Friday, 31 May 2019

இனி வேலையை நீங்கள் தேட தேவையில்லை ! உங்களைத் தேடி...

இனி வேலையை நீங்கள் தேட தேவையில்லை ! உங்களைத் தேடி...
 சரியான வேலைவாய்ப்பை தேடி அலையும் பட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசு ஓர் நற்செய்தியை அறிவித்துள்ளது. நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில், உங்கள் விவரங்களை பதிவுசெய்தால் போதும். தனியார் நிறுவனங்களிலிருந்து, உங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகள் உங்கள் வீடுதேடி வரும்.

✅ இன்றைய போட்டி நிறைந்த காலக்கட்டத்தில், அரசுத் துறைகளில் வேலை பெறுவது என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு கனவாகி விட்டது. அப்படியே கிடைத்தாலும், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன.

✅ இந்நிலையில், இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்ப தனியார் நிறுவனங்கள் நல்ல ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளன. இதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிகமாக விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். ஆனால், எந்த நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்ற தகவல்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்பை நழுவவிட வேண்டியுள்ளது. இனி அந்தக் கவலை தேவையில்லை.

நேஷ்னல் கேரியர் சர்வீஸ் :

✅ வேலை இல்லா இளைஞர்களுக்காக, மத்திய அரசு 'நேஷ்னல் கேரியர் சர்வீஸ்" என்ற வேலைவாய்ப்பு சேவையை, அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் தொடங்க உள்ளது. இதன் மூலம், வேலைதேடும் இளைஞர்களின் தகுதிக்கேற்றவாறு தனியார் நிறுவனங்களில் வேலை ஏற்படுத்திக் கொடுக்கும் மையமாக தபால் நிலையங்கள் தற்போது மாறிவருகின்றன.

✅ இந்திய தபால்துறையும், மத்திய தொழிலாளர் நலத்துறையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இந்த சேவை செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை, எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பதிவித்தல் முறை :

✅ பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றின் எண் போன்ற அடிப்படைத் தகவல்களை தபால் துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

✅ வேலை தேடுபவர்கள், தாங்களாக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள முடியாது. தபால் நிலையத்தின் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும்.

எவ்வாறு வேலைவாய்ப்பு கிடைக்கிறது?

✅ தற்போது 52 பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தபால் துறையின் வலைதளத்தில் பதிந்திருக்கிறார்கள்.

✅ தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்களின் விவரங்களை இணையதளத்தில் தபால்துறை பதிவு செய்துவிடும். அதில், அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களின் விவரங்கள் இருக்கும்.

✅ அந்தத் தகவல் தொகுப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள், நேர்முகத்தேர்விற்கு அழைப்பார்கள்.

✅ வேலைக்கு ஆட்கள் தேடும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இருவருக்கும் இணைப்புப் பாலமாக தபால்துறை செயல்படுகிறது.

✅ தற்போது தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ள ர் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் மட்டும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கட்டணம் :

✅ தபால் நிலையத்தில் விவரங்களைப் பதிவு செய்வதற்கு - 15 ரூபாய்

✅ தகவல்களை புதுப்பித்து கொள்ளுவதற்கு - 5 ரூபாய்

✅ பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் நகல் எடுக்க - 10 ரூபாய்

வேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Best regards,

Thursday, 30 May 2019

மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்

மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க போராடும் அன்பார்ந்த கணவன்மார்களும், எங்கு தொலைத்தோம் சந்தோஷத்தை என்று தெரியாமல் தேடும் மனைவிமார்களும் இந்த பதிவு சமர்ப்பணம்.
________________

பிரெஸ்னோ பசிபிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தில் ஒரு தம்பதியரில் உள்ள பெண்மணியை பார்த்து கேட்டார்.

"உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"

அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை.  அவர் சந்தோஷமாகவே இருந்தார். 

ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார்.  கணவர் அதிர்ந்தார்.  ஆனால், மனைவி தொடர்ந்தார். 

"என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை.  என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை.  ஆனால், நான் சந்தோஷமாக இருக்கிறேன்.  நான் சந்தோஷமாக இருப்பது என்பது அவரை சார்ந்தது இல்லை.  என்னையே சார்ந்தது.  நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம்." 

"வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு.  அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்ன பொருளால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்றால், இன்னின்ன தருணங்களில் நான் சந்தோஷமாக இருப்பேனென்றால், நான் பெரும் பிரச்சனையில் இருக்கிறேன் என்று பொருள்." 

"நம்மை சுற்றியுள்ள எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன.  மனிதர்கள், செல்வங்கள், என் உடல், தட்பவெப்பம், என் முதலாளி, சந்தோஷங்கள், நண்பர்கள், எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் எல்லாமே.  இது ஒரு நீண்ட பட்டியல்." 

"என்ன ஆனாலும் சந்தோஷமாக இருப்பது என்பது நான் எடுத்த முடிவு.   நிறைய இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை.  வெளியே சென்றாலோ, வீட்டில் இருந்தாலோ, ஏழையாக இருந்தாலோ, பணக்காரியாக இருந்தாலோ என் சந்தோஷம் குறைவதில்லை."

"திருமணத்துக்கு முன்னும் சந்தோஷமாகத்தான் இருந்தேன், பின்னும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.  என்னை பற்றி எனக்கே சந்தோஷமாக இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறேன்." 

"என் வாழ்க்கையை நான் விரும்ப காரணம் என் வாழ்க்கை மற்றவர்களதை விட சுலபமானதாக இருப்பதால் அல்ல.  நான் தனிப்பட்ட முறையில் சந்தோஷமாக இருப்பது என்று தீர்மானித்திருப்பதால்.  நானே என் சந்தோஷத்துக்கு பொறுப்பு." 

"இதை நான் ஒரு தீர்மானமாக மனதில் கொள்ளும்போது, என்னை சுமக்கும் பொறுப்பை மற்றவர்களிடமிருந்து நீக்குகிறேன்.  இது அனைவரது வாழ்க்கையையும் எளிதாக்குகிறது.  அதனால்தான், எங்கள் திருமண வாழ்க்கை இத்தனை ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்து வருகிறது" என்றார். 

கைதட்டல் ஓயவே இல்லை. 

உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள்.  வெயிலோ, மழையோ, உடல் சரியில்லையா, பணமில்லையோ, காயப்பட்டிருந்தாலோ, விரும்பப்படவில்லையோ உங்கள் மனதில் உள்ள சந்தோஷத்தை விட்டுக்கொடுக்காதீர்கள்.  உங்களை நீங்கள் மனதார மதிக்கும்வரை உங்களுக்குள் நீங்களே சந்தோஷப்பட்டுக்கொள்ளுவீர்கள்.  சந்தோஷம் உள்ளே உள்ளது.  வெளியில் இல்லவே இல்லை.இது வரை இந்த குழுவில் வந்த பதிவுகளிலேயே மிக மிக சிறந்த 100% உண்மை பொருள் அடங்கிய பதிவு ,ஒவ்வொருவரும் நேரம் கொடுத்து படித்து உணர்ந்து தெளிந்தால்,இனி வாழ்வில் ஆனந்தமே

Best regards,

Wednesday, 29 May 2019

திண்டுக்கல்பூட்டின்வரலாறு..

திண்டுக்கல்பூட்டின்வரலாறு..

பரட்டை ஆசாரி என்பவர் 1930ம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு ஒன்றினை தயார் செய்தார். அது மாங்காய் வடிவத்தில் இருந்தது. அந்தப் பூட்டுடனே இன்னொரு பூட்டினையும் தயார் செய்தார். அது மேஜைக்களுக்கு பொருத்தக்கூடிய சதுர வடிவமான பூட்டு.

இப்படி இரு வகையான பூட்டுகளைத் தயார் செய்த பரட்டை ஆசாரி. அதனை கடைகளில் விற்பனைக்காகக் கொடுத்தார். கொஞ்ச நாள்கள் கழித்து கடைக்காரர்கள் அனைவரும் ஆசாரியைத் தேடி ஓடி வந்தனர். ஆசாரிக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரையும் வரவேற்று என்ன விஷயம் என்று விசாரித்தார்.

வந்திருந்த அனைவரும் ஆசாரியைப் பாராட்டியதோடு நில்லாமல், இதுபோல் இன்னும் அதிக அளவில் பூட்டுகளைத் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆசாரியும் மகிழ்ந்து அதிக அளவில் பூட்டுகளைச் செய்ய தயாரானார். தனக்கு உதவுவதற்காக ஆள்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டார். பூட்டு வியாபாரம் அங்கிருந்துதான் சூடுபிடிக்கத் தொடங்கியது.

