ஆசிரியர் இனப்போராட்டம் தோல்வியடைந்ததற்கு நானும் ஏதோனொருவகையில் காரணமாகிறேன் எனக்கருதி இனி எந்த ஆசிரியர் சங்கத்திலும் பொறுப்பு வகிக்கவோ , உறுப்பினராகவோ இருக்க எனக்கு தகுதியில்லை என தகுதித்தேர்வெழுதி வந்த தகுதியற்ற ஆசிரியனாக அறிவிக்கிறேன்...

      வெறும் 105 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள பலவீனமான பாசிச அரசு இம்மாநிலத்தில்  இத்தனையையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. 89 எம்.எல்.ஏ. க்களை வைத்துள்ள எதிர்க்கட்சியோ செயலற்று நிற்கிறது.

இந்த அடக்குமுறைக் கட்டத்தின் முதல் இலக்கு புதிதாக களத்திற்கு வந்துள்ள ஆசிரியர்கள் ’தன் பெண்டு, தன் பிள்ளை , தன் குடும்பம்” என வாழும்படி வீட்டுக்குள் முடக்குவதாகும்

”ஜனநாயகம் என்ற இந்த போலி ஜனநாயகம் அதன் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் நிற்கிறது. இற்று வீழ்ந்து விட்டது”


எனவே, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, ஆசிரியர்களை சந்திக்கும் உரிமை, பரப்புரை செய்யும் உரிமை, போராடும் உரிமை, போராட்டங்களுக்கு ஆசிரியர்களை அணி திரட்டும் உரிமை, ஆசிரியர்கள்
ஓரிடத்தில் ஒன்றுகூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை, அரசமைப்பு சட்ட உரிமைகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த அடக்குமுறைக்கு எதிராய்
“ வாக்கரசியல் “ என்ற இறுதி ஆயுதம் மூலம் ஒன்றுபட்டு நிற்போம்

”ஆணவ அதிகார அடக்குமுறை “ என்ற இந்த பேரபாயம் தமிழகத்தை எப்படி சூழ்ந்திருக்கிறது என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்த்து, இதைவிட விரைவான, இதைவிட சாத்தியமான வேறு வழிகள் இருக்கின்றனவா என்பதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு, உங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்தி தீர்ப்பை அதன் மீது வழங்குங்கள்.

அடக்கி வாழ்ந்திட மிருகமில்லை நாம்
அடங்கி வாழ்ந்திடும் மனிதர்களே நாம்!

இவண்:-
மா.முருகேசன்,
அரசுப்பள்ளி ஆசிரியர்,
தூத்துக்குடி.

Best regards,

Wednesday, 30 January 2019

கண்ணாடி தத்துவம்.

கண்ணாடி தத்துவம்.

ஒரு வயதானவர் அடிக்கடி  கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!

‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...

பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”

“என்ன தம்பி?”

“உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..?”

“ஆமாம்..!”

“அதில் என்ன தெரிகிறது..?”

“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்..!”

“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது..?”

“ஆமாம்..!”

“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..?”

பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய..!”

“பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்..?”

“அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்..”

“எனக்கு ஒன்றும் புரியவில்லை..!”

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது...”

“எப்படி..?”

“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை,  குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா..?"

“ஆமாம்..”

“அதே போல் உன் சகோதரனிடம் - நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்.!”

 "அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா..?”

“ஆமாம்!”

“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்..!”

“அப்புறம்..?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா..?”

“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்..!”

“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்..!”

“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா..!யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்...!” என்று அந்த பெரியவரிடம் சொல்லி விட்டு அவரை வணங்கிச் சென்றான்..

Best regards,

Tuesday, 29 January 2019

பதினாறு வகையான அர்தங்கள்

பதினாறு வகையான அர்தங்கள்
-------------------------------------------------

1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...

2]☀தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]


3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...

4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.

6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.

7] ☀சங்கடங்கள் வரும் போது தடுமாற்றம் அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதீர்கள்.

8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]

9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.



10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய  பேச்சையும் கேட்பவர்.

13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை முட்டாள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு 
நம்பிக்கையையே ஆகும்.

15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!

P🌟wer of positive Thinking

Best regards,

Monday, 28 January 2019

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

ஆச்சரியமா இருக்கா?  தொடர்ந்து படிங்க.....

ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட  பிரயோஜனம் இல்லாதவன்...

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...

உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...

அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?

இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???

Best regards,

Sunday, 27 January 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஏன்?

ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஏன்?
திருமதி. சௌமியா அவர்களின் முகநூல் பதிவு...
ஜாக்டோ ஜியோ ஜன 22 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துகிறது.
அரசாங்கம் நேர்மையான முறையில் அரசு ஊழியர்களின் பிரச்சனைகளை அணுகி அவற்றைத் தீர்க்க முயன்றிருந்தால் போராட வேண்டிய நெருக்கடி அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

இந்தப் போராட்டத்தின் முதன்மையான நோக்கம் அரசு ஊழியர்களின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதாகும்.

பங்களிப்புத் ஓய்வூதியத் திட்டம் வாஜ்பாய் அரசால் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் அரசால் தொடரப்பட்டது.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் முன்பாகவே தமிழகத்தில் 1.4.2003 இல் அமல் படுத்தியவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இதற்கான அரசாணை 6.8.2003
அன்று வெளியிடப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு ஊழியர்களிடம் இல்லை. சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும். என அவர்கள் நம்பியதால் எதிர்ப்பு கிளம்பவில்லை.

ஆனால் அரசு ஊழியர்கள் நம்பியதற்கு மாறாக புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணியாற்றிவர்கள் உயிரிழந்தபோது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை!

என்றபோதுதான்  இது ஒரு மோசடியான திட்டம் எனத் தெரியவந்தது. ஓய்வூதியத்துறையில் தனியாரை நுழைக்கக் கொண்டு வந்த சதியே புதிய பங்களிப்பு ஓய்வூதியம் எனப் புரியத் தொடங்கியது.

