ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஏன்?
திருமதி. சௌமியா அவர்களின் முகநூல் பதிவு...
ஜாக்டோ ஜியோ ஜன 22 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்துகிறது.
அரசாங்கம் நேர்மையான முறையில் அரசு ஊழியர்களின் பிரச்சனைகளை அணுகி அவற்றைத் தீர்க்க முயன்றிருந்தால் போராட வேண்டிய நெருக்கடி அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்காது.
இந்தப் போராட்டத்தின் முதன்மையான நோக்கம் அரசு ஊழியர்களின் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதாகும்.
பங்களிப்புத் ஓய்வூதியத் திட்டம் வாஜ்பாய் அரசால் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் அரசால் தொடரப்பட்டது.
இந்தத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் முன்பாகவே தமிழகத்தில் 1.4.2003 இல் அமல் படுத்தியவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. இதற்கான அரசாணை 6.8.2003
அன்று வெளியிடப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு ஊழியர்களிடம் இல்லை. சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும். என அவர்கள் நம்பியதால் எதிர்ப்பு கிளம்பவில்லை.
ஆனால் அரசு ஊழியர்கள் நம்பியதற்கு மாறாக புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணியாற்றிவர்கள் உயிரிழந்தபோது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை!
என்றபோதுதான் இது ஒரு மோசடியான திட்டம் எனத் தெரியவந்தது. ஓய்வூதியத்துறையில் தனியாரை நுழைக்கக் கொண்டு வந்த சதியே புதிய பங்களிப்பு ஓய்வூதியம் எனப் புரியத் தொடங்கியது.
சிபிஎஸ் திட்டத்தை மாற்ற முடியாத திட்டம்போல் அரசியல்வாதிகள் பேசுகிறார்கள். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் என்ற இந்தச் சட்டத்தின்3 (4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக்கூறுகிறது. இது ஒரு தேசியத் திட்டம். இதை நிறை
வேற்றுவதோ, ரத்து செய்வதோ மாநில அரசின் கையில்தான் உள்ளது.
புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணமும் அரசின் பங்களிப்புத் தொகையையும் இதுவரை ஆண்ட திமுக , அதிமுக இரு
அரசுகளுமே ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு கடந்த 13 ஆண்டுகளாக அனுப்பி வைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை!
ஆசிரியர்களின் பங்களிப்பு ஊதியம், மற்றும் பி.எஃப் போன்றவற்றை அரசு மற்றும் துறை நிறுவனங்களில் முதலீடு செய்து அதைப் பெருக்கும் திறன் அரசுக்கு இல்லை எனக் கருதி, இப்பெருந்தொகையைக் கையாளும் பொறுப்பை , ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களிடம் அளித்தது அரசு.
அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில்
தனது சட்டபூர்வ பொறுப்பைக் இவ்வாறு கைகழுவும் வேலையை மத்திய மாநில அரசுகள் செய்கின்றன!
அரசு ஊழியர்களின் வேர்வையில் விளைந்த பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்திலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தும்,
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது அரசு!
பங்களிப்பு ஓய்வூதியத்தை நிறுத்துவதா? தொடர்வதா? என்பது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி தனது பரிந்துரைகளை 2018 நவம்பர் 7 அன்று அரசுக்கு கொடுத்தது.
இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு எடப்பாடி அரசு மௌனம் சாதிக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா அவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வதாகக் கூறியிருந்தார். மாண்புமிகு அம்மாவின் அரசு எனக் கூறிக்கொள்ளும் எடப்பாடி அரசோ அம்மாவின் உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டிருக்கிறது.
அதுபோலவே அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும் என்பதும் ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளுள் ஒன்று. ஊதியமுரண் குறித்த சித்திக் கமிட்டியின் அறிக்கை இந்த ஆண்டு ஜனவரி 5 இல் அரசிடம் சமர்ப்பிக்கப்
பட்டிருக்கிறது. இந்த அறிக்கையும் கிடப்பில் போடப்படுமோ? என்கிற அச்சம் அரசு ஊழியர்களிடம் இருக்கிறது.
மேலும், 21 மாத, ஊதியக்குழு நிலுவைத்தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுபோல நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்திலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த முரண்பட்ட நிலை நீக்கப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படவேண்டும் என்பதும் ஜாக்டோ - ஜியோவின் கோரிக்கைகளுள் ஒன்று.
ஏதோ அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தால்தான்
அரசின் கஜானா காலியாவதுபோன்ற தோற்றத்தை அரசு பொதுமக்களிடம் தோற்றுவித்து, அரசு ஊழியர்களை பொதுமக்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறது அரசு!
உண்மையில் அரசின் சலுகைகளை, வங்கிகளின் நிதியை, கொள்ளையடிக்
கும் கார்ப்ரேட்டுகளாலேயே அரசின் கஜானா காலியாகிறது.
இந்தியாவின் 50% சொத்து வெறும்
9 கார்ப்ரேட்டுகளிடம் உள்ளது. இந்தியாவில் 10% தரகு முதலாளிகள். இவர்களிடம் 78% இந்தியாவின் சொத்துக்கள்.
இந்தியா வளர்கிறது. ஆனால் ஏழைகள் வளரவில்லை. இதற்குக் காரணம் இந்தியா கடைபிடிக்கும் உலகமயமாக்
கல், தாராளமயம் போன்ற தவறான கொள்கைகள். ஆனாலும் அரசோ,
ஏழைகளிடம், அரசு ஊழியர்களை எதிரிகளாகக் காட்டுகிறது!
இந்நிலையை பொதுமக்களிடம் புரியவைப்போம். திருமதி .சௌமியா அவர்களின் முகநூல் பதிவு......
Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com