Monday, 1 June 2020

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

வங்கியில் கடன் பெற்ற கடனாளிகளே உங்களுக்கான 10 உரிமைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
************


.
கடன் வாங்கியவர்கள் அதை சரியாகக் கட்டமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களைக் கேவலமாகப் பேசும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
.
அதிலும் விஜய் மல்லையா வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திரும்பத் தராமலே வெளிநாடு ஓடியபின்பு, கடன்காரர்கள் நிலைமை படுமோசமாக மாறியிருக்கிறது.
ஆனால், எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் கடனாளிகளுக்கு சில உரிமைகளை வழங்கி இருக்கிறது நம் அரசாங்கம். அந்த உரிமைகள் என்ன

1. வங்கித் திட்டங்கள்!
.
வங்கியில் கடன் வாங்க வருகிறவருக்கு வங்கி தரும் கடன் திட்டங்களைப் பற்றி முழுமை யாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கடன் தொகையை எப்படிக் கட்டினால் எளிதில் கடனைக் கட்டி முடிக்கலாம், எந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கி னால் வட்டி குறையும் என்று முழு விவரத்தையும் கடன் வாங்கு பவருக்கு வங்கியாளர்கள் கட்டாயம் விளக்க வேண்டும்.

2. தகுதி!
.
ஒருவருக்கு கடன் கிடைக்குமா என்பதை வங்கியாளர் உடனடியாக அல்லது எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்க வருபவரை இழுத்தடிக்கக் கூடாது.

3. திட்டத்தைப் பின்பற்றச் சொல்வது!
.
உதாரணமாக முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தப் பிணையமும் இன்றி முழுமையாக வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை 7 வருடம் வரை கட்டலாம். இது போன்ற உரிமைகளை கடன் வாங்குபவர் வங்கியாளர்களிடம் இருந்து கட்டாயம் கேட்டு தெரிந்து கொண்டு கடன் வாங்கலாம். இதற்கு பிணையம் தரச் சொல்லி, கடனாளியை வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது.

4. கூடுதல் கடன்!
.
ஒரு நிறுவனம் அல்லது தனிநபர், கடன் வாங்கி தன் நிறுவனத்தை நிறுவி சரியாக நடத்திக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக வங்கியில் வாங்கியக் கடனை சரியாக காலம் தவறாமல் செலுத்தி, நல்ல லாபம் ஈட்டி தொழில் முன்னேறும் சமயத்தில் கூடுதல் கடன் கேட்டால் வங்கி கள் தேவையான மதிப்பீடுகளை செய்து கடனை வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் நன்றாக செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கு கூடுதல் கடன் வழங்க முடியாது என்று சொல்லக்கூடாது.

5. அவமானப்படுத்தினால் இழப்பீடு!
.
ஒருவர் தன் சொந்தத் தேவைக்காகவோ அல்லது தன் நிறுவனத்தின் சார்பாகவோ மற்றொருவருக்கு காசோலையை கொடுக்கிறார். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகை, காசோலை வழங்கிய வங்கிக் கணக்கில் இருந்து, ஏதோ ஒரு காரணத்துக்காக காசோலையில் பணம் இல்லை என வங்கியானது அதை திருப்பி அனுப்பிவிட்டால், அதனால் ஏற்பட்ட அவமானத் துக்கு வங்கியிடம் நஷ்டஈடு கேட்கலாம்.

6. நோட்டீஸுக்கு 60-வது நாள்!
.
ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை 90 நாட்களுக்கு மேல் தன் தவணைகளை செலுத்த வில்லை என்றாலோ அல்லது வாராக் கடனாக வங்கியில் தீர்மானிக்கப்பட்டாலோ, கடன் வாங்கியவரின் சொத்தை விற்றுக் கடனை மீட்க வங்கிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், சொத்தை கையகப்படுத்தி விற்பதற்குமுன், கடனாளிக்கு தன் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நோட்டீஸ் அனுப்பி 60 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி 60 நாட்களில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால்தான் சொத்தை கையகப்படுத்தி விற்று கடனை மீட்டுக் கொள்ளலாம்.

7. மதிப்பீடு எவ்வளவு
.
கடன் வாங்கியவரால் 60 நாட்களுக்குள் பணத்தைக் கட்ட முடியவில்லை எனில், கடனாளியின் சொத்து எவ்வளவு தொகைக்கு வங்கி மதிப்பீட்டாள ரால் மதிப்பிடப்பட்டிருக்கிறது, எங்கு, எப்போது ஏலம் விடப் போகிறார்கள் என்கிற தகவல் களை கடன் வாங்கியவருக்கு தகவல் சொல்ல வேண்டும்.

8. கடன் வாங்கியவரே தன் சொத்தை விற்கலாம்!
.
ஒருவேளை வங்கி மதிப்பீட் டாளர் மதிப்பிட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகைக்கு கடனாளியின் சொத்து இருக்கும் என்றால் தாராளமாக வங்கியிடம் புகார் தெரிவித்து, மறு மதிப்பீடு செய்யச் சொல்லலாம். கடன் வாங்கியவரே கூட வங்கி மதிப்பீட்டைவிட கூடுதல் விலைக்கு சொத்தை வாங்கும் ஆட்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம்.

9. கடன் போக உள்ள தொகை!
.
சொத்தை விற்றுவரும் பணம், வங்கியில் வாங்கிய கடன் மற்றும் ஏலம் நடத்தியதற்கான செலவுகள் போக மீதம் இருந்தால், அந்தப் பணத்தை வங்கியிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். வங்கியாளர் வழங்கும் எந்த நோட்டீஸாக இருந்தாலும், அதற்கு கடனாளி ஏதாவது மறுப்பு தெரிவித்தால், அடுத்த 7 நாட்களுக்குள் வங்கியாளர் கடனாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.
.
ஒரு கடனாளியை, வங்கி அதிகாரிகள் அல்லது ஏஜென்ட்டுகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே சந்தித்து கடனைப் பற்றி விசாரிக்கலாம். வங்கி அதிகாரிகளோ அல்லது ஏஜென்ட்டோ சந்திக்க வேண்டிய இடத்தை தீர்மானிக்க வில்லை என்றால் கடனாளியின் வீட்டுக்கோ அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கோ சென்று சந்திக்கலாம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடனாளியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வரும் வகையில் வங்கியாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. கடனாளியின் குடும்ப உறுப்பினர்களை கிண்டலாகவோ, அவமரியாதை யாகவோ நடத்தக் கூடாது

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் புகார் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் அடுத்து பிராந்திய மேலாளரிடம் புகார் தரவேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் மத்திய ரிசர்வ் வங்கியிட மும், பேங்கிங் ஆம்்புட்ஸ் மேனிடமும் புகார் தெரிவிக்க லாம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களை படிப்படியாக அணுகலாம்’’ என கடன் வாங்கியவர்களுக்கு உள்ள உரிமைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இத்தனை உரிமைகள் இருக்கிறதே என்று வாங்கியக் கடனை மட்டும் திரும்பக் கட்டாமல் கம்பி நீட்டிவிடா தீர்கள்.

நாம் கட்டத் தவறும் ஒவ்வொரு ரூபாயும், வங்கி களுக்கும், அதில் டெபாசிட் செய்தவர்களுக்கும் மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் நாம் செய்யும் துரோகம் ஆகும்.

Best regards,