Sunday, 27 October 2013

ஒரு அதிமுக பிரியானி தொண்டனின் அன்பு வேண்டுகோள்,

ஹா ஹா ஹா
ஒரு அதிமுக பிரியானி தொண்டனின் அன்பு வேண்டுகோள்,

அம்மா, வாட்டர் பாட்டில், பேருந்துகள், எம் ஜி ஆர் சமாதி என்று மக்களுக்கு பரிச்சயம் ஆகும் வகையில், அனைத்திலும் இரட்டை இலை சின்னத்தை அரசு செல்வில் அச்சிட்டு அதை பிரபலப் படுத்தி வருகிறீர்கள்.

தயவு கூர்ந்து நம் மாநிலத்தின் குடி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குவாட்டர் பாட்டில்களிலும் இரட்டை இலை சின்னத்தை அச்சிட்டு, அதை மேலும் பிரபலப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதனால் குவாட்டர் விற்பனையில் இந்திய மாநிலங்களில் முன்னனி மாநிலமாக நம் தமிழகம் இருப்பது அனைவருக்கும் தெரிய வரும்.

அதோடு தமிழக மக்கள் தொகையில் பெரும்பான்மையாக மாறி வரும் குடி மகன்கள் அன்றாடம் நம் சின்னத்தை, பாட்டிலில் பார்த்து பார்த்து பரிச்சயமாகி, நமக்கு நன்றிக் கடனாக ஓட்டளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

உங்கள் உடன்பிறப்பு, குவாட்டர் குமார்.