Showing posts with label பால். Show all posts
Showing posts with label பால். Show all posts

Wednesday, 20 May 2020

ஒரு கப் பால் ஒன்னரை லட்ச ரூபாய்..

ஒரு கப் பால் ஒன்னரை லட்ச ரூபாய்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது.. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை.. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்..

அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.. ஒரு பெண் கதவைத் திறந்தாள்.. ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான்.. ஆனால் கூச்சம்.. கேட்க மனம்வரவில்லை..

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள்.. உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்..

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்“இந்த பாலுக்கு நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை.. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.”

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்..

ஆண்டுகள் கழிந்தன.. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.. அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது..

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.. அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது.. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல்.. விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார்.. அவள் தான்.. தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம்..

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார்.. நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள்.. பல லட்சங்கள் செலவானது.. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது.. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்..

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது..

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது.. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன..

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல.. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்..

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள்.. அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
படித்ததில் பிடித்தது.Best regards,

Wednesday, 22 June 2016

பால் கதை..!

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம்..!
தாங்க முடியல சாமி..! எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்..? என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்குவிடையளிக்கக் கூடும்.
கதை சொல்லப் போறேன்..! பால் கதை..!
பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.
என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.
அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.
பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.
இந்தக் கதை, நமக்கு சொல்ற பாடம் என்ன?
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகின்ற அம்சங்கள்..!
புரிஞ்சுதா..?
Best regards,