Thursday, 31 October 2013

சேலை

 
- பெண்கள் சேலை கட்டும் விதம் அவர்களின் சமூக கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது..
-முதலில் கட்டிய சேலையையும் முதன்முதலாக கணவன் வாங்கி கொடுத்த சேலையையும் பத்திரமாக எடுத்து வைத்து பாதுகாக்கும் பெண்களின் மனதிற்குள் வலம் வந்துக் கொண்டு இருக்கும் மகிழ்ச்சியை அடையாளம் கொள்ள முடிகிறது..
- பிறந்த வீட்டில் எடுத்துக் கொடுக்கும் சேலைக்கு புகுந்த வீட்டில் கிடைக்கும் தனிப்பட்ட அங்கீகாரத்தால் பெருமிதம் கொள்ள முடிகிறது..
- கணவன் வாங்கி கொடுத்து கட்டும் சேலையை உடன்பிறந்த சகோதரிகளிடம் காண்பித்துக் கொள்ளும் போது பெருமை கொள்ள முடிகிறது..
- மத்தியதர குடும்பத்தில் படித்த பெண்கள் கட்டும் சேலை அவர்களின் தரத்தை மேன்மைப்படுத்துகிறது..
- விழாக்களுக்கு தகுந்தாற்போல திருமணமான பெண்கள் கட்டும் சேலை அவர்கள் கணவரின் மதிப்பிற்கு மரியாதை கூட்டுகிறது..
- வேறு கடைகளில் கிடைக்காத டிசைன்களில் தேடிக் கண்டுபிடித்து வாங்கிய சேலைகளைப் பற்றி மற்ற பெண்கள் விசாரிக்கும் போது விருது பெற்ற சந்தோசம் அடைய முடிகிறது..
- எந்த வயதாக இருந்தாலும் அம்மாவின் சேலையை கட்டி பார்ப்பதில் மகள்கள் ஆனந்தம் அடைய முடிகிறது..
-ஒரு மனிதன் பிறக்கும் போது படுத்து உறங்கும் தொட்டில் முதல் இறந்தபின் சுடுகாட்டுக்கு செல்லும் பாடை வரை முக்கிய பங்கு வகிப்பது சேலைதான் என்று சொல்லிக் கொள்ள முடிகிறது..!

சேலை பற்றிய பதிவை வெளியிட்ட பின் நிறைய விஷயங்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது...

இந்தியாவை பின்னுக்கு தள்ளும் அந்த ஆறு -->



1. சாலையில் எச்சில் துப்புதல் :

இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

3. குப்பைகளை கொட்டுவது :

நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

4. வரிசையை முந்தியடித்தல் :

இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

5. விட்டுகொடுக்காத பழக்கம் :

அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

- நவீனா மதி

Wednesday, 30 October 2013

தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்!

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும். மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் வழி வகை செய்ய‍ப்பட்டுள்ள‍து.

இது ஒரு கம்யூட்டரைசடு சர்டிபிகட், இதில் அரசாங்க முத்திரை இருக்காது ஆனால் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும். இவ்வகை யான சான்றிதழ்கள் அனைத் து தனியார் மற்றும் அரசா ங்க அலுவ லகங்களலும் ஏற்று கொள்ளப்படும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண் டிய எல்லாம் கீழ்க்கண்ட இ ணைய முகவரிக்குச் சென்று “Register Citizen” என்பதை கிளி க்செய்து உங்ளுடைய பெயர், முகவரி மற்றும் குடும்ப அட்டை எண் (அ) பாஸ்போர்ட் எண் (அ) வாகன ஓட்டுனர் லைசென்ஸ் எண் கொடுத்தால் உங்களுடைய முழுவிபரமும் ரிஜிஸ்டர் ஆகிவிடும். பின்னர் உங்களுக்கு தேவை யான சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள லாம்.

இணைய முகவரி http://edistrict.tn.gov.in/

Sunday, 27 October 2013

ஒரு அதிமுக பிரியானி தொண்டனின் அன்பு வேண்டுகோள்,

ஹா ஹா ஹா
ஒரு அதிமுக பிரியானி தொண்டனின் அன்பு வேண்டுகோள்,

அம்மா, வாட்டர் பாட்டில், பேருந்துகள், எம் ஜி ஆர் சமாதி என்று மக்களுக்கு பரிச்சயம் ஆகும் வகையில், அனைத்திலும் இரட்டை இலை சின்னத்தை அரசு செல்வில் அச்சிட்டு அதை பிரபலப் படுத்தி வருகிறீர்கள்.

தயவு கூர்ந்து நம் மாநிலத்தின் குடி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குவாட்டர் பாட்டில்களிலும் இரட்டை இலை சின்னத்தை அச்சிட்டு, அதை மேலும் பிரபலப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதனால் குவாட்டர் விற்பனையில் இந்திய மாநிலங்களில் முன்னனி மாநிலமாக நம் தமிழகம் இருப்பது அனைவருக்கும் தெரிய வரும்.

அதோடு தமிழக மக்கள் தொகையில் பெரும்பான்மையாக மாறி வரும் குடி மகன்கள் அன்றாடம் நம் சின்னத்தை, பாட்டிலில் பார்த்து பார்த்து பரிச்சயமாகி, நமக்கு நன்றிக் கடனாக ஓட்டளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

உங்கள் உடன்பிறப்பு, குவாட்டர் குமார்.

Saturday, 26 October 2013

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?

உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!

எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!

- இரா.ச.இமலாதித்தன்

Friday, 25 October 2013

சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...l

சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அதை போக்க இதோ சில டிப்ஸ்...l

பொதுவாக அனைவருக்குமே தங்கள் உதடுகள் நன்கு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். உதடுகள் நன்கு அழகாக இருந்தால், முகத்தின் அழகு இன்னும் அதிகரித்து வெளிப்படும். ஆனால் அந்த உதடுகள் கருமையாக இருந்தால், அது முகப்பொலிவை நீக்கி, முகத்தை பொலிவின்றி வைத்துக் கொள்ளும். இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புகைப்பிடிப்பது தான்.

ஏனெனில் புகைப்பிடிக்கும் போது உதட்டில் உள்ள மென்மையான லேயரானது எரிந்து, உதட்டை கருமையாக்கிவிடுகின்றன. மேலும் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் அல்கலாய்டும் ஒரு காரணம். இது முகத்தில் உள்ள இரத்தக்குழாய்களை கடினமாக்கி, முகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைத்து, முகம் மற்றும் உதட்டின் நிறத்தை மங்கச் செய்கிறது. அதுமட்டுமின்றி நிக்கோட்டின் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சுவதை குறைத்து, சருமத்தின் இயற்கையான நிறத்தை இழக்கச் செய்கிறது.

