Wednesday, 31 July 2019

ஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை..... டிரெய்னிங்ல வாங்குற மார்க்தான் முக்கியம்....

ஐஏஎஸ் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் முக்கியம் இல்லை..... டிரெய்னிங்ல வாங்குற மார்க்தான் முக்கியம்....

அய்யோ... இது பெரிய பிரச்சனையாச்சே... மத்திய அரசு ஏன் இப்படி செய்கிறது...

ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகளை தீர்க்க சொல்லி வலியுறுத்துவதால்....புதிதாக பிரச்சனைகளை கிளப்பிவிடுறாங்க....நீங்க இந்த பிரச்சனைய தீர்க்கனும்னு குரல் கொடுப்பீங்களா? அல்லது ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள பேசுவீங்களா?

ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகளின் ரீவைண்டு...

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...?

1950 முதல் 1965 வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது

அப்போது தேர்வு எழுதியவர்கள் யார்?

உயர் சாதிக்காரர்கள் (பிராமணர்கள்) மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.... அதனால் அவர்கள் மட்டுமே தேர்வு எழுதி, வெற்றி பெற்று பதவிகளை அடைந்தனர்....

இட ஒதுக்கீடு அப்போது இருந்ததா?

பெரியாரின் முயற்சிகளால் முதல் சட்டத்திருத்தம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் அவர்கள் கல்வியறிவே இல்லாதவர்களாக, அதற்கும் மேலாக ஆங்கிலம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் இருந்தார்கள்.....எனவே அந்த இட ஒதுக்கீடு பிராமணர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை...

1965 ல் என்ன நடந்தது?

ஐஏஎஸ் தேர்வு இனி மேல் இந்தியில் மட்டுமே நடக்கும் என்று அறிவித்தார்கள்...

அதன் விளைவு என்ன?

இந்தி மொழி பேசுபவர்களைத் தவிர யாரும் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியாது. இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் யாரும் படிப்பதற்கான சூழல் இல்லை. பிற மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் பிராமணர்களுக்கு போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது....

1965 ல் மத்திய அரசு அப்படி ஒரு முடிவு எடுத்த போது. மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனால் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இல்லை.... ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் தமிழ்நாடு என்று​ ஒரு மாநிலம் இருந்தது.  அண்ணா என்ற தலைவர் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து, போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்கவைத்தார்...... மத்திய அரசு அடி பணிந்தது.... தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடக்கத் தொடங்கின....

ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் எந்த வகுப்பினர்?

பெரும்பாலும் பிராமணர்களே....

பிறகு என்ன நடந்தது?

அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்... அவருக்கு ஆதரவாக காமராஜர் காங்கிரஸ் கட்சி சார்பில் "மாநில மொழிகளிலும்  ஐஏஎஸ் தேர்வு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, இந்திரா காந்தி காலத்தில் நாடாளுமன்றத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்ற செய்தார்....

அதன் விளைவு என்னவாக இருந்தது?

1974 ம் ஆண்டு கோத்தாரி அவர்கள் தலைமையில் ஐஏஎஸ் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான கமிட்டி உருவாக்கப்பட்டு. அந்த கமிட்டி 1978 ல்  "மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்" என்ற பரிந்துரையை சமர்ப்பித்தது. அதன் விளைவாக 1979 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வந்தது.

நல்ல விசயம் நடந்திருக்கே!!! அப்படின்னா தமிழ் வழியில் படித்தவர்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கே!!!!! மகிழ்ச்சி.....

ரொம்ப சந்தோஷபட வேண்டாம், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது..... இப்போது வரை சரி செய்யப்படவில்லை.....

என்ன சிக்கல் அது?

ஐஏஎஸ் தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம், ஆனால் கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருக்கும்.

அப்படி என்றால் கேள்வி புரியாமல் எப்படி தமிழில் பதில் எழுதுவது?

நிச்சயம் முடியாது!!!! அது தான் தேர்வு நடத்துபவர்களுக்கு வேண்டும். இதற்கே ஆச்சர்யப்பட்டால் எப்படி..... ஐஏஎஸ் தேர்வில் மெயின் (main) தேர்வுகள் மட்டுமே தமிழில் விடை எழுத முடியும். ஆனால் அதற்கு முன்பு பிரிலிமினரி (preliminary) தேர்வு என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் மெயின் தேர்வு.....

அப்படி என்றால் ஐஏஎஸ் தேர்வு தமிழில் எழுதலாம் என்று மக்கள் நம்புவது?

Preliminary தேர்வு தமிழில் நடக்குமா, மெயின் தேர்வு கேள்விகள் தமிழில் இருக்குமா என்றா மக்கள் கேள்வி கேட்பார்கள்...... அது தேர்வு எழுதுபவர்களின் பிரச்சினை. உதாரணமாக காவிரிக்கு குறுக்கே அணை கட்ட போறாங்கன்னு சொன்னா முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? இல்ல தாமிரபரணி பாசன விவசாயிகள் வருத்தப்படுவாங்களா? நகரத்துல வசிப்பவர்களுக்கு இதெல்லாம் பெரிதாக படாது, ஆனால் ஏதோ உணர்வு மட்டும் இருக்கும்ல, அது மாதிரி ஐஏஎஸ் தேர்வு இறுதி முடிவு வந்து, அதுல தமிழில் எழுதி பாசானால், அவர் புரோட்டா மாவு பிசைந்து ஐஏஎஸ் ஆனார், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் படிப்பார், ஆடு மேய்த்து ஐஏஎஸ் ஆனார் என்று பத்திரிக்கையில் செய்தியை பார்த்துவிட்டு தமிழனாக பெருமைப்பட்டு உணர்வை வெளிப்படுத்துவோம்..... அவ்வளவுதான்....

அப்புறம், இது போல இந்த தேர்வில் வேறு என்ன பிரச்சனை இருக்கிறது??

70 வருசமா இட ஒதுக்கீடுனால இந்த நாடு முன்னேறாமல் போச்சு, இட ஒதுக்கீட்டால திறமையானவர்கள் அடிபட்டு போய்விடுகிறார்கள்....மெரிட் தான் முக்கியம் அப்படின்னு நம்ம நாட்டுல அடிக்கடி பேச்சு அடிபடும். அது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேச வைக்கும் உத்தி....

அப்படின்னா??????

ஐஏஎஸ் தேர்வில் இடஒதுக்கீடு ஒதுக்கீடு என்பது 1990 ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிசன் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் வழங்கிய பிறகுதான் 1994 முதல் தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது..

அப்படின்னா பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்து 24 வருடங்கள் தான் ஆகுதா?

ஆமா, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே 70 ஆண்டுகளா இட ஒதுக்கீடுனால நாடு சீரழிந்து போயிடுச்சுன்னு பேசுவாங்க..... அதான் வேடிக்கை.

ஆனால் இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மேல் சாதியினர் பாதிக்கப்படமாட்டாங்களா?

இது மூன்றையும் கூட்டினால் 49.5 சதவிகிதம் வருகிறது. மீதமுள்ள 50.5 சதவிகிதத்தில் பிற சாதியினர் வராதவாறு, ஐஏஎஸ் தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி பார்த்துக் கொள்ளும்...

அப்படி என்றால்????????

மேல் சாதியினருக்கு அறிவிக்கப்படாத 50.5 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது என்பது தான் உண்மை.

அது எப்படிங்க சொல்றீங்க?

மத்திய பணியாளர் நல அமைச்சக ஆண்டறிக்கை DoPT (2017-18) படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட மத்திய அரசு Group A பணிகளில் 13.02 சதவிகிதம்​ பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்​ 13.38 சதவிகிதம் பேரும், பழங்குடியினர் 5.92 சதவிகிதம் பேர் மட்டுமே உள்ளனர். இப்போ இது மூன்றையும் கூட்டினால் எவ்வளவு சதவிகிதம் வருகிறது....

மொத்தம் 32.32 சதவிகிதம் மட்டுமே வருகிறது....

அப்படின்னா உயர்சாதிக்கு நான் சொன்னது 50.05 சதவிகித இடஒதுக்கீடு என்பது தவறு, அரசு அறிக்கை படி 68 சதவிகிதம் இட ஒதுக்கீடு அனுபவிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நமக்கு இன்னொரு கணக்கு சொல்வார்கள் அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் 21 சதவிகிதமும், தாழ்த்தப்பட்ட மக்கள் 17 சதவிகிதமும், பழங்குடியினர் 8 சதவிகிதம் இருக்கிறது என்று...... அது எப்படி என்றால் Group, B, C, D என்று எல்லா பணிகளையும் சேர்த்து சொல்வார்கள்...அப்படி பார்த்தாலும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். உயர்சாதியினர் 54 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்...

