எது பெஸ்ட் வலி நிவாரணி..?
வலி நிவாரணிகளில் என்னென்ன மூலப் பொருட்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன?
அவை இயற்கையானவைதானா? குறிப்பிட்ட பிராண்ட்களையே வாடிக்கையாளர்கள் பயன்
படுத்த என்ன காரணம்? என்பது குறித்து பரவலாக ஆய்வு மற்றும் சர்வே
நடத்தப்பட்டது.
அந்த சர்வே முடிவுகளை பார்க்கும் முன் வலி நிவாரணிகளில்
என்னென்ன அடங்கி இருக்கின்றன?, அவை எப்படி பலன் தருகின்றன என்பது குறித்து
பார்ப்போம்.
வலி நிவாரணிகளில்
மீதைல் சாலிசிலேட், மெந்தால், கற்பூரம் ஆகிய மூன்று பொருட்கள் முக்கியமாக
பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை தோல் எளிதில் உறிஞ்சிக் கொள்வதால் நொடியில்
நிவாரணம் தெரி கிறது. இந்த மூன்றும் தலைவலி, வாத நோய்களுக்கு நல்ல
நிவாரணம் தருபவையாக இருக்கின்றன. இவை தவிர, யூகலிப்டஸ் தைலம், கிராம்பு
தைலம் போன்றவையும் வலி நிவாரணியில் சேர்க்கப் படுகின்றன.
யூகலிப்டஸ் தைலம் தலைவலிக்கும், கிராம்பு தைலம் பல் வலிக்கும் வீடுகளில்
பயன்படுத்தப்படுகின்றன. வலி நிவாரணிகள், அவை அளிக்கும் நிவாரணத்தைவிட
வாசனை, பக்கவிளைவுகள், அலர்ஜி, அரிப்பு, எரிச்சல், தோல் நிறம் மாறுதல்
மற்றும் கறுத்தல், காயம் ஏற்படுதல் போன்றவையும் ஆய்வுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
அடுத்து அவற்றின் தரம், இந்திய தரக் கட்டுப்பாடு
அமைப்பின் (பி.ஐ.எஸ்.) குறைந்தபட்ச விதிமுறைகளுக்கு உட்பட்டு
இருக்கின்றனவா? என்றும் ஆராயப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, பல
பிராண்ட்களில் இவற்றின் தரம் குறைந்தபட்ச தரத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே
இருக்கிறது.
மேலும், பல பெரிய உற்பத்தி யாளர்கள், எங்களின்
பெய்ன் பாம் இந்த சிறப்புத் தகுதிகளைக் கொண்டது என்று பெருமையாக
அறிவித்திருக்கிறார்கள். அந்த கருத்துகளும் சோதித்து அறியப் பட்டன. இந்த
ஆய்வு மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் அனுமதியுடன்
நடத்தப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பை பெறுகிறது.
வலி
நிவாரணியை பயன்படுத்தும்போது தேவை யில்லாமல் கூடுதலாக வலி ஏற்படுகிறதா
என்றும் ஆராயப் பட்டது. இந்த பெய்ன் பாம்கள் கறை ஏற்படுத்துகிறதா என
வெள்ளைத் துணியில் அவை தடவப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும்,
20 பேர்களிடம் இந்த வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பயன்படுத்தி,
அதன்பிறகு அவர்கள் சொன்ன கருத்தின் அடிப்படையில் இறுதி முடிவு
எடுக்கப்பட்டது.