சில நேரங்களில் கருமையான உதடுகள் ஏற்படுவதற்கு இறந்த செல்களும் ஒரு காரணம். உதடுகளில் பராமரிப்பு குறைவாக இருந்தால், உதடுகளில் இறந்த செல்கள் தங்கி, உதடுகளின் இயற்கையான நிறத்தை மங்கச் செய்கிறது. புகைப்பிடிக்காமல் இருக்கும் ஆண்களுக்கு உதடுகள் கருமையடைகின்றன என்றால், அதற்கு இது தான் காரணமாக இருக்கும். ஆனால் இத்தகைய கருமை நிரந்தரம் அல்ல. ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரித்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்கிவிடும். சரி, இப்போது அப்படி கருமையாக இருக்கும் உதடுகளை பொலிவாக்குவதற்கு உதவும் பொருட்களைப் பார்ப்போமா....

தேன் நல்ல அழகான உதடுகள் வேண்டுமானால், தேனை உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தேன் உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை மென்மையாக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன், உதடுகளில் தேனை தடவி படுத்தால், விரைவில் கருமை நீங்கிவிடும்.

ஆண்கள் ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து, அதனைக் கொண்டு உதடுகளில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், உதடுகளில் உள்ள கருமை மறைந்து, உதடுகள் இயற்கையான நிறத்தைப் பெறும்.


எலுமிச்சை எலுமிச்சை ப்ளீச்சிங் தன்மை கொண்ட் ஒரு அருமையான பொருள். எனவே எலுமிச்சையில் சிறிது உப்பு சேர்த்து, அதனைக் கொண்டு உதடுகளை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடுகளில் உள்ள கருமைகள் மறைந்துவிடும்.

ஸ்ட்ராபெர்ரி லிப் பாம் ஆண்களின் உதடுகளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு இருக்கும் ஒரு சிம்பிளான இயற்கை வைத்தியம் என்றால், அது ஸ்ட்ராபெர்ரி லிப் பாம் தான். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் போது தடவிக் கொண்டு படுக்க வேண்டும்.

விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயை உதடுகளில் தடவினால், அவை வறட்சியைப் போக்குவதுடன், உதடுகளில் உள்ள கருமையைப் போக்குவதிலும் உதவும். எனவே நல்ல மென்மையான மற்றும் சிவப்பான உதடுகள் வேண்டுமெனில், விளக்கெண்ணெயை உதடுகளுக்கு தடவுங்கள்
.
ஐஸ் கட்டிகள் தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு உதடுகளை மசாஜ் செய்தால், உதடுகிளல் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, உதடுகளும் வறட்சியடையாமல் இருக்கும்.
பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயை ஒரு நாளைக்கு 2-3 முறை தடவி வந்தால், உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகளும் மென்மையாக அழகாக இருக்கும்.

Wednesday, 23 October 2013

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது.

பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம். இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள். ◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் — உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....
வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....
 

Tuesday, 22 October 2013

மீன் சமையலில் கவனிக்க வேண்டியவை

மீன் சமையலில் கவனிக்க வேண்டியவை

மீன் உணவுகள் நமது ஆரோக்கியத்துக்கு உகந்தவை. ஆனால், நமது சமையல் முறைகளால் அந்த ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். நிறைய எண்ணெய் சேர்த்து சமைப்பது, எண்ணெயில் பொரித்தெடுப்பது, மேலும் அளவுக்கு அதிகமாக வேக வைப்பது போன்ற செய்முறைகலால் அதிலுள்ள ஊட்டச் சத்துக்களை நாம் குறைத்துவிடக் கூடாது. முடிந்த வரையில் ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றுவது நல்லது.

மீன் மற்றும் கடலுணவுகள் விரைவில் கெட்டுவிடும் தன்மையுடையவை. அதனால் அதிக நேரம் வெளியில் வைக்கக் கூடாது. சமைத்த உணவு ஆறியதும், ப்ரிட்ஜில் வைத்து தேவையான போது மைக்ரோவேவ் ஓவனில் அல்லது அடுப்பில் சூடாக்கிப் பயன்படுத்தலாம். தேவையான அளவே சூடேற்ற வேண்டும். சூடாக்கிய பொருட்களை மீண்டும் மீண்டும் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அதே போல் ஃப்ரீசரில் இருந்து எடுத்து வெளியில் பல மணி நேரங்கள் வைத்த மீனை மீண்டும்ஃப்ரீசரில் வைக்கக் கூடாது.

மீன் வாங்கியவுடன் அதைச் சுத்தம் செய்து மஞ்சள் நீரில் அலசி, நீர் வடிந்ததும் ஒரு நாளைக்கு தேவையான அளவுகளில் பிரித்து பிளாஸ்டிக் பைகளில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து ஃப்ரீசரில் வைத்துவிட வேண்டும். மஞ்சள் ஒரு கிருமி நாசினி அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டதென்பதால் மாமிசம் எதுவானாலும் மஞ்சள் நீர்ல் நன்கு அலசுவது அவசியம.

மீன் சகைக்கும் போது அகலமான பாத்திரஙக்ளில் சமைத்தால் நொறுங்காமல் அழகாகச் சமைத்து எடுக்கலாம்.

ப்ரிட்ஜில் சமைத்த உணவுகள் வைத்திருக்கும் பகுதியில் சமைக்காத கடல் உணவு அல்லது மாமிசத்தை வைத்தால், அதிலுள்ல பாக்டீரியாக்கள் மற்ற பொருட்களுக்குப் பரவி உணவு கெட்டுப் போகும்.

மீன் வெட்டுவதற்கென தனியாக ஒரு பலகை வைத்திருங்கள். வேலை முடித்தவுடன் பலகை, கத்தி இரண்டையும் நன்றாக கொதி நீரில் கழுவிக் காய வைக்க வேண்டும்.

மீன் கழுவிய இடத்தை, பாத்திரங்களை நன்கு கழுவிய பின்னர், எலுமிச்சம் தோல் அல்லது வினிகர் போட்டு சுத்தம் செய்தால், அந்த வாடை அகன்றுவிடும்.

Monday, 21 October 2013

எது பெஸ்ட் வலி நிவாரணி..?


வலி நிவாரணிகளில் என்னென்ன மூலப் பொருட்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன? அவை இயற்கையானவைதானா? குறிப்பிட்ட பிராண்ட்களையே வாடிக்கையாளர்கள் பயன் படுத்த என்ன காரணம்? என்பது குறித்து பரவலாக ஆய்வு மற்றும் சர்வே நடத்தப்பட்டது.
அந்த சர்வே முடிவுகளை பார்க்கும் முன் வலி நிவாரணிகளில் என்னென்ன அடங்கி இருக்கின்றன?, அவை எப்படி பலன் தருகின்றன என்பது குறித்து பார்ப்போம்.

