Tuesday, 2 June 2020

All parents must understand this reality.

All parents must understand this reality.

 அவசியம் முழுதாகப் படிக்கவும் !

குழந்தைகளை படிக்க வைக்கும் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு...

 நாளைக்காக மட்டும் வாழமுடியுமா?

என்னை மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்த பதிவு. பெற்றோர்களே கொஞ்சமாவது சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் சொந்த வீடு உள்ள இடத்தில் குடிபெயர்ந்து நல்ல பள்ளி அருகினில் வீடு வாகை எடுத்து நீங்கள் சம்பாதிப்பதை எல்லாம் வீட்டு வாடகைக்கும் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கும் தான் செலவு செய்கிறீர்கள்.

அந்த கல்வி வருங்காலத்தில் அவனை ஒரு பணம் சம்பாதிக்கும் கருவியாகத்தான் மாற்றுமே தவிர நல்ல மனிதனாக ஒருபோதும் மாற்றாது என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு கிழே உள்ளவற்றை படிக்க தொடங்கவும்

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது.

 தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள்.

இருவருமே நன்றாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள்.

 இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.
அவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு.

 பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.

அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை.

வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள். அந்த ஐந்து நாட்களிலும் மொத்தமாக ஐந்துமணிநேரம் பெற்றோரிடம் செலவழித்தால் அதிகம்

‘உங்கள் நூல்களை இங்கே வரும்போது என் இரண்டாவது மகன் கட்டுக்கட்டாக வாங்கிச்செல்கிறான். நீங்கள் ஏன் இதை அவனிடம் பேசக்கூடாது? நீங்கள் பேசினால் அவன் கேட்பான்’ என்றார் அவர்.

இம்மாதிரி குடும்ப விஷயங்களில் தலையிடக்கூடாதென்பது என் கொள்கை. ஆனால் அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியபோது அதை அவரது மகனுக்கு அப்படியே திருப்பி விட்டேன்.

அவர் மகன் ஒருவாரம் கழித்து மிகநீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

என்னை பலகோணங்களில் சிந்திக்கவைத்த கடிதம் அது. ‘நான் திருச்சியில் இருபத்திரண்டு வருடம் வாழ்ந்திருக்கிறேன்.

ஆனால் திருச்சியுடன் எனக்கு மானசீகமாக எந்த உறவும் இல்லை. இருபத்திரண்டு வருடம் அப்பா அம்மாவுடன் வாழ்ந்தேன்.

ஆனால் அவர்களைப்பற்றி ஒரு நல்ல நினைவுகூட இல்லை’ என்றார் அவரது மகன்.

அவரது தந்தை அவரை ஒரு பொறியியலாளராக ஆக்கவேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் சிந்தனை செய்தார்.

அதுவும் அவர் எல்.கெ.ஜியில் சேர்வதற்கு முன்னதாகவே.
ஒவொருநாளும் அவரே காலையிலும் மாலையிலும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். அதைத்தவிர அவர்களின் அன்னையும் பாடம் சொல்லிக்கொடுப்பதுண்டு.

 பள்ளிக்கூடப்படிப்பு, வீட்டில் படிப்பு தவிர இளமை நினைவுகள் என்று எதுவுமே இல்லை.

 ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறைநாட்களில் முழுக்கமுழுக்க பாடங்கள்தான். கோடைவிடுமுறை முழுக்க ஆங்கிலமொழியறிவுக்கும் கணிதத்திறமைக்கும் வகுப்புகள். தீபாவளி, பொங்கல் தினங்களில்கூட கொண்டாட்டம் இல்லை.

 படிப்புதான்.சிலசமயம் இரவில் படுத்து சிந்திப்பேன். இளமைக்காலத்தைப்பற்றிய ஒரே ஒரு மகிழ்ச்சியான நினைவாவது மனதில் எஞ்சியிருக்கிறதா என்று.

எவ்வளவு நினைத்தாலும் ஒரு சிறிய நிகழ்ச்சிகூட நினைவுக்கு வரவில்லை. பின்பு ஒருமுறை எண்ணிக்கொண்டேன். சரி, ஒன்றிரண்டு துயரமான நினைவாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று.

அந்த நினைவுகள் வழியாகக்கூட என் வீட்டுடனும் ஊருடனும் மானசீகமாக தொடர்புபடுத்திக்கொள்ளலாமே என்று. அப்படியும் ஒரு நினைவு கிடையாது.

 படிப்பு படிப்பு படிப்புதான்’
‘வீட்டைவிட மோசம் என் பள்ளி’ என அவரது மகன் எழுதியிருந்தார்.