அப்படி பார்த்தாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உயர் பதவிக்கு வரத்தானே செய்கிறார்கள்?

அதான் மேல இருக்கிறவங்க பிரச்சனை. அதை தடுப்பதற்காகத்தான்  நிர்வாக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்....

நிர்வாக சீர்திருத்தம் என்பது நல்ல விசயம் தானே, அதை வச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உயர் பதவிக்கு வராமல் செய்ய முடியும்?

அதாவது பணியாளர் அமைச்சக ஆண்டறிக்கையை படித்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் சராசரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் சேரும் போது அவர்களுடைய வயது 28. அப்படியென்றால் பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் 29, 30, 31, 32.... வயதுக்கு மேற்பட்டவர்கள்....... நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த கமிட்டிகள்

1. Y.K. Alagh Committee  (2001) - 26 வயது
2. P.C. Hota committee (2004) - 27 வயது
3. Administrative Reforms Commission (2008) - 28 வயது
4. B.S. Baswan committee (2016) - 29 வயது

இந்த நான்கு கமிட்டிகளும் ஐஏஎஸ் தேர்வு எழுத பரிந்துரை செய்த உச்ச வயது வரம்பை பார்த்தால் புரிகிறதா? இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் வருவதை தடுக்க முடியும்...

அப்படி என்றால் நடைமுறைக்கு இந்த பரிந்துரைகள் வந்துவிடுமா?

அங்கே தான் அவர்களுக்கு சிக்கல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு இருந்தால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.. இது தவிர இந்த பஸ்வான் கமிட்டி இன்னொரு பரிந்துரையும் வழங்கியுள்ளது..... அதாவது தமிழ் மொழி போன்ற மாநில மொழிகளில் தேர்வு நடத்தும் முறையை நீக்க வேண்டும் என்பது....

அடக்கொடுமையே, அப்படி என்றால் இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் எதிர்காலம்?

நீங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்று​ யோசித்தால் சரியாக​ இருக்கும்....

அப்படி என்றால் பாஜக செய்வது மட்டுமே தவறு என்று சொல்கிறீர்களா?

நிச்சயம் இல்லை, மத்தியில் ஆண்ட  எல்லா அரசுகளும் இதனை செய்ய முயற்சிப்பார்கள்....... காரணம் ஒவ்வொரு துறையிலும் Secretary பொறுப்பில் அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் உயர் சாதியினர் மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை..... ஐஏஎஸ் அதிகாரிகள்​ அரசியல் தலமைகளுக்கு ஆலோசனை வழங்குவது போல் தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆலோசனை வழங்குவது ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் ஆலோசனையில் உருவான "நிதி அயோக்"  Strategy for New India என்ற தலைப்பில் தற்போது ஐஏஎஸ்​ தேர்வுக்கான வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

ஓ அப்படி என்றால் OBC, SC, ST மாணவர்கள் பதவிக்கு வருவதை தடுக்க இவ்வளவு வேலை நடக்கிறதா?

ஆமாம், இந்த ஆண்டு முதல் Secretary பொறுப்பில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக Lateral entry முறையில் தனியார் துறையில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருப்பவர்களை நியமிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

தனியார் துறையில் திறமையானவர்கள் இருப்பதால் அவர்களை உயர் பொறுப்புக்கு​தேர்வு செய்வது நல்லது தானே?

அங்கே தான் பிரச்சனையே, யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலம் ஐஏஎஸ் பணிகளை நிரப்பினால் இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும். ஆனால் Lateral entry மூலம் பணி வழங்கினால் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட முடியும்.  இதன் மூலம் உயர் பதவிகளுக்கு BC, SC, ST வகுப்பினர் வராமல் செய்ய முடியும்.

அப்படி என்றால் நாம் என்னதான் செய்வது?

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மக்களும், அவர்களுக்கான அரசியல் தலைவர்களும் ஐஏஎஸ் தேர்வு என்பதை ஏதோ ஒரு தேர்வு அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், அவர்களின் வாக்கு வங்கி என்னவென்று யோசிக்காமல் நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் சரியான விகிதத்தில் வந்தால் தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும். உயர் சாதியைச் சேர்ந்த யாரோ எடுக்கும் முடிவுகளால் தான் இங்கே பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைகிறார்கள். நேர்மை, மெரிட், நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள். இந்த சதிகளை முறியடிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்.... அதற்கு மிக முக்கியம் இந்த பிரச்சனை பற்றிய புரிதல்......

Best regards,

கொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள்ளையர் ரகசிய குறியீடு

கொள்ளையடிக்கத் திட்டமிட்டு வீடுகளில் வடமாநில கொள்ளையர் ரகசிய குறியீடு:


விளக்கப் படத்துடன் போலீஸார் எச்சரிக்கை

வடமாநில கொள்ளையர்கள் பயன்படுத்தும் குறியீடுகள் தொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள வரைபடம்.
கொள்ளையடிக்கப்போகும் வீட்டை நோட்டம் பார்த்து, சுவர் அல்லது கதவில் ரகசிய குறியீடுகளை எழுதும் பாணியை வடமாநில கொள்ளையர்கள் மேற்கொள்கின்றனர். இதுபோன்று ரகசிய குறியீட்டை காணும் பொது மக்கள் காவல்துறைக்கு உடனடி யாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட் டங்களில் வட மாநில கொள்ளை யர்களின் கைவரிசை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக விசாரித்த காவல்துறை யினருக்கு, வடமாநில கொள்ளை யர்கள் சில நூதனமான வழிமுறைகளை கடைப்பிடிப்பது தெரியவந்துள்ளது. கும்பலாகச் சென்று கொள்ளையடிப்பது, கொள்ளைச் சம்பவத்துக்கு முன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளை தனித்தனியாக சென்று நோட்டம் விடுவது ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும், வீடு மற்றும் கடைகள் தொடர்பான தகவல்களை அறிந்து, அதற்கேற்ப சுவரிலும், கதவிலும் ரகசிய குறியீட்டை எழுதிச் செல்கின்றனர். அதன்படி, ஆங்கிலத்தில் ‘D’ என சுவரில் எழுதியிருந்தால் சம்பந்தப்பட்ட வீடு அல்லது, கடைக்குள் நுழைவது கடினம் மற்றும் ஆபத்தானது, ‘எம்’ போன்ற வடிவிலான குறியீடு எனில் சிசிடிவி கேமரா அல்லது அலாரம் இருக்கிறது, சிறுவட்டங்கள் வரைந்திருந்தால் செழிப்பான வீடு, முக்கோண வடிவில் வரைந்திருந்தால் பெண்கள் மட்டுமே உள்ள வீடு, செவ்வக வடிவத்தினுள் குறுக்காக கோடுகள் இருந்தால் ஆளில்லாத வீடு, பெரிய வட்டத்துக்குள் குறுக்காக கோடுகள் இருந்தால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்காது என்பதை தெரிவிக்கும் வகையில் சுவரில் வரைகின்றனர்.
பிறகு இரவிலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலோ வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர்.
இதையடுத்து, திருட்டு, கொள்ளையை தடுக்க வடமாநில கொள்ளையர்களின் இந்த ரகசிய குறியீடுகள் குறித்த வரைபடத்தை பொதுமக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மதுரை மாநகர போலீ ஸார் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:

உள்ளூர் கொள்ளையர்களை விட, வடமாநில கொள்ளையர்கள் வித்தியாசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பல இடங்களில் அவர்கள் நடத்தும் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை எளிதில் கண்டறிய முடியாத நிலை உள்ளது. கொள்ளையடிக்கப்போகும் கட்டி டத்தில் முன்னதாகவே நோட்டமிட்டு சில குறியீடுகளை எழுதி, பின்னர் சென்று கொள்ளையில் ஈடுபடுவது வடமாநில கொள்ளையர்களின் பாணி என்பது சமீபத்தில் தெரியவந்தது.
எனவே, அது தொடர்பாக எஸ்.ஐ.க்கள் மூலம் அந்தந்த வார்டுகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காவல் துறை சார்பில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன.


இது போன்ற குறியீடுகள் வீடு, கடை சுவர்களில் வரையப்பட்டு இருந்தால், அவற்றை பொது மக்கள் உடனடியாக அழித்துவிட வேண்டும். அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். இக்குறியீடுகளை வரைந்த கொள்ளையர்கள் அருகில் எங்காவது பதுங்கி இருக்க லாம். அந்த பகுதியில் சோதனையிடுவதன் மூலம் அவர்களை பிடித்துவிட முடியும் என்று கூறினர்

Best regards,

பெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்

பெண்குழந்தை ரூ. 50,000 பெற என்ன செய்ய வேண்டும்

சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நிதியான 50 ஆயிரம் ரூபாயைப் பெற எப்படி விண்ணப்பிப்பது, யாரை அணுகுவது என்பது போன்ற தகவல்களை சமூக நலத்துறை சார்பாக நமக்குத் தந்திருக்கிறார்கள். இதோ…

விண்ணப்பம்

ஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்களைப் பெறலாம். இணையதள முகவரியில் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்துகொள்ளலாம்

(தரவிறக்கம் செய்யும்போது பெண்கள் தொடர்பான அனைத்து திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் வரும்.

