Tuesday, 20 August 2019

யார் ஏழை

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗
 பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.

Best regards,

Monday, 19 August 2019

துக்கச் செய்தி! மரண அறிவிப்பு!  செத்தது சமூக நீதி!
-----------------------------------------
அஞ்சல் துறை கிளை அதிகாரிகள் வேலைவாய்ப்பில் மோசடி!
42 மதிப்பெண் பெற்றால் உயர் சாதியினருக்கு வேலை.
STக்கு 89.6, SCக்கு 94.8, OBCக்கு 95 cut-off!

இந்திய அஞ்சல் துறை அரிய வகை ஏழைகளை அன்புடன் அழைக்கிறது!

அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில்  கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை பெற்றவர்களை அறிவித்து இருக்கிறார்கள்.

Cut-off விவரம் (Out of 100):

EWS என்னும் உயர் சாதியினர்: 42
ST: 89.6
SC: 94.8
OBC: 95
UR என்னும் பொதுப் போட்டி: 95.2

உயர் சாதிக்கு 42 தான் cut-off என்னும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்.

யார் இந்த அரிய வகை ஏழைகள்?

* பிறப்பால் உயர் சாதியினர் மட்டும் (ஐயர், ஐயங்கார் போன்றோர்)
* ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளோர்
* 5 ஏக்கர் நிலம் உள்ளோர்
* 1000 சதுர அடி வீடு உள்ளோர்.

இவர்கள் சம்பளம் 12,000/- ரூபாய் முதல் 35,480/ வரை. சொந்த ஊரில் மத்திய அரசு வேலை!

PhD படித்தவர்கள் எல்லாம் குப்பை அள்ளும் வேலைக்கும் பியூன் வேலைக்கும் விண்ணப்பிக்கும் காலத்தில் இது கசக்குமா?

தகுதி: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்

தேர்வு: தேர்வு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.

SBI மதிப்பெண்களாவது முதல் நிலைத் தேர்வு மதிப்பெண்கள்.

அஞ்சல் துறையோ வேலையே கொடுத்து விட்டது!

இதுவாவது பரவாயில்லை.

மாற்றுத்திறனாளிகள் Cut-off விவரம் (Out of 100)

PH-HH என்னும் செவித் திறன் சிக்கல் உள்ளோர்: 64.2
PH-OTR என்னும் வேறு உடல் திறன் சிக்கல் உள்ளோர்: 78.4
PH-VH என்னும் பார்வைத் திறன் சிக்கல் உள்ளோர்: 85.8
PH-OH என்னும் கை, கால் முடக்கம் போன்ற சிக்கல் உள்ளோர்: 88.8

பார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு 85.8

ST மக்களுக்கு 89.6

95.2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற OBC மக்கள் மட்டும் 1944 பேர்!

அப்படி என்றால் 42 முதல் 95.2 மதிப்பெண்ணுக்குள் எத்தனையோ கோடி தகுதியான SC, ST,
OBC மக்கள் இருப்பார்கள்!

அவர்களை எல்லாம் விட்டு விட்டு 453 அரிய வகை ஏழைகளைத் தேடி வேலை தந்துள்ளார்கள்.

நம் பிள்ளைகள் சமச்சீர் கல்வியில் படித்து 500க்கு 450 மேல் வாங்கினால் மனப்பாடம் செய்கிறோம், மாநிலக் கல்வி தரம் இல்லை என்கிறார்கள்.

ஆனால், இவர்கள் வேலை கொடுத்துள்ள 42% என்பது என்ன?

500க்கு 210 மதிப்பெண்கள்!

இத்தனை ஆயிரம் பேர் முழுத் தகுதியோடு  முட்டி மோதும் போது பத்தாம் வகுப்பில் 500க்கு 210 மதிப்பெண்ணுடைய மக்கு பிளாஸ்திரிகளுக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்!

உயர் சாதியினராகப் பிறந்தாலே போதும்!

இந்திய அரசு இப்படிப்பட்ட அரிய வகை ஏழைகளை வீடு வீடாகத் தேடிப் போய் வேலையை வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்திருக்கிறது என்று அர்த்தம்!

உயர் சாதியினர் இட ஒதுக்கீடு இல்லாமல் பொதுப்போட்டியிலேயே 1136 பேர். இது 25%.