சிபிஎஸ் திட்டத்தை மாற்ற முடியாத திட்டம்போல் அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்.  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் என்ற இந்தச் சட்டத்தின்3 (4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக்கூறுகிறது. இது ஒரு தேசியத் திட்டம். இதை  நிறை
வேற்றுவதோ, ரத்து செய்வதோ மாநில அரசின் கையில்தான் உள்ளது.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணமும் அரசின் பங்களிப்புத் தொகையையும் இதுவரை ஆண்ட திமுக , அதிமுக இரு
அரசுகளுமே  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு கடந்த 13 ஆண்டுகளாக அனுப்பி வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை!

ஆசிரியர்களின் பங்களிப்பு ஊதியம், மற்றும் பி.எஃப் போன்றவற்றை அரசு மற்றும் துறை நிறுவனங்களில் முதலீடு செய்து அதைப் பெருக்கும் திறன் அரசுக்கு இல்லை எனக் கருதி, இப்பெருந்தொகையைக் கையாளும் பொறுப்பை , ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களிடம் அளித்தது அரசு.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில்
தனது சட்டபூர்வ பொறுப்பைக் இவ்வாறு கைகழுவும் வேலையை மத்திய மாநில அரசுகள் செய்கின்றன!

அரசு ஊழியர்களின் வேர்வையில் விளைந்த பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்திலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தும்,
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது அரசு!

 பங்களிப்பு ஓய்வூதியத்தை நிறுத்துவதா? தொடர்வதா? என்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி தனது பரிந்துரைகளை  2018 நவம்பர் 7 அன்று அரசுக்கு கொடுத்தது.
இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு எடப்பாடி அரசு மௌனம் சாதிக்கிறது.

 கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா அவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். மாண்புமிகு அம்மாவின் அரசு எனக் கூறிக்கொள்ளும் எடப்பாடி அரசோ அம்மாவின் உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டிருக்கிறது.

அதுபோலவே அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பதும் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளுள் ஒன்று.  ஊதியமுரண் குறித்த சித்திக் கமிட்டியின் அறிக்கை இந்த ஆண்டு ஜனவரி 5 இல் அரசிடம் சமர்ப்பிக்கப்
பட்டிருக்கிறது. இந்த அறிக்கையும் கிடப்பில் போடப்படுமோ? என்கிற அச்சம் அரசு ஊழியர்களிடம் இருக்கிறது.

மேலும், 21 மாத, ஊதியக்குழு நிலுவைத்தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோல நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்திலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த முரண்பட்ட நிலை நீக்கப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படவேண்டும் என்பதும் ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகளுள் ஒன்று.

ஏதோ அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தால்தான்
அரசின் கஜானா காலியாவதுபோன்ற தோற்றத்தை அரசு பொதுமக்களிடம் தோற்றுவித்து, அரசு ஊழியர்களை பொதுமக்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறது அரசு!

உண்மையில் அரசின் சலுகைகளை, வங்கிகளின் நிதியை, கொள்ளையடிக்
கும் கார்ப்ரேட்டுகளாலேயே அரசின் கஜானா காலியாகிறது.

இந்தியாவின் 50% சொத்து வெறும்
9 கார்ப்ரேட்டுகளிடம் உள்ளது. இந்தியாவில் 10% தரகு முதலாளிகள். இவர்களிடம் 78% இந்தியாவின் சொத்துக்கள்.

இந்தியா வளர்கிறது. ஆனால் ஏழைகள் வளரவில்லை. இதற்குக் காரணம் இந்தியா கடைபிடிக்கும் உலகமயமாக்
கல், தாராளமயம் போன்ற தவறான கொள்கைகள். ஆனாலும் அரசோ,
ஏழைகளிடம், அரசு ஊழியர்களை எதிரிகளாகக் காட்டுகிறது!

இந்நிலையை பொதுமக்களிடம் புரியவைப்போம்.                    திருமதி .சௌமியா அவர்களின் முகநூல் பதிவு......


Best regards,

Tuesday, 22 January 2019

அண்ணா... எப்படி இருகிறாய்..?

 அண்ணா... எப்படி இருகிறாய்..? 
 முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..!






Best regards,

Monday, 21 January 2019

பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எதற்காக விடப்படுகிறது தெரியுமா?

பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எதற்காக விடப்படுகிறது தெரியுமா?


விடுமுறை வேண்டும்!

பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை எதற்காக விடப்படுகிறது என்ற நோக்கமே இன்று யாருக்கும் தெரிவதில்லை. மதிப்பெண்தான் ஒரே உச்சபட்ச நோக்கமென அரசும், பெற்றோரும், மாணவ/ மாணவிகளும், ஆசிரியர்களும் முடிவெடுத்து செயல்படுவதன் விளைவு ஓர் உயர்ந்த அறிவார்ந்த சமூகமான தமிழ்ச்சமூகம், தனது வாழ்வியலின் அடிப்படையான நடைமுறைகளில் இருந்தும், பெரும் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது.

உலகின் பல வல்லரசு நாடுகளிலும், அந்த அரசுகள் கல்வியின் மீதும், கற்பவர் மீதும் இவ்வளவு அழுத்தங்களை ஒருபோதும் உண்டாக்குவதில்லை. கற்பது என்பது ஓர் எளிய பழக்கமாகவே பின்பற்றப்படுகின்றது. பெரும்பாலும் வகுப்பறைகள் அந்நாடுகளின் மாணவ/மாணவியரின் படைப்பு ஆற்றலை நசுக்குவதில்லை. அவரவர் திறமையை ஆய்ந்து அறிவதுதான் ஆசிரியர்களின் வேலையாக இதுவரையிலும் இருந்து வருகின்றது.