வலி நிவாரணிகளில் மீதைல் சாலிசிலேட், மெந்தால், கற்பூரம் ஆகிய மூன்று பொருட்கள் முக்கியமாக பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை தோல் எளிதில் உறிஞ்சிக் கொள்வதால் நொடியில் நிவாரணம் தெரி கிறது. இந்த மூன்றும் தலைவலி, வாத நோய்களுக்கு நல்ல நிவாரணம் தருபவையாக இருக்கின்றன. இவை தவிர, யூகலிப்டஸ் தைலம், கிராம்பு தைலம் போன்றவையும் வலி நிவாரணியில் சேர்க்கப் படுகின்றன.

யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கும், கிராம்பு தைலம் பல் வலிக்கும் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. வலி நிவாரணிகள், அவை அளிக்கும் நிவாரணத்தைவிட வாசனை, பக்கவிளைவுகள், அலர்ஜி, அரிப்பு, எரிச்சல், தோல் நிறம் மாறுதல் மற்றும் கறுத்தல், காயம் ஏற்படுதல் போன்றவையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அடுத்து அவற்றின் தரம், இந்திய தரக் கட்டுப்பாடு அமைப்பின் (பி.ஐ.எஸ்.) குறைந்தபட்ச விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கின்றனவா? என்றும் ஆராயப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, பல பிராண்ட்களில் இவற்றின் தரம் குறைந்தபட்ச தரத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

மேலும், பல பெரிய உற்பத்தி யாளர்கள், எங்களின் பெய்ன் பாம் இந்த சிறப்புத் தகுதிகளைக் கொண்டது என்று பெருமையாக அறிவித்திருக்கிறார்கள். அந்த கருத்துகளும் சோதித்து அறியப் பட்டன. இந்த ஆய்வு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் அனுமதியுடன் நடத்தப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பை பெறுகிறது.

வலி நிவாரணியை பயன்படுத்தும்போது தேவை யில்லாமல் கூடுதலாக வலி ஏற்படுகிறதா என்றும் ஆராயப் பட்டது. இந்த பெய்ன் பாம்கள் கறை ஏற்படுத்துகிறதா என வெள்ளைத் துணியில் அவை தடவப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், 20 பேர்களிடம் இந்த வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பயன்படுத்தி, அதன்பிறகு அவர்கள் சொன்ன கருத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இந்து பெண்களே நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைக்காமல் மங்களகரமான குங்குமம் பூசுங்கள்!!!

இந்து பெண்களே நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைக்காமல் மங்களகரமான குங்குமம் பூசுங்கள்!!!
##


(12/10/13) தினமலர் முதல் பக்கத்தில் போத்திஸ் (POTHYS) நிறுவனத்தின் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிறுத்தி இந்த விளம்பரம்
வெளியிடப்பட்டிருக்கிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் மாடலிங்(modelling) செய்திருக்கும் பெண்கள் மூவர் நெற்றியிலும் பொட்டு வைக்கவில்லை,

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிறுத்தி பணம் பார்க்க தெரிந்த இவர்களுக்கு பெண்கள் நெற்றியில் குங்குமம் அல்லது பொட்டு வைத்து விளம்பரம் வெளியிட தோன்றாதது ஏனோ?

சரி இவர்களை சொல்லியும் தப்பில்லை, பொட்டு வைக்காமல் இருப்பதுதான் பேஷன் என்று இன்றைய இளம் பெண்களே நினைக்கிறார்கள் .

இந்த மனநிலை பெண்களுக்கு எப்படி வந்தது என்று பார்ப்போம்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்புவரை பெண்களுக்கான பொட்டு என்றால் அது குங்குமம் மட்டும்தான். சுத்தமான கும்குமமானது படிகாரம், மஞ்சள், எலுமிச்சை மற்றும் வெண்காரம் சேர்த்து செய்யப்பட்ட சருமத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத ஒன்றாகும்.

இந்த பழக்கத்தை முற்றிலுமாக பெண்கள் கைவிட வேண்டும் என்று நினைத்த தனியார் நிறுவனமொன்று அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.

அவர்கள் செய்தது என்னவென்றால் இயற்கையான குங்குமத்திற்கு பதிலாக செயற்கயான ரசாயனம் கலந்த சிவப்பு நிற பொடியை குங்குமம் என்ற பெயரில் அதிக அளவில் சந்தையில் பயன்பாட்டிற்கு விட்டார்கள்.

பல்வேறு வியாபார யுக்திகளால் அதிக அளவில் வணிகர்களை இந்த ரசாயன குங்குமத்தை விற்கவைத்தார்கள், மக்களும் அதை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நாட்கள் செல்ல சுத்தமான குங்குமம் தயாரிப்பவர்கள் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் அழியத்துவங்கினர்.

எனவே ரசாயன குங்குமத்தை தொடர்ந்து உபயோகித்து வந்த பெண்களுக்கு நெற்றியில் அரிப்பு தழும்பு ஏற்படுவது போன்ற சரும பிரச்சனைகள் வர ஆரம்பித்தன.இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் குங்குமம் வைப்பதுதான் காரணம் என்று பரப்பப்பட்டு நம்பப்பட்டது.

இந்த கருத்து மக்களிடம் ஆழமாக வேரூன்றிய பின்பு அதே நிறுவனம் ஸ்டிக்கர்(ஸ்டிகர்) பொட்டுகளை சந்தையில் வெளிவிட்டது. பெண்கள் குங்குமத்தில் இருந்து ஸ்டிக்கர் பொட்டுக்கு மாறினர். அவர்களின் முதல் வெற்றி பெண்களை குங்குமம் அணியவிடாமல் செய்தது.

நாட்கள் செல்லச்‌செல்ல சந்தை முழுவதும் ஸ்டிக்கர் பொட்டுகளின் ஆதிக்கம் அதிகமானது, பொட்டு என்றாலே அது ஸ்டிக்கர் பொட்டு தான் என்று வியாபாரம் செய்தும் பின்னர் அதுவே நிலையானது.

அந்த நிறுவனத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பொட்டுகளின் நிறம் மாற்றப்பட்டது. சிவப்பிலிருந்து நீலம், பச்சை என்றவாறும் ஆடைக்கு தகுந்த நிறம் என்றும் மாற்றப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.

பொட்டு வைப்பது கலாச்சாரத்தின் ஒரு மரபு என்ற நிலை மாறி நாகரீகம் மற்றும் நவீனமயமாதலின் ஒரு அங்கம் என்பது போல் விளம்பரமும் வியாபாரமும் செய்யப்பட்டது.

பெண்களும் அந்த கருத்துக்கு அடிமையானதை சாதகமாக்கிகொண்ட அந்த நிறுவனம் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக பொட்டுகளின் அளவை குறைக்க ஆரம்பித்தன பின்னர் அதன் வடிவத்தை நிலா போன்றும் நட்சத்திரத்தை போன்றும் பல்லி போலவும் பூரான் போலவும் மாற்றின.

