Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Wednesday, 20 February 2019

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன்

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.

கீரை 

கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ்  (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக   (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை

முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான்

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை,  இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு

அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்

எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

படித்து விட்டு பகிர்ந்து விட்டால் நலம்.... கடைப்பிடித்தால் மிக்க நலம்...

Best regards,

Friday, 10 June 2016

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
உணவருந்தும்போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் இதோ. இதைப் படித்துபார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும்:
வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் (Metabolism) இது பயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப்படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை கூலாக்க உதவும்.
அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பும் தேங்கிபோவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறுகுடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
எச்சில் அளவை குறைக்கும்:
செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும்போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்திவிடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.
செரிமான குறைவை உண்டாக்கும்:
அசிடிட்டியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின்மீது பழியை போடலாம். உண்ணும்போது தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போகும், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன்பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர் பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
உணவை நன்கு மென்று விழுங்கவும்:
உணவை அப்படியே விழுங்காதீர்கள் நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் தொப்பை மற்றும் உடல் இடை கணிசமாக குறையும். மேலும் நம் எச்சில் உற்பத்தியும் அதிகரிக்கும். இதனால் உண்ணும்போது தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.
விதிவிலக்கு:
உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடித்துவிடுங்கள்.
உணவில் காரமோ அல்லது உப்போ அதிகமாகிவிட்டால் மட்டும் தேவையான அளவு தண்ணீரை மெதுவாக வாய்வைத்து குடியுங்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் அன்னாக்க நீர் அருந்த கூடாது. அப்படி அருந்தினால் அளவுக்கு அதிகமாக நீர் உள்ளே சென்று நம் இரைப்பையை பாதிக்கும்
Best regards,