இந்திய கல்விச் சூழலில்தான் ஏராளமான முரண்கள் நிலவுகின்றன. திறமைகள் மழுங்கடிக்கப்பட்டு, மனனம் செய்வதே ஒரே உயர்ந்த திறமை என்ற மனநிலையை எல்லா குழந்தைகள் மனதிலும் திணித்துவிட்டனர். நுணுகி ஆராய்ந்து பொருள் அறிந்து படித்தல் என்பதே இன்று வழக்கத்திலேயே இல்லை. மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு ஸ்கேனர்கள் போல வாழப்பழகிவிட்டனர். 'ஈ அடிச்சான் காப்பி' என்று எங்கள் பகுதிகளில் சொலவடை சொல்வார்கள். அவ்வரிகளை உண்மையாக்குவதே, இன்றைய தனியார் பள்ளி, கல்லூரிகளின் வேலையாக இருக்கின்றது.

இதன் விளைவாக தமிழகத்தில் படைப்பாற்றல் என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது. இச்சூழலானது, தமிழர்களின் படைப்பாற்றலை மட்டும் சிதைத்து இருந்தால் கூட நாம் கடந்துச் சென்று இருக்கலாம், தமிழர்களின் மரபார்ந்த வாழ்வியலின் மீதே பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா முன்னணி பள்ளி, கல்லூரிகளும் பொதுவிடுமுறை நாள்களில் கூட வகுப்புகளை நடத்துகின்றனர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களை இறுதி தேர்வின் முடிவில் காட்டியாக வேண்டியச் சூழல் நிலவுவதாலும், கடும் வியாபார போட்டியின் காரணமாகவும் விடுமுறை என்பதே இல்லை என்ற சூழலை தனியார் பள்ளி, கல்லூரிகள் உருவாக்கிவிட்டன.

அரசு தீர்மானிக்கும் வருகை நாள்களைவிட, அதிக நாள்கள் வகுப்புகள் நடந்தாலும், ஒரு பள்ளி, கல்லூரியில் கூட ஆய்வகம் சார்ந்த எந்த பாடமும் நடத்தப்படுவதும் இல்லை. ஆய்வகம் என்ற ஒன்றே பல பள்ளி, கல்லூரிகளில் இல்லை. ஆய்வகம் இருக்கும் சில தனியார் நிறுவனங்களிலும் சரியான கருவிகள் கிடையாது. எல்லா நாள்களும் மன்னம் செய்வது மட்டுமே மாணவ/மாணவியரின் ஒரே தலையாயக் கடமையாக மாறிவிட்டது.


ஒரு தாத்தா பாட்டியின் மரணம்; ஓர் உறவினரின் வீட்டுத் திருமணம்; எந்த குடும்ப விழாக்களிலும் இளம் தலைமுறைப் பிள்ளைகள் பங்கெடுத்துக் கொள்வது இல்லை. விளைவு ‘கூடி வாழ்தல்' என்ற மரபார்ந்த வாழ்வியலை நமது அடுத்த தலைமுறை இழக்கத் தொடங்கிவிட்டது. இது சாதாரணமாக கடந்துச் செல்ல வேண்டிய விசயமில்லை.

இன்றைய குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை மாமன், பங்காளி குடும்பம் போன்ற எந்த உறவுகள் சார்ந்த அறிவும், உறவு முறைப் பெயர்களும்கூடத் தெரிவதில்லை.

உறவிகளின் மீதான பிணைப்பும், சமூகத்தின் மீதான அக்கறையும், பெரியவர்களை மதிக்கும் பண்பும், பிறரோடு இணங்கி வாழ்வதலும் போன்ற எந்த உயர் குணநலன்களையும் நம் இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்வதே இல்லை.

ஓர் இனக்குழுவை அடிமைப்படுத்த நினைக்கின்ற எல்லா வல்லாதிக்க அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அந்த இனக்குழுவைத் தனித்தனி அமைப்புகளாக, தனித்தனி குடும்பமாக, தனித்தனி மனிதர்களாக உடைப்பதையே தங்களின் அடிப்படை தாரக மந்திரமாக வைத்திருக்கின்றன. உலகின் ஆதித் தொல்குடியினமாக இன்னும் நீடித்து இந்த பூமியில் வாழ்கின்ற தமிழர்களையும் தனித்தனியாகச் சிதைப்பதுதான் அவர்களது ஒரே நோக்கம்.

அதற்குத்தான், இந்த விடுமுறைகள் இல்லாத கொடூரமான கல்விமுறைப் இந்நிலத்தில் பின்பற்றப்படுகிறது. உளவியலாக ஒவ்வொரு மாணவ/மாணவியருக்குள்ளும் இருக்கும் குடும்பத்தின் மீதான, உறவுகளின் மீதான, சமூகத்தின் மீதான, நாட்டின் மீதான பற்றையும் அழித்து, அவர்களை தனிமனித வெற்றியே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்று எண்ணுகின்ற சூழலை இவர்கள் உருவாக்கிவிட்டனர்.

உலகின் பல நாடுகளிலும் வீட்டில் இருந்தே தேர்வு எழுதுகின்ற நடைமுறை உள்ளது. தமிழ்நாட்டில் கூட தனித்தேர்வர் முறை உள்ளது. உயர் கல்விகளில் தொலைத்தூர கல்வி முறையும் உள்ளது. இவற்றை எல்லாம் பின்பற்றி, தனிமனிதனாக இங்கு யார் வேண்டுமானாலும் கற்றுத் தேர்ந்து சாதிக்க முடியும். ஆனாலும் அந்த நடைமுடைகளை ஒருவரும் கற்றுத் தருவதல்லை. காரணம், அந்த நடைமுறைகள் குறித்தான அறிவினை மக்கள் பெற்றால், கல்வியை எந்தவிதமான  உயர்மன அழுத்தமும் இன்றி பெற முடியும் என்பதை அனைவரும் உணர்ந்துவிடுவர்.

அப்படி, மக்கள் விழிப்புணர்வை அடைந்துவிட்டால், தனியார் பள்ளி, கல்லூரிகள் கொள்ளை அடிக்க முடியாமல், இழுத்து மூட வேண்டிய சூழல் வரும் என்பதை எல்லோரும் நன்கு அறிவர்.