பின்னர் அதுவே மார்கெட் ட்ரெண்ட் ஆனது, போட்டி நிறுவனங்களும் அதே பாணியை தொடர்ந்தன, பொட்டின் அளவை சுருக்குவதும் வடிவத்தை மாற்றுவதுமாக ஒரு கட்டத்திற்கு மேல் பொட்டு இல்லாமல் இருப்பதே நவீன நாகரீகம் என்று விளம்பரம் செய்யப்பட்டு அதை நம் இன்றைய இளையதலைமுறை பெண்கள் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி எதற்காக அந்த நிறுவனம் இதையெல்லாம் செய்ய வேண்டும்,? காரணம் பார்த்தால் இதற்கு பின்னால் இருந்து செயல்படுவது கிருஸ்துவ மிஷனரிகள். இந்துகளின் சம்பிரதாயங்களயும் பண்பாட்டையும் அழிக்க நினைத்த மிஷினரிகள் முதலில் குறி வைத்தது பெண்களிடம் இருந்து பொட்டு வைக்கும் பழக்கத்தை அறவே அழிப்பது என்பதே.

இந்த ஒற்றை இலக்கை அடைய அவர்கள் 30 வருடங்களாக திட்டம் தீட்டி அதை இன்று ஓரளவுக்கு நிறைவேற்றியும் இருக்கின்றனர்.

இப்படி நமக்கு தெரியாமலே எத்தனயோ விஷயங்களுக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம். இதன் வெளிப்பாடே இன்றைய போத்திஸ் விளம்பரம்.

இந்துக்களாகிய நாம் விழிப்படைய வேண்டிய நேரமிது, இந்து பண்பாட்டிற்கு எதிராக யாராவது பேசினால் அதில் எந்தவித உண்மையும் இல்லை.

அதற்கு பின்னால் இருப்பது மதமாற்றமும் வியாபாரமும் மட்டுமே என்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.

இந்த தகவலை ஒரு கருத்தரங்கில் பகிர்ந்து கொண்ட தர்ம ரக்ஷன ஷமிதி மாநில அமைப்பாளர் திரு மணிகண்டன் ஜி அவர்களுக்கு நன்றி!!!

Sunday, 20 October 2013

பொடுகு என்றால் என்ன ?

பொடுகு என்றால் என்ன ?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

Saturday, 19 October 2013

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !

சென்னையில் சில இளம் பெண்களிடம் கேட்டோம். . !
குறிப்பு: ரொம்ப இளகிய மனதுள்ள ஆண்கள் படித்து பயந்தால் நாங்கள் பொறுப்பில்லை. . !

வருங்கால கணவர்கள் எப்படி இருக்க வேண்டும்...!

ஸ்ரீ சந்திரா, ஐ.டி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி:

1.''மாப்பிள்ளை மாநிறமா, மேன்லியா இருக்கணும். . !

2.என்னைவிட ஒரு மூணு இன்ச் உயரம் அதிகமா இருக்கணும். . !

3.துறுதுறுனு எல்லாருக்கும் பிடிக்கிற பையனா இருக்கணும். . !
(நம்ம சிவகார்த்திகேயன் மாதிரினு வெச்சுக்கோங்க. . !) அப்புறம். . !

4.ஸ்போர்ட்ஸ், டான்ஸ்னு கண்டிப்பா ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியில கலக்கணும். . !

5.வாரத்துல அஞ்சு நாள் சமையல் என் பொறுப்பு. . ! பட், மிச்சம் ரெண்டு நாள்
அவர் சமைக்கணும். . !

6.இந்த அக்ரிமென்ட்டுக்கு முகம் கோணாம ஒப்புக்கணும். . !
7.பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.. !சமயத்துல 'வாடா போடா’வையும்
ஜாலியா ரசிக்கணும். . !

8.எனக்கு நிறைய டிரெஸ் எடுத்துக்கொடுக்கணும். . ! ஷாப்பிங் வர்றப்போ
அவர்தான் எல்லாப் பையையும் தூக்கிக்கணும். . !

9.புதுசா என்ன டிரெஸ் போட்டாலும் உனக்கு சூப்பரா இருக்கு’னு சொல்லணும்.!

10.எனக்கு தும்மல் வந்தாகூட துடிச்சுப்போயிடணும். . !

11.கண்டிப்பா அக்கா, தங்கச்சி இல்லாத பையனா இருக்கணும். . ! நாத்தனார் பாலிடிக்ஸ் எல்லாம் சமாளிக்க முடியாதுப்பா. . !

12.முக்கியமான பாயின்ட். . !மாமியார்எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும். . !

சவிதா, எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி:

1.''மாப்பிள்ளை ஃபேர் மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. . ! ஆனா
பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். . !
அன்பு காட்டுறதுல
பணக்காரங்களா இருந்தா போதும். . !

2.அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. .!அவர் ஒரு 'யமஹா ஆர் 120’ வண்டி
வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். .!

இதுவரைக்கும் யார் கூடவும் நான்
பைக்ல போனதில்ல. . !

பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும். . !

3.குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும்.. ! குவார்டர்லி, ஹாஃப் இயர்லி,
சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க
பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அமர்களம்
பண்ணணும். . !

4.ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது,

டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா
இருக்கணும். . !

5.அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். . !

ஆனா, புடவை கட்டச் சொல்லி
என்னை கம்பல் பண்ணக்கூடாது. . !

6.அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம். . ! ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. . !

7.மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல. . !

லீலாவதி, எம்.காம் சென்னைப் பல்கலைக்கழகம்:

1.''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல. . ! ஆனா மொத்தமா பெரிய கூட்டுக்குடும்பம் வேண்டவே வேண்டாம். . !

2.மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். .!

3.மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். . !

4.மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு
சந்தோஷப்படுத்துவேன். . !

5.கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். . !

6.மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. . !

7.கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும்
பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு.. !

அதை எல்லாம் ரசிக்கணும். . !

8.வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். . !

9.கொஞ்சம் அதிகமா பேசுவேன். . !அதனால அவர் அமைதியானவரா
இருக்கணும். . !

10.சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி’கேட்கணும். . !

கொஞ்சமாவது மனசட்சின்கிறது இருக்கா? இந்த பொண்ணுங்களுக்கு!!    

Friday, 18 October 2013

தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா?

தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா? இதைப் படிங்க!

தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான். சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். தங்க நகை அணிவது அழகுக்காக என்பதை விட அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம்முன்னோர்கள். பழங்காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி நகைகளை அணியவும், தாமிரம், பித்தளை பாத்திரங்களை உணவு சமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். எகிப்து, இந்தியா, சுமேரியா நாகரீகங்களின் கால கட்டத்திலே தாமிரம், வெள்ளி, தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளதை வரலாற்றுச் சான்றுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இன்றைக்கும் நம் வீட்டில் உள்ள தங்க தந்தட்டி போட் பாட்டிகள் தாமிரப் பானையில் தண்ணீர் ஊற்றிவைப்பதும், பித்தளை கும்பாவில் கம்மங்கூழ் ஊற்றிக் குடித்தும் உடம்பை கூல் ஆக வைத்திருக்கின்றனர். அதனால் என்னதான் நன்மையிருக்கு மேற்கொண்டு படியுங்களேன்.

அங்கங்களை டச் பண்ணும்

காதில், மூக்கில், கழுத்தில், கைகளில் அணியும் தங்க நகைகள் நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது என்கின்றனர் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள்.

உயிர் ஓட்டப்பாதையில் பாதுகாக்கும்

நம் உடலின் நரம்பு மண்டலங்களைப் போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை' என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இவற்றை தூண்டுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது அக்குப்பஞ்சர்.

மாமன் மடியில உட்காந்து காது குத்துங்கப்பா

கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள வர்மப்புள்ளிகளை தூண்டும் விதமாகவே வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, மாமன் மடியில் அமர்ந்து மொட்டை போட்டு காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் நம்முன்னோர்கள்.

உடம்பில தேஜஸ் அதிகரிக்கும்

அதேபோல தங்கத்தை காது, மூக்கு கைகளில் போடுவதற்குக் ஸ்பெசல் காரணம் என்னவெனில், தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளிக் கொலுசுமணி

.அதேபோல் கால்களில் போடப்படும் வெள்ளிக்கொலுசு பெண்களின் கால்நோவுகளை நீக்குகிறதாம். மாதவிலக்கு சமயத்தில் அதிகஅளவில் சிரமத்திற்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்கிறதாம்.

கட்டாயம் நகை போடுங்க

நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படும் என்கின்றர் நிபுணர்கள்.!.

தாமிரப்பானைல தண்ணீர்

அதேபோல் தாமிரப் பானையில் இரவில் தண்ணீர் ஊற்றிவைத்து அதை காலை நேரத்தில் குடித்தால் அது அருமருந்து என்கிறது ஆயுர்வேதம். அதேபோல் வெள்ளி தம்ளர் உபயோகித்தாலும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். தமிரம் உடலில் ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்குமாம். சரும ஆரோக்கியத்தையும், கூந்தலை ஆரோக்கியமாகவும் பேணிக்காக்கிறதாம். அடப்போங்கப்பா தங்கமும்,வெள்ளியும், தாமிரமும் விக்கிற விலையில இதெல்லாம் எங்கே என்று யோசிக்கிறீர்களா? அப்போ காசு செலவழித்து மருத்துவமனைக்கு போங்க என்கின்றனர் நிபுணர்கள்.

Saturday, 12 October 2013

உங்க வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா.....?


வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...

நாய்கள் வளர்ப்பு பிராணிகளல்ல, வளர்ப்புப் பிள்ளைகள் போலவே மாறிவிட்டன. வீட்டுக் காவலுக்காக நாய்களை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக நாய்கள் வளர்ப்பவர்கள் பெருகிவிட்டார்கள். தோற்றத்தில் அழகானது, கம்பீரமானது என்று வகைவகையாகப் பிரித்து அதிக விலைகொடுத்து நாய்க்குட்டி வாங்கி வளர்க்கிறார்கள். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு நாய் என்பதை விட அதற்கு ஜோடியாக இன்னொரு நாயையும் சேர்த்து வளர்க்கத் தொடங்கிவிட்டனர். நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவனித்தால் அவை நலமாக இருக்கும்.

* நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந்தைகள்போலவே அவற்றுக்கும் தாய்ப்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிறகு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம்.

* ஒருவேளை நாய்க்குட்டியை பிரித்து, வாங்கி வந்துவிட்டால் அதற்கு மாட்டுப்பால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும்.

* குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும் கொடுக்கலாம்.

* நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித்தான் நாய் வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய்களைத் திரியவிட்டாலோ அவற்றை அப்புறப்படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே அனுமதி பெற்று கழுத்தில் 'டை' கட்டி, வீட்டில் கட்டிப்போட்டு வளர்க்க வேண்டும்.

* நாய்களுக்கு சத்துணவு கொடுத்து வளர்க்க வேண்டும். இறைச்சி கொடுத்தால் நாய்கள் கொழுகொழுவென்று வளரும்.

* நாய்கள் தரையில் படுத்துக் கிடக்கும். இதனால் கிருமிகள் தொற்ற நிறைய வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு கால்நடை டாக்டரிடம் காண்பிக்கலாம்.

* நாய்களுக்கும் முடி கொட்டும். பொமரேனியன் போன்ற முடி அதிகம் உள்ள நாய்களுக்கு முடி உதிர்வதை நாம் பார்க்க முடியும். இரும்புச் சத்து குறைபாடு, வயிற்றில் பூச்சி இருப்பது போன்ற காரணங்களால் முடி உதிரும். வைட்டமின், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுத்தால் முடிஉதிர்வதை தடுக்கலாம்.

* எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் நாய்களை படுக்கை அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்.

* ஏ.சி. அறைக்குள்ளும் நாய்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம். இதனால் அவற்றுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

* நாய் பிறந்து 4 மாதத்தில் இருந்து 8 மாதம் வரை 20 நாட்களுக்கு ஒரு முறையும், 8 மாதத்தில் இருந்து உயிரோடு இருக்கும் வரையும் நாயின் எடையைப் பார்த்து அதற்கேற்ப பூச்சி மருந்து கொடுத்து வர வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கொண்டால் அவைகளும் விளையாடத் தொடங்கி விடும். அப்போது ஒன்றையொன்று கடித்துக்கொள்வதும் உண்டு. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

* நாய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அதற்கு தடுப்பு ஊசி போட வேண்டும். எல்லாவிதமான தடுப்பு ஊசிகளையும் போட்டு, பாதுகாப்பாக நாய்களை வளருங்கள்.

Friday, 11 October 2013

ஆபீஸ்ப ரொம்ப பிஸியா இருப்பது போல பாவ்லா காட்டணுமா.. // ஸாரி , நான் ரொம்ப பிசி //

ஆபீஸ்ப ரொம்ப பிஸியா இருப்பது போல பாவ்லா காட்டணுமா.. // ஸாரி , நான் ரொம்ப பிசி //

1. உங்கள் மானிட்டரில் முக்கியமான ஏதேனும் ஒரு பைலையோ, கோடையோ (code) திறந்து வைத்துவிட்டு ஏதோ யோசிப்பது போல அதையே பார்த்துக் கொண்டிருங்கள். பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

2. அடிக்கடி நெற்றியை சொறிந்து கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக் கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை டைப் செய்துவிட்டு யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

3. கம்ப்யூட்டர் மவுஸை உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை
உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை செய்வது போலத் தோன்றும்.