’தனியார் பள்ளி அது. மிக உயர்மதிப்பெண்கள் பெற்றுத்தரும் செலவேறிய பள்ளி.

அங்கே பிள்ளைகளைச் சேர்க்க வரிசையில் நிற்பார்கள்.பள்ளிக்கு உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியே செல்லும் கணம் வரை கூடவே ஆசிரியர்கள் இருப்பார்கள்.

பேசவோ சிரிக்கவோ விளையாடவோ அனுமதி இல்லை. படிப்பு மட்டும்தான்’
அந்தப்படிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.

 ‘பள்ளிப்படிப்புக்கு வெளியே நான் எதையுமே வாசித்ததில்லை. யாருமே எனக்கு இலக்கியத்தையோ கலைகளையோ அறிமுகம் செய்ததில்லை.

நானறிந்த படிப்பு என்பது புத்தகத்தில் உள்ளதை அச்சு அசலாக திருப்பி எழுதுவதற்கான பயிற்சி மட்டும்தான்’ என்று எழுதியிருந்தார்.

அப்படியே பொறியியல் படித்து வேலைக்காக அமெரிக்கா சென்றபோதுதான் அவருக்குத் தெரிந்தது மனிதவாழ்க்கை என்பது எவ்வளவு மகிழ்ச்சிகள் கொண்டது என்று.

பயணங்கள், நண்பர்களுடனான சந்திப்புகள், இலக்கியவாசிப்பு, இசை. அவர் எழுதினார் ’ எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் மனம் படிந்துவிடுகிறது.

 அதுதான் நமது ஊர் என்று நினைக்கிறோம். எனக்கு அமெரிக்காவின் நகரங்கள்தான் பிடித்திருக்கின்றன.

திருச்சி எனக்கு அன்னிய ஊராகத் தெரிகிறது. ஒருநாளுக்குள் சலித்துவிடுகிறது’
‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு.

 அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது.

 இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான்.

அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும்.

அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’
‘இருபத்திரண்டு வருடம் அவர்கள் எங்களிடம் பொதுவாக எதையும் உரையாடியதே இல்லை.

 படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலைகளை கொட்டிக்கொண்டே இருப்பார்கள். இப்போது அவர்கள் பேசநினைத்தாலும் பேசுவதற்கான தொடர்பு இல்லை.

இப்போதுகூட நீ என்ன சம்பளம் வாங்குகிறாய், என்ன மிச்சம் பிடித்தாய் என்று பயம்காட்டமட்டுமே அவர்களால் முடிகிறது. புத்தகம் வாங்காதே, பயணம்செய்யாதே என்று அவர்கள் வாழ்ந்ததுபோல என்னை வாழச்சொல்கிறார்கள்’

‘நீங்களே சொல்லுங்கள், அரைமணிநேரம்கூட பேசிக்கொள்ள பொதுவாக ஏதும் இல்லாதவர்களிடம் நாம் எவ்வளவுதான் செயற்கையாக முயன்றாலும் பேசிக்கொண்டிருக்கமுடியுமா?

முற்றிலும் அன்னியமாக தெரியும் ஓர் ஊரில் எவ்வளவுநாள் வாழமுடியும்? மரியாதைக்காகவோ நன்றிக்காகவோ ஐந்துநாள் இருக்கலாம்.

அதற்குமேல் என்ன செய்வது?’ என்று மகன் கேட்டார் ‘என் இளமைப்பருவம் முழுக்க வீணாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன்’
அந்தக்கடிதத்தை அப்படியே அவரது தந்தைக்கு அனுப்பினேன். ’இதைவிட தெளிவாக எதையும் நான் சொல்லிவிடமுடியாது’ என்றேன்.

அவர் புரிந்துகொள்ளாமல் ‘நன்றிகெட்டதனம். பொறுப்பற்றத்தனம்’ என்று மகனை வசைபாடி ஒரு கடிதம் அனுப்பி எனக்கும் பிரதி அனுப்பியிருந்தார்.

மேலும் ஒருமாதம் கழித்து ‘இந்த தீபாவளிக்கு அவனை வரச்சொல்லமுடியுமா?’ என்று கேட்டு ஒரு மின்னஞ்சல் எனக்கு அனுப்பினார்

‘தீபாவளி என்பது இளமையில் கொண்டாடவேண்டிய ஒரு பண்டிகை. அன்றுதான் அந்த உற்சாகம் இருக்கும். வளர்ந்தபின் அந்த நினைவுகளைத்தான் கொண்டாடிக்கொண்டிருப்போம்.

உங்கள் மகனுக்கு நினைவுகளே இல்லை என்கிறார். நீங்கள் அவருக்கு உரிமைப்பட்ட பண்டிகைக்கொண்டாட்டங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டுவிட்டீர்கள் என்கிறார்’ என நான் பதில் எழுதினேன்.