தானாக, தன்னெழுச்சியாக ஒருவர் படித்து பட்டம் பெற்று, தன் சொந்தக் காலில் நின்று வாழ்ந்து காட்டிவிட்டால் போதும், தனியார் கல்வி நிறுவனங்கள் தலையில் முக்காடுப் போடுகின்ற நிலை வந்துவிடும்.

சுயமாக, தற்சார்பாக, தன் சொந்தக் காலில் தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று வாழ்கின்ற உயர்ந்த உளவியலை, விடுமுறை இல்லாத வகுப்புகள் உருவாக்க தவறுகின்றன...

விடுமுறைகள்தான், உணர்வு சார்ந்த, உறவு சார்ந்த அறிவையும் புரிதலையும், நம்பிக்கைகளையும் உருவாக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு உருவாக்கித் தரும்...

விடுமுறையைக் கொண்டாடுங்கள் குழந்தைகளே...
அவர்களைக் கொண்டாட விடுங்கள் பெற்றோர்களே...

Best regards,

Sunday, 20 January 2019

விரலை விழுங்கும் விபரீத மோதிரங்கள்! பள்ளி, கல்லூரி மாணவர்களே உஷார்

விரலை விழுங்கும் விபரீத மோதிரங்கள்! பள்ளி, கல்லூரி மாணவர்களே உஷார்
கோவை : வெறும் 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும் இந்த மோதிரங்கள், ‘ஹெவி மெட்டல்’ மோதிரங்களால், பலரும் விரல்களை இழக்கும் அபாயம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், பல விதமான வண்ணங்களிலும், டிசைன்களிலும் வரும் 'ஹெவி மெட்டல்’ மோதிரங்களை அணிவது, தமிழகத்தில் சமீபத்திய 'பேஷன்’ ஆகியுள்ளது.
அழகுக்காக அணியும் இந்த மோதிரங்கள், எவ்வளவு அபாயமானவை என்பதை, இளம் தலைமுறையினர் உணர்வதில்லை.மிகவும் கனமாகவுள்ள இந்த மோதிரங்களை, 'டைட்’ ஆக அணியும்போது, அந்த இடத்திற்கு மேல் பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்வது தடுக்கப்படுகிறது. அதனால், அந்த விரல் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தன்மையை இழக்கிறது.சில நேரங்களில், இந்த மோதிரம் அணிந்துள்ள விரல்களில் அடிபட்டால், விரல் பெரியளவில் வீங்கி விடுகிறது. தங்கம், வெள்ளி போன்ற மோதிரங்களாக இருந்தால், ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ள 'ரிங் கட்டர்’ எனப்படும் கத்தரிக்கோலால், அந்த மோதிரத்தை டாக்டர்கள் சாதுர்யமாக வெட்டி எடுத்து விடுகின்றனர். ஆனால், இந்த மோதிரங்களை, எந்த 'கட்டர்’ வைத்தும் வெட்ட முடியாது.
ராஜன் நகர் கஸ்தூரிபாய் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். நண்பன் கொடுத்த 'ஹெவி மெட்டல்’ மோதிரத்தை அணிந்து கொண்டு, பள்ளிப்பேருந்தில் திரும்பும்போது, மோதிரம் அணிந்திருந்த விரல், பஸ்சில் இடுக்கு ஒன்றில் சிக்கிக்கொண்டது.
அருகிலிருந்த மாணவர்கள் சிலர், தங்களது பலத்தைப் பிரயோகித்து, இடது கையை வேகமாக இழுக்க, சதை, நரம்பு எல்லாம் மோதிரத்துடன் போய் விட, எலும்புள்ள விரல் மட்டும் கையோடு வந்துள்ளது. உடனடியாக, சத்தியிலுள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று, அதே இடது கையிலிருந்து சதை, நரம்பு எல்லாம் எடுத்து, இந்த விரலில் வைத்துத் தைக்க முயன்றுள்ளனர். ஆனால், விரலில் முற்றிலுமாக ரத்த ஓட்டம் நின்று போனதால், அந்த சிகிச்சை பலன் தரவில்லை. முற்றிலும் கருப்பாகி, விரலே அழுகியதுபோலாகி விட்டது. கோவை ராம்நகரில் உள்ள குளோபல் எலும்பு மருத்துவமனையில், அந்த விரல் நேற்று அகற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக, இதேபோன்ற மோதிரம் அணிந்து, விரல் வீங்கிய நிலையில் வந்த மாணவியின் விரல், இதே மருத்துவமனையில் காப்பாற்றப்பட்டது.அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து, 'BURR’ என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி, மோதிரத்தை அறுத்து எடுத்து, விரலைக் காப்பாற்றியுள்ளனர். இதே மருத்துவமனையில், இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 9 பேர், இந்த மோதிரத்தால் ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். அவர்களில், இந்த மாணவன் உட்பட இருவரது விரல்களைக் காப்பாற்ற முடியவில்லை.
குளோபல் மருத்துவமனையின் தலைமை எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் கூறுகையில், “இதற்காக, சிகிச்சைக்கு வந்த எல்லோருமே, 20 வயதுக்குட்பட இள வயதினர் தான். வெறும் 10 ரூபாய் மோதிரம் என்பதற்காக, இதை வாங்கி அணிவதால், விரலையே பறிகொடுக்க வேண்டிய அபாயம் உள்ளது. பெற்றோர் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களது குழந்தைகள் இந்த மோதிரங்களை அணிவதைத் தடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகங்களும், இதனை நேரடியாக அறிவித்து, இது போன்ற மோதிரம் அணிந்து வருவதைத் தடை செய்தால் நல்லது,” என்றார்

Best regards,

Saturday, 19 January 2019

குடும்பத்தை சீரழிக்கும் சின்னத்திரை (நாடகம் சீரியல்)....!

குடும்பத்தை சீரழிக்கும் சின்னத்திரை (நாடகம் சீரியல்)....!

1.அடுத்தவர் குடும்பத்தை எப்படி

கெடுப்பது.

2.அன்னியர் சொத்தை எப்படி
அபகரிப்பது.