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும்.கூடவே
நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. கைகளைப் பிசைந்து கொள்ளுங்கள், கைவிரல்களில் சொடக்கு எடுத்து விடுங்கள்.அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு தட்டு தட்டுங்கள்.

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்
பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. எங்கே போனாலும் கையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ குறிப்பு எடுக்கச்செல்கிறீர்கள் என நினைப்பார்கள்.

11. ஆபீஸில் நடந்து செல்கையில் எதிர்படுபவர்கள் சொல்லும் ஹாய், ஹலோவுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள், பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று சொல்லிக்கொள்ளலாம்.

12. சரியாக காபி வரும் நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச
நேரம் கழித்து வந்து ஹவுஸ் கீப்பிங்கில் காபி கேளுங்கள். மீட்டிங்
போயிருந்தேன் என்று புருடா விடுங்கள்.

13. உங்கள் டெஸ்க்டாப்பில் நான்கைந்து அப்ளிகேஷன்களையோ, பைல்களையோ திறந்து வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன் செய்வது, குளோஸ் செய்வது,மாற்றிக்கொண்டிருப்பது என ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

14. செல்போனை வைப்ரேட்டரில் / சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன் பேசுவது போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

15. கான்ஃபரன்ஸ் ஹால் ஃப்ரீயாக இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை கூட்டிப்போய் ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.போர்டில் ஏதாவது மார்க்கரால் சார்ட் படம் போட்டு விட்டு வாருங்கள்.

16. முதலில் வரும் காபியைக்குடிக்காதீர்கள். அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.
மறுபடியும் கேட்டு வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் காபி குடிக்க முடியவில்லை என (மற்றவர் காதில்) விழும்படி சொல்லுங்கள்.

17. (வீட்டில் ஏதும் வேலை இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம் தாண்டி கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து இருந்து விட்டுப்போங்கள். ஆனால் அந்த அகால நேரத்தில் பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட வேண்டியது ரொம்ப முக்கியம்.

18. இதையெல்லாம் மீறி உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால் அதை மற்றவர்களிடம் சந்தோஷமாக அறிவியுங்கள். நம் பெருமையை நாமே பேசாவிட்டால் நமக்காக யார் பேசுவார்கள்

Thursday, 10 October 2013

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்:

வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Wednesday, 9 October 2013

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.

மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

Tuesday, 8 October 2013

பிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட ......................................................................................... பெண் கர்ப்பமானார்...

பிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட
.........................................................................................
பெண் கர்ப்பமானார்...
.....................................

இப்படியும் நடக்குமா.?
........................................

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில், பிணவறை ஊழியராக 38 வயதுடைய பெண் ஒருவர் கடமைபுரிந்து வந்துள்ளார்.

வழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரனையில்,வைக் குறித்த திடுக்கிடும் சம்பவம் வெளிவந்தது.

அப் பெண் தனது வாக்குமூலத்தில்…

தான் பிணவறையில் கடமைபுரிந்தபோது, திடீர் மரணமான ஆணின் சடலம் ஒன்று வந்ததாகவும், அப்போது தனக்கு

தோன்றிய சபல எண்ணத்தால், அப் பிணத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

பிணத்தின் மூலம் கர்ப்பமாவதன் சாத்தியத்தன்மை தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள போலீசார்,

குறித்த பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய,

அப் பெண் மீது வழக்கு பதிவு செய்து

அப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் அப் பெண்ணுக்கு $250,000 பிணை விதித்து தீர்ப்பளித்தது..

Monday, 7 October 2013

நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும்


கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும்

1. முதலாம் படி :-ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள்

2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

5. ஐந்தாம்படி :-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள

6. ஆறாம்படி :-ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

7. ஏழாம்படி :-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

8. எட்டாம்படி :-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

9. ஒன்பதாம்படி :-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
Photo: நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் (Pls. Share this) கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும் 1. முதலாம் படி :-ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள் 2. இரண்டாம் படி:-ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். 3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். 4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள். 5. ஐந்தாம்படி :-ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள 6. ஆறாம்படி :-ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள். 7. ஏழாம்படி :-மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள். 8. எட்டாம்படி :-தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள். 9. ஒன்பதாம்படி :-பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

Thursday, 3 October 2013

சிந்திப்பாய் தமிழா!!!!! சிந்திப்பாய்!!!!!!!


சிந்திப்பாய் தமிழா!!!!! சிந்திப்பாய்!!!!!!! நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு பகுத்தறிவு பெறுங்கள் ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா: பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன். விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும். இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான். மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ! பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக. மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக. விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும். ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59) இனிமேலும் இந்த சாஸ்திரம் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள் ? நன்றி @ ச.பா. திலீபன். இ.ஆ.ப.

Wednesday, 2 October 2013

பயனுள்ள இணையதள முகவரிகள்

பயனுள்ள இணையதள முகவரிகள்

நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்

01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/


மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே....

Tuesday, 1 October 2013

வீடு... வாசல்... வில்லங்கம்...

வீடு... வாசல்... வில்லங்கம்...
.................................................

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்... ஆனாலும் மனதைத் திடப்படுத்திக்கொண்டு படித்து முடியுங்கள்!

அடுத்துச் சொல்லப் போகும் இரண்டு சம்பவங்கள் உங்களுக்கு இரண்டு விதமான படிப்பினையைத் தரும்.

வீடோ, நிலமோ வாங்கப் போகிறவர்களாக இருந்தால் ஏமாறாமல் இருக்க டாக்டர் முரளியின் சம்பவமும்,

வாங்கிப் போட்ட இடத்தைக் கண்காணிக்காமல் இருந்தால்

என்னாகும் என்பதை ஜெயசீலன் சம்பவமும் உங்களுக்கு விளக்கும்.

முதலில் டாக்டர் முரளி...
..........................................
சென்னை சைதாப்பேட்டையில் பிஸியான மசூதி தெருவில் சொந்தமாக க்ளினிக் கட்டும் ஆசையோடு 55 லட்ச ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கினார் டாக்டர் முரளி.

வீடு இருக்கும் ஏரியாவைப் பார்த்த முரளி, வீட்டைப் பார்க்க வேண்டும் என்றபோது, 'ஏற்கெனவே ஆட்கள் குடியிருக்கிறார்கள்.