 அவர் மீண்டும் பதில் போடவில்லை.
வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. வாழும் தருணங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுதான்.

 அதற்காகவே பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நம் முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளன.

நாளை முக்கியம்தான், இன்று அதைவிட முக்கியம்.

All parents - do read it and share it

Best regards,

Monday, 1 June 2020

மனிதனை கொல்வது நோயா? பயமா? 🌴

மனிதனை கொல்வது நோயா? பயமா? 🌴



1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்?

3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே? பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டு போடுபவன் எங்கே?

6.அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு ஏன்?

7.உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளி கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு கையுறை போட்டு கொண்டு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

காரணம் மிக சிறிது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

எங்கள் கிழவிகளுக்கு தெரிந்தது எல்லாம் தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில வருடங்களில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மனிதனின் ஆயுள் அதிகபட்சம் முப்பதாக குறைக்கப்டும்.

எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது. இயற்கை தனது கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் மீறுவதில்லை.

உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும்.

என்னை பொருத்தவரை எவர் ஒருவர் இயற்கையோடு ஒத்து அதாவது மனமும், உடலும் இணைந்து செயல்படுகிறதோ அவர்களுக்கு நோய்களும் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமுமாகிவிடுகிறது.

நல்ல மழையில் நனையுங்கள் பயந்து ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலை கண்டு அச்சப்படாதீர்கள்

காற்றை கண்டு பயப்படாதீர்கள்

குளிரில் ஸ்வெட்டர் போட்டு பதுங்காதீர்கள்

சுடுதண்ணீரில் ஒருபோதும் குளியாதீர்கள்

சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்

இப்படி வாழ்ந்து பாருங்கள் வாழ்வே இனிமையாகும்



இயன்றவரை இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம் வாழ்க வளத்துடன்.

💐🎊🌷🤝🏻🌹🙏🏻🎊💐🌷🎉🌸🌹🌷💐🌸🎉🤝🏻

Best regards,

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
************


.
கடன் வாங்கியவர்கள் அதை சரியாகக் கட்டமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களைக் கேவலமாகப் பேசும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
.
அதிலும் விஜய் மல்லையா வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திரும்பத் தராமலே வெளிநாடு ஓடியபின்பு, கடன்காரர்கள் நிலைமை படுமோசமாக மாறியிருக்கிறது.
ஆனால், எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் கடனாளிகளுக்கு சில உரிமைகளை வழங்கி இருக்கிறது நம் அரசாங்கம். அந்த உரிமைகள் என்ன

1. வங்கித் திட்டங்கள்!
.
வங்கியில் கடன் வாங்க வருகிறவருக்கு வங்கி தரும் கடன் திட்டங்களைப் பற்றி முழுமை யாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கடன் தொகையை எப்படிக் கட்டினால் எளிதில் கடனைக் கட்டி முடிக்கலாம், எந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கி னால் வட்டி குறையும் என்று முழு விவரத்தையும் கடன் வாங்கு பவருக்கு வங்கியாளர்கள் கட்டாயம் விளக்க வேண்டும்.

2. தகுதி!
.
ஒருவருக்கு கடன் கிடைக்குமா என்பதை வங்கியாளர் உடனடியாக அல்லது எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்க வருபவரை இழுத்தடிக்கக் கூடாது.

3. திட்டத்தைப் பின்பற்றச் சொல்வது!
.
உதாரணமாக முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தப் பிணையமும் இன்றி முழுமையாக வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை 7 வருடம் வரை கட்டலாம். இது போன்ற உரிமைகளை கடன் வாங்குபவர் வங்கியாளர்களிடம் இருந்து கட்டாயம் கேட்டு தெரிந்து கொண்டு கடன் வாங்கலாம். இதற்கு பிணையம் தரச் சொல்லி, கடனாளியை வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது.

4. கூடுதல் கடன்!
.
ஒரு நிறுவனம் அல்லது தனிநபர், கடன் வாங்கி தன் நிறுவனத்தை நிறுவி சரியாக நடத்திக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக வங்கியில் வாங்கியக் கடனை சரியாக காலம் தவறாமல் செலுத்தி, நல்ல லாபம் ஈட்டி தொழில் முன்னேறும் சமயத்தில் கூடுதல் கடன் கேட்டால் வங்கி கள் தேவையான மதிப்பீடுகளை செய்து கடனை வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் நன்றாக செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கு கூடுதல் கடன் வழங்க முடியாது என்று சொல்லக்கூடாது.