3.மாமியாரை எப்படி வீட்டை
விட்டு வெளியேற்றுவது.

4.மருமகளை எப்படி மகனிடம்
இருந்து பிரிப்பது.

5.பெற்றோருக்கு தொரியாமல்
எப்படியெல்லாம் தவறு செய்யலாம்.

6.அதை எப்படியெல்லாம்
மறைக்கலாம்.

7.அக்கம்பக்க(ம்)த்தினர் உடன்
எப்படியெல்லாம் புறம் பேசலாம்.

8.கணவனுக்கு எப்படி அடங்கமல்
நடக்கலாம்.

9.மனைவியை எப்படி அடிமைப்
படுத்தலாம்.

10.எல்லோரையும் எப்படி 
பழிக்குபழி வாங்கலாம்...

இப்படி கொலை,கொள்ளை,
ஏமாற்றம், அபகரிப்பு,ஆள்கடத்தல்,
கள்ள காதல்,கூட்டிக்கொடுத்தல்,
என்று எல்லாவற்றையும்,அழகாக
தெளிவாக சொல்லித் தறுவதுதான்
நாடகம் (சீரியல்).

காலையிலிருந்து இரவு 11 மணி
வரை.இந்த சீரியலுக்கு அடிமை
-யாகி இருக்கிறார்கள் இல்லத்
தரசிகளும் எனையவர்களும்.

குடும்பத்தில் வரும் பிரச்சனை
-களுக்கு 70% இந்த சீரியல்தான்
.....

முடிந்தவரை சீரியல் பார்ப்பதை
தவிர்ந்து கொள்ளுங்கள்.


Best regards,

Friday, 18 January 2019

2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம்
பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

✍நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

✍housing loan - அசல் தொகையை  80c ல் கழித்துக் கொள்ளலாம்.

✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.

✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

✍கல்விக் கடனுக்காக  இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

 ✍நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.

✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%

✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

✍Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/-  ஐ 87A ல்  கழித்துக் கொள்ளலாம்.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.

Best regards,

Thursday, 17 January 2019

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது.

ஒரு காட்டில் வாத்துக்குடும்பம் ஒன்று இருந்தது. அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சு பொறித்தது.

பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.

ஆனால், அதில் #ஒரு_குஞ்சு மட்டும் அழகும், அடர்த்தியும் இல்லாத முடியுடன் மெலிந்து போய் #அசிங்கமாக இருந்தது. அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் #வித்தியாசமாக ஒலித்தது.

உடன்பிறந்த வாத்துக் குஞ்சுகளுக்கு இந்த அசிங்கமான வாத்துக்குஞ்சைக் கண்டாலே #பிடிக்கவில்லை. #அதன்தாய்கூட அதை வெறுத்து, அதை மட்டும் #ஒதுக்கிவிட்டு மற்ற குஞ்சுகளுடன் நீந்தியது.

அசிங்கமான வாத்துக் குஞ்சு மிகவும் #வேதனை_அடைந்தது.

'நான் மட்டும் ஏன் இப்படி அவலட்சணமாக பிறந்தேன்..? #முட்டையிலேயே உடைஞ்சு போயிருக்கலாமே..!!' என்று வேதனையுடன் அழுது கதறியது. நாட்கள் ஓடின.

மற்ற வாத்துக் குஞ்சுகள் வளர வளர மேலும் அழகாயின. இதுவோ உயரமாகவும் மேலும் நிறமற்றும் காணப்பட்டது. தலையில் வேறு குச்சிகள் போல ஓரிரு முடிகள் வளர்ந்து, அதை இன்னும் அசிங்கமாக ஆக்கிற்று.

தினமும் வேதனையும், கண்ணீருமாகத் தனிமையில் வாழ்ந்து வந்தது.

சில வேளைகளில் அன்பாய் #அம்மாவையும், சகோதரர்களையும் #நெருங்கும். ஆனால் சில நொடிகளிலேயே அவை இதைக் கொத்தி விரட்டிவிடும். மேலும் கொஞ்ச நாள் சென்றது.

#அசிங்கமாகஇருந்தவாத்துக்_குஞ்சின் நிறமற்ற முடிகள், #பிரகாசிக்கும் வெண்மை நிறமானதாக மாற ஆரம்பித்தன.

தலையில் நீண்டிருந்த முடிகள், #அழகான கொண்டையாக மாறிற்று. இறக்கைகள் பலமடைந்து நீளமாக மாறிவிட்டன.

இப்போது அந்த அசிங்கமான வாத்துக்குஞ்சு, #கண்கொள்ளா_அழகுடன் காட்சியளித்தது.

அம்மா வாத்துக்கும், கூடப் பிறந்த மற்ற வாத்துக்களுக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போனது. அதன் அருகில் நெருங்கக்கூட கூச்சமடைந்து, #வெட்கப்பட்டன.

 நடந்தது என்னவென்றால்,

ஒரு #அன்னப்பறவை தவறுதலாக வாத்தின் கூட்டில் முட்டையிட்டுச் சென்றுவிட்டது.

இது தெரியாமல் வாத்தும் தன்னுடைய முட்டையென்று எண்ணி அடைகாத்து, குஞ்சு பொறித்து விட்டது.

அதுதான் அந்த அசிங்கமான வாத்துக் குஞ்சு.

ஒரு நாள் வந்தது.

அசிங்கமான வாத்துக் குஞ்சாய்த் தோற்றம் அளித்த அன்னப்பறவையின் சிறகில் ஒரு #உந்துதல் தோன்றியது.

படபடவென்று சிறகை அடித்து மேலே எழும்பியது. கேலி செய்தவர்கள் வெறுத்து, விரட்டியவர்கள் எல்லாம் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ள,

அன்னப்பறவை கம்பீரமாய் #உயர_உயரப் பறந்து ஒரு புள்ளியாக மறைந்து போனது.

எவர்
கண்டார்..

@ உங்களைத்
தூற்றபவர்கள்
யாவரும்
வாத்து கூட்டங்களாக கூட
இருக்கலாம்..@

உங்கள் திறமையான
சிறகுகள் வளர்ந்து..