விற்பது தெரிந்தால் வில்லங்கம் செய்வார்கள். பத்திரம் முடிந்தவுடன் காலி செய்துவிடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

பத்திரங்களைச் சரிபார்த்த முரளியும் பணத்தைக் கொடுத்து தன் பெயரில் பத்திரத்தை முடித்துவிட்டார்.

அதன்பிறகு, தான் வாங்கிய வீட்டுக்கு கம்பீரமாகப் போய் இறங்கியபோதுதான் தெரிந்திருக்கிறது, தனக்குப் பத்திரம் மட்டும்தான் சொந்தம்... இடம் சொந்தமில்லை என்பது!

''தாய் பத்திரம் முதற்கொண்டு எல்லாவற்றையும் போலியாகத் தயாரித்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். 
வில்லங்கம் போட்டுப் பார்த்தபோதுகூட ஒரு பில்டருக்கு அக்ரிமென்ட் போட்டிருந்ததும், புரோக்கர் ஒருவருக்கு பவர் கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.

ஆனால், எனக்கு விற்றவர்கள், பில்டருக்குக் கொடுக்கமாட்டோம் என்றதோடு, புரோக்கருக்குக் கொடுத்த பவரை கேன்சல் செய்து ரெஜிஸ்தரார் அலுவலகத்தில் எழுத்துப் பூர்வமாகக் கொடுத்தார்கள். அதை நம்பித்தான் வாங்கினேன்.

பத்திரம் முடிந்த பிறகு அந்த வீட்டுக்குப் போனபோதுதான் தவறு தெரிந்தது.

சரியாக விசாரிக்காமல் பணத்தைக் கொடுத்துவிட்டு மாட்டிக்கொண்டேன். இப்போது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார்.

முரளிக்கு வீட்டை(?) விற்ற ஜெயலலிதா, அவருடைய கணவர் லோகநாதன் ஆகியோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ்துறை!

அவர்களும் முரளியைப் போலவே சுரேஷ் பாபு என்பவரிடம் ஏமாந்திருக்கிறார்கள்.

அதன்பிறகு இந்த சொத்தைக் காட்டி வங்கியில் கடன் வாங்க முயற்சித்து அது முடியாமல் போனதால் விற்றிருக்கிறார்கள்.
அடுத்து ஜெயசீலன்...
...................................
சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இவர், மடிப்பாக்கம் ஏரியாவில் மகேஸ்வரி என்பவரிடம் ஒரு மனையை வாங்கிப் போட்டிருக்கிறார்.

மகளின் திருமண நேரத்தின்போது விற்றுச் செலவுகளை சமாளித்துக்கொள்ளலாம் என்பது திட்டம்.

ஆனால், வாங்கியதோடு சரி... பத்து ஆண்டுகளாக அந்தத் திசைக்கே செல்லவில்லை.

தற்செயலாக ஒருநாள் அந்தப் பக்கமாகப் போனபோது, தன்னுடைய மனையில் ஒரு வீடு முளைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

விசாரித் ததில், பாக்கியலட்சுமி என்பவ ரிடம் இருந்து மனையை வாங்கி வீடு கட்டியதாக வீட்டுச் சொந்தக்காரர் ஆறு முகம் சொல்ல, ஜெய சீலனுக்கு மேலும் அதிர்ச்சி.

இந்த பாக்கியலட்சுமிதான் மகேஸ்வரிக்குச் சொத்தை விற்றவர். மூலப்பத்திரம் அவர் பெயரில்தான் இருக்கிறது.

ஜெயசீலனின் மனை நீண்டகாலமாக கவனிப்பாரற்று சும்மா கிடந்ததால், அந்தப் பகுதி புரோக்கர்கள் 5 பேர் சேர்ந்து, பாக்கியலட்சுமி என்ற பெயரில் மனை பத்திரத்தைப் போலியாகத் தயாரித்து ஆறுமுகத்துக்கு விற்றுள்ளனர்.

உட்பிரிவு பிரிக்கப்படாத சர்வே எண், பாக்கியலட்சுமிக்கு உரியது என்பதால், வில்லங்கம் போட்டுப் பார்த்தபோது வித்தியாசம் தெரியவில்லை.

இப்போது மனை யாருக்குச் சொந்தம் என்பதில் விவகாரமாகி இருவரும் போலீஸுக்குப் போயிருக்கிறார்கள்.

போலி பத்திர மோசடிகளை விசாரிப்பதற்கு என்று மத்திய குற்றப் பிரிவின்கீழ் (Central Crime Branch) சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய வளாகத்தில் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.

இதர ஊர்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட குற்றப் பிரிவு எஸ்.பி-யிடம் புகார் செய்ய வேண்டும்.

''ஆவணங்களை வைத்து மட்டுமே சொத்தை வாங்கும் முடிவை எடுக்கக் கூடாது.

பல நேரங்களில், சிக்கலுக்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கிறது. ஒரிஜினலைப் போலவே கலர் ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றும் வேலை நிறையவே நடக்கிறது'' என்று ஆரம்பித்தார் மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஜி. தர்மராஜன்.

''அக்ரிமென்ட் போடும் முன் 'பவர்’ வாங்கி யவர் உண்மையான நபர்தானா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல், சொத் தின் உண்மையான உரிமையாளர் யார் என்று உங்க ளுக்குத் தெரியாதபட்சத்தில், அதை வாங்கும் நட வடிக்கையில் இறங்கக் கூடாது.

பவர் ஏஜென்டாக இருக்கும் புரோக்கர்கள் மூலம் சொத்தைப் பதிவு செய்யக்கூடாது.

முக்கியமாக புரோக்கர்களை அழைத்து சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்லக் கூடாது.

பூர்வீகச் சொத்து என்கிறபட்சத்தில், வாரிசுகள் யார் என்பதை எல்லாம் தெரிந்துகொண்டுதான் வாங்கவேண்டும்.

அடமானச் சொத்து என்றால், கோர்ட் தீர்ப்பு வரும்வரை அதை வாங்கக் கூடாது'' என்று அடுக்கிக் கொண்டே போனார்.

சென்னை மற்றும் புற நகரங்களில் சைதாப்பேட்டை, மாம்பலம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, சேலையூர், வேளச்சேரி, தாம்பரம், ஆவடி, கிழக்குக் கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அம்பத்தூர், சோழிங்கநல்லூர், போரூர் போன்ற பகுதிகளில் போலி சொத்துப் பத்திரங்கள் அதிகம் நடமாடுகின்றன என்பது அவருடைய கருத்து.

கடந்த 25 வருடங்களுக்கு மேல் ரியல் எஸ்டேட் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வரும் வக்கீல் கண்ணனைச் சந்தித்தபோது,

''போலி ஆவணங்கள் மூலம் சொத்து விற்பது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும், சொத்துக்களை வாங்குபவர் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் உண்மையானவைதானா என்று ஆராய வேண்டும்'' என்றவர்,

''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பத்திரப் பதிவு அலுவலகம் தபால் அலுவலகம் போல்தான் செயல்பட்டு வருகிறது.

