Thursday, 31 October 2013

சேலை

 
- பெண்கள் சேலை கட்டும் விதம் அவர்களின் சமூக கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது..
-முதலில் கட்டிய சேலையையும் முதன்முதலாக கணவன் வாங்கி கொடுத்த சேலையையும் பத்திரமாக எடுத்து வைத்து பாதுகாக்கும் பெண்களின் மனதிற்குள் வலம் வந்துக் கொண்டு இருக்கும் மகிழ்ச்சியை அடையாளம் கொள்ள முடிகிறது..
- பிறந்த வீட்டில் எடுத்துக் கொடுக்கும் சேலைக்கு புகுந்த வீட்டில் கிடைக்கும் தனிப்பட்ட அங்கீகாரத்தால் பெருமிதம் கொள்ள முடிகிறது..
- கணவன் வாங்கி கொடுத்து கட்டும் சேலையை உடன்பிறந்த சகோதரிகளிடம் காண்பித்துக் கொள்ளும் போது பெருமை கொள்ள முடிகிறது..
- மத்தியதர குடும்பத்தில் படித்த பெண்கள் கட்டும் சேலை அவர்களின் தரத்தை மேன்மைப்படுத்துகிறது..
- விழாக்களுக்கு தகுந்தாற்போல திருமணமான பெண்கள் கட்டும் சேலை அவர்கள் கணவரின் மதிப்பிற்கு மரியாதை கூட்டுகிறது..
- வேறு கடைகளில் கிடைக்காத டிசைன்களில் தேடிக் கண்டுபிடித்து வாங்கிய சேலைகளைப் பற்றி மற்ற பெண்கள் விசாரிக்கும் போது விருது பெற்ற சந்தோசம் அடைய முடிகிறது..
- எந்த வயதாக இருந்தாலும் அம்மாவின் சேலையை கட்டி பார்ப்பதில் மகள்கள் ஆனந்தம் அடைய முடிகிறது..
-ஒரு மனிதன் பிறக்கும் போது படுத்து உறங்கும் தொட்டில் முதல் இறந்தபின் சுடுகாட்டுக்கு செல்லும் பாடை வரை முக்கிய பங்கு வகிப்பது சேலைதான் என்று சொல்லிக் கொள்ள முடிகிறது..!

சேலை பற்றிய பதிவை வெளியிட்ட பின் நிறைய விஷயங்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது...