Thursday, 1 March 2012

" கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு சில தீர்வு "


" கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு சில தீர்வு " எந்த ஒரு உறவிற்கும் அடிப்படைத் தேவை நேர்மை தான். அதற்கு உங்கள் துணையிடம், `எப்போதும் நான் எதையும் மறைக்காமல் நேர்மையுடன் தைரியமாக செயலாற்றுபவர்என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அப்போது தான் மனைவி, மக்களிடம் இருந்தும் நீங்கள், நம்பிக்கையை பெற முடியும். உங்கள் துணை உங்களிடம உள்ள சிறுசிறு குறைகளை வெளிபடுத்தும் போது, அதை மறுக்காமல் பணிவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு மாறாக கோபத்தை வெளிபடுத்தாதீர்கள். பதிலுக்கு அவர்களிடம் குறை கண்டுபிடிக்காதீர்கள். உதாரணமாக, காலதாமதம், நேர்த்தியாக உடை அணியாதது போன்ற சிறு சிறு குறைபாடுகளைக் கூட, அவர் உங்கள் நடத்தைகளில் கண்டிருக்கலாம். முக்கியமாக வாக்குவாதம் பண்ணுவதை தவிர்க்கவும் சில நேரங்களில் பிரச்சினைகள் ஏற்படும்போது இருவரும் பொதுவான வகையில் இருந்து நேர்மையுடன் பிரச்சினையை அணுகுங்கள். தேவையில்லாமல் யாருடைய மனதைம் புண்படும் படியான வார்த்தைகளை பேச வேண்டாம். வார்த்தைகளை உபயோகிக்கும் பொது சில அன்பான வார்த்தைகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. உங்கள் துணையிடம் எந்த பிரச்சினையையும் மனம் விட்டு பேசி, பகிர்ந்து கொள் ளுங்கள். அப்போது தான், உங்கள் ஆழமான நம்பிக்கையை தன் மீது வைத்திருக்கிறீர்கள்என்று அவர் சந்தோஷபடுவார். இதன் முலம் உங்கள் துணைடன் நீண்ட நாட்களுக்கு புரிதலுடன் கூடிய நல்லுறவை ஏற்படுத்தலாம். எப்போதும் சுதந்திரமாக இருந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த வேலையையும் செய்ய கட்டளையிடாதீர்கள். கடலையிடுவது ஆண்களுக்கும் பிடிக்காது பெண்களுக்கும் பிடிக்காது , சுதந்திரமாகவும், அன்பாகவும் அந்த வேலையை எப்படி செய்யலாம் என்று வழிகாட்டுங்கள். இது உங்கள் நம்பிக்கையை எப்போதும் அவர் பெற உதவியாக இருக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்கள் துணைக்கு மிகவும் முக்கியமான ஒன்று . அதனால் பிரச்சினைகள் குறித்து பேசும்போது மிக கவனமுடன் வார்த்தைகளைக் கையாளுங்கள். அவை அறிவுபூர்வமாக இருக்கட்டும். அப்போது தான் உங்கள் துணைக்கும் உங்கள் மீது நல்ல ஒரு எண்ணம ஏற்படும். ஒருவரை ஒருவர் ஏமாற்றம் பண்ணுவது கூடாது கணவன் மனைவி உறவில் , நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் வாழ்கை இனிப்பதர்க்கு விட்டு கொடுத்து போங்கள் நண்பர்களே . எனக்கு இன்னும் சொல்ல தோணுது அனால், இதை படிப்பதற்கே நேரங்கள் பிடிக்கும் இந்த அவசர உலகில் மீண்டும் அடுத்த பதிவில் பேசலாம் இதை பற்றி சரியாய் நண்பர்களே .