அதில் நீங்கள் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

தரவிறக்கம் செய்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அப்படிவத்தில் இருக்கும் உறுதிமொழிச்சான்றிதழை இணைத்து உங்கள் மாவட்டத்தில் இருக்கும் சமூக நல அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.

நிதி விவரம்

உங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின், அந்தக் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பீடாக ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் எனில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரமும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 ஆண்டு காலத்துக்கு முதலீடு செய்யப்படும்.


நீங்கள் தரவிறக்கம் செய்யும்போது இங்கே சொல்லப்பட்டிருக்கும் தொகையைவிட குறைவாக அதில் சொல்லப்பட்டிருக்கும். அவை பழைய தகவல். தற்போது சலுகைகளை அரசு உயர்த்தியிருக்கிறது.

இணைக்க வேண்டியவை…

குடும்ப அட்டை

வருமானச் சான்று

சாதிச் சான்று

பெற்றோரின் வயதுச் சான்று

கருத்தடை அறுவை சிகிச்சை சான்று

குழந்தைகளின் பிறப்புச்சான்று (பெயர்களுடன்)

குடும்பப் புகைப்படம் – 1

ஆண் வாரிசு இல்லை என வட்டாட்சியர் வழங்கும் உறுதிச்சான்று

 இருப்பிடச் சான்று (விண்ணப்பதாரர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவர் என்று வட்டாட்சியர் குறிப்பிட்டு வழங்குவது)

தகுதி

01.08.2011-க்கு பிறகு பிறந்த பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.

எப்போது விண்ணப்பிப்பது?

குழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

உங்கள் குழந்தைகளில் யார் பெயருக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களோ, அவர்களுக்கான தொகை அந்த குழந்தை 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த பிறகே அரசு முதிர்வுத் தொகையாக வழங்கும். அவ்வாறு இல்லையெனில் வட்டியுடன் வைப்புத் தொகை அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம்

பெண் குழந்தை நலத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.

தரகர்களைத் தவிர்க்கலாம்

இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பதில் இருந்து அந்த தொகை முதிர்வுபெற்று பெறும்வரை நீங்களே அனைத்து வேலைகளையும் மேற்பார்வையிடுவது நல்லது. இடைத் தரகர்களை நம்பி வீணாக பணத்தை இழக்க வேண்டாம்.

மேலும் அதிக தகவல் பெற…

இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மாவட்ட சமூகநலத் துறையை அணுகவும்.

Best regards,

Monday, 29 July 2019

ரோட்டு ஓரத்தில் இருக்கும் கடையில் #கரும்புஜூஸ் வாங்கி குடிப்பீர்களா?

ரோட்டு ஓரத்தில் இருக்கும் கடையில் #கரும்புஜூஸ் வாங்கி குடிப்பீர்களா?

நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? நீங்களே பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும். உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது. அதே போன்று விட்டமின் சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது. மேலும் கரும்பு சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.

அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.

சிலருக்கு பருக்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.

பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது. நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாருகள் சுரக்கவும் இது உதவுகிறது. பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது. சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்து பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.

சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். மேலும் கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.

எனவே உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கருப்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது. எனவே கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

Best regards,

Thursday, 25 July 2019

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் !*

டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும்
சாவு மேளதாளம் இசைகள் ,

இவையெல்லாம்
உங்கள் வீட்டில் இருக்கும்
லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்துக் கெடுத்து விடும்.

இதனால் அபசகுனமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் டிவிக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயேநடப்பதால்
குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.

இதனால் பல நோய்கள் வரலாம்
வீட்டில் பணம் தாங்காமல் போகலாம்,
வீண் செலவுகள் ஏற்படலாம்
தொழில் நஷ்டம் ஏற்படலாம்,
என்று ,

இப்படிப்பட்ட
அதிர்ச்சி தரும் ஆன்மீக  ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..

அதே சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.

ஆமாம்...

உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்
அதிர்ச்சி ரிப்போர்ட்...

இதனால் கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம் , மன அழுத்தம்
மன நோய் வந்து... உடல் எடை அதிகரித்து....

இதன் தொடர்ச்சியாக...
சர்க்கரை வியாதி
மாரடைப்பு , இருதயக் கோளாறு,
இரத்த அழுத்தம், கழுத்து எலும்புத் தேய்மானம் , தலைசுற்றல் , தலைவலி , மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...

இதற்கு எல்லாம்
முக்கியமான காரணம்....
பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது ,

குடும்பத்தினருக்குள்
மாமியார் மருமகள் சண்டை,
அண்ணன் தம்பி சண்டை
சந்தேகப்படுவது,
சகுனி வேலை பார்ப்பது,
எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.

எப்படி லஞ்சம் பெறுவது ,
கற்றுக் கொள்ளலாம்

அதோடு
நேர்மையான அரசு அதிகாரிகளை
எப்படி லஞ்சம் வாங்கியதுபோல்
திட்டமிட்டு மாட்டி விடுவது
இவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன .

பிறர் தொழிலை எப்படிக் கெடுப்பது
என்பது எல்லாம்  காண்பிக்கப்பட்டு
மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட
பெரிய பேரிழப்பு ....

உங்கள் அருமைக் குழந்தைகளின்
விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...

இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும்
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட
சுய லாபத்துக்காக இப்படிப்பட்ட  மக்களைச் சீரழிக்கும்
டிவி சீரியல்கள் தயாரிக்க முக்கியத்துவம் தருகிறது..

தயவுசெய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப்  புறக்கணியுங்கள்..

நாம் புறக்கணித்தால் தானே
TRP ரேட்டிங் குறைந்தால்
தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள் .

நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான் .

எனவே உங்கள்
விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை
அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்

குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் .

மற்ற நேரங்களில்
நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .
கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள் .

இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள்தான் அவற்றை டிவி பார்த்து
உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து
அனுபவிக்கத் தயாராகுங்கள்.....

*அல்லதை விடுத்து நண்பர்களே
நல்லதை பாருங்கள் , கேளுங்கள்
பேசுங்கள், சிந்தியுங்கள்
வாழ்வில் எல்லாம் நல்லதாய்
நடக்கும்*

வாழ்க வளமுடன் & நலமுடன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்றி நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு........

எண்ணம் போல் வாழ்க்கை

Best regards,

Wednesday, 24 July 2019

புதிய கல்விக் கொள்கையும், திராவிட வர்ணாசிரமும்.

புதிய கல்விக் கொள்கையும், திராவிட  வர்ணாசிரமும்.

.                     மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய அனல் பறக்கும் விவாதங்களும், கருத்துக்களும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

        மற்ற மாநிலங்களில் இதைப்பற்றி மக்களும் சரி, அரசும் சரி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு மண் சார்ந்த இனம் சார்ந்த மாநிலங்களில் மட்டும் இதில் திருத்தங்களை பரிந்துரைக்கின்றனரே தவிர திட்டத்தையே கொண்டு வரக்கூடாது என  எதிர்க்கவில்லை.

        ஏன் தமிழ் நாட்டில் இந்த கூச்சல்கள்...? எதிர்ப்புகள்...? ஆர்ப்பாட்டங்கள்...? அலப்பறைகள்....? 

        அங்கு தான் இருக்கிறது திராவிட வர்ணாஸ்ரம தர்மம்.

      வர்ணாஸ்ரமம் தெரியும். அது என்ன திராவிட வர்ணாஸ்ரமம்....? அதை இந்த பதிவின் இறுதியில் சொல்கிறேன். அப்போது தான் புரியும்.

----------------------

       புதிய கல்விக் கொள்கை என்பது பிரதமர் திரு மோடி டீ குடித்துக் கொண்டே பத்து நிமிடத்தில் எழுதி தயாரித்த ஒன்று அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

       கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பற்றிய முயற்சிகள் 2015 ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது.

           கடைநிலை கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை அனைவருக்கும் தரமான, சமமான கல்வியை கொடுப்பதற்காகவும் அதில் மக்களையும், செல்வந்தர்களையும் பங்குதாரராக்கி அவர்களையும் அதில் பங்கு பெறுவதற்கான கருத்து கேட்புகள் இணையதளத்திலும், நேரில் கருத்து கேட்பு கூட்ட்கள் நடத்தியும் அனைவரின் கருத்துக்கள் பெறப்பட்டது.