5. அவமானப்படுத்தினால் இழப்பீடு!
.
ஒருவர் தன் சொந்தத் தேவைக்காகவோ அல்லது தன் நிறுவனத்தின் சார்பாகவோ மற்றொருவருக்கு காசோலையை கொடுக்கிறார். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகை, காசோலை வழங்கிய வங்கிக் கணக்கில் இருந்து, ஏதோ ஒரு காரணத்துக்காக காசோலையில் பணம் இல்லை என வங்கியானது அதை திருப்பி அனுப்பிவிட்டால், அதனால் ஏற்பட்ட அவமானத் துக்கு வங்கியிடம் நஷ்டஈடு கேட்கலாம்.

6. நோட்டீஸுக்கு 60-வது நாள்!
.
ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை 90 நாட்களுக்கு மேல் தன் தவணைகளை செலுத்த வில்லை என்றாலோ அல்லது வாராக் கடனாக வங்கியில் தீர்மானிக்கப்பட்டாலோ, கடன் வாங்கியவரின் சொத்தை விற்றுக் கடனை மீட்க வங்கிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், சொத்தை கையகப்படுத்தி விற்பதற்குமுன், கடனாளிக்கு தன் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நோட்டீஸ் அனுப்பி 60 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி 60 நாட்களில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால்தான் சொத்தை கையகப்படுத்தி விற்று கடனை மீட்டுக் கொள்ளலாம்.

7. மதிப்பீடு எவ்வளவு
.
கடன் வாங்கியவரால் 60 நாட்களுக்குள் பணத்தைக் கட்ட முடியவில்லை எனில், கடனாளியின் சொத்து எவ்வளவு தொகைக்கு வங்கி மதிப்பீட்டாள ரால் மதிப்பிடப்பட்டிருக்கிறது, எங்கு, எப்போது ஏலம் விடப் போகிறார்கள் என்கிற தகவல் களை கடன் வாங்கியவருக்கு தகவல் சொல்ல வேண்டும்.

8. கடன் வாங்கியவரே தன் சொத்தை விற்கலாம்!
.
ஒருவேளை வங்கி மதிப்பீட் டாளர் மதிப்பிட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகைக்கு கடனாளியின் சொத்து இருக்கும் என்றால் தாராளமாக வங்கியிடம் புகார் தெரிவித்து, மறு மதிப்பீடு செய்யச் சொல்லலாம். கடன் வாங்கியவரே கூட வங்கி மதிப்பீட்டைவிட கூடுதல் விலைக்கு சொத்தை வாங்கும் ஆட்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம்.

9. கடன் போக உள்ள தொகை!
.
சொத்தை விற்றுவரும் பணம், வங்கியில் வாங்கிய கடன் மற்றும் ஏலம் நடத்தியதற்கான செலவுகள் போக மீதம் இருந்தால், அந்தப் பணத்தை வங்கியிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். வங்கியாளர் வழங்கும் எந்த நோட்டீஸாக இருந்தாலும், அதற்கு கடனாளி ஏதாவது மறுப்பு தெரிவித்தால், அடுத்த 7 நாட்களுக்குள் வங்கியாளர் கடனாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.
.
ஒரு கடனாளியை, வங்கி அதிகாரிகள் அல்லது ஏஜென்ட்டுகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே சந்தித்து கடனைப் பற்றி விசாரிக்கலாம். வங்கி அதிகாரிகளோ அல்லது ஏஜென்ட்டோ சந்திக்க வேண்டிய இடத்தை தீர்மானிக்க வில்லை என்றால் கடனாளியின் வீட்டுக்கோ அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கோ சென்று சந்திக்கலாம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடனாளியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வரும் வகையில் வங்கியாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. கடனாளியின் குடும்ப உறுப்பினர்களை கிண்டலாகவோ, அவமரியாதை யாகவோ நடத்தக் கூடாது

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் புகார் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் அடுத்து பிராந்திய மேலாளரிடம் புகார் தரவேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் மத்திய ரிசர்வ் வங்கியிட மும், பேங்கிங் ஆம்்புட்ஸ் மேனிடமும் புகார் தெரிவிக்க லாம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களை படிப்படியாக அணுகலாம்’’ என கடன் வாங்கியவர்களுக்கு உள்ள உரிமைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இத்தனை உரிமைகள் இருக்கிறதே என்று வாங்கியக் கடனை மட்டும் திரும்பக் கட்டாமல் கம்பி நீட்டிவிடா தீர்கள்.

நாம் கட்டத் தவறும் ஒவ்வொரு ரூபாயும், வங்கி களுக்கும், அதில் டெபாசிட் செய்தவர்களுக்கும் மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் நாம் செய்யும் துரோகம் ஆகும்.

Best regards,