மக்களின் நம்பிக்கைகளும் சிதைக்கும் மதமாற்றமும் -
காசியில் மதமாற்றம்!
-----------------------------------------------------------------------------
இத்தாலி சோனியா இந்தியாவின் சர்வாதிகாரி ஆகிய பிறகு இந்தியாவின் பாரத அடையாளங்கள் அத்தனையையும் அழிக்கும் வேலை மிக வேகமாக நடந்து வருகிறது.
அதற்கான மூல ஆயுதம் மதமாற்றம். இம்மதமாற்றம் மூலமாக இந்திய மக்களின் அடிப்படை நம்பிக்கைகளை சிதைப்பது மற்றும் அவர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிப்பது, அவர்களை அப்படியே மதம் மாற்றி இத்தாலிய அடிமைகளாக மாற்றிவிடுதலில் முடிகிறது இந்த மதப்படையெடுப்பு.
ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களிலெல்லாம் திட்டமிட்டு மதம் மாற்றுவதை மிஷனரிகள் ஒரு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக திருவண்ணாமலையில் வேகமாக நடந்து வரும் மதமாற்றம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல இந்தியாவின் பல பகுதிகளில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசிமாநகரத்தில் மதமாற்றம் கங்கைக்கரையிலேயே நடந்து வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம். உத்திரப்பிரதேசம் மக்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அதிகம் பின் தங்கி இருக்கும் மாநிலம். அதனாலேயே தானோ என்னவோ அங்கே இன்னும் பக்தியும் பாரம்பரியமும் அழியாமல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வரப்படுகிறது.
ப்ரயாக் , வாரனாசி போன்ற புன்னியஸ்தலங்கள் இருக்கும் இம்மாநிலத்தில் முக்கியநகரங்களிலெல்லாம் கிறிஸ்தவ மிஷனரிக்கூட்டங்களின் அட்டகாசம் அதிகாமாகி வருகிறது.
முதலில் இம்மாநில மக்களின் நம்பிக்கைகள் எந்தளவிற்கு இன்னும் சிறு சிறு விஷயங்களில் கூட உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
அன்று அயோத்தியாப்பட்டனம் சென்று ஸ்ரீ ராமரை தரிசனம் செய்துவிட்டு காரில் காசிக்குச் சென்று கொண்டிருந்தோம்.
மாலை நேரம் ஒளி மங்கிக்கொண்டிருந்த சமயம், நெடுஞ்சாலையில் சடேரென வண்டியை ப்ரேக் போட்டு நிறுத்தி ஓரங்கட்டி விட்டார் எங்களது ஓட்டுனர்.
அவருக்கு அதிகபட்சம் 25 முதல் 30 வயதுக்குள் தான் இருக்கும். ஏனப்பா வண்டியை நிறுத்தினாய் என்னா ஆச்சு என்று விசாரித்தால், ஓட்டுனர் ஹிந்டியில் கூறினார் "பில்லி ரோட் காட் கே கயா" , அதாவது, "பூனை ரோட்டுக்கு குறுக்கே போனது" என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை, "என்ன சொல்ற" என்றேன் ஹிந்தியில். "ஹரே சாப், பூனை ரோட்டுக்கு குறுக்கே போய்டிச்சி சார், கொஞ்சம் நின்னு தான் போகனும்" என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து ஹிந்தியில் உரையாடினேன்...
"அதற்காக நெடுஞ்சாலையில் இப்படி சடேரென வாகனத்தை நிறுத்துவதா?" என்றேன். உடனே அவர் "சார் இங்கே அதெல்லாம் நம்புவோம் சார், நீங்க அதெல்லாம் பாக்கமாட்டீங்களா?"
"பாப்போம் தான், அதுக்காக இப்படி நடு ரோட்ல எல்லாம்...."
"சார், அதெல்லாம் பாக்கனும் சார், நீங்க கூட வெளியே போகும் போது பூனை குறுக்கே போச்சுன்னா ஒரு அஞ்சி நிமிஷம் உக்காந்துட்டு போங்க"
"நடு ரோட்லயா?"
"ஆமாம் சார், நம்பலியே பின்னாடி பாருங்க, ஒரு கார் நிக்குதா, எதித்தாப்புல பாருங்க ஒரு கார் நிக்குதா?.. அவங்களும் பூனை குறுக்கே போனதை பாத்துட்டாங்க... அதான் நிக்கிறாங்க.. பாத்தீங்கல்ல.." என்றார்.