     இதன் பின் 2015 மே மாதம் அமைச்சரவை செயலாளர் டி எஸ் ஆர் சுப்பிரமணியன் தலைமையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழு உருவாக்கப்பட்டது. இக்குழு மே 2016 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

              இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது, "தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்" என்ற ஒரு வரைவினை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான குழுவானது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால்  2017 ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது.

---------------------

      இவ்வளவு நீண்ட கால ஆய்வுகள், தரவுகள், ஆலோசனைகள் பரிந்துரைளை எல்லாம் தாண்டி சமரப்பிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொளகையை எதிர்க்க என்ன காரணம்.....?

      இங்கு தான் திருட்டு திராவிடத்திற்கு புதிய கல்விக் கொள்கை தலையில் சராமரியாக இடியை இறக்குகின்றது.

       முழுமையான வரைவு இன்னும் வரவில்லை. வரைவின் சுருக்கம் தான் வந்துள்ளது அதற்கே இந்த கதறல்.

------------

      வரைவு X1 : தேசிய கல்வி ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராக பிரதமர் இருப்பார்.

       மேற்கண்ட பரிந்துரை அமலாக்கப்பட்டால் பணத்திற்காக பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் பதவிகளை கோடிகளில் விற்க முடியாது. இது திராவிட கட்சிகளுக்கு விழுந்த முதல் அடி.

          பரிந்துரை 1V : இது தொழிற்க்விக்கானது.  அனைத்து தொழிற்கல்வியும் உயர் கல்வி அமைப்பின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும். தனித்து இயங்கும் சட்ட, மருத்துவ, பொறியியல், வேளாண் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படும்.

            மறுபடியும் ஒரு முறை நன்றாக மேலே உள்ளதை படித்து பார்க்கவும். புரிகிறதா....?

      அனைத்து தனியார் தொழிற்கல்வி அமைப்புகளும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும். அரசின் கட்டுப்பாட்டில் வராத கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்படும்.

     தன்னாட்சி கல்லூரி, சுயநிதி கல்லூரி, தனியார்  பல்கலைக்கழகம் என்று லட்சங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு  தரமற்ற மாணவர்களை சேர்ப்பது, அவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கென்றே தரமற்ற பாடத்திட்டங்களையும், முறையற்ற தேர்வுகளையும் வைத்து அவர்களை தேர்வு பெற வைத்து அனுப்புவது........

           மொத்தமாக எல்லாமே ஸ்வாகா...! இந்த வரைவால்  இதை விட ஒரு பெரிய விடிவுவும் தமிழகத்திற்கு கிடைக்கும். புறம்போக்கு அரசியல் வாதிகளுக்கும், கூத்தாடிகளுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது.

         தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அனைத்தும் திருட்டு திராவிட அரசியல் வாதிகளுக்கும், அவர்களின் பினாமியாக உள்ள கல்வி தந்தைகளுக்கும் சொந்தம்.

      திருட்டு திராவிட அரசியலுக்கு காமதேனுவாக இருக்கும் கல்வி வியாபாரம் மொத்தமும் கிட்டத்தட்ட காலியாகி விடும். பென்ஸ் காரில் வெள்ளையும் சொள்ளையுமாக திரியும் கல்வி தந்தைகளும், திராவிட கொள்ளையர்களும் தானாக பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.

------------------

பரிந்துரை 3 : இது ஆசிரியர் கல்விக்கானது.

         ஆசிரியர் தயாரிப்பு திட்டம் மிகக் கடுமையானதாக இருக்கும். உயிர் துடிப்புள்ள பல்துறை உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும். வகுப்பு நிலை - குறித்த , பாடங்கள் குறித்த பல்துறை நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற நான்காண்டு ஒருங்கிணைந்த இளங்கலைக் கல்வி பாடத் திட்டம் ஆசிரியராவதற்கு முக்கியமான தகுதியாக இருக்கும். தரம் குறைந்த மற்றும் செயல் படாத கல்வியியல் கல்லூரிகள் மூடப்படும்.

         புரிஞ்சதா....? இனிமேல் பி.எட் படிப்பு அதாவது ஆசிரியர் கல்லூரி என்று நாலு குட்டிச்சவரை வச்சிக்கிட்டு, எழுத்து பிழையில்லாமல் எழுத கூட வக்கற்றவர்களை வாத்தியாராக்க முடியாது. பாடத்திட்டம் சல்லடையாக சலித்து எடுத்தவர்களைத்தான் ஆசிரியராக்கும்.

        தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்லூரிகளை வைத்து லட்சங்களையும், கோடிகளையும் அள்ளுவது யாரென்று பாருங்கள்..... திருட்டு திராவிடத்தின் கல்வித் தந்தைகள் பல் இளிப்பார்கள்.

-----------------

பரிந்துரை 1. f :

      ஆசிரியர்கள் உறுதியான வெளிப்படையான முறைகள் மூலம் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பதவி உயர்வுகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே இருக்கும்.  குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களின் பணி மதிப்பீடு செய்யப்படும். கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆகவும், ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் ஆகவும் அவர்களுக்கு வழி ஏற்படுத்தி தரப்படும்.

         இந்த பரிந்துரையும் இதற்கு முன் நீங்கள் பார்த்த எண் 3 பரிந்துரையும் தான் கல்வித்தந்தைகள், ஜாக்டோ ஜியோ சோம்பேறி கும்பல் இரண்டையும் சேர்த்து கதற வைக்கிறது.

        முதலாவது இந்த பரிந்துரைகள் படி இனி தனியார் பள்ளிகளில் பத்தாவது படித்த கோமளவல்லிகளை டீச்சராக போட்டு மாதம் ஐந்தாயிரம் சம்பளம் கொடுக்கும் பப்பு வேகாது.

          சரியான கல்வி தகுதியும் அறிவாற்றலும் உள்ளவர்கள் மட்டுமே ஆசிரியர் கல்வியை முடித்து வெளிவர முடியும். அப்படி ஆசிரியர் பயிற்ச்சியை முடித்தவர்களை மட்டுமே தங்களது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வைக்க முடியும்.  முறையான ஆசிரியரை வேலைக்கு அமர்த்தினால் அரசாங்க பள்ளிகளில் கொடுக்கும் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே வேலைக்கு வருவார்கள். பத்தாங்கிளாஸ் கோமளவல்லிகளை வேலைக்கு வைத்தால் அரசே அந்த பள்ளியை மூடி விடும்.

       இரண்டாவதாக பத்தாவது வரை ஆல்பாஸ் என்று ஆசிரியர் வேலைக்கு வந்தவர் வகுப்பில் படுத்து தூங்க முடியாது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அதாவது உதாரணமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை  அவர்களின் வேலையை பணி மதிப்பீடு மற்றும் அவர்களின் திறனை தேர்வு செய்யும் போது ஒரு ஆப்பு கட்டாயம் இறங்கும்.

        இதனால் தான் ஜாக்டோ ஜியோவும் திருட்டு  திராவிட கல்வி தந்தைகளுடன் சேர்ந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கின்றனர்.

----------------

பரிந்துரை 4.J :
   
           2020 ம் ஆண்டிற்குள் தேசிய பாடதிட்ட வடிவமைப்பு மறு ஆய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும். இந்த பாடத்திட்டம் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கிடைக்க வழி வகை செய்யப்படும்.

             இதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.   மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுயேச்சையான கல்வியாளர்களை கொண்ட குழுவிடம்  பாடதிட்டங்களை மாற்றி அமைக்கும் அதிகாரம் வரும் போது திருட்டு திராவிடத்தின் வரலாற்று பொய்களை குழந்தை பருவத்திலேயே திணிக்க முடியாது.

       புரியும்படியாக சொன்னால்....  வைக்கம் வீரர் பெரியார், யுனெஸ்கோ விருது, பெரியார் சாதியை ஒழித்தார்,  கருணாநிதி கலைஞர் என்று அன்புடன் மக்களால் அழைக்கப்பட்டார், மு.க.ஸ்டாலின் மக்களால் தளபதி என்று அழைக்கப்பட்டார்...  இப்படியெல்லாம் எதிர்காலத்தில் பாடம் எழுதி தமிழனை ஏமாற்ற முடியாது.

            இது திருட்டு திராவிடத்திற்கு விழுந்த சம்மட்டி அடி. 

