Tuesday, 9 February 2016

யார் சந்தோஷமாக இருக்கிறார்கள்

" யார் சந்தோஷமாக இருக்கிறார்கள் " . ✔ ✔ ✔
📕 " யார் உலகில் மிகவும் " சந்தோஷமா " இருக்கிறவங்க ? ✔
📕 " ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. ✔
📕 " அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .✔
📕 " கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . ✔
📕 " கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . ✔
📕 " அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது . ✔
📕 " காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. ✔
📕 " உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று . ✔
📕 " அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் . ✔
📕 " என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது . ✔
📕 " மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று . ✔
📕 " ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது . ✔
📕 " இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை .. ✔
📕 " எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது . ✔
📕 " இதுதான் நமது பிரச்சினையும் ...✔
📕" நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் . ✔
📕 " நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை . ✔
📕 " அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை . ✔
📕 " இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது . ✔
📕 " ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை . ✔
📕 " உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள் . ✔
📕"உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது✔
📕 "இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில். ✔

Best regards,

Monday, 8 February 2016

பெண்களை காப்பாற்றுங்கள்

தயவு செய்து இதை பகிருங்கள் !! பெண்களை காப்பாற்றுங்கள் !!
உங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் உள்ளார்களா ! மகள் , பேரக்குட்டிகள் உள்ளார்களா தயவு செய்து ஷேர் செய்யுங்கள்
நீங்கள் ஷேர் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் நேரம் ஒதுக்கி இந்த உண்மை சம்பவத்தை எழுதுகிறேன்.
அந்த பெண்ணிற்கு அறிமுகமில்லாத நம்பரில் இருந்து ஒரு கால் வருகிறது

அவளும் எடுத்து யார் என்று கேட்கிறாள்.
அதற்கு அவன் தன் பெயரை சொன்னதும் தனக்கு அறிமுகமில்லாத நம்பர் என்று கருதி காலை துண்டிக்கிறாள்
சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து மறுபடியும் கால்
இவள் எடுத்து பேசுகிறாள்
அதற்கு அவன் ஒரு பேரை சொல்லி அவர்தானே என் அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுகிறது என் அம்மாவிற்கு இரத்தம் கிடைக்கவில்லை என்றால் அவர் இறந்துவிடுவார் என்று குரல் உடைந்து பேசுகிறான் .
உடனே இவள் நீங்கள் அழைத்தது ராங் நம்பர்ங்க என்று சொல்லி போனை துண்டிக்கிறாள்.
மறுபடியும் ஒரு வாரம் கழித்து அதே நம்பரில் இருந்து அழைப்பு .இவள் எடுத்து என்ன என்று கேட்கிறாள்.
உங்களை தொந்தரவு செய்வதாக நினைக்காதீங்க இப்போது தான் என் அம்மாவை ஆஸ்பத்திரில இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கொண்டுவந்தேன் . என்னமோ உங்களிடம் சொல்லனுமனு தோனுச்சி அதான் கூப்பிட்டேன் .என்று சொல்ல.
இவள் பெண்ணாச்சே! இரக்ககுணத்தால் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்து விபரம் கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டாள்.
மறுபடியும் இரண்டு நாள் கழித்து அந்த நம்பரில் இருந்து குட்மார்னிங் என்று செய்தி வருகிறது. இவளும் மரியாதைக்கு பதில் அனுப்புகிறாள்.
இப்படியே அவர்கள் நட்பு பத்து நாட்கள் தொடர்கிறது.
மீண்டும் அவன் அவளை அழைக்க அவன் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் இவளும் எடுத்து பேசுகிறாள்.
இப்போது அவளுக்கு அவன் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு. இருவரும் சமூக வலைத்தளங்களான , முகநூல் , வாட்ஸ்அப் , என்று தங்கள் காதலை பலப்படுத்துகிறார்கள்.
இவளும் அவன் மீது ஏற்பட்ட குருட்டு நம்பிக்கையால் தன்னை விதவிதமாக படம் எடுத்து அவனுக்கு அனுப்புகிறாள்.
திடீரென ஒரு நாள் அவன் எனக்கு உன்னை நேரில் பார்க்கனும் போல் இருக்கு என்று கெஞ்சுகிறான்.
மறுநாள் தன் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு அவனை சந்திக்க இவள் செல்கிறாள்.
அந்த ரயில்வே ஸ்டேஷனில் கடைசி ப்ளாட்பார்மில் நின்ற ரயிலில் இருவரும் சந்திக்கிறார்கள் .
அவனை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு இருவரும் கட்டித்தழுவி அன்பை பகிர்கிறார்கள்.
ரயில் சிறிது தூறம் சென்றதும் கண்ணாடிகள் அடைத்த அந்த ஏசி பெட்டியில் தனிமை அவர்களை தவறு செய்ய வைக்கிறது.
அன்று முழுவதும் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இரவு அவரவர் வீட்டுக்கு திரும்புகிறார்கள்.
மறுநாள் போன் வரவில்லை இவளும் அதை பொருட்டாக நினைக்கவில்லை.
மூன்றாம் நாள் போன் வருகிறது . அவன் சொல்கிறான் எனக்கு வெளி மாநிலத்தில் வேலை அதனால் இடையிடையே பேசுகிறேன் என்று .
இந்த அப்பாவியும் சம்மதிக்கிறாள்.
இப்படியே போன் வருவது சுத்தமாக நின்று போகிறது.
திடீரென ஒருநாள் இரவு ஒரு அழைப்பு இவளும் அவன் தான் அழைக்கிறான் என்று பாய்ந்து ஓடி எடுக்கிறாள் . எடுத்தவள் ஏமாந்து போனாள். ஆம் அது ஒரு புதிய நம்பர்
இவளும் போனை எடுத்து யார் என்று கேட்க எதிர்முனையில் இருந்தவன்
என்னை தெரியலையா நான் உன் பள்ளிப்பருவ வகுப்பு தோழன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு
மேலும் தொடர்கிறான் நீ பள்ளியில் படிக்கும் போது எவ்வளவு நல்ல பெண்ணாய் இருந்தாய் . ஆனால் இப்பொழுது உன் மீது இருந்த அந்த மரியாதையே போய்விட்டது என்று சொல்கிறான்.
என்ன சொல்கிறாய் நான் என்ன தவறு செய்தேன் என்று அவள் கோபத்துடன் கேட்க
எதிர்முனையில் இருந்தவன் சொல்கிறான்
ரயிலுக்குள் நீ ஒரு இளைஞனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களும், படங்களும் முகநூலிலும் ,ஆபாச வலைத்தளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வந்துள்ளது என்று .
பதறிப்போனால் அவள் செய்வதறியாது போனை துண்டித்தவள்
மீண்டும் தன் காதலனுக்கு போன் செய்கிறாள் இந்த நம்பர் தற்காலிகமாக உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
முகநூல் கணக்கை பார்க்கிறாள் .முகநூல் கணக்கையும் காணவில்லை.
அப்போதுதான் தெரிகிறது தான் ஏமாற்றப்பட்டோம் என்று அவளுக்கு.
அவமானம் தாங்காமல் ஊருக்கும், ஊர் வாயிக்கும் பயந்து தன்னுடைய துப்பட்டாவை எடுத்து பேனில் மாட்டி தன் வாழ்க்கையை முடித்து கொள்கிறாள்.
மறுநாள் இவளுடைய அடக்கம் ஊரே திரண்டு இவளுக்கு கடைசி காரியங்கள் செய்து கொண்டிருக்கையில்
வேறொரு நம்பரில் இருந்து வேறொரு பெண்ணிற்கு போன் வருகிறது. அவள் எடுக்க இவன் சொல்கிறான்.!!!!!!!!!!!
என் அம்மாவிற்கு ஆப்ரேஷன் ரத்தம் வேணும்....................................

Best regards,

தை அமாவாசை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

தை அமாவாசை முன்னிட்டு திருவிளக்கு பூஜை :
தை அமாவாசை என்பது கடந்த 06/02/1989க்கு பிறகு , அதாவது 26 ஆண்டுகள் கழித்து , வருகிற திங்கட்கிழமை அரசமரம் பூமிக்கு கிடைத்த நாள் ; 08/02/2016 ஆம் தேதி சிவ வாரம் வியதீபாத நாம யோகம் பலிச்சக்கரவர்த்தியின் திருவோணம் நட்சத்திரத்தில் வருகிறது . இதை முன்னிட்டு வருகிர சனி , ஞாயிறு , திங்கள் அதாவது 06/02/2016, 07/02/2016, 08/02/2016 ஆகிய நாட்களில் இல்லத்தில் செய்யப்படும் திருவிளக்கு பூஜையாகும் .
தாய்மார்கள் , சகோதரிகள் அனைவரும் தங்கள் இல்லத்தில் இந்த திருவிளக்கு பூஜையை செய்யலாம் . இப்படி ஒரு நட்சத்திர அமைப்பு இனி அடுத்து 26 ஆண்டுகள் கழித்து தான் வரும் . பூஜையின் போது குங்குமதிற்கு பதிலாக மஞ்சளில் 108 திருவிளக்கு போற்றிகள் சொல்லி பூஜை செய்யவும் .
இந்த திருவிளக்கு பிரார்த்தனை முக்கியமாக கணவன் மணைவியின் சந்தோஷமான இல்லற வாழ்க்கைாக , பிறிந்து வாழும் கணவன் மணைவி மீண்டும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதற்காக , திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்க பெற மற்றும் குடும்ப வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்திற்காகவும் நடத்தப் படுகிறது .
இந்த மூன்று தினங்களும் மாலை மணி 6க்கு மஞ்சள் , குங்குமம் , மலரினால் அலங்கரித்த திருவிளக்கில் நெய் விட்டு ஏற்றி , மற்ற பூஜை பொருட்கள் வைத்து , 108 போற்றிகள் சொல்லி மஞ்சளால் அர்ச்சனை செய்யவும் .

அன்னை மஹாலெட்சுமியின் கிருபையால் அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும் .

Best regards,