Sunday, 17 February 2019

வா...! வீரனே..!

வா...! வீரனே..!

ரயில் பெட்டியில் உயிரோடு சென்ற நீ....!
மரப்பெட்டியில் உயிர் இன்றி திரும்புகிறாய்.!

பணக்குழியில் படுத்து உறங்கிய ஆட்சியாளன் அல்ல நீ...!

பதுங்கு குழியில் படுத்து உறங்கிய உன் குடும்பத்தின் மீட்சியாளன் நீ...!

உன் மனைவி அப்போது தான் குளித்துவிட்டு, மூஞ்சி நிறைய மஞ்சள்பூசி, நெற்றி நிறைய பொட்டுவைத்தாள்...

வச்ச பொட்டு காய்வதற்குள் குண்டு வெடித்ததாக வந்ததய்யா ஒரு சேதி....

தலையில் வைப்பதற்கு எடுத்த பூவை தரையில் வீசிவிட்டு கதறி அழும் உன் வீட்டுக்காரியின் கதறல் சத்தம் கேட்கின்றதா வீரனே.. கதறல் சத்தம் கேட்கின்றதா....

பள்ளிக்கூடம் போன உன் பிள்ளை பரபரப்பாய் ஓடி வந்தான், வந்தவன் அம்மா... அப்பா எப்ப வருவாரு என நீ செத்ததை அறியாமல் சேதி கேட்கின்றான்...!

வா... வீரனே...!

நீ பார்த்து வளர்த்த மாடும், நீ பார்த்து வளர்ந்த காடும், நீ உழுது பழகிய வயலும், நீ நீச்சல் பழகிய கண்மாயும்,நீ நடந்து பழகிய தெருக்களும், நீ சைக்கிள் ஓட்டிய சாலைகளும், நீ ஏறி விளையாடிய மரமும், உன்னைப் பெற்ற தாயும் தந்தையும், உன் ஊரும் உற்றாரும் காத்திருக்க...!

நாங்களும் உன் வருகைக்காக காத்திருக்கிறோம் வா வீரனே...!

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த அனைத்து வீரர்களுக்கு இந்த  சமர்ப்பணம்🙏🏼🇮🇳🙏🏼


Best regards,