ஸ்டாம்ப் ஒட்டிய தபாலை எந்த முகவரிக்கும் யாரும் அனுப்பலாம். அதேபோல, சர்வே எண்ணுக்குரிய முத்திரைக் கட்டணத்தைச் செலுத்தினால், யாருடைய சொத்தையும் யாருடைய பெயருக்கும் பதிவு செய்துவிடலாம்.

சாந்தோம் சர்ச் கூட இவ்விதமாக போலியாக ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

முத்தாய்ப்பாக கண்ணன் சொன்ன விஷயம் முக்கியமானது.

''பெரும்பாலான ஆவண மோசடிகளில் புரோக்கர்களின் கைங்கரியம் அதிகமாக இருப்பதாகத்தான் தெரிகிறது.

அதனால், புரோக்கர்களை முழுமையாக நம்ப வேண்டாம். சொத்து தொடர்பாக உரிமையாளர் மற்றும் வாங்குபவர் பேசும்போது, புரோக்கர்களை ஒதுக்கி வைப்பது நல்லது.

சொத்தை கைகாட்டுவதோடு புரோக்கர்களின் வேலை முடிந்து விடுகிறது'' என்றார்.

மேலே சொன்ன இரண்டு விஷயங்களிலுமே புரோக்கர்கள்தான் விளையாடிஇருக்கிறார்கள்.

அதனால், ஒன்றுக்கு நான்குதடவை நன்கு யோசித்து முடிவு எடுங்கள். ஏனென்றால், சொத்து நம்முடையது!

சொத்து வாங்கும் முன்...
.........................................
ஒரிஜினல் டாகுமென்ட், தாய் பத்திரம் எங்கே, யாரிடம் இருக்கிறது என்று கேட்டு வாங்கிப் பார்ப்பது அவசியம்.

கடந்த 30 வருடமாக சொத்து யார் யார் பெயரில் இருந்து வருகிறது என்பதை வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிராம நிர்வாக அதிகாரியைச் சந்தித்து மனை மற்றும் சொத்து விஷயத்தில் தாலூகா அலுவலகம் தொடர்புடைய ஆவணங்கள் குறித்து விவரங்களை கேட்க வேண்டும்.

அவரிடம் ஃபீல்ட் மேப் (Field Map) கேட்டு வாங்க வேண்டும். அதில், குறிப்பிட்ட சர்வே எண்ணுக்குரிய சொத்து எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து சர்வேயர் வைத்து மனை அல்லது வீட்டை அளக்க வேண்டும். ஃபீல்டை அளக்கும்போதே, அதில் பிரச்னை ஏதாவது இருந்தால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், விஷயங்களைக் கக்கிவிடுவார்கள்.

அ-பதிவேடு (A - Register) வாங்கிப் பார்க்க வேண்டும். இதை நிலத்தின் ஜாதகம் என்று சொல்லலாம். அதில், சர்வே எண், உட்பிரிவு செய்யப்பட்ட விவரம், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்கள் இருக்கும்.

சொத்தை வாங்குபவர், தன் பெயரில் புதிதாக வாங்கினால், அந்த விவரம் அ-பதிவேட்டில் இடம் பெறும்.

நகரம் என்கிறபோது, தாலூகா அலுவலகத்தில் நிரந்தர நிலப் பதிவேடு (Permanent Land Register) இருக்கும்.

இதில், சர்வே எண், உட்பிரிவு, வீடாக இருந்தால் கதவு எண், உரிமையாளர் பெயர், சொத்தின் நான்கு எல்லை, சொத்தின் அளவீடுகள் போன்ற விவரங்கள் இருக்கும்.

பிளான் மற்றும் பில்டிங் அப்ரூவல், கடைசியாக சொத்துவரி கட்டியதற்கான ரசீது போன்ற வற்றை வாங்க வேண்டும்.

இந்த ஆவணங்களை வக்கீல் ஒருவரிடம் கொடுத்தால், அவர் லீகல் ஒப்பீனி யன் தருவார். அதை வைத்து முடிவு செய்யலாம்.

பவர் பத்திரம்...
..........................
பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்தை வாங்கும்போது, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுப் பார்க்க வேண்டும்.
2, 3 வருட பழைய பவர் என்றால், உரிமையாளர் உயிருடன் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும். அவர் உயிருடன் இருந்தால்தான் பவர் செல்லும்.

ஓனரிடமிருந்து, 'பவர் இப்போதும் செல்லும்’ என்று வக்கீல் மூலம் பிரமாணப் பத்திரம் (Affidavit) வாங்கிக் கொடுக்கச் சொல்ல வேண்டும். உரிமையாளர் மூலம் சொத்தை வாங்குவது பல வகையில் நல்லது.

பத்திரிகை விளம்பரம்!
........................................
ஆவணத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால், உரிமையாளர் அனுமதியுடன் முன்னணி பத்திரிகைகளில், 'இந்தச் சொத்தை வாங்கப் போகிறேன்.

இதில் வில்லங்கம், ஆட்சேபணை ஏதாவது இருந்தால் 15 தினங்களுக்குள் தெரிவிக்கவும்’ என்று விளம்பரம் கொடுப்பது நல்லது.

மோசடியாக கிராமமே விற்பனை...
........................................................

சென்னை புறநகரான தாம்பரம் அருகே கஸ்பாபுரம் என்ற ஊரையே மூன்று பெண்கள், புரமோட்டர் ஒருவருக்கு தங்களின் பூர்வீக ஜமீன் சொத்து என்று சொல்லி விற்பனை செய்துள்ளனர்.

மொத்தம் 80 குடும்பங்கள் வசித்த 282 ஏக்கரை 4 சர்வே எண்களில் விற்றுள்ளனர்.

இதில், 65 ஏக்கரை புரமோட்டர் பிளாட் போட்டு விற்றுவிட்டார். நிலத்தை வாங்கியவர்கள் கிராம மக்களை காலி செய்யச் சொல்ல... அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாவட்ட கலெக்டரிடம் முறையிட, மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அனைத்துக்கும் ஒரே எண்...

உள்ளாட்சி அமைப்பு கொடுக்கும் கதவு எண், வருவாய் துறையின் வழங்கும் பட்டா எண், பத்திரப் பதிவு அலுவலகத்தில் கொடுக்கும் பதிவு எண், நிலத்தின் சர்வே எண்

இந்த நான்கும் ஒரே எண்ணாக இருந்தால் ஒரு சொத்து எங்கே இருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடிவதோடு, மோசடிகளைத் தடுக்கவும் முடியும் என்பது ஆவண மோசடியால் பாதிக்கப்பட்ட பலருடைய கருத்தாக இருக்கிறது.

நன்றி:நாணயம் விகடன்..