பரட்டை ஆசாரி மிகுந்த ஈடுபாட்டுடன் வழக்கமான ஒன்றாக இல்லாமல் அழகிய கற்பனைத்திறனோடும், நீண்ட நாள்கள் உழைக்கும் வலிமையோடும் எளிதில் உடைத்துத் திறக்க முடியாத அமைப்போடும் சிரத்தையுடன் பூட்டுகளைத் தயாரித்தார். பரட்டை ஆசாரியின் பூட்டுகளுக்கு நிகரில்லை என எல்லோரும் பாராட்டினார்கள். நிறைய ஆர்டர்கள் தேடி வந்தன.

நாளுக்குநாள் பூட்டின் வியாபாரம் அதிகமாக அதிகமாக பரட்டை ஆசாரியிடம் தொழிலைக் கற்றுக்கொண்டவர்கள் அவரிடமிருந்து பிரிந்து, தனித்தனியாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டனர்.

பூட்டுக்குத் தேவையான இரும்புகள் திண்டுக்கல்லில் அதிகமாக கிடைப்பதால் திண்டுக்கல் பூட்டு மிக மிக வளர்ச்சியடைந்து பிரபலமானது. இப்படியாக வளர்ச்சியடைந்த பூட்டுத் தொழில். 1945ம் ஆண்டு திண்டுக்கல்லில் மட்டுமல்லாது வெளியூர்களிலும் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கூட பரவலான வரவேற்பைப் பெற்றது. திண்டுக்கல் என்றால் உயர்ந்த ரகப் பூட்டுகள் என்று புகழானது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்காக 1957ம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கம் தொடங்கப்பட்டது, 1972-ல் பூட்டு விற்பனை உச்சத்தில் இருந்த சமயம். திண்டுக்கல்லில் இருநூறுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் உருவாகியிருந்தன. அதில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பூட்டு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

ஓர் இரும்பு தகட்டின்மேல் ஒர் அடையாளம் செய்து முதலில் துளைசெய்கின்றார்கள். அதன்பின்னர் பேஸ் ராட், லீவர் போன்றவைகளைத் தனித்தனியாக தயாரித்து, ஆர்க் வெல்டிங் மூலம் பேஸ்ராட், லீவர் இரண்டையும் இரும்பு தகட்டின் மீது இணைக்கின்றனர். பூட்டு தயார். தயாரான பூட்டுக்கு நிக்கல் பாலிஷ் போட்டு பூட்டை பளபளப்பாக்கின்றனர். புது பூட்டு ரெடி. கையால் மட்டுமே செய்யப்படுகின்றன பூட்டுகள்.

#டிலோ பூட்டு..
திண்டுக்கல் கூட்டுறவு சங்கம் தயாரிக்கின்ற இந்தப் பூட்டு உலகப் புகழ் பெற்றது என்றே சொல்லலாம். இந்தப் பூட்டுக்கு ஒரே ஒரு சாவிதான். அது தொலைந்துவிட்டால் பூட்டை உடைப்பது ஒன்றுதான் சிறந்த வழி. வேறு வழியே கிடையாது. ஏனென்றால் கள்ள சாவியோ, வேறு சாவியோ போட்டு இந்த பூட்டைத் திறக்க முடியாது.

#பெல் லாக்..
இந்தப் பூட்டு சற்று வித்தியாசமானது. பூட்டும்போதும், திறக்கும்போதும் மணி அடிப்பதால் இதற்கு ‘பெல் லாக்’ என்று பெயர்.

#லண்டன் லாக்..
ஆங்கிலேயர் காலத்தில் லண்டனிலிருந்து வந்த பழுது பார்ப்பதற்கு வந்த பூட்டைப் பார்த்து தயார் செய்யப்பட்டது. பூட்டினுள் ஷட்டர் போன்ற மெல்லிய காகிதம் இருக்கும். வேறு சாவி போட்டு பூட்டைத் திறக்க முயன்றால் அந்த காகிதம் கிழிந்துவிடும். அப்புறம் பூட்டைத் திறக்கவே முடியாது.

