Friday, 24 January 2020

INCOME TAX 2019-2020

INCOME TEX 2019-2020

அனைவரும்  நினைவில் கொள்ள வேண்டியவை
இந்த ஆண்டு முதல்
Rs.5lakhs வரை(Deductions+exceptions நீங்கலாக)) tax payable income இருந்தால்
உங்களுக்கு Nil tax(means tax is zero)
Section 87a இல்
 Rs.12,500 rebate தரப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால்
சென்ற ஆண்டு மீதமுள்ள
.Rs10000(12,500--2500)நாம் income tax ஆக கொடுத்து இருப்போம்.
For example
1)இந்த ஆண்டு தனி நபரின் மாத வருமானம் Rs 47,000வரை இருந்தாலும் tax இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆண்டு வருமானம் .₹5,64,000(12×47000)
Minus Standard deduction =₹50,000
Minus minimumNps or GpF
Deduction=₹24,000(12×
2000)
Total deduction=₹74,000
Tax payable income
₹5,64,000--74,000=
₹4,90,000 less than or equal to 5lakhs
So tax - nil
2,ஒருவரின் மாத வருமானம் ₹70,000
ஆக ஆண்டு வருமானம்
₹8,40,000
Minus standard deduction ₹50,000
Minus Maximum Home loan interest=₹2lakhs
Under section 24
Minus savings(GPF EPF LIC PPF )including Home loan principal limit up to 1lakh 50 thousand under section 80C+80CCD(1)
NPS 80CCD(1B)=₹50,000(for only NPS EMPLOYEES)
ஒருவேளை NPS பிடித்தம் ₹80,000ஆக இருந்தால் ₹50,000 under sec 80ccd(1b)யிலும் மீதமுள்ள₹ 30,000under sec 80ccd(1)யிலும் 1lakh 50 thousand savings இல் சேரும்.
ஆக மொத்தம்
【50thousand+2lakh+
1lakh 50 thousand+50thousand】
4lakh 50 thousand
Tax payable income
₹8,40,000--₹4,50,000
=₹3,90,000 is less than or equal to 5 lakhs
Tax-zero
3,ஒருவரின் மாத  வருமானம்₹60,000
ஆண்டு வருமானம்
₹7,20,000
Minus standard deduction =₹50,000
Minus under NPS=₹40,000
 Minus savings=₹40,000
Total is ₹1,30,000
Tax payable income
₹7,20,000--₹1,30,000
=₹5,90,000 is more than 5 lakhs
Tax must be paid to the government
Up to 5 lakhs=₹12,500
5lakh to 5lakh 90 thousand=₹18,000
Total=₹30,500
Cess4%on 30500=₹1220
ஆக மொத்தம்=₹31,720
Net payable tex=₹31,720
4,tax payable income ₹5,00,001*(5 இலட்சத்தை விட ₹1 கூட வந்தாலும்)*
உங்களுடைய
Payable tax=₹12,500
Cess 4%=₹500
Net payable tax=₹13,000
எனவே அனைவரும் இந்த 5 lakhs வரை tax இல்லை என்பதை சாதுர்யமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்

2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும்.
[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]

✍ நிலையான கழிவு (Standard deduction) ₹50,000/- ஐ மொத்த வருமானத்தில் அனைவரும் கழித்துக் கொள்ளலாம்.

✍ housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.

✍ மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய  போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.

✍ housing loan - வட்டி அதிகபட்சமாக ₹2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்

✍ housing loan - அசல் தொகையை  Under chapter -VI ல் கழித்துக் கொள்ளலாம்.

✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் Under chapter -VI ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS  தொகையில்  அதிகபட்சமாக ₹50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.

✍ School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)

✍ LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று,  படிவத்துடன் இணைக்கவும்).

✍80DDB - Medical Treatment - ₹80,000/- வரை காண்பிப்பவர்
10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
[Citizens - ₹40,000,
Senior Citizens - ₹60,000,
Super Senior Citizens - ₹80,000]

✍ மாற்றுத் திறன் ஆசிரியர்கள் ஆண்டு முழுவதும் Medical treatment க்காக ₹75,000/- ஐ 80DD ல் கழித்துக் கொள்ளலாம்.(₹1,25,000 - In case of severe disability)

✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.