-----------------

பரிந்துரை 8.a to l

         ( Note : இது நீண்ட பகுதியாக இருப்பதால் அதன் சாராம்சத்தின் அடிப்படையில் எழுதுகிறேன் )

       இது அரசு, மற்றும் தனியார் பள்ளிகளை ஆரம்பிப்பதில் அனுமதி வழங்குவது முதல்  அதை தொடர்ந்து கண்காணித்தும் ஆய்வுகள் செய்தும் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதற்கு தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறது.

         வீட்டு மொட்டை மாடியில் பள்ளி நடத்துவது, பத்தாவது பாஸ் கோமளவல்லி டீச்சர், விளையாட்டு மைதானம் இல்லை, கழிப்பறை இல்லை, குடி தண்ணீர் இல்லை, விளையாட்டு ஆசிரியர் இல்லை.....   அவ்வளவு ஏன் குட்டிச்சுவர் கூட இல்லாத பள்ளிகள்...   அத்தனைக்கும் இந்த பிரிவு ரிவிட் அடிக்கிறது.

            தனியார் பள்ளி முதலாளிகளும்,  அந்த பள்ளிகளில் டீச்சராக இருக்கும் பத்தாங் கிளாஸ்  கோமளவல்லிகளும் ஏன் கதறுகின்றனர் என புரிகிறதா...?

-----------------

      ஒட்டு மொத்த கல்வி வியாபாரிகளுக்கும் விழுந்த மரண அடிதான் புதிய கல்விக் கொள்கை -2019.

          இதையெல்லாம் மறைக்கத்தான் இந்தி திணிப்பு, தமிழ் அழிந்து விடும், தமிழன், தமிழ் மொழி, பெரியார் மண்.... எக்சட்ரா... எக்சட்ரா.... என வேசி ஊடகங்களின் மூலம் விவாதங்களை நடத்தி மக்களை திசை திருப்புகின்றனர்.

           திருட்டு திராவிடர்கள் கல்வியை வியாபார பொருளாக்கி, அதை விற்க வேண்டும் என்பதற்காகவே தரமற்ற சமச்சீர் கல்வி பாடத்திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்தனர்.

        அரசு பள்ளிகளில் இலவசமாக கிடைப்பது தரமற்ற கல்வி, தனியாரிடம் சென்றால் தான் தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலைக்கு மக்களையும், தமிழகத்தையும் கொண்டு வந்து விட்டனர்.

         அந்த தரமான கல்வியை கொடுக்கும் தனியார் கல்வி வள்ளல்கள் யார்...? திருட்டு திராவிடர்கள் தான்.

       சரி, திருட்டு திராவிடர்கள் மட்டும் எப்படி தரமான கல்வியை கொடுக்கின்றனர் என்ற கேள்வியை முன்வைத்தால் அவர்கள் சிபிஎஸ்சி எனப்படும் மத்திய பாட திட்டத்தினை கற்பிக்கின்றனர்.

        என்ன ஒரு கொடுமையான விசயம் பாருங்கள்.   மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள திராவிட திருடர்கள்  மக்களுக்கு இலவசமாக தகுதியான பாடத்திட்டத்தை வழங்காமல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கல்வித்திறனை ஒரு புறம் நாசமாக்கி விட்டு மறுபுறம் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் தரமான கல்வியை நமக்கு பணத்திற்கு விற்கிறார்கள்.

          அவர்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி உண்டு. ஆனால் அரசு பள்ளிகளில் தரமான கல்வியும் இல்லை, மூன்றாவது மொழியும் இல்லை.

      இது அனைத்தையும் கோர்வையாக்கி பாருங்கள் ஒரு விசயம் மட்டும் தெள்ளத் தெளிவாக புரியும்.

           இலவசமாக நமது குழத்தைகளுக்கு  கிடைக்க வேண்டிய தரமான கல்வி, மூன்றாவது மொழியறிவை தடுத்து அதை பணம் உடையவர்கள் மட்டும் அவர்களிடம் விலை கொடுத்து வாங்குவதை சட்டப்பூர்வமாக்கி வைத்துள்ளனர்.

----------------

         மூன்றாவது மொழியை கற்கும் அளவிற்கு நமது குழந்தைகள் இல்லை என்று ஒரு அல்பத்தனமான  காரணத்தை முன்வைக்கின்றனர்.

          இதை விட சுத்த பைத்தியக்காரத்தனமான வாதம் வேறு எதுவும் கிடையாது. நடிகர் சூர்யாவின் குழந்தை மூன்று மொழி படிக்கும் போது குப்பன், சுப்பன்  வீட்டு குழந்தை படிக்காதா...?
பணக்காரர்களின் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான அறிவை வைத்து ஆண்டவன் படைக்கிறானா...?

        தொழிற் கல்வி மற்றும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் கடுமையாக எதிர்க்கின்றனர் இந்த நாசகாரர்கள். அதற்கு இவர்கள் கூறும் காரணம் தமிழகத்தின் சமச்சீர் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்பது.

        கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா இதை சொல்ல....? இவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டம் வெறும் குப்பை என்று அவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்கள். இதற்கு ஏன் இப்படி சுற்றி வளைத்து சொல்ல வேண்டும்...? சமச்சீர் கல்வி என்பது கருணாநிதியின் முட்டாள்தனமான கல்விக் கொள்கை என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்வதில் என்ன பிரச்சனை இவர்களுக்கு....?

-----------------

            2019 - 20 பட்ஜெட்டில் தமிழக  பள்ளிக்கல்வி துறைக்கு  ஒதுக்கப்பட்ட தொகை ரூ.28,757.62 கோடி. 

       இதை ஒரு புரிதலுக்காக 28,000 கோடிகள் என வைத்துக்கொள்ளலாம்.

        தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியாக இருந்தது. 2015 புள்ளி விபரப்படி இது நாற்பத்தி ஐந்து லட்சமாக குறைந்து விட்டது. காரணம் தரமற்ற கல்வி என பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நிராகரித்து விட்டனர்.

         இது இப்போது மேலும் குறைந்திருக்கும். ஒரு கணக்கீட்டிற்காக 45,00,000 மாணவர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு மாணவனுக்கு ஆகும் செலவை கணக்கிடுங்கள்.

      280,000,000,000 ÷ 45,00,000

                   = 62,222

        அதாவது என்னதான் குருட்டு கணக்காக பார்த்தாலும் ஒரு மாணவனுக்கு வருடம் ஒன்றிற்கு அரசு செலவிடும் தொகை அறுபதாயிரம்.

        ஒரு மாணவனுக்கு அறுபதாயிரம் அரசு செலவு செய்தும் அவன் போட்டி தேர்வுக்கு தயாராக முடியாத ஒரு தரமற்ற கல்வியைத்தான் கொடுக்க முடிகிறது என்றால் பிறகு எதற்கு சமச்சீர் கல்வி...? எதற்கு அரசு பள்ளிக் கல்வி துறையை நடத்த வேண்டும்....?

      இதில் பாதி தொகையை  அதாவது முப்பதாயிரத்தை மாணவனிடம் கொடுத்தால் அவன் தனியார் பள்ளியில் சேர்ந்து தரமான கல்வியை பெற்று விட்டு போகிறான். அரசிற்கும் வருடத்திற்கு பதினான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகும்.

       ஒரு விசயம் மட்டும் தெளிவாக தெரிகிறது.  கல்வியை மக்களுக்கு கொடுப்பதில் அரசு தோற்று விட்டது. கல்வித்துறையை நிர்வகிக்கும் தகுதியையும்,  தார்மீக உரிமையையும் திராவிட கட்சிகளின் அரசு இழந்து விட்டது. 

             இதற்கு பேசாமல் கல்வித்துறையையே திருட்டு திராவிடத்தின் கல்வி மாபியாக்களிடம்  ஒப்படைத்து விட்டு போய்விடலாம்.

--------------

     சரி இறுதி பகுதிக்கு வருகிறேன். இந்து வர்ணாஸ்ரமத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொண்டே திருட்டு திராவிடத்தின் உதவியுடன் கல்வித்துறையில் திராவிட வர்ணாஸ்ரம தர்மத்தை உருவாக்கியுள்ளனர்.

           அரசியல்வாதிகள், அதிகாரிகள், செல்வந்தர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் சிபிஎஸ்சி   மூலம் தரமான கல்வியுடன் மூன்றாவது மொழி கற்கும் உரிமை உண்டு.

          வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் குடும்பத்தினர் மெட்ரிகுலேசன் மூலம்  தரமான கல்வியை ஆங்கில வழியில் பெறலாம்.

          குப்பன் சுப்பன் குடும்பத்தினர் தரமற்ற சமச்சீர் கல்வியை தமிழ் வழியில் படித்து மற்றவர்களுடன் போட்டியிட முடியாமல்  தலைமுறை தலைமுறையாக அரசியல் வாதிகளுக்கு கொடி பிடித்தும், அரசின் இலவசங்களை பெற்றும் பிழைக்க வேண்டும்.