நானும் முன்னே பின்னே திரும்பிப் பார்த்தேன், காலியான சாலையில் அவர்களும் நகராமல் சில நிமிஷங்கள் அப்படியே நின்றார்கள். பின்னர் எங்கள் ஓட்டுனர் வண்டியை எடுத்தவுடன் மற்றவர்களும் சதாரனமாக வண்டியை நகர்த்தி செல்லத் துவங்கினார்கள்.
இப்படி பூனை குறுக்கே போனால் சகுனக்கேடு என்பதை நெடுஞ்சாலையில் கூட நம்பும் மக்கள் இருக்கும் மாநில மக்களை மதம் மாற்றுகிறார்கள்.
இப்போது காசிக்குப் போவோம், கங்கைக்கரையில் ஒவ்வொரு பெயரில் படித்துரை இருக்கும். எல்லாப்படித்துரைகளிலும் மக்கள் இறங்கி நீராடுவார்கள். குறிப்பிட்ட ஒரு படித்துரை மாடுகள் இறங்கி குளிப்பதற்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும்.
அங்கே பசு வளர்ப்பவர்கள் எல்லோரும் தங்கள் மாடுகளை அந்த படித்துரை வழியாக இறக்கி குளிப்பாட்டி கூட்டிச் செல்வார்கள். அங்கே ஆட்கள் அதிகம் குளிக்க இறங்க மாட்டார்கள்.
இப்படி ஆட்கள் அதிகம் வந்து போகாத படித்துரை அருகே சத்தமில்லாமல் தங்கள் வேலையை நடத்திக் கொண்டிருக்கின்றற மிஷனரிகள்.
மிஷனரீஸ் ஆப் சாரிட்டி பெயரில் மிஷனரி அமைப்பு சேவை மையத்தை நடத்துவதோடு 'நாங்கள் ஆதரவற்றவர்கலையும் நோயாளிகளையும் பாதுகாக்கிறோம்' என்று கூறி அடித்தட்டு மக்களை மூளை சலவை செய்து மதம் மாற்றிவருகிறது.
இவர்கள் எப்படியெல்லாம் ஹிந்துக்களின் புனிதச்சடங்குகளின் ஆணிவேரை ஆட்டுவிக்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஹிந்துக்களின் புனிதத்தலமான காசியில் பித்ருக்களுக்கு ஸ்ரார்தங்கள் செய்து தங்கள் பிறவிக்கடனை தீர்க்கும் புனிதமான பணியைச் செய்ய லட்சக்கணக்கில் வந்து செல்கிறார்கள் நம் மக்கள்.
இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கை கரையில் 64 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் மணிகர்ணிகா காட், தசாதச்மேத காட், பஞ்சகர்நிகா காட், வருனா காட், அஸ்ஸி காட் என்று ஐந்து கட்டங்கள் உள்ளன்.
இந்த கட்டங்களில் ஸ்நானம் செய்வது அல்லது நீரைத் தலையில் தெளிதுக்கொள்வது பஞ்ச தீர்த்த ஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது.
மணிகர்ணிகா கட்டத்தில் தினமும் உச்சிப்பொழுதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம் அதனால் உச்சி வேளையில் நீராடுவது நல்லது.
இத்தகைய கங்கைக்கரையில் பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து ஸ்ரார்தம் செய்வது புன்னியகாரியமாக கருதப்படுகிறது. இக்கரையில் உள்ள மேலே சொன்ன ஐந்து கட்டங்களிலும் உட்கார்ந்து பித்ருக்களின் பெயர்களைச் சொல்லி பிண்டம் வைக்க வேண்டும்.
இதற்காக நூற்றுக்கணக்கில் படகுகள் இயங்குகின்றன. இந்தப் படகுகளில் அமர்ந்து பக்தர்கள் ஐந்து கட்டங்களுக்கும் செல்வார்கள். பிண்டம் வைப்பதற்கான சோறும் படகுகளில் செல்லும் போதே சமைக்கப்படும்.
சிறிய அடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு கொஞ்சம் அரிசியை கொதி நீர் அடங்கிய சிறிய பாத்திரத்தில் போட்டால் போதும், அடுத்த கட்டம் வருவதற்குள் அரிசி வெந்து விடும். இப்படி படகுலேயே பிண்டத்திற்கான அரிசியை வேகவைத்து அடுத்தடுத்த கட்டங்களில் பிண்டம் வைத்து செல்வது மக்களின் வழக்கம்.
இப்படி ப்த்ரு காரியம் செய்யும் மக்களுக்காக படகு ஓட்டுபவர்கள் இந்த கங்கைக்கரையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஸ்ரார்தம் செய்ய வரும் மக்களுக்கு தெரியாததைச் சொல்லிக் கொடுத்து அவர்களின் நோக்கம் கெடாமல் நிறைவேறவும் அவர்கள் மிகவும் முக்கியானவர்கள்.
ஐயர் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் கூட படகு ஓட்டுபவர்களே சொல்லி விடுவார்கள். அந்தளவுக்கு அவர்கள் ஹிந்து சம்பிரதாயங்களை உள்வாங்கி அவற்றோடு ஊரிப்போய் மக்களுடன் ஒன்றாகப் பழகுபவர்களாக இருக்கிறார்கள்.
மிஷனரிகளின் முக்கிய வேலையே இந்த படகு ஓட்டிகளை மதம் மாற்றுவது தான். இவர்களது நோக்கமே இந்த படகு ஓட்டிகளை மதம் மாற்றிவிட்டால் அவர்களை தங்கள் கைகளுக்குள் போட்டுக் கொண்டால் புனித காரியம் செய்ய வருபவர்களின் பணிகளுக்கு வேண்டுமட்டும் இடையூறு செய்யலாம்.
ஒரு நாளில் எந்தப் படகும் போகாது என்று வேலை நிறுத்தம் அறிவிக்கச் செய்யலாம். புனித காரியம் செய்ய வரும் ஹிந்துக்களிடம் படகில் சண்டை போட்டு அவர்கள் மனம் நோகச் செய்து அல்லது அவர்களின் காரியம் கெடுமாறு நடந்து கொள்ளச் செய்யலாம்.
மதம் மாறிய படகோட்டிகள் எல்லாரும் பேசி வைத்துக் கொண்டு ஒரிரவில் அநியாய கட்டணம் வசூலிக்கவும் செய்யலாம்.
இப்படி பல வகைகளில் ஹிந்துக்களின் புனிதத்தலத்தில் அவர்களது காரியங்கள் எதுவும் நடக்கச் செய்யாமல் நாளடைவில் காசிக்குச் செல்வதில் பிரயோஜனம் இல்லை என்கிற மனப்பாங்கை உண்டாக்க வேண்டும் என்றும் புனிதத்தலத்தின் மகிமையை குலைத்திட வேண்டும் என்பதும் மிஷனரிகளின் நோக்கம்.
அப்படி சிலரை மதமாற்றம் செய்தும் இருக்கிறது என்பதும் அவர்களால் புனித காரியம் செய்யப் போனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் அதிர்ச்சித் தகவல்.
இது மட்டுமல்லாமல் கொவில் நகரமான காசியில் மையப்பகுதியில் ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் மற்றும் ஏழை குடும்பப் பெண்கள் என திட்டமிட்டு பலரை அணுகி மதம் மாற்றி வருகின்றனர்.
இதற்காக கங்கைக்கரையிலேயே பெரிய கட்டடம் பிடித்து 200 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஆஸ்பத்தரி ஒன்றை நடத்தி வருகிறது.
காசியில் பல மடங்கள் ஆதரவற்றோரையும் வயோதிகர்களையும் அவர்களது கடைசி காலம் வரை உணவளித்தும் தங்கும் இடம் கொடுத்தும் காக்கும் பணிகளை ஏற்கனவே செய்து வருகின்றன.
அப்படி இருக்கையில் தாங்கள் தான் கருணையின் சிகரம் என நாடகம் நடத்தி காசியில் தனது மதமாற்றக் கைங்கரியத்தை நடத்தி வருகின்றன மிஷனர்கிகள்.
ஹிந்துக்களின் புனிதத்தலங்களில் குறிப்பிட்ட தூரம் வரை பிறமதத்தினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு தடைசெய்யப்பட வேண்டும்.
குறைந்த பட்சம் ஹிந்துக்களாவது ஒரு குழுவினராக செயல்பட்டு இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.
இல்லையேல் காசி மட்டுமல்ல, இருக்கும் எல்லா புனிதத்தலங்களும் நாளை பாரத மக்களுக்குச் சொந்தமாக இருக்காது என்பது நிச்சயம்.
ஹிந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!