Wednesday, 29 February 2012

" மனநோய் "


" மனநோய் " எந்த வியாதி வந்தாலும் வரலாம் ஆனால் மனிதனுக்கு மனநோய் மற்றும் வரக்கூடாது மனதை மட்டும் அலைபாய விட்டு விட்டு பின்பு அதை நம்மால் அடக்கி ஆல முடியாது முடிந்தவரை மனதில் சில பாதிப்பு விசியங்களை அதிகம் பதியாமல் அதை பற்றி சிந்திக்கும் செயலை கை விட வேண்டும் மனோவாஹ நாளங்கள் எண்ணங்களை கொண்டு செல்பவை. இவை கோபம், பயம், துக்கம் , ஆணவம், ரோசம் , பிரிவு , தான் என்கின்ற அகங்காரம் , முக்கியமாக தனிமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காததாலும், தவறான உணவுகளை உட்கொள்ளுதல்இவை அனைத்தும் நம் மன வியாதிக்கு முழு காரணம் இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளவுபவர்கள் ஒருவர் மீது அளவு கடந்த அன்பு ,பாசம் ,காதல வைத்து விட்டு அவர்கள் நம்மை விட்டு விலகி செல்லும் பொது தன் நிலை இழந்து தனது காரியங்களில் தவறு ஏற்பட்டு அதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுகிரார்கள் மனோ வியாதிக்கு சரியான மருந்து தியானம் ,யோகா இவற்றை சரியாக நம் மனதை ஆட்படுத்தி கொண்டால் நமக்கு இந்த மனோ வியாதியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் .முடிந்தவரை ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும் பிறகு மூச்சை வெளிவிடவும். இதை ஐந்து தடவை செய்யவும். பழகியவுடன் 20 தடவை செய்யவும். அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னைப்பற்றி, தன் உடலைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சரியான ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் மனம் ‘வெளுக்க’ வழி கிடைக்கும். நான் கற்று தெரிந்த விசயத்தை தெரிவித்து உள்ளேன் உங்களும் இது சம்பந்தமா தெரிந்த விசியங்களை பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே .


 

கோபம் இல்லாத மனைவி தேவையா? - இதோ சில டிப்ஸ்!!



குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:

1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3.முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் மூடு அவுட்டாக வாய்ப்பு அதிகம்.

4.வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5.மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6.மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8.மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9.கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11.மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12.வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும். 





Tuesday, 28 February 2012

புடவை கட்டும் பெண்களே உங்களுக்கு ஆபத்து!!


நீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவனமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக்கிறது... உள்பாவாடை நாடாவை இறுக்கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஆய்வு.

இப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜி.டி.பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்றுநோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச்சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகுசுந்தரத்தை அணுகினோம்.

தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவது வழக்கம்.

அதனால் இடுப்பு பகுதியில் தழும்பு அல்லது சருமம் கருப்பாக மாறுமே தவிர, என் மருத்துவ அனுபவத்தில் சேலை புற்றுநோய் பாதிப்பை கேள்விப்பட்டது கிடையாது. தழும்பு மற்றும் சரும பிரச்னை உள்ளவர்கள், பாவாடை நாடாவை தளர்வாகக் கட்டிக் கொள்ளலாம்.

மெல்லிய நாடாவுக்கு பதில் பட்டை போல வைத்துக்கொண்டால், தழும்பு ஏற்படாது. ஒரே இடத்தில் கட்டாமல், பாவாடை முடிச்சை மாறி மாறி கட்டலாம் என்கிறார்.

பொதுவாக மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய். புடவை கட்டுவதால் இடுப்புப் பகுதியில் புற்றுநோய் ஏற்படும் என்பது புதிய தகவல். அந்த பிரச்னையோடு இதுவரை யாரும் வந்ததில்லை. சிலருக்கு சருமத்தில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட பகுதியை பாவாடை நாடா கொண்டு இறுக்கும்போது, நோயின் தன்மை வெளிப்பட்டு இருக்கும் என்கிறார் சென்னை புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாகர்.

புடவை பெண்களுக்கு டாக்டர் டிப்ஸ்

பாவாடை நாடாக்களை இறுக்கிக் கட்டக்கூடாது.
பாவாடை நாடாவை மெல்லிய கயிறால் கட்டாமல் பட்டையான கயிறு கொண்டு கட்டலாம்.

பாவாடைக்குக் கயிறு பயன்படுத்தாமல், பட்டையாக பெல்ட், லூப் போல தைத்துக் கொள்ளலாம். நாடா பட்டையாக இருப்பதால் அழுத்தம் மற்றும் தழும்பு ஏற்படாது.
ஒவ்வொரு முறை புடவை கட்டும்போது பாவாடை முடிச்சை வலது, இடது என மாற்றி கட்டிக் கொள்ளலாம்.சருமத்தில் தழும்பு ஏற்பட்டால் உடனடியாக சரும நிபுணரை அணுகவேண்டும்.


Monday, 27 February 2012

உங்களைத் திருத்தவே முடியாதடா!



தமிழனாய் இருந்து தமிழனையே குறைசொல்லிக் கொண்டு திரியும் உங்களைத்தான் சொல்லுகிறேன்! முதலில் எதிரிகளை சொல்லுங்கள் . துரோகிகளை சொல்லுங்கள், தமிழனின் காயங்களை சொல்லுங்கள்!

அதைவிடுத்து...

MGR குறை சொல்லுகிறீர்கள் அவன் ஒரு மலையாளத்தான் என்று!
தேசியத் தலைவரை குறை சொல்லுகிறீர்கள் சர்வதிகாரி !
சீமானைக் குறை சொல்லுகிறீர்கள் இந்துத் தீவிர வாதி என்று!
வைக்கோ பற்றி அவதூறு எழுதுகிறீர்கள்!

இலத் தெரியாமத்தான் கேக்குறான்!
இவர்களை குறை சொல்லும் அளவுக்கு நீ தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் செய்த தியாகங்கள் என்ன?

கனக்க வேணாம் ஒன்றே ஒன்று சொல்லு????

அத நானே சொல்லுறன் நீ என்ன செய்து சாதித்தீர்கள் என்று!

முகப் புத்தகத்தில , ஏதாவது ஒரு வீர வசனம் எழுதி இருப்பீங்க!
இல்லாட்டி முகப்புத்தகத்தில தமிழன் . வீரன் ,நெருப்பு ,தீ, இடிமுழக்கம், என்று பெயர்வைத்திருப்பீர்கள்.

இதெல்லாம் அவர்களை குறைசொல்லும் அளவுக்கு நீங்கள் பெரிய தலைவர்கள் ஆகிவிட்டதாய் நினைக்க வேண்டாம்!

அவர்களைவிட தமிழர்களின் மனதில் நீங்கள் இருப்பதாக நினைக்கவும் வேண்டாம்!

உங்கட பதிவுக்கு லைக் கொடுக்கவும் பக்க வாத்தியம் போடுவதற்கு சிலர்! முடியேல என்னால!

நான் உகளை திட்டவில்லை! உங்கள் பதிவுகளை பார்க்கும்போது எமக்கு வேதனையைக் இருக்கிறது!

உனக்ளுக்கு ஏன் கிழே உள்ள வர்களை பற்றி எழுத முடியாது???????

௧) எங்கள் இணைத்தையே அழித்த சிங்களவனை பற்றி எழுதுங்கள்.
௨) தமிழன் கண்ட காயங்களை பற்றி எழுதுங்க!
௩) தமிழர்களின் வீர சரித்திர வரலாற்றை பற்றி எழுதுங்கள் பலர் பயன் பெறுவார்கள்!
௪) எங்கள் கூடவே இருந்து எங்களையே காட்டிக் கொடுத்த கருணா பிள்ளையான், டக்கிளஸ், கேபி...போன்ற துரோகிகளை பற்றி எழுதுங்கள்!

இதெல்லாம் செயாமல்! ஏன் தோழா உனக்கு இந்த அந்நிய புத்தி?

எங்கள் அக்கா தங்கையின் கற்பை தின்றவர்களை மறந்துவிட்டு!
தயவு செய்து கேவலமாக வாழாதீர்கள்!

ஏதாவது ஒரு பிழை பிடித்து குறைசொல்வதை நிறுத்துங்க.
எனக்குத் தெரியும் இப்ப இந்தப் பதிவிலையும் என்னில் குறை பிடிக்க தயாராக ஒருசிலர்!


Saturday, 25 February 2012

நுங்கு!

 
அம்மை நோயை கட்டுப்படுத்தும் நுங்கு!

இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன் தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. நுங்கு பனை மரம் தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

குளுமை தரும் நுங்கு
கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

துவர்ப்பு சுவை
பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும். முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மைநோய்
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.

பதநீரும் நுங்கும்
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.

வேர்குரு போக்கும் நுங்கு
கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.

Friday, 24 February 2012

குறையா நிறையா?

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்
வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு

Wednesday, 22 February 2012

''பாஸிடிவ்''

பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ''பாஸிடிவ்''. ''எதையும்''பாஸிடிவா'' பாருடா எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு ''பாஸிடிவ்'' அம்சம்இருக்கும். அதிலே கவனம் வை நீ ஜெயிச்சிடலாம்'' என்று அடிக்கடி சொல்வார்.
''அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடிமட்டத்தில் இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்குத் தான்கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்'' என்றுஅண்ணன் அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது. எது எப்படியோ? எனக்குச் சிறுவயதிலிருந்தே பெரியப்பா  ஹீரோ போலவே
தெரிந்தார்.

தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில்ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதையே பார்க்கும் ஒரு தனிப்பெரும் குணம் என எல்லாமாய்ச் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன. வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்குக் கடந்த ஐந்துவருடங்களாக இறங்கு முகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன்சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்துவிட்டார். திருமணமாகிப் பலவருடங்கள் கழித்துப்பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில்படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில்மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்துவருகிறார் என்றும் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பைசென்ற பின் அவரை நேரில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபீஸ் வேலைவிஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த ''பாசிடிவ்'' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.

அந்தேரியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டேன். கதவைத்திறந்து பெரியம்மா ''வாப்பா'' என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது. ''பெரியப்பா இல்லையா?'' நான் கேட்டது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். ''வாடா.. உட்கார்'' என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். ஆனால், பெரியம்மா அப்படிச் சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளேபோனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும்விசாரித்தார். பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொருசூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது.அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.

பெரியப்பா அமைதியாகச் சொன்னார். ''கையை விட்டுப் போனதைப் பற்றியேநினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப்படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு.அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்கக் காசுஇல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி ''இருக்கிற'' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு'' பெரியம்மா காபியுடன் வந்தாள். ''உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே... அனுபவிச்சு இழந்துட்டுக் கஷ்டப்படறது வேறே.. ஊம்.... எதுவும் நிரந்தரமில்லை!'' ''எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம்நிரந்தரமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே!'' என்றுபுன்சிரிப்புடன் என்னைக் கேட்டார். பிரமிப்புடன் தலையாட்டினேன் வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போதுஇருந்த இடத்தைவிடப் பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்தே போனார்.நிஜமாகவே பெரியப்பா ''பாசிடிவ்'' தான். ''ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம்இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.  ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும் என்பதை பெரியப்பா நன்கு உணர்ந்தவராகஇருந்தார் என்பதை அனுபவசாலியான அவரது பதில் உணர்த்தியது.



Tuesday, 21 February 2012

எப்போது வருவாய் என் தோழனே ?

 




எங்கே இருக்கிறாய் என்  தோழனே?

வந்து விடு!

காதலும் காமமும் தீண்டாத தூய நட்போடு

என்னை என்படியே ஏற்றுக்கொள்கிற பக்குவத்தோடு

என்  மகிழ்ச்சியை புன்னகையில் ஏந்திக் கொள்கிறவனாய்

என் கண்ணீரை தோள்களில் தாங்கிக் கொள்கிறவனாய்

என் சுக துக்கங்களை பங்கிட்டுக்கொள்ளும் தாயுமானவனாய்

என் கை கோர்த்து
என்னை நற்பாதையில் நடத்திச்செல்லும் தந்தையுமானவனாய்

குணங்களுக்காய் பாசத்தை மாற்றிக்கொள்ளாத பிள்ளையாய்

வாழ்க்கை பயணம் முழுமைக்கும்
வழிநடத்துபவனாய் இருக்க

எப்போது வருவாய் என் தோழனே ?


Tuesday, 14 February 2012

காதலர் தினம்

 
உண்மை காதலர்களுக்கு
எனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்
காதல் செய்யுங்கள்
வரதட்சனை இல்லாத காதலை

காதல் செய்யுங்கள்
ஜாதி , மதங்களை கடந்து மனிதம் வளர்க்க செய்யும் காதலை

காதல் செய்யுங்கள்
உடலை தேடுகின்ற காதலை விட மனதை புரிந்து கொள்கின்ற காதலை

காதல் செய்யுங்கள்
திருமணத்திற்கு பிறகும்
உங்கள் மனைவியை!

உண்மை காதலர்களுக்கு
எனது காதலர் தின நல்வாழ்த்துக்கள்




ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்

ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் : ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள் உருக்கம்........


"எங்களுடன் இருந்ததை விட, மாணவர்களாகிய உங்களுடன் தான், என் தாய் அதிக நேரம் செலவிட்டுள்ளார். ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்' என ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள், மாணவர்களிடையே உருக்கமாக பேசினார்.

பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், மாணவனின் படிப்பு குறித்து கண்டித்ததோடு, பெற்றோரிடமும் புகார் தெரிவித்ததால், ஆசிரியை உமா மகேஸ்வரி, வகுப்பறையிலேயே, ஒன்பதாம் வகுப்பு மாணவனால், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

ஆசிரியைக்கு அஞ்சலி : இதை தொடர்ந்து பள்ளிக்கு, சம்பவம் நடந்த அன்று மதியம் முதல், விடுமுறை விடப்பட்டு, நேற்று காலை திறக்கப்பட்டது. மறைந்த ஆசிரியை உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பள்ளிக்கு வந்திருந்தனர்.

பள்ள நிர்வாகத்தின் சார்பில், முதல்வர் சிவி மாத்யூ, முன்னாள் முதல்வர் பால் மண்ணியம், பாதிரியார் ஸ்டான்லி, பள்ளி நிர்வாகிகள் ஆகியோருடன், ஆசிரியை உமா மகேஸ்வரியின் கணவர் ரவி சங்கர், தாயார் அமிர்தம், மகள்கள் சங்கீதா, ஜனனி மற்றும் குடும்பத்தினர், பள்ளிக் கல்வித் துறை சார்பில் குப்புசாமி, உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியையின் உருவப்படத்திற்கு, அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்; அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஆசிரியை மகள்கள் படிப்புக்கு ரூ.5 லட்சம் : பள்ளி முதல்வர் பேசியதாவது: எங்கள் பள்ளி, திறமையான ஆசிரியரை இழந்து விட்டது. அவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு, எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்கள் சங்கீதா மற்றும் ஜனனி ஆகியோரது பெயரில், ஐந்து லட்சம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அவர்களின் மேல்படிப்பு செலவு அனைத்தையும், பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இவ்வாறு பள்ளி முதல்வர் பேசினார்.

ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள் :
நிகழ்ச்சியில், உமா மகேஸ்வரியின் மகள் சங்கீதா, மாணவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது: எந்த பிரச்னை ஆனாலும், அதை எதிர்த்து நிற்க வேண்டும். மரணம் என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். ஆனால், என் தாய் விரும்பி நேசித்த, ஆசிரியர் பணியாலேயே, அவர் மரணமடைய நேர்ந்துள்ளது. அடிக்கிற கை தான் அணைக்கும் என்பர்; அதுபோல், ஆசிரியர்கள் அடிக்க மட்டும் செய்ய மாட்டார்கள்; அணைக்கவும் செய்வர்.

என் தாய், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே, எங்களுடன் இருப்பார். மற்ற படி, ஆறு நாட்களும், மாணவர்களுக்கு கல்வி போதித்துக் கொண்டு இருந்தார். சொந்த மகள்களுடன் இருந்ததை விட, சொந்த மகன்களாக நினைத்து, மாணவர்களுடன் இருந்ததே அதிகம். அவர் எங்களை விட உங்களைத்தான் அதிகம் நேசித்தார். என்னுடன் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் என் பிள்ளைகள் என்பார்.

ஆசிரியர் கண்டித்தாலும், திட்டினாலும் மாணவர்கள் கோபப்படக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். நான் ஒரு மாணவியாக சொல்கிறேன். ஆசிரியர்கள் அடிப்பதும், கண்டிப்பதும் நமது நன் மைக்காகத்தான் என கருத வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் பழகுகங்கள். அவர்கள் கண்டிப்பதை விரோதமாக கருதாதீர்கள் என்று அவர் பேச பலரும் கண் கலங்கினர்.

மாணவர்கள், ஆசிரியர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், என்றைக்குமே, கெட்டதை கற்றுத் தர மாட்டார்கள். நல்லதே போதிக்கும் ஆசிரியர்களுக்கு, மரியாதை தர மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சங்கீதா கூறினார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் இங்கிருப்பேன் :
நிகழ்ச்சியில் பேசிய சக ஆசிரியை சசி கூறியதாவது: ஆசிரியை உமா மகேஸ்வரி, இயேசு கிறிஸ்து மீது, அதிக நம்பிக்கை வைத்திருந்தார். "நடக்கும் எல்லாமே இயேசுவால் தான்' என, நம்பினார். சமீபத்தில் ஆசிரியை என்னுடன் பேசியபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகள் தான் நான் இங்கிருப்பேன்' எனக் கூறினார். அவர் எதற்காக அப்படி கூறினார் என, எனக்கு தெரியவில்லை. சம்பவம் நடந்த அன்று எனக்கு ஆசிரியை மரணம் குறித்து தகவல் வந்த போது, பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் என்னிடம் கூறியது ஞாபகம் வந்தது. இவ்வாறு சசி கூறினார்.

அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் கலைந்து சென்றனர். பள்ளி நாளை முதல் செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்து கொண்ட, கவுன்சிலிங் கூட்டம் நடந்தது. இன்று, மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடத்தப்படும் என, பள்ளி முதல்வர் தெரிவித்தார்.

Friday, 10 February 2012

500 ரூபாய்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க

Thursday, 9 February 2012

மிக்சி, கிரைண்டர்களுக்கு ஓய்வு:ஆட்டுக் கல், அம்மிக் கல்லுக்கு வந்தது மவுசு


இல்லத்தரசிகள் பயந்து கொண்டே இருந்தது நடந்தே விட்டது. இனிமேல், 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பால், மிக்சி, கிரைண்டர்கள் ஓடாமல், சமையல் பணி பாதிக்கும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் இனிமேல், ஆட்டுரல், அம்மிக்கல் ஆகியவற்றின் துணையை நாட தயாராகி விட்டனர்.

விஞ்ஞான வளர்ச்சியால், நவீன இயந்திரங்கள் அதிகரித்து, மனிதனின் பணிகளை குறைத்து விட்டது. அதே சமயம், இயந்திர உற்பத்தி அதிகரிப்பால், மனிதனை சோம்பேறி ஆக்கி விட்டது என்பதும் நிதர்சனமான உண்மை.

வீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட, கிரைண்டர், மிக்சி வரத்து துவங்கியதும், பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக் கல்லும், ஆட்டுரலும், பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், கணவர்களையும், குழந்தைகளையும், வேலை, பள்ளிக்கு அனுப்பும் இல்லத்தரசிகளுக்கும், மிக்சியும், கிரைண்டரும், பெரும் உபயோகமாக இருந்தது. சமையல் பணியை விரைந்து முடிக்க இவை உதவின.

மின்வெட்டு ஆபத்து:கடந்த ஆட்சியில் மின்சார தேவைக்கு ஏற்ப, உற்பத்தியை பெருக்காததன் விளைவு, இந்த ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. ஆட்சி மாறியும், மின்தடை நேரம் குறையவில்லை. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என இருந்த மின்தடை, தற்போது, 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. அதிகாரப் பூர்வமாகவும் இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் கிராம பகுதிகளில் நிலவுகின்றன.

மிக்சி, கிரைண்டர் ஓடாது:மின்தடை செய்யப்படும் நேரங்கள், பெரும்பாலும் சமையல் செய்யும் காலை நேரத்திலும், இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் மாலை நேரத்திலும் தான். இதனால், பெண்களுக்கு சமையல் பணிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிக்சி, கிரைண்டர் இயங்காததால், இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயார்:தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து கருப்பு கல்லை வாங்கி வந்து, சாலையோரம் "டெண்ட்' அமைத்து, அம்மிக்கல், ஆட்டுரல்களை விற்பனை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர், ஜெ.என்.,சாலையில் ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்யும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பானம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 27, கூறியதாவது:எனது பரம்பரையே, ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்வது தான். நான், எங்களது கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை வாங்கி, இங்கு கொண்டு வந்து அம்மிக்கல், ஆட்டு உரல்களை செய்து விற்பனை செய்கிறேன். ஒரு டன் கல், 20 ஆயிரம் ரூபாய். அவற்றை லாரியில் ஏற்றி, இங்கு கொண்டு வர, 4,000 ரூபாய் வரை வாடகை செலுத்துகிறேன்.பின், அவற்றை பல்வேறு அளவுகளில், அம்மிக்கல், ஆட்டு உரல்களாகத் தயாரித்து விற்பனை செய்கிறேன். சில நாட்களில், வியாபாரமே இருக்காது; சில நாட்களில், இரண்டு, மூன்று உரல்கள் விற்பனையாகும்.சராசரியாக நாளொன்றுக்கு, 400 ரூபாய் கிடைக்கிறது. கிரைண்டர், மிக்சி வந்த பின், எங்களது விற்பனை படுத்துவிட்டது. மின்தடை காரணமாக, இனிமேல் அம்மிக் கல், ஆட்டுரல் விற்பனை அதிகரிக்கும்.இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

அம்மிக்கல் சிறியது 300 ரூபாய் பெரியது 500 ரூபாய் முதல்
ஆட்டுரல் சிறியது 200 ரூபாய் பெரியது 600 ரூபாய் முதல்

thank u
dinamalar