     இது திராவிட சித்தாந்தத்தால் உருவான மூன்று வகை வர்ணங்கள்.

     இந்தி எதிர்ப்பு என்கிற பெயரில் இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழனை மடையனாக்கி வைத்திருப்பார்கள் என்பதையும் பார்ப்போம்.

Best regards,

Tuesday, 23 July 2019

நேர்மையான மனைவி...

நேர்மையான மனைவி...

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன்.
எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.

 மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது.

சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.

அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும்.?

அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன்.

அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

Wife is always wife..

Best regards,

Monday, 22 July 2019

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - தினமணியின் தலையங்கம்...

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - தினமணியின் தலையங்கம்...


முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன.
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?
இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.
தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?
ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.
அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.
திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.
ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.
நன்றி : தினமணி

Best regards,

Sunday, 21 July 2019

முதியவர்கள் பொக்கிஷம் ஜப்பானிய கதை...

முதியவர்கள் பொக்கிஷம் ஜப்பானிய கதை...
தட்டாமல் ஒலி எழுப்பும்
மேளம் …!!


முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.

அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.

தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை.
எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.

மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.

வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்.

சாம்பல் கயிறு.

ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.

சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.

போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை.

அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.

போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.

மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்.

அடி எது? நுனி எது?

ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.

அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.

கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.

மரக்கொம்பை வீட்டுக்கு எடுத்து வந்த மகன் தந்தையிடம் காண்பித்து அரசனின் கேள்வியைக் கேட்டான்.

தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.

அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.

அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.

வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.

அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.

தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.

அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.

அனுபவம் தந்த பதில்கள்.

“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.

இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.

சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.

உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.

அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.

பகிர்வு.

Best regards,

Thursday, 18 July 2019

அது ஒரு மருத்துவம்

அது ஒரு மருத்துவம்

மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவர் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம்.

சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.

உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப் பாரத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தைரியமாக இருங்கள்.

நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த முடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப் பொருள்களும் வானத்தில் இருக்கும்.

முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடுத்துக் கொண்டு பூமியை நோக்கி வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழை நீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும்.

ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழை நீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்.

ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டு விட்டால், 24 மணி நேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டு விடும்.

எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும் போது. நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது.

எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம். குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்க வேண்டாம்.

மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி.

மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும் போது அதில் நனையலாம் நல்லது. மழை நீரை குடிக்கலாம் நல்லது. மழை நீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர் சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன் படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கை முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியபடுத்துவோம்!

Best regards,

Wednesday, 17 July 2019

கலியின்_ஆரம்பம்.

கலியின்_ஆரம்பம்.

🐴 பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். ⚜அழகான குதிரையை அவனும் பார்த்தான். ⚜உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

#குதிரையின்_உரிமையாளரோ,

🐴 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.
⚜சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

🐴 குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

🐴 ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.

🐴 இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

🐴 சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

🐴 குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

🐴 துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

🐴 நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

🐴 அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

🐴 "ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?

🐴 பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

🐴 சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

🐴 பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

🐴 அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

🐴 அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள்.

🐴 "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

#தர்மர்பதில்சொல்லத்_தொடங்கினார்..

☸ "தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன."

☸ அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

☸ "உங்களிடம் கேள்வி கேட்டவன்
#கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில்
⚜பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.
⚜ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.

☸ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

☸ ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

☸ அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.

☸ ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

☸ அடுத்து மூன்றாவது கேள்வியில்,
பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும்.

☸ அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள்.

☸ மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள்.

☸ இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

🚨கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.


Best regards,

Monday, 15 July 2019

2020 CAR/ TWO WHEELER புதியதாக வாங்குபவர்கள் கவனம்,

அன்புடையீர்
2020 CAR/ TWO WHEELER புதியதாக வாங்குபவர்கள் கவனம்,
புதிதாக பெட்ரோல் , டீசல் கார் வாங்கப்  போகிறீர்களா...? ஒரு நிமிடம்... அதிக பட்சம் 5 ஆண்டுகள் தான் அந்தக் காரின் மதிப்பு... பொய்யில்லை.... மேலே படியுங்கள்...
அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கேஸ், பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருளுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் கனடாவில் கனடா குரூட்ஆயில் பேரல் 44 டாலரில் இருந்து 14 டாலராகவும், அமெரிக்காவின் குரூட்ஆயில் பேரல் 77 டாலரில் இருந்து 51 டாலராகவும் குறைந்துகொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலக பொருளாதார சரிவு என்று ஊடகங்கள் எழுதுகிறது. ஆனால் உண்மையான காரணம் அதுமட்டுமல்ல. இதற்கு காரணம் உலகை புரட்டிப் போடப்போகும் ஒரு கண்டுபிடிப்பாகும். அது என்னவென்றால்  நாம் அன்றாடம் உபயோகிக்கும் சிறிய பென்டார்ச் பேட்டரிதான். புதிதாக மாற்றம் செய்யப்பட இந்த பேட்டரிக்கு லித்தியம் ஜயான் பேட்டரி என்று பெயர். இதில் நாம் இதுவரை அடைத்ததைப் போல் பல மடங்கு மின்சக்தியை அடைக்க முடியும் அது மட்டுமல்லாமல் அரைமணி நேரத்தில் உபயோகித்த சக்தியை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரியின் லைப் என்கிற ஆயுட்காலம் 25 வருடம்.
உலகம் முழுவதும் இந்த பேட்டரியை உபயோகித்து கார்களையும் ஸ்கூட்டர்களையும் லாரிகளையும் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்காவில் இலான்மஸ்க் என்கிற ஒரு மேதை டெஸ்லா என்கிற கார் கம்பெனியை ஆரம்பித்து உலகத் தரம் வாய்ந்த எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார். Tesla model 3, model s  என்று பெயரிடப்பட்ட இந்த கார்கள் ஒரே நேர சார்ஜில் 600 கிலோமீட்டர் செல்கிறது. இதன் மணிக்கு வேகம் 800 கிலோமீட்டரும் ஆக்சிலரேசன் 0-60 கிலோமீட்டர் 4 செக்கண்டிலும் செல்கிறது. இதன் விலை அமெரிக்காவில் டீசல் கார் விலையை விட குறைவு அதாவது 35000 டாலர்.
இந்தக் கார்  இந்த வருடத்தில் சுமார் 2 லட்சம் விற்றுத் தீர்ந்து விட்டது. இதனால் காத்திருப்போர் பட்டியல் 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த கார்களை வீட்டிலேயே சாரஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோல் போட வேண்டாம் 25  வருடங்கள் பேட்டரி மாற்ற வேண்டாம். இந்த வருடத்தில் இதுவரை உலகமுழுவதும் 20 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் எலக்ட்ரிக் கார்களும் அதற்க்கு அடுத்த ஆண்டு 1கோடி கார்கள் விற்பனையாகும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள். மக்கள் இனிமேல் பெட்ரோல் டீசல் கார்களை வாங்க மாட்டார்கள். இதுதான் குரூட் ஆயில் விலை சரிவிற்க்கு காரணம். இன்னும் 10 வருடத்திற்குள் கேஸ், பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்கள் விலை மதிப்பற்று கூவி கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்படும்.
கடைசியாக ஒரு தகவல் பெட்ரோல் எஞ்சினில் மொத்த மூவிங் பாகங்கள் 2000 ஆனால் எலக்ட்ரிக் காரில் 18 பாகங்கள் மட்டுமே இருப்பதால் எளிதில் பழுதடையாது அப்படி பழுதடைந்தால் நாமே சரி செய்து கொள்ளலாம்.
நம் ஊருக்கு எலக்ரிக் கார்களும் ஸ்கூட்டர் பைக்களும் இந்த ஆண்டு அதாவது 2019 ஆண்டில் விற்பனைக்கு வருகிறது.
வெப்சைட் :  கூகுளில் tesla model 3 என்று அடியுங்கள்...
முடிந்த வரை எலக்ட்ரிக் காருக்கு திட்டமிடுங்கள்...
யாவரும் அறிய இச்செய்தியை நாம் பகிர்வோம்...*2020 இல் CAR புதியதாக வாங்குபவர்கள் இதை கவனம் கொள்ளுங்கள்

Best regards,

Sunday, 14 July 2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

அரசியல்நாகரிகத்தின் ஆண்டவனே - பல
அணைகளைகட்டி மாண்டவனே
எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை
எடுத்ததால் எமனும் கெட்டவனே ...