எனவே தான், முன்னேறிய சாதிகளுக்கு அவர்கள் மக்கள் தொகையை ஒப்பிட ஏற்கனவே போதுமான வாய்ப்புகள் உள்ளன. தனியாக இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறோம்.

இது பத்தாது என்று EWS மூலம் இன்னும் 10%. ஆக, 3% மக்கள் 35% வேலை வாய்ப்புகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போக,  97% மக்கள் 65% இடங்களுக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே பொதுப்போட்டியிலேயே 800 OBCக்கள், 4 STக்கள், 64 SCக்கள் இடம் பிடித்துள்ளார்கள். முதல் மதிப்பெண் 99.8 எடுத்தவர் ஒரு OBC.

ஆக, இத்தனை நாள் தகுதி இல்லாமல் மற்றவர்கள் இடங்களை அள்ளிப் போகிறார்கள் என்று வைத்த குற்றச்சாட்டு பல் இளிக்கிறது அல்லவா?

இப்போது 42 மதிப்பெண்கள் பெற்று தகுதியே இல்லாமல் இடங்களைத் திருடிப் போவது யார் என்று புரிகிறதா?

***

தரவு ஆய்வு மற்றும் படமாக்கல் உதவிக்கு நன்றி - Ashok Kumar, Sathya Narayanan, Surendar Sekar

ஆய்வு வெளியீடு -  Ravishankar Ayyakkannu மற்றும் திராவிட ஆய்வுக் குழு நண்பர்கள்.

(ஆதாரங்கள் மறுமொழியில்) #10percentfraud #reservation

Best regards,

Sunday, 18 August 2019

அப்பாவின் அன்பான பொய்கள்.

அப்பாவின் அன்பான பொய்கள்.
(படித்ததில் பிடித்தது)

மருத்துவமனை
தொட்டிலில்
நான்
முதன்முறையாக
அழுதபோது..
கடன்வாங்கி
கட்டணம்
செலுத்தியதை
மறைத்து..
மகாராணி
பிறந்திருப்பதாக
பொய் சொல்லியும்..

நடந்து
பழகுகையில்..
கல்தட்டி
விழுந்து
அழும்போது..
கல்லை
குச்சியால் தட்டி,
அந்த
கல் ,
அழுவதாக
பொய் சொல்லியும்..

இரவுகளில்
பேய்க்கனவு
கண்டு..
பாதியில்
எழுந்து
அழும்போது,,
தோள்களில்
இறுக்கமாய்
அணைத்துக்கொண்டு
பேய்
ஓடிப்போனதாக
பொய்சொல்லியும்..

முதல்நாள்
பள்ளியில்
அமர்வதற்கு
அழுதபோது..
இரண்டு
தினங்களில்,
தானும்
பள்ளியில்
சேரப்போவதாக
பொய் சொல்லியும்..

குலதெய்வம்
கோவிலில்..
காது
குத்திக்கொண்டு
அழுதபோது,,
இன்றிலிருந்து
சாமியோடு
"டூ "
விட்டுவிட்டதாக
பொய் சொல்லியும்..

காய்ச்சலுறும்
தருணங்களில்,,
ஊசி
வேண்டாமென
அழும்போது..
மாத்திரை
மட்டும்
தரச்சொல்லி
மருத்துவரிடம்
சொல்லியிருப்பதாக
பொய் சொல்லியும்..

குறைந்த
மதிப்பெண்ணிற்காக,
அம்மாவிடம்
திட்டு
வாங்கிக்கொண்டு
அழுதபோது..
வாத்தியாருக்கு
படிக்க
தெரியவில்லை,,
என
பொய் சொல்லியும்..

திருமணம்
முடிந்து,,,
புகுந்தவீடு
செல்வதற்கு
அழுதபோது..
மகிழ்வோடு
வழியனுப்புவதாக
பொய் சொல்லியும்..

என்னை
ஏமாற்றிய
அப்பா...

தோள்மீது
பேத்தி ஏறியதும்,,
தொடர்ச்சியாக
பலமுறை
இருமிவிட்டு..
துளியளவு
தைலத்தில்
எல்லாமே
சரியாகிப்போனதாக,
எனது
மகளிடம்,
மீண்டும்
ஏமாற்ற துவங்குகிறார்...!

Best regards,