✍ கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2019-2020) செலுத்திய வட்டியை முழுவதும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.

 ✍ நன்கொடை மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதி ஏதேனும் வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.
 Ji
✍வரி விபரம்....
2,50,000 வரை - இல்லை
2,50,001 - 5,00,000 : 5%
5,00,001 - 10,00,000 : 20%
Above 10,00,000 : 30%

✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.

✍ Taxable income ₹5,00,000-க்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ₹12,500/-  வரை 87A ல்  கழித்துக் கொள்ளலாம்.

✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.Best regards,

Thursday, 23 January 2020

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

மூன்று மாமனிதர்களின் பெற்றோர்கள்!

முதல் மாமனிதர் :

150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர், அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”. சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் “ நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்”. அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”. இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி “ நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்” என்றார். அந்த சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.

இரண்டாம் மாமனிதர் :

 ஒரு சிறுவன் வீட்டில் படித்து கொண்டு இருக்கிறான். அப்போது வேலைக்கு சென்ற அவன் தந்தை மற்றும் தாய் இரவில் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த அவன் தாய் உணவு சமைத்தார். அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் அவன் தாய். ஆனால்  அவன் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் அந்த தாய், அதற்கு அவன் தந்தை  “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்”  என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் அச்சிறுவன் கேட்டான் “அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?”. சற்று நேரம் மௌனமாக இருந்த தந்தை கூறினார் “மகனே உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணி விடையும் செய்கிறார். பாவம் களைத்து போயிருப்பாள். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்த போவதில்லை ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்.

நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”. இந்த வரிகள் அச்சிறுவனின் மனதில் ஆழ பதிந்தது. அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த அச்சிறுவன் தான் முன்னாள் குடியரசு தலைவர் மற்றும் இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர செய்த விஞ்ஞானி Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள்.

மூன்றாம் மாமனிதர்:

 ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்றபோது அவன் ஆசிரியர் அவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து உன் தாயிடம் கொடு என்றார். அந்த சிறுவன் மாலை வீடு சென்றதும் கடிதத்தை அவன் தாயிடம் கொடுத்தான். அந்த கடிதத்தில் “ உங்கள் மகனின் அறிவு வளர்ச்சி குறைவு. அவன் பள்ளியில் தேர்ச்சி அடைய மாட்டான். அவன் தேர்வில் தோல்வி அடைந்தால் எங்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் உங்கள் மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்” என்று எழுதியிருந்தது. இதை படித்த தாயின் கண்களில் கண்ணீர் வந்தது. அதை பார்த்த சிறுவன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என கேட்டார். கண்ணீரை துடைத்து விட்டு அந்த தாய் கூறினார், இந்த கடிதத்தில் உன் ஆசிரியர் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா “நீ மிகுந்த அறிவு திறன் கொண்டவன். பள்ளி உனக்கு தேவை இல்லை. நீ வீட்டிலிருந்தே படிக்கும் அளவுக்கு தகுதி உடையவன்” என்று எழுதியிருக்கிறார். அதன்பின் அந்த சிறுவன் வீட்டிலேயே அவர் தாயிடம் பாடம் கற்றார். அந்த சிறுவன் தான் 1000 ம் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.

உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள். நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் - நாளை மரமாக வளரக்கூடிய தலைமுறையின் உயரம்.

புவனேஸ்வரி தேவியின் உயர்ந்த எண்ணம் விவேகானந்தர் என்னும் ஞானமாய் மலர்ந்தது. ஜைனுலாப்தீனின் உயர்ந்த எண்ணம் அப்துல்கலாம் என்னும் விஞ்ஞானமாய் மலர்ந்தது. நான்ஸியின் உயர்ந்த எண்ணம் தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் 1000 கண்டுபிடிப்புகளாக மலர்ந்தது.

இவர்கள் எல்லாம் மாமனிதர்கள், இவர்கள் போல் நம்மால் இருக்க முடியுமா என்று தோன்றலாம். இவர்கள் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்போல் நம்மால் இருக்க முடியும்.

