Monday, 1 July 2019

ஆபத்தான 5 ஆல்கஹால் கா-ம்பினேஷன் பற்றி தெரியுமா?

ஆபத்தான 5 ஆல்கஹால் கா-ம்பினேஷன் பற்றி தெரியுமா?

NEW LOOK MEDIA
Author
ஆல்கஹால் சில சந்தர்ப்பங்களில் பொறுப்பை உணர்ந்து மிதமாக குடிக்கும் குடிகாரர்களையும் மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும், என்னதான் ஆல்கஹாலை மிகக் குறைந்த அளவு பருகினாலும் கூட அதன் பிறகு எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் அல்லது செய்கைகளால் ஆல்கஹாலின் தீவிரம் அதிகரித்து உங்களின் உடல், பொருள், புகழ், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடும். ஆக ஆல்கஹால் அருந்துவதை ஆரோக்கியமானதல்ல அப்படியே அருந்தினாலும் இந்த ஐந்து விஷயங்கள் அதோடு சேராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அந்த ஐந்து என்னென்ன என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.மது அருந்திவிட்டு மாத்திரை மருந்துகளை உட்கொள்வது அல்லது மாத்திரை மருந்துகளை உட்கொண்ட பிறகு மது அருந்துவதும் மிகவும் அபாயகரமான செயலாகும், மதுவும் மருந்தும் இணையும் போது ஓர் அபாயகரமான ரசாயன விளைவுகள் தோற்றுவிக்கும், குறிப்பாக பெயின் கில்லர் மாத்திரைகள், சில ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் இருமல் மருந்து போன்றவற்றை உட்கொண்டிருந்தால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், குறிப்பாக பெயின் கில்லர் மருந்துகளான ஆக்சிகோடன் மற்றும் ஹைட்ரஜன் கோடன் போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டபின் மது அருந்தினால் உடனடியாக அயர்வு நிலை, தலைசுற்றல், உடல் இயக்கத்தில் பலவீனம் அல்லது கட்டுப்பாடற்ற தன்மை போன்ற கோளாறுகள் ஏற்படும்.


ஒரு சிலர் தலைவலி காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற பாராசிட்டமால் மாத்திரை உட்கொள்பவர்கள், வயிற்றுக்குள் மாத்திரை யாத்திரை செய்து அதன் கடமையை செய்வதற்குள் மதுவையும் அருந்திவிடுவார்கள். பாராசிட்டமால் மாத்திரையும் மதுவும் கலக்கும் போது ஓர் அசாதாரணமான ரசாயன கலவை ஆகிறது, இவை இரண்டையும் ஒன்றாக அடிக்கடி உட்கொள்ளும் போது கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதே போல் ஆஸ்பிரின் மாத்திரை மற்றும் மதுவின் கலவையானது வயிற்று கோளாறு, ரத்த போக்கு, அல்சர் போன்ற நோய்கள் ஏற்பட காரணமாக அமையும்.

Metronidazole மற்றும் erythromycin உள்ளிட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்வதால் குமட்டல், வாந்தி, அதீத இதயத்துடிப்பு, கல்லீரல், பாதிப்பு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படக்கூடும், அதேபோல் இருமல் மருந்துகளை உட்கொண்டவர்கள் குறைவான மது அருந்தினாலும் அது போதையின் அளவை அதிகரிப்பதோடு வேறுபல உடல் கோளாறுகளுக்கும் வழிவகுக்கும். ஆக மதுவுக்கும் மருந்துகளுக்கும் எப்போதும் ஆகாது என்பதால் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மதுவை தவிர்த்துவிடுவது நல்லது.

மோரல்மஸ்ரூம்ஸ் என்பது சமைத்து உண்ணத்தக்க ஒரு வகை காளான்கள், செம்பழுப்பு நிறத்துடனும் இறைச்சியை ஒத்த அமைப்புடனும் அதிக சுவையுடனும் இருக்கும் இவ்வகைக் காளான்கள் பெரும்பாலானோருக்கு விருப்ப உணவாக இருக்கின்றது என்றாலும் பிற வகை காளான்களை போலவே moral காளான்களும் ஒரு சிலருக்கு ஒவ்வாமை மற்றும் வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக இதனை அரைவேக்காடாக அல்லது பச்சையாகவே உண்டால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் moral காளான்களை உண்ணுவதால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத நபர்களுக்கு கூட ஆல்கஹால் சேர்த்து சாப்பிடும் போது குமட்டல் அல்லது வாந்தி ஏற்படக் கூடும். வேறு சிலருக்கோ moral காளான்கள் மற்றும் ஆல்கஹால் பானங்களில் ஒன்றாக சாப்பிட்டாலும்கூட அப்போதைக்கு பிரச்சனைகள் ஒன்றுமில்லாது, ஆனால் அது வரப்போகும் உடல் கோளாறுகளுக்கு அஸ்திவாரத்தை அமைத்துவிடும். எனவே moral காளான்களை உண்ணும்போது பிராந்தி, பீர், ஒயின் உள்ளிட்ட பானங்களை தவிர்த்து விடுவது நல்லது, இல்லை எனில் காளான் காலனுக்கு காளனுக்கு செய்து விடும்.

ஒரு சிலர் ஆல்கஹால் பணத்தில் mixing-க்கு தண்ணீருக்கு பதிலாக ஒரு சில எனர்ஜி டிரங்ககை பயன்படுத்துவார்கள், இதை ஆல்கஹாலில் கலந்து குடித்தால் என்ன விட போகிறது எனத் தோன்றலாம், ஆல்கஹால் என்பது மூளைத்திறனை மட்டுப்படுத்தும் ஒரு பானம், எனர்ஜி ட்ரிங்க் மூளைத் திறனை அதிகப்படுத்தும் ஒரு பானம், ஆக இவ்விரண்டையும் கலந்து குடித்தால் போதை ஆனாலும் பாதை மாறாமல் வீடு போய் சேர்ந்து விடலாம் என்பது பலரது நினைப்பு, இது சரிதான என்றால் நிச்சயமாக இல்லை ஏனெனில் பொதுவாக ஒருவருக்கு ஆல்கஹால் பருக ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியதும், மயக்கமான மந்தநிலை ஏற்படும் துவங்கும் எனவே குடிகாரர் குடித்தது போதும் என அத்துடன் நிறுத்திக் கொள்வார். ஆனால் ஆல்ஹகாலுடன் எனர்ஜி ட்ரிங்க் சேரும்போது ஆல்ஹகாலால் ஏற்படும் மந்தநிலையின் தாக்கத்தை குறைக்கிறது. இதனால் போதுமான போதை கிடைக்கப் பெறாததால் கூடுதலான மதுபானத்தை குடிக்க வேண்டி வரும், இதனால் உடலில் ஆல்கஹால் சதவிகிதம் அதிகமாக பலவித உடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது, எனவே ஆல்கஹால் குடிப்பது என்பதே தவறு அதில் எனர்ஜ்ஜி டிரங்கை கலந்து குடிப்பது என்பது அதைவிட தவறு.

ஒரு சில முரட்டு போதை விரும்பிகள் ஆல்கஹாலை அருந்துவதோடு கஞ்சாவை புகைக்கவும் தவறுவதில்லை, ஆல்கஹால் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் கலவையானது அதீத இதயத்துடிப்பு நிலைக்கு இட்டுச்செல்லும், அதாவது ஒரு நிமிடத்திற்கு இதயம் 100க்கும் மேற்பட்ட முறை துடித்தால் அது tachycardia என அழைக்கப்படுகிறது, குறிப்பாக vendiya எனும் நிலை மிகவும் ஆபத்தானதாகும், மேலும் ஆல்கஹால் மற்றும் கஞ்சா கலவையானது உயர் ரத்த அழுத்தம், அறிவாற்றல் திறன்களில் தீவிர செயல் திறனில் தீவிர சேதம், மந்தம், சித்தபிரமை உள்ளிட்ட நிலைகளுக்கும் இட்டுச்செல்லும், குறிப்பாக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு முன்பாக ஆல்கஹாலை எடுத்துக்கொள்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீவிர கேடுகளை விளைவிக்கும்.

இறுதியாக ஆல்ஹகாலையும் தினசரி நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க கூடாது, அதாவது ஆல்கஹால் பானங்களில் பருகியவர்கள் போன் செய்வது மெசேஜ் செய்வது சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்டவற்றை அறவே தவிர்த்துவிட வேண்டும், ஏனெனில் போதையோடு செய்யும் இத்தகைய செயல்படுகளில் தவறுகள் நிகழுமானால் அது பிறருக்கு மத்தியில் உங்கள் மீதான மதிப்பை குறைத்து விடும், அதேபோல் ஆல்கஹால் தரும் போதையும் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது பயங்கர ஆயுதங்களை கையாள்வது வாகனம் ஓட்டுவது போன்ற செயல்படுகளும் போதை தெளிந்ததும் உங்களை முச்சந்தியில் நிறுத்த காத்துக்கொண்டிருக்கின்றன.

Best regards,