உங்கள்
காலம் கனிந்து..
அன்ன பறவையாய்
மாறும் காலம் வரை
#பொறுத்திருங்கள்..

ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதேனும் #ஒரு_காரணம் இருக்கும்.

👍உங்களுக்கான
நேரத்தை,
இறைவன்
ஒதுக்கி கொடுப்பான்👍.

அது வரை சற்று #நிதானமாக இருக்கப் பழகிக்கொள்ளுங்கள்..

Best regards,

Wednesday, 16 January 2019

2019-ஜல்லிக்கட்டு அட்டவணை

*2019-ஜல்லிக்கட்டு அட்டவணை*
01.01.2019 மலத்தான்குளம் (அரியலூர்)
07.01.2019 ரெகுனாதபுரம் (புதுக்கோட்டை)
14.01.2019 தச்சங்குறீச்சி (புதுக்கோட்டை)
15.01.2019 அவனியாபுரம் (மதுரை)
16.01.2019 பாலமேடு (மதுரை)
16.01.2019 சூரியூர் (திருச்சி)
17.01.2019 அலங்காநல்லூர் (மதுரை)
17.01.2019 அவரங்காடு (திருச்சி)
17.01.2019 நெய்காரபட்டி (பழனி)
17.01.2019 RT மலை
18.01.2019 கூலமேடு (சேலம்)
18.01.2019 பொத்தமேட்டுப்பட்டி (மணப்பாறை)
18.01.2019 வடமலாப்பூர் (புதுக்கோட்டை)
19.01.2019 கரிய பெருமாள் புதூர் (நாமக்கல்)
19.01.2019 கோக்குடி (அரியலூர்)
19.01.2019 ஈரோடு
19.01.2019 கிழப்பனையுர் (திருமயம்)
20.01.2019 விராலிமலை (புதுக்கோட்டை)
21.01.2019 கிழக்குளத்தூர் (அரியலூர்)
21.01.2019 நாகியாம்பட்டி (சேலம்)
22.01.2018 உலகம்பட்டி ( திண்டுக்கல்)
27.01.2019 கருங்குளம் (மணப்பாறை வட்டம்)
27.01.2019 மகாராஜபுரம் (விருதுநகர்)
27.01.2019 அலங்காநத்தம் (நாமக்கல்)
27.01.2019 தம்மம்பட்டி (சேலம்)
27.01.2019 அய்யம்பாளையம் (திண்டுக்கல்)
03.02.2019 அலகுமலை (திருப்பூர்)
03.02.2019 லால்குடி (திருச்சி)
03.02.2019 ஆ. கலிங்கப்பட்டி (மணப்பாறை)
10.02.2019 அய்யம்பட்டி (தேனி)
13.02.2019 புகையிலைபட்டி ( திண்டுக்கல்)
18.02.2019 அய்யனார்குளம் (மதுரை)
19.02.2019 திருமானூர் (அரியலூர்)
24.02.2019 பல்லவராயன்பட்டி (தேனி)
06.03.2019 இடையத்தூர் (புதுக்கோட்டை)
Best regards,

Tuesday, 15 January 2019

தை பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.....○●
தை பொங்கல் 2019: சூரியனுக்கு நன்றி சொல்லும் திருநாள் - பொங்கல் வைக்க நல்ல நேரம்.
தை பொங்கல் திருநாளான நாளை 15ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
○□சூரியன் பயணம்.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
○□அலங்காரமும் சுத்தமும்.
ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக 10 நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராவது தமிழர் மரபு. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி, சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி பொங்கலை வரவேற்பார்கள்.
○□புதுப்பானையில் பொங்கல்.
வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.
○□தை பொங்கல் நல்ல நேரம்□○
இந்த ஆண்டு நாளைய தினம் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். இரண்டாம் நாள் 16ஆம் தேதி கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம். மாட்டுப்பொங்கல் நாளில் நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம்.

Best regards,

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள்.

நம் முன்னோர் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.

Best regards,

பொங்கல்_பண்டிகை

பொங்கல்_பண்டிகை

15 ஆம் தேதி செவ்வாய் கிழமை பற்றி தெரிந்து கொள்ளவும்.  16 ஆம்  தேதி புதன் கிழமை கனு.

முதல் நாள் 14 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு 11.21 மணிக்கு வாக்ய பஞ்சாங்கப்படியும்

திருக்கணிதப்படி இரவு 07.49 மணிக்கும் தை மாதம் பிறக்கிறபடியால்
மறுநாள் அதாவது 15 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று தான் உத்ராயண புண்யகால மகர ஸங்ராந்தி மாஸ பிறப்பு தர்பணம் பண்ண வேண்டும்.

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்.

செவ்வாய் காலை 08.15 மணிக்கு மேல்  09.00 மணிக்குள் சுக்ர ஹோரையில் விசேஷம்.

அல்லது 10.45 க்கு மேல் 11.15 க்குள் சந்த்ர ஹோரை விசேஷம்.

தர்பணம் முடித்துவிட்டு ஸுர்ய நாராயண பூஜை விசேஷம்.

மறு நாள் புதன்கிழமை கனுப்பிடி வைக்க உகந்த நேரம் காலை 06.30 மணி முதல் 07.30 மணி வரை.


Best regards,

Monday, 14 January 2019

அட்வான்ஸ் பொங்கல் நல் வாழ்த்துகள்

வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.
காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக
அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.

மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத்தொழில்லநீதான் முன்னாடி நான் பின்னாடிதான்.
முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.

அடடா.. இந்த மனிதஜாதிதான் எவ்வளவு மேலானது
என்று நினைத்து சிலிர்த்துப்போனது காளை.

விவசாயி தொடர்ந்தார்.
நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.

அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.

காளைக்கு தலைச்சுற்றியது.எவ்வளவு நேர்மை..!
பாதிக்குப்பாதி பங்குதர யாருக்கு மனசுவரும்..!

பாதிப்பாதின்னா எப்படி பங்குவைக்கலாம்?நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.

முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!
பெருமிதமாய் பார்த்தது காளை.

விதைவிதைத்து
நாற்றுநட்டு சிலகாலத்தில் பச்சைப்பசேலென்று மாறியிருந்தது வயல்.
மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.
விவசாயியை பார்த்தது.

முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.
இதுல அப்புறமா ஒன்னு வரும்.
அதுமட்டும் எனக்கு.
சரியென்று தலையாட்டியது காளை.

கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரைவால்போல
விளைந்து தரைபார்த்துக்கிடந்தன.

அறுவடைநாள் வந்தது.
முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.
பின்னர்வந்த நெல் விவசாயிக்கு.

மாடு கோர்ட்டுக்கா போகமுடியும்..?
பாகப்பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.
கவலைப்படாதே நெல்லிலும் பங்குதர்றேன்.
அதிலும் நமக்கு பாதிப்பாதி.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

நெல்லை உலரவைத்து
அரைத்துப்புடைத்ததும்
உமியும் தவிடும் முன்னால் வந்தது.
அது காளைக்கு.
பின்னால்வந்த முத்துமுத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.
இந்த பங்கீட்டிலும் நியாயமில்லையென்று கண்ணீர்விட்டது காளை.

அழுவாதே.இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.
.. சரியா? என்றார்
 விவசாயி.

அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,
அரிசியை நோக்கிச்சென்றது.

பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.
அடுத்துவருவதுதான் எனக்கு.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

அரிசியை சோறாக்கி வடித்தபோது
முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.
அடுத்துவந்த சோறு மனிதனுக்கு.
காளை முரண்டுபிடித்தது.

இந்தமுறை,
முன்னால மனிதனுக்கு
பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.

சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.
பொங்கல் திருவிழா வந்தது.

முதலில் வந்த *பொங்கல் மனிதனுக்கு
அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல் 
🐃🐂🐄

🙏 அட்வான்ஸ்
பொங்கல் நல் வாழ்த்துகள்

Best regards,

Sunday, 13 January 2019

ஆண்களுக்கான பொங்கல்_சிறப்பு பதிவு ..!

#பொதுநலன்கருதிவெளியீடு
#ஆண்களுக்கான பொங்கல்_சிறப்பு பதிவு ..!

1.  சீலிங் ஃபேனை துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துடைக்கவும்.இல்லையென்றால் துசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும்

2.  லாப்டில் உள்ள பொருட்களை எடுக்கும் பொது பொறுமையாக எடுக்கவும் கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம்.மண்ட பத்திரம்

3.  சீலிங் ஃபேன்களை ஆப் செய்து விட்டு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும்.இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும்

4.  ஒட்டடை அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம்

5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் ''என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு" என்று ஒரு அசரீரி கேட்கும்.
அதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஒரு கப் காபி சாப்பிடவும்.அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம்.

-பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாடுவீர்


Best regards,

Thursday, 10 January 2019

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்! .

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும்!

ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் போதும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
.
இதுவரை 139 என்ற எண்ணை அழைத்து ரயில் எங்கே வந்துகொண்டிருக்கிறது என்ற தகவலைப் பயணிகள் பெற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் ஒரே எண்ணை, ஒரே நேரத்தில் ஏராளமானோர் அழைத்ததால்,
சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 139-ஐ உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது.
.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது.
.
எப்படி இந்த சேவையைப் பெறுவது?
.
* முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
.
* வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள்.
.
* வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயிலின் எண்ணை அனுப்புங்கள்.
.
* அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். அதில் ரயில் எண், அதன் பெயர், எந்தத் தேதியில் ரயில் கிளம்பியது, எந்த ரயில் நிலையத்தைத் தாண்டியுள்ளது, அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.
.
அதுமட்டுமல்லாமல், 'நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?' என்று கேள்வி எழுப்பபட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது.
.
இந்த சேவையை ரயில்வே துறை, 'மேக் மை ட்ரிப்' உடன் இணைந்து அளிக்கிறது.
.
இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் லைவ் ஆகத் தெரிந்துகொள்ள முடியும்.
.
மறக்க வேண்டாம்
7349389104

Best regards,

Wednesday, 9 January 2019

மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது...

மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது...
எனில்...

படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்..

எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...?

பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல...

கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?

நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...?

தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...?

புரிதல் வேண்டும்...

பண்படுத்துவது என்பது - புண்படுத்துவது அல்ல என்ற புரிதல்
மாணவர்களுக்கு மட்டுமல்ல - மற்றவர்களுக்கும் வேண்டும்...!

ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்...
குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...?

ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிறாள்...

குழந்தையின் மீது செலுத்தப்படும் எவ்வளவு மோசமான வன்முறை இது... அவர்களுக்கான தண்டனை என்ன...?

குழந்தையின் நலன்கள் இரண்டு..
உடல் நலன்...
உள்ள நலன்...

உடல் நலனுக்காக இயங்கும் மருத்துவத்துறையின் கைகளை...
"ஊசி குழந்தைக்கு வலிக்கும், மருந்து குழந்தைக்கு கசக்கும், அறுவை சிகிச்சை அதை விட வலிக்கும்... எனவே எல்லாவற்றையும் தவிர்த்து
குழந்தைக்கு மனம் நோகாமல் அறிவுரை மட்டும் கூறி அனுப்புங்கள்" என்று சொல்வீர்களா...?

மருத்துவ துறையின் கைகள் கட்டப்பட்டால், உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...

புரிதல் வேண்டும்...

அதே போல...
உள்ள நலனுக்கானது தான் - கல்விக்கூடங்கள்...
அது கூடாது, இது கூடாது என்று இங்கே கற்பிப்பவரின் கையும், சுய சிந்தனை உணர்வும் கட்டப்பட்டுவிட்டன...

விளைவு - நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால் - அது நூறு சிறைச்சாலைகள் திறப்பதற்கு சமம்.

