இலங்கையின் போர்க்குற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இரண்டாவது ஆவணப்படத்தை பிரிட்டனைச் சேர்ந்த Channel Four தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.25 மணிக்கு ஒளிப்பரப்பான அந்த வீடியோ சுமார் 53 நிமிடங்கள் ஒளிபரப்பானது. இதில், போர்க்கைதியாக பிடிபட்டவர்களை நிர்வாணப்படுத்தி, கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி மற்றும் புலிகளின் தொலைக்காட்சி செய்தியாளர் இசைப்பிரியா நிர்வாணமான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்பட ஆதாரமும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், ராணுவத்தின் குண்டுவீச்சில் குழந்தைகள் படுகாயமடைந்த மற்றும் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆதாரமான காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த புதிய வீடியோ இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
By: இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.25 மணிக்கு ஒளிப்பரப்பான அந்த வீடியோ சுமார் 53 நிமிடங்கள் ஒளிபரப்பானது. இதில், போர்க்கைதியாக பிடிபட்டவர்களை நிர்வாணப்படுத்தி, கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி மற்றும் புலிகளின் தொலைக்காட்சி செய்தியாளர் இசைப்பிரியா நிர்வாணமான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்பட ஆதாரமும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், ராணுவத்தின் குண்டுவீச்சில் குழந்தைகள் படுகாயமடைந்த மற்றும் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆதாரமான காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த புதிய வீடியோ இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.