கல்விக்கண்ணை திறந்துவைத்து - நீர்
கண்மூடி போனதென்ன
காணிநிலம் கூடயின்றி - நீர்
கடைசிவரை வாழ்ந்ததென்ன ...

ஆண்டவனே வந்தாலும் - உம்போல்
ஆளமுடியுமா தெரியலியே
மாண்டவனே உமையெழுப்பி - மீண்டும்
ஆளச்சொல்ல வழியில்லையே ...

பெரும்தலைவா கர்மவீரா - உமை
காணாதது என்பாவம்
பிறந்தநாளில்கூட வாழ்த்தாவிட்டால் - பிடிக்கும்
தமிழ் இனத்திற்கே பெரும்சாபம் ...

இவ்வுலகம் இருக்கும்வரை - ஐயா
உம்உருவம் நிலைத்துநிற்கும்
நீர்போட்ட கல்விப்பிச்சையில் - தான்யா
தமிழ் இனமே பிழைத்துநிற்கும் ...

கர்மவீரரே
காமராஜரே
நீ படித்தது ஆறு
இப்போது உனக்கு வயது நூற்று பதினைந்து?

பிறந்த போது
நீயும் அழுதாய்
பாலுக்காக அல்ல…
பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசத்தைப் பார்த்து!

உன் வீட்டு
அடுப்பில் நெருப்பில்லை
நெஞ்சில் மட்டும்
விடுதலை நெருப்பு!;
மூவாயிரம் நாள்கள்
சிறைக் கம்பிக்குள் வாசம்…

உன் நினைவெல்லாம்
இந்திய தேசம்!
பதவியைத் தேடி
பலபேர் வந்தார்கள்
உன்னை நாடி…
உனக்காக
எவரையும் நாடியதில்லை.
நீதான்
”நாடா” ராயிற்றே
நீ எந்தப் பக்கமும்
சாய்ந்த தில்லை...

சின்ன வயதிலேயே
சரியாக தராசைப் பிடித்திருந்ததால்!
பெரியாரின் பல்கலைக் கழகத்தில்
”பச்சைத் தமிழர்”'
பட்டம் பெற்றாய்…
உன் கொச்சைத்
தமிழால்
எங்கள் இதயங்களில் இடம்பிடித்தாய்...

படிக்காத மேதையே
தடுக்கி விழுந்தால்
தொடக்கப் பள்ளி
ஓடி விழுந்தால்
உயர்நிலைப் பள்ளி
சாலைகள் எங்கும்
கல்விச் சாலைகள் திறந்தாய்…

அரியாசனத்தின் மீது
ஆசையில்லை….
உன் ஆசையெல்லாம்
”அறியா” சனங்களின் மீது?

இந்தியாவே
உன்னிடம் இருந்தது
நீ இருந்தபோது…
சட்டைப் பை
காலியாகவே இருந்தது
நீ இறந்தபோது!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

Best regards,

Saturday, 13 July 2019

பணம் என்னடா பணம் பணம் ...

பணம் என்னடா பணம் பணம் ...

ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை   சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

 டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

 காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.

 கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

 ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.

 சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.தான் கொடுத்த 500 ரூபாய்   ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி  வந்ததில்  நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

 இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா? ஆகையால் நண்பா்களே பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே நட்பு உறவு இதற்கு மதிப்பளிப்போம்🙏

Best regards,

Friday, 12 July 2019

பாவத்தின்_தந்தை யார்..?

பாவத்தின்_தந்தை யார்..?



அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது.
பாவத்தின் தந்தை யார்?

அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான்.

பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது.
யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது?அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான்.

வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன.ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே! அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள்.“என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே சோகமாக இருக்கிறது முகம். என்ன விஷயம்?” என்று கேட்டாள்.

பண்டிதர், “பாவத்திற்குத் தந்தை யார் என்று தெரியாமல் தவிக்கிறேன்” என்று புலம்பினார்.

“அட, இது தெரியாதா? எனக்குத் தெரியுமே” என்று அவள் லேசாகச் சொன்னாள்.

பண்டிதருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறாளே, பதில் தெரியும் என்று!!
“பதிலைச் சொல்லேன்” என்று கெஞ்சினார் பண்டிதர்.
“சொல்கிறேன். ஆனால் இங்கல்ல, எனது வீட்டிற்கு வாரும். அங்கு வர தட்சிணையாக ஒரு பொன் காசு தருகிறேன்.” என்ற அவள் ஒரு பொற்காசைத் தந்தாள்.

அதை வாங்கிக் கொண்ட பண்டிதர் தன் மனதிற்குள் இதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளலாம் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

தாசியின் வீட்டை அடைந்த பண்டிதர், “இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார்.

“என் படுக்கை அறைக்கு வாருங்கள். இருபது பொற்காசு தந்து பதிலைச் சொல்கிறேன்” என்றாள் அவள்.
பண்டிதர் அவளது படுக்கை அறைக்குச் சென்றார். அடடா, என்ன அற்புதமான சயன அறை! “சரி, இப்போது பதிலைச் சொல்லேன்” என்றார் பண்டிதர்
“வந்தது வந்தீர்கள். என் மடியில் அமரந்து கொண்டு பதிலைக் கேளுங்கள். வாயில் கொஞ்சம் சுவையான மாமிசத்தை வேறு சாப்பிடலாம்” என்றாள் அவள்.

“சும்மா உட்கார வேண்டாம். நூறு பொற்காசுகள் தருகிறேன். என் மார்பை அலங்கரிக்கும் வைர மாலையையும் கூடவே தருகிறேன்” என்றாள் அவள்.
பண்டிதருக்கு, அவள் மார்பில் அலங்கரிக்கும் வைர மாலை கண்களைக் கவர்ந்தது.

“சரி, பெரிதாக பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது தான்!” என்று அவர் மனதை சமாதானப் படுத்திக் கொண்டு அவள் மடியில் படுத்தார்.

ஒரு மாமிசத் துண்டை கையில் எடுத்து வாயில் போட இருந்த தருணம், அந்த தாசி திடீரென் எழுந்தாள். பண்டிதரைத் தூக்கித் தள்ளியதோடு பளார் என்று ஒரு அறை அவரது கன்னத்தில் விட்டாள். பண்டிதர் துடிதுடித்துப் போனார். “இப்போது தெரிந்ததா, விடை? பாவத்தின் தந்தை ஆசை. பண்டிதரே, பேராசை. தெரிந்ததா, பதில்?”

தாசியின் குரல் பண்டிதரின் மனதில் ஆழப் பதிந்தது.
அவருக்கு க்ஷண நேரத்தில் ஞானம் கிட்டியது. கையில் இருந்த பொற்காசுகளை எல்லாம் தூக்கி எறிந்தார். சாலை வழியே “விடை தெரிந்து விட்டது, விடை தெரிந்து விட்டது” என்று கத்திக் கொண்டே ஓடலானார். நேராக அரண்மனைக்குச் சென்ற பண்டிதர் மன்னரைச் சந்தித்தார். மக்கள் கூட்டமும் பெருகி விட்டது. “மன்னா! விடை தெரிந்து விட்டது. பாவத்தின் தந்தை யார் என்று எனக்குத் தெரிந்து விட்டது” என்று சொல்லி விட்டு நடந்ததை அனைத்தும் அப்படியே சொன்னார்.

“மன்னா! எனக்குத் தகுந்த தண்டனை கொடுத்து விடுங்கள். பண்டிதராய் இருந்தும் ஒரு இழிவான காரியத்திற்கு இணங்கினேன். என்னை தேச பிரஷ்டம் செய்து விடுங்கள்” என்று உருக்கமாக வேண்டினார். “ஆஹா! பாவத்தின் தந்தை பேராசையா. சரியான பதில்” என்று மகிழ்ச்சியுடன் கூவிய மன்னன் பண்டிதரை நண்பன் என்ற முறையில் கட்டிக் கொண்டார்.

“நாட்டை விட்டு வெளியேறுவதா? ஒருக்காலும் இணங்க மாட்டேன் அதற்கு! உங்களுக்கு ஞானம் வந்து விட்டதை உணர்கிறேன். இந்தக் கணம் முதல் நீங்களே எனது குரு. ஒரு நாளும் தவறான வழியில் செல்ல முடியாத நீங்களே எனக்குத் தகுந்த வழிகாட்டி. என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். பண்டிதரை அடி பணிந்து வணங்கினான்.ஆமாம், பாவத்தின் தந்தை பேராசை தான்… எனவே இந்த மாயையில் சிக்காமல் தப்பிக்க முற்படுவோமாக.

நட்புடன்! !!!!!!!!நன்றி வணக்கம்

Best regards,

Wednesday, 10 July 2019

முத்ரா கடன் திட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்வோம்!!