மூடும் அளவிற்கு அதிக சிரமம் வேண்டாம்...
ஆசிரியரின் உடலும், உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே போதும்...
மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால்,காவலர்களின் அடியால் திருந்த வேண்டும் அல்லது சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்.

சிந்தியுங்கள் பெற்றோர்களே..….!

மனம் நொந்து போயுள்ள ஆசிரிய சமுதாயம் சார்பாக.

குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்காக பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கும், மாணவர்களை தன் பிள்ளைகள் போல் நினைத்து கற்பிப்பதுடன், அவர்களை சிறந்த முறையில் வழிநடத்தி, அவர்களை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒவ்வொரு ஆசிரிய / ஆசிரியைகளுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

Best regards,

Tuesday, 8 January 2019

வெளிநாட்டில் படிக்க உதவும் உதவித்தொகைகள்

 வெளிநாட்டில் படிக்க உதவும் உதவித்தொகைகள்

:::::::::::::::::::::: :::::::::::::::::::::

1.இண்டியன் சப்-கான்டினென்ட் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: எடின்பர்க் நேப்பியர் பல்
கலைக்கழகம், இங்கிலாந்து
யாருக்குக் கிடைக்கும்: +2ல் 65% மதிப்பெண் பெற்று எடின்பர்க் நேப்பியர்
பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பில் சேரும் இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: வருடந்தோறும் 2000-3000 பவுண்ட்
விண்ணப்பிக்க: செப்டம்பர் மாதத்தில் பட்டப்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கும்போது, இந்த உதவித்தொகைக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:   www.napier.ac.uk

2.தி யுனிவர்சிட்டி ஆஃப் ஷெஃப்பீல்டு ஸ்காலர்ஷிப்

வழங்குவது: ஷெஃப்பீல்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று மேற்கண்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் சேரும்
இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: ஆண்டுதோறும் 1500 பவுண்ட்
விண்ணப்பிக்க: ஆகஸ்ட் மாதத்தில் மேற்கண்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும்போது, இந்தக் கல்வி உதவித் தொகைக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு:www.sheffield.ac.uk

2.டப்ளின் ட்ரினிட்டி காலேஜ் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: ட்ரினிட்டி காலேஜ், அயர்லாந்து
யாருக்குக் கிடைக்கும்: +2 தேர்ச்சி பெற்று மேற்கண்ட கல்லூரியில் கலை, மானுடவியல், சமூக அறிவியல், அறிவியல், கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பட்டப்படிப்பில் சேரும் இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: ஆண்டொன்றுக்கு 9000 யூரோ.
விண்ணப்பிக்க: ஆகஸ்ட் இறுதி வரை, மேற்கண்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்
படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, உதவித்தொகைக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: www.tcd.ie

3.ஹுவாவெய் மெய்த்ரி ஸ்காலர்ஷிப்

வழங்குவது: ஹுவாவெய் மெய்த்ரி அமைப்பு, சீனா
யாருக்குக் கிடைக்கும்: சீனாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கலை, அறிவியல், மேலாண்மை மற்றும் பொறியியல் துறைகளில் பட்டப்படிப்பில் சேரும் 10 இந்திய மாணவர்களுக்கு.
எவ்வளவு: படிப்பை முழுமையாக முடிப்பதற்கு தேவைப்படும் பணம் முழுவதும்.
விண்ணப்பிக்க: ஜூலை இறுதிக்குள்
மேலும் விவரங்களுக்கு: www.indiaeducation.net

4.ஐ.பி.ஆர்.எஸ் - ஆஸ்திரேலிய உதவித்தொகை

வழங்குவது: ஆஸ்திரேலிய அரசு
யாருக்குக் கிடைக்கும்: ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர விரும்புவோர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன், ஆஸ்திரேலிய அரசின் உதவித்தொகையை ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு பெற்றிருத்தல் கூடாது. இந்த உதவித்தொகையின் 75 சதவீத அளவுக்கு வேறு உதவித்தொகைகள் எதையும் கூடுதலாகப் பெற்றிருக்கக்கூடாது.
எவ்வளவு:  முழு கல்விக்கட்டணம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை முழுவதும்
விண்ணப்பிக்க: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு:  www.qut.edu.au

5.ஏ-ஸ்டார் இந்தியா மற்றும் எஸ்.ஐ.ஏ., யூத் ஸ்காலர்ஷிப்

வழங்குவது: சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்
யாருக்குக் கிடைக்கும்: உயர்நிலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழக முன்படிப்புகளை சிங்கப்பூரில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தியராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தை முதல் பாடமாகப் படித்திருக்க வேண்டும். சராசரி மதிப்பெண் 80 சதவீதம் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பேசுதல் மற்றும் எழுதுதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எவ்வளவு: முதல் இரு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 70 ஆயிரம் உதவித் தொகையும் அடுத்த இரு ஆண்டுகளில் மாதம் சுமார் ரூ.76 ஆயிரத்துக்கும் கிடைக்கும். விமான டிக்கெட்டும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு: www.moe.gov.sg

# ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம், தமிழ்நாடு.


Best regards,

Monday, 7 January 2019

எது கெடும் ?!?

எது கெடும் ?!?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு..

Best regards,

Friday, 4 January 2019

மிக மிக அருமையான கருத்து. கொஞ்சம் நேரம் ஒதுக்கி அனைவரும் அவசியம் படிக்கவும்.

மிக மிக  அருமையான  கருத்து.   கொஞ்சம்  நேரம்  ஒதுக்கி  அனைவரும்  அவசியம்  படிக்கவும்.

உறவுகள்,,, தொடர்கதை!!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன்.

 சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி நான்  ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’
 - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள்.

சரி,,,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.

 ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ - இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் யபிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ' என்று நெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே' என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!.

ஓம் சர்வம் சிவார்ப்பணம்.

Best regards,

Thursday, 3 January 2019

அம்மா மகன் ௨றவு

மிகவும் அ௫மையானகதை

அம்மா மகன் ௨றவு

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம்.

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மக்னே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை.

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்..

Best regards,