ஒரு மனிதர் தன் 8 வயது மகனுடன் சர்க்கஸ் சென்றார். டிக்கெட் வழங்குபவர் கூறினார் “7வயது மற்றும் 7வயதுக்கும் குறைவானவர்களுக்கு அறை டிக்கெட்”. அந்த தந்தை இரண்டு முழு டிக்கெட் கேட்டார். டிக்கெட் வழங்குபவர் கேட்டார் உங்கள் மகனுக்கு எத்தனை வயது, அதற்கு அந்த தந்தை கூறினார் 8 வயது. உடனே டிக்கெட் வழங்குபவர் கூறினார் “உங்கள் பையன் பார்க்க 8 வயது போல் தெரியவில்லை, நீங்கள் 7 வயது என்று சொல்லியிருந்தாலும் எனக்கு தெரிய போவதில்லை நான் அறை டிக்கெட் கொடுத்திருப்பேன்”. அதற்கு அந்த தந்தை கூறினார் “நான் 7 வயது என்று பொய் சொன்னால் உங்களுக்கு தெரியாது, ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக நான் பொய் சொல்கிறேன் என்று என் மகனுக்கு தெரியும்”.

நம்மால் மாமனிதர்களாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை - ஆனால் ஒரு டிக்கெட்டுக்காக பொய் சொல்லாத மனிதராக இருக்க முடியும் அல்லவா.

உயர்ந்த எண்ணங்கள் தான் உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது.

நன்றி!Best regards,

Tuesday, 14 January 2020

*வெண் பெங்கல் & வடை*

*வெண் பெங்கல் & வடை*
*தேவையான பொருட்கள்:*
பச்சரிசி – 3/4 உழக்கு
பாசிப்பருப்பு – 1/4 உழக்கு
நெய் -75 மிலி
வறுத்த முந்திரி-15
மிளகு-20
இஞ்சி-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிது
பெருங்காயத்தூள்-சிறிதளவு
தண்ணீர்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்பையும்,அரிசியையும் தண்ணீர் ஊற்றி நன்குகலையவும். குக்கரில் கொஞ்சம் நெய் ஊற்றி,சிறிதளவு சீரகம்,ஐந்தாறு மிளகுடன் ,அரிசி பருப்பு கலவையை வாசம் வரும் வரை வறுக்கவும்.
1 பங்கு அரிசி பருப்பு கலவைக்கு 4 பங்கு தண்ணீர் வைக்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை குறைக்கவும்.[இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும்]10 நிமிடத்தில் இறக்கி விடலாம்.
அடுத்து இருப்புச்சட்டியை அடுப்பில் வைத்து,நெய் ஊற்றி,சிறிது கடுகு போட்டு பொறிந்ததும்,தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி,சிறிதளவு பெருங்காயம்,கறிவேப்பிலை,வறுத்த முந்திரி,பொடித்த மிளகு போட்டு தாளித்து கொட்டினால் சுவையான வெண் பொங்கல் தயார்
வெள்ளை உளுந்து – 3/4 கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது – 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிகை
கருவேப்பிலை – 1 ஆர்க்கு
எண்ணெய் – பொறிக்க
செய்முறை
உளுந்தை, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.தண்ணீரை வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, குளிர்ந்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி அரைக்கவும்.
அரைக்கும் பொழுது, அருகிலே நின்று, ஓரங்களை வழித்து விடுதல் வேண்டும். வழு வழுப்பான மாவாக அரைபட்டவுடன், வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைக்கவும். வடை மாவு கெட்டியாக இருக்க வேண்டும். கைகளில் தண்ணீர் தடவி, ஒரு பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி, கட்டை விரலால் ஓட்டையிட்டு, எண்ணெய்யில் கவனமாக போடவும்.
எண்ணெய் அளவிற்கு ஏற்றபடி 3-4 ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம்.
பொன்னிறமாக ஒரு புறம் சிவந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு, பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயை அவ்வப்பொழுது குறைத்து, எண்ணெய் புகையாமல் பார்த்துக்கொள்ளவும்.
வெங்காயம் சேர்க்காமல், உப்பு போடாமல் மாவை ஒரு காற்றுபுகா டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்துக்கொண்டால், மறுநாள் கூட உபயோகிக்கலாம்Best regards,