இதனை மாடலாகக் கொண்டு திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பவர்களும் இதேபோன்ற பூட்டினைத் தயார் செய்தனர். இந்தப் பூட்டுகளை பெரிய பெரிய நிறுவனங்கள் விரும்பி வாங்கினார்கள். ஒரு நிறுவனத்திற்கு 25 பூட்டுகள் தேவைப்பட்டால் 25 பூட்டுக்கும் தனித்தனி சாவிகள் கொடுக்கப்படும். அத்துடன் மாஸ்டர் கீ ஒன்றும் கொடுப்பார்கள். மாஸ்டர் கீயைக் கொண்டு 25 பூட்டுகளையும் திறக்கவும் பூட்டவும் முடியும்.

பூட்டின் விலை ரூ.100 -முதல் அதிகபட்சமாக கோயில் பூட்டின் விலை 5000 வரை இருக்கும். கோயில்களுக்காக செய்யப்படுகின்ற ஒரு பூட்டின் எடை எவ்வளவு தெரியுமா?
22 கிலோ!!!!!
நன்றி திரு  Chockalingam Raman அய்யா

Best regards,

Tuesday, 28 May 2019

புதுரக மோசடி.....

புதுரக மோசடி.....
முன்பெல்லாம் சிலர் போனில் நான் பேங்க் மேனேஜர் பேசுறேன். உங்க ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிடுச்சு புதுப்பிக்கனும்
னு சொல்லி அக்கவுண்ட் நம்பர் வாங்கி பணத்தை ஆட்டய போட்டுட்டு இருந்தாய்ங்க..இப்போ அது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு அதனால் புது டிரெண்ட் மாத்திட்டானுங்க இப்போ...
நேற்று நம்ம நண்பர் ஒருவருக்கு போன் வந்திருக்கு எல்.ஐ.சி ல இருந்து பேசுறோம். உங்க பழைய பாலிசி ஒன்னு பணம் கட்டாம இருக்கீங்க அதை குளோஸ் பண்ணி ரூ.47000 அனுப்பினோம் நீங்க செக் வாங்கவில்லை அதனால் உங்க அக்கவுண்ட் நம்பர், ஆதார் நம்பர் கொடுங்க கிரெடிட் பண்றோம்னு சொல்லிருக்கானுங்க..
நண்பர் உடனே எனக்கு அழைத்து பேசிட்டு கான்பரன்ஸ் போட்டார் நான் அவனுங்க கிட்ட எங்கிருந்து பேசுறீங்கனு கேட்டேன். எல்.ஐ.சி சார்னு சொன்னான். எந்த பிராஞ்ச்னு கேட்டேன் சென்னை கே.கே. நகர்னு சொன்னான். என்ன விசயம்னு கேட்டேன் நாங்க அவருக்கு செக் அனுப்பினோம் வாங்கலனு சொன்னான்.
எதில அனுப்பினீங்க? என்று கேட்டதற்கு தபாலில் அனுப்பினோம்னு சொல்லிட்டு சரி இவ்வளவு கேட்கிறீங்க? நீங்க யாருங்கனு கேட்டான். டே விளக்கெண்ணெய் கருப்பா நீ இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தியே அந்த எல்.ஐ.சிக்கே நான் தாண்டா மேனேஜர்னு சொன்னதும் போன் கட் பண்ணிட்டான்.
இதுபோல ரூம் போட்டு யோசித்து பணத்தை ஆட்டய போடுறானுங்க.. அதனால் பொதுமக்கள் சூதானமா இருங்க இல்ல உங்க பணம் போயிடும். எனவே படித்து விட்டு இதை அதிகம் பகிரவும்...
பொதுமக்கள் நலன் கருதி..
சு.நாகராசன் MSW
பல்லடம் தாலூக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் திருப்பூர் மாவட்டம்
விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள்

படித்தேன் பகிர்ந்து கொண்டேன்

Best regards,

Monday, 27 May 2019

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்😢😭

ஆண்களே வாய் விட்டு அழுங்கள்😢😭

ஓர் ஆண் வாய் விட்டு அழுவது நல்லது என்று சொல்லப் போகும் கட்டுரை.

நம் ஊரில் ஒரு ஆண் அழுதால் அதை அவனது பலவீனம் என்றும், “பொட்டச்சி போல அழாதே” என்றும் சொல்லி அடக்கி விடுகிறோம். ஆனால் உலகின் புகழ் பெற்ற ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை பொதுவிடத்தில் காட்டிக்கொள்ளத் தயங்குவதே இல்லை.

