Friday, 16 March 2012

தமிழர்களை சாதி வைத்தா கண்டுபிடிப்பது ?

தமிழர்களை சாதி வைத்தா கண்டுபிடிப்பது ? என்று மூக்கைச் சுளிக்கும் அறிவாளிகளே
இதோ பட்டியல்
இந்த ஒரிஜினல் தமிழர்களுக்காத்தான் வாதாடுகிறீர்களா..?
தமிழ்நாட்டை இதுவரை ஆண்டவர்கள்.....
செத்த தமிழ்ப்பெண்களின் உடல்களையே கொத்திக் குதறும் மனநோயாளிகளான சிங்கள வெறி படையினரின் கையில் ஒரு தமிழ்ச்சிறுமி அகப்பட்டால் அவள் நிலைமை என்ன? நினைக்கவே கொடூரமாக இருக்கிறது அல்லவா? அப்படி பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிகளில் இவள் பெயர் புனிதா. புனிதா என்ற 12 வயது சிறுமி சிங்கள வெறிக்கூட்டத்திற்கு பலியாகினாள்.. அவளின் கதையைத் தழுவி இயக்குநர் புகழேந்தி உருவாக்கியுள்ள படம் தான் உச்சிதனை முகர்ந்தால்... காதலைத்தாண்டி சிந்திக்கத் தெரியாத தமிழ் திரைப்பட உலகில் இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்கியிருப்பதுதான் முதல் வெற்றி. கருத்து சொல்கிறார்கள் என்று எவனும் சொல்லிவிடக்கூடாது என்பதில் இயக்குநர் மிகுந்த கவனமெடுத்திருப்பது தெரிகிறது. தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாய் கதறும் காட்சிகள்.. தன் நாட்டு மகளிரின் வீரத்தை மகள் சொல்லிப் புலம்பும் காட்சிகள்.. ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் செதுக்கியிருக்கிறார். தன் வயிற்றில் வளர்வது குழந்தை என்பதுகூடதெரியாத குழந்தையாக புனிதா.. அமுதன் என்னும் செல்ல நாயிடம் என் வயிறு ஏந்தான் இப்படி பெருசாகுதெண்டு தெரியல என்று சொல்லிப் புலம்பும் காட்சிகள்.. இப்படி கதை முழுக்க நம்மை சுற்றி கணத்த மெளனத்தைப் புதைத்து விடுகிறது. அகதிகளாகத் தப்பி வந்த இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் பேராசிரியர் நடேசனாக சத்தியராஜ். மிகுந்த பொருத்தமான வேடம் இவருக்கு.. இவருக்கு மட்டுமென்ன? அனைவருமே கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். நமக்கு மிக அருகிலேயே இப்படி ஒரு அநியாயம் நடந்தும் நம் கையாலாகாத்தனத்தை நினைத்து ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது. இயக்குநர் தனக்கு ஏற்றபட்ட வலிகளை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.. இந்திய சென்சார் துறையினர் கனகச்சிதமாக தங்கள் கடமையை ஆற்றியுள்ளனர். இலங்கை என்ற ஒரு சொல் கூட வர விடாமல் கத்திரி போட்டுள்ளனர். வாழ்க பாரதம். இறுதியாக, இந்தத் திரைப்படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.. தமிழ்நாட்டில் மொத்தம் 3 தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. மெரினா திரைப்படம் 185 தியேட்டர்களில் ஓடுகிறதாம், மேலும் தியேட்டர்களில் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்... எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் பிறந்திருக்கிறோம்? ஒரு காக்கை கூட தன்னை ஒத்த மற்றொரு காக்கைக்கு ஏதாவதென்றால் துடிக்கிறது... பிரச்சனைகள் நம் வீட்டுக் கதவைத் தட்டாதவரை நமக்கு எந்தக் கவலையும் இல்லை... தானே புயலால் கடலூர் மாவட்டமே ஒப்பாரி வைத்தபோது.. மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தவர்கள்தானே நாம்.. படம் பார்த்துவிட்டு வந்தபோது நண்பர் ஒருவர் படம் நல்லா இருக்காஎன்று கேட்டார் நான் அமைதியாக இருந்தேன்.. நம் சொந்தங்களின் துயரங்களை பார்த்துவிட்டு நல்லாயிருக்குஎன்று சொல்ல முடியுமா என்ன?