Monday, 24 June 2013

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் ??

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் ??

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .

3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.

4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.

6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும்.

7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . போனஸ் கொடுக்கவில்லை என்று குண்டு எதாவது இடுப்பில் கட்டி வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை .

8 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.

9) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.

10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .

11) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .

12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.

13) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.

14) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .

15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .

16) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.

17) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .

18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழுகு செடிகள் இருக்கும் .

19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .

20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .

21) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .

22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும்.

23) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”

24) ஒரு ATM இருக்கும்.

25) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .

# அவ்ளோதாங்க சாப்ட்வேர் கம்பெனி