முத்ரா கடன் திட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்வோம்!!

✓MUDRA என்பதன் விரிவாக்கம் Micro Units Development Refinance Agency என்பதாகும்.

✓அதாவது சிறு, குறு தொழில்களை துவங்குபவருக்கு பத்து லட்சத்துக்குள் கடன் கொடுப்பது இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (Pradhan Mantri Mudra Yojana) .

✓இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது.

✓நல்ல வியாபர திட்டம் உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

✓உற்பத்தி, சேவை, பதப்படுத்துதல் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் கடன்கள் மூன்று வழிகளில் வழங்கப்படுகிறது.

✓ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் சிசு (Shishu) என்ற பெயரிலும்.

✓ரூ.5 லட்சம் வரையிலான கடன்கள் கிசோர்(Kishor) என்ற பெயரிலும்,

✓ரூ.5லட்சத்துக்கும் மேலான கடன்கள்
தருண்(Tarun) என்ற பெயரிலும் வழங்கப்படுகின்றன.

✓60% வரையிலான கடன்கள் சிசு முறையிலும், மீதி 40% மற்றவைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதி முறை உள்ளது. அதனால் சிசு திட்டத்தில் எளிதில் கடன்கள் பெற்றுக் கொள்ளலாம்.

"எதன் மூலம் வழங்கப்படுகிறது?"

பத்து லட்சத்திற்கும் குறைவான அளவு கடன் தேவைப்படும் பண்ணை தொழில் சாரா உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களுக்கு பொதுவுடைமை வங்கிகள், தேசிய வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலமாக இந்த கடன் வழங்கபடுகிறது.

"இத்திட்டத்தில் யார் பயன் பெறலாம்?"

✓அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

✓உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், பேக்கரி கடைகள் விரிவு படுத்துதல், ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவனை கலைஞர் உற்பத்தி, தொழிற்சாலை அமைத்தல் என அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே நடைபெறும் நிறுவனங்கள் இதில் கடன் பெறலாம்.

✓பண்ணை தொழில் சார்ந்த மாட்டு பண்ணை கோழிப்பண்ணை, வீவசாயம், காலன் வளர்ப்பு, ஆட்டு பண்ணை போன்ற தொழில்களுக்கு கடன் கிடையாது

✓ஏற்கனவே முதலீடு செய்து நடத்தும் தொழில்களுக்கு கடன் தர வங்கிகள் முன்வருவதில்லை. அந்த தொழிலை விரிவு படுத்துவதற்கோ அல்லது வியாபாரத்திற்கு தேவையான சரக்குகளை வாங்குவதற்கு மட்டுமே கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

"ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்கப்படுமா?"

✓ஏற்கனவே தொழில் நடத்துவதற்கும் இக்கடன் திட்டம் உண்டு. ஆனால் அவர்களின் மீது எந்த வங்கியிலும் வாராக் கடன் அல்லது செக் ரிட்டன் கணக்காக இருக்க கூடாது.

✓இந்த கடனை பெற எந்தவித சொத்து பிணையம் (SECURITY) மற்றும் தனிநபர் ஜாமீன் தேவையில்லை.

✓கடன் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பெறலாம்.

✓ஒரு வங்கியின் கிளை ஆண்டுக்கு குறைந்த பட்சம் 25 நபர்களுக்கு இத்திட்டத்தில் கடன் வழங்க வேண்டும். அதிகபட்சம் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

✓உங்கள் தொழில் நன்றாக நடக்கும் பட்சத்தில் உங்களுக்கு வங்கி அதிகமான கடன் கொடுக்க வாய்ப்புள்ளது.

✓அனைத்து வங்கிகளிலும் நீங்கள் கடன் பெறலாம். இருந்த போதிலும், உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும்.

✓விலைப் பட்டியலுக்கான Quotation-னுடன் நீங்கள் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க கடன் பெறலாம்.

✓இந்த கடன் திட்டத்திற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் ஏதும் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் இந்தக் கடனை வழங்கும்.,

"கடன் பணமாக கிடைக்குமா?"
✓கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் அதன் விற்பனையாளரின் விலைபட்டியல் ( Quatation) கொடுக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் கடன் கிடைக்கும்

✓உங்களின் சரியான தொழில் கடன் தேவையை நீங்கள் உரிய ஆவணங்களின் மூலம்  நிரூபிக்கும் பட்சத்தில் கடன் வழங்க வங்கி மேலாளர் இறுதி முடிவு எடுப்பார்.

✓இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன்களுக்கு 12% வட்டி வசூலிக்கப்படுகிறது.

✓இவ்வாறு பெறும் கடன்களை ஐந்து வருடங்களுக்குள் திருப்பி கட்டிக் கொள்ள வேண்டும்.

✓கடன் வழங்குவதற்கு மறுத்தால்?
வங்கி மேலாளர் உங்களுக்கு சரியான பதில் அளிக்கவோ அல்லது கடன் மறுக்கும் பட்சத்திலோ நீங்கள் வங்கியின் உயர் அதிகாரியை அணுகலாம்.

✓வங்கியின் உதவி பொது மேலாளர் மற்றும் இந்த திட்டத்தில் வரும் குறைகளை விசாரிக்க உள்ள அதிகாரிகளை அணுகலாம்.

✓உங்கள் மாவட்ட முத்ரா வங்கியின் அலுவலகத்தினை அணுகலாம்.

✓சொத்து உத்தரவாதம் எதுவும் கொடுக்க தேவையில்லை.
இந்த கடனை பெறுவதற்கு கீழே உள்ள ஆவணங்கள் தேவைப்படுகிறது.

1.✓அடையாள அட்டை (Voter ID card / driving license / PAN card/ Passport)

2.✓ வீட்டு முகவரி அட்டை (Voter ID card / Aadhar card / Passport)

3.✓ இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்

4.✓ வியாபரத்திற்காக வாங்கும் இயந்திரங்கள் மற்றும் சப்ளை செய்பவர்கள் குறிப்பிடும் விலை விவரங்கள்

5.✓ தொழிலகம் முகவரி தொடர்பான அடையாள ஆவணங்கள்

6.✓ SC/ST/OBC சாதி சான்றிதழ்

சத்தியமா நான் பாஜக உறுப்பினர் அல்ல
மத்திய அரசோட திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் மட்டுமே.

மேலும் இது மோடியோட காசுல வர்றதில்ல நம்மளோட வரி பணத்துல இருந்து வருது அதனால பயனடைவோம்
Best regards,

Tuesday, 9 July 2019

இது ஒரு உண்மை சம்பவம்...

இது ஒரு உண்மை சம்பவம்...

“விட்டுக்கொடுக்குறதாலேயோ அடுத்தவங்களுக்கு உதவி செய்றதாலேயோ எனக்கு என்னங்க லாபம்?” என்று யோசிக்கும் யதார்த்த வாதியா நீங்கள்?
அப்போ அவசியம் இந்த பதிவு உங்களுக்கு தான்.

* “என் வாழ்க்கையில எவ்வளவோ பேருக்கு உதவியிருக்கேன். எவ்வளவோ விட்டுக்கொடுத்திருக்கேன். அதனால் என்ன சார் புண்ணியம்…?” என்று விரக்தியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கும் தான்.

* “வரும்போது என்ன கொண்டு வந்தோம்? போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்…. வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா” என்ற கொள்கையுடைய உத்தமரா நீங்கள்? இந்த பதிவு அவசியம் உங்களுக்கும் தான்.

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

யாரோ முன் பின் தெரியாத இரு மாணவர்களிடம் ஏன் பேட்ரெவ்ஸ்கி இப்படி நடந்துகொள்ளவேண்டும்? அதனால் அவருக்கு என்ன லாபம்?

“எரியும் வீட்டில் பிடிங்கிய வரை லாபம் என்று கருதுவது தானே புத்திசாலித்தனம். நாம விட்டுக்கொடுத்தாலோ இல்லை உதவி பண்ணினாலோ அதுனால நமக்கு என்ன லாபம்?” இப்படித் தான் பெரும்பாலானோர் நினைப்பார்கள்.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

அதனால் தான் நம் பாரதி, ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினான். அவன் தீர்க்கதரிசி.

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது...

நன்றி

Best regards,

Monday, 8 July 2019

தாய்மையின் சிறப்பு

தாய்மையின் சிறப்பு

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.

"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"

"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".

"என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.

"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது கார் இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த கார் இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் மருத்துவர் வந்து சுகப்பிரசவம் நடந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த தாய் கார் இளைஞரிடம் "தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

ஏதோ யோசிக்க போனை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.

"ஹலோ முதியோர் இல்லமா?"

"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"

"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா?

அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக" முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .

'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.

Best regards,