டென்னிஸ் விளையாட்டுச் வீரர் திரு. ஃபெடரர் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அழுது விடுவார். இதற்கு அவர் சொல்லும் காரணம்: “விளையாட்டு வீரர்கள் உணர்ச்சி வசப்பட்டு அழுவதை அவர்களது விசிறிகளால் புரிந்து கொள்ள முடியும்.

அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது. வெற்றியோ, தோல்வியோ, இரண்டும் எங்களைப் பாதிக்கின்றன.

இரண்டைப் பற்றியும் நாங்கள் சிந்திக்கிறோம். மனது உடைந்து அழுவது, மன பாரத்தை வெளியில் கொட்டுவது எல்லாமே சரிதான்;

நாங்களும் மனிதர்கள் தான் என்பதை எங்கள் அழுகை காண்பிக்கிறது. அழுவது ஆண்களின் இயல்பான குணம்!”

இவரைப் போலவே, திரு அமீர்கான், தனது ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சிகளின் இடையிலும், சில சமயம் முடிவிலும் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரைத் துடைக்காமலேயே உட்கார்ந்திருப்பார்.

 பார்வையாளர்களும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீண்டு வந்ததையும் கேட்டு கண்ணீர் மல்க உட்கார்ந்திருப்பார்கள்.

அழுகை நம் மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. அழுகை என்பது நல்லியல்பு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கண்ணீர் என்பது நம் கண்களில் அமைந்துள்ள கண்ணீர் சுரப்பிகளிலிருந்து உண்டாகிறது.

கண்ணீரில் மூன்று விதம் உண்டு.

அடிப்படை கண்ணீர்: (Basal tears) இது நமது கண்களை ஈரப்பசையுடன் வைக்கவும், தூசியை அகற்றவும் உதவுகிறது.

எதிர்வினைக் கண்ணீர்: (Reflex tears) கண்களில் ஏதாவது விழுந்து விட்டாலோ, அதிக நெடியினால் கண்கள் பாதிக்கப் பட்டாலோ, அல்லது இருமும்போதும், தும்மும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும் வருவது இந்தவகைக் கண்ணீர்.

கடைசி வகையும் முக்கியமானதும் தான்

உணர்வுசார் கண்ணீர்: (emotional tears) பலமான உணர்ச்சிக் கொந்தளிப்பு, கோபம், பயம், மன அழுத்தம், துக்கம், சில சமயம் மித மிஞ்சிய சந்தோஷம் இவை இந்த வகைக் கண்ணீருக்குக் காரணம்.

மின்னசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சிகள், உணர்வுசார் கண்ணீரின் பயன்களை பேசுகிறது..

உணர்வுசார் கண்ணீர் நம் உடலில் மன அழுத்தத்தாலும், கவலையினாலும் சேர்ந்து இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

ஆண்களை விட பெண்கள் 4 மடங்கு அதிகம் அழுகிறார்கள். பெண்கள் உணர்வுகளில் வாழ்கிறார்கள். ஆண்களோ எல்லாவற்றையும் வெளிக்காட்டாமல் உள்ளேயே அடக்கிக் கொள்ளுகிறார்கள்.

ஆண்களைப்போல் குழந்தைகளும் பிறந்த மூன்று மாதத்திற்கு கண்ணீர் வடிப்பதில்லை.

ஆண்கள் ஒரு வருடத்தில் சிலமுறை அழுகிறார்கள். ஆனால் பெண்கள் மாதத்தில் ஒருமுறையாவது அழுகிறார்கள்.

உணர்வு சார் கண்ணீர் பலசமயங்களில் மன அழுத்தத்தை குறைக்க பயன்படும். அதனால்தான் சிலர் தனிமையில் அழுகிறார்கள். அழுதபின் நம் மனது புத்துணர்வு பெருகிறதும் இதனால்தான்.

 உணர்வு சார் கண்ணீரில், மற்ற இரண்டு கண்ணீர்களில் இல்லாத மாறுபட்ட இரசாயனப் பொருட்கள் இருக்கின்றன;

 இவை நமக்கு ஓர் இயற்கையான வலி நிவாரணியாக செயல் படுகிறது. அதன் காரணமாகவே நம் மன அழுத்தம் குறைகிறது.

உணர்வுசார் கண்ணீர் வருவதற்கு மிகப் பலமான, உணர்வு பூர்வமான தூண்டுதல் இருக்க வேண்டும். யாரும் சும்மா அழுவதுபோல ