Showing posts with label ஆண். Show all posts
Showing posts with label ஆண். Show all posts

Monday, 27 May 2019

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்😢😭

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்😢😭

ஓர் ஆண் வாய் விட்டு அழுவது நல்லது என்று சொல்லப் போகும் கட்டுரை.

நம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், “பொட்டச்சி போல அழாதே” என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை.

டென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும்.

அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன.

இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்;

நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”

இவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார்.

 பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.

கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.

கடைசி வகையும் முக்கியமானதும் தான்

உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது..

உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.

ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை.

ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான்.

 உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன;

 இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும்.

 அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.

ஆனால் சிலர் அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம்.

 பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை.

இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.

ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள்.

அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள்.

ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள்.

அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா ?

தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள்.

அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.

அவ்வப்போது கண்ணீர் விடுவது நம் கண்களை கழுவி நமது வாழ்க்கையை நல்ல முறையில் பார்க்க உதவும்.


Best regards,

Wednesday, 26 September 2018

ஆண் மகனின் வாழ்வியல் !!!

ஆண் மகனின் வாழ்வியல் !!! (படித்ததில் பிடித்தது)

ஆணின் ஆட்டம் பதினாறு வரைதான்

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு

வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும்
பறவைபோல இருப்பவன்...

பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... சோதனை
"
டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரிதா?"

ப்ளஸ்1 போகும்போது....
"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங்.

இல்லேன்னா ஏதாவது ஒர்க்‌ஷாப்பு தான்.."

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...

" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல..

2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்...

சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.."

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்...
ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு.

உசிரோட இருந்து பிரயோஜனமில்ல.(

அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.
"
பொட்டை புள்ளைன்னா பரவால்ல.

கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம்.

நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும்.

வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும்.

எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."

ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....

பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்..

எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து..

இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக் கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து

கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு...

உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும்
சமாளித்து....

கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ..

சீக்கிரம்
ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."
இங்கேதான் தொடங்குகிறது..

ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...

திருமணம் நடந்து
மனைவியிடம் அன்பாக நடந்து
கொண்டால்!!!!

"அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்"
என்று குடும்பத்தினரிடமும்

அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்....

" ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு...

இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்
தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்"
என்று பெண்டாட்டியிடமிருந்து புறப்படும்
ஒரு உத்தரவு....

வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது.

வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்...

திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் .

பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும்

என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்

பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல்,

மனைவி பேச்சையும் தட்ட முடியாமல்

இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து

இரண்டுபக்கமும் கெட்ட பெயர் வாங்கி..

பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து,

அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது

மனைவியே 'கஞ்சன் ' என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில்

'சிடுமூஞ்சி'*யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும்.

குடும்பத்தில் விசேஷம் என்றால்

மனைவி மக்களுக்கு நல்லதாய் தேடி தேடி துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிள்ளை

தனக்கு துணி எடுக்க தள்ளுபடிக்காக அலைவான்.

தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்
நல்லபடியாக செய்து.. ஆண் உறவு & நட்பில் வரும்....

கல்யாணம் கருமாதிக்கு மொய் எழுத பொய்சொல்லி கடன் வாங்கி,,

வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...

இந்த ஆம்பளைக்கு..," என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக

ஒரு வீடு வாங்கினாலோ?

கார் வாங்கினாலோ?

அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்...

"ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க..

எனக்கும் வாச்சுதே ஒன்னு...

அரைக்காசுக்கு பொறாத மனுசன்...

எல்லாம் நான் வாங்கி வந்த வரம்..

"என்கிற தலைக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்... '

பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'

கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... '

பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா???

எப்பப் பாரு கரிச்சுக் கொட்டறது'

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து

அதை பார்க்கும் நிலை வந்தால்

பெண்களுக்கு
அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.

'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா?
என்னால முடியாது ..
வழிக்க..

உங்க தம்பிய பாக்கச் சொல்லுங்க..

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான்,

பழியும், தூசனமும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.

ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள்

அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்

ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
ஒரு ஆணுக்கு

எந்தக் பெருமையும் இல்லை .

எந்தப்புகழும் இல்லை.

புகழ் வேண்டாம், பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்
"
நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு

இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி..

என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்!!!!

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் *
25 வயது வரைதான்

அதன்பிறகு அவன் சாகும்வரையிலும்

"கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி

அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்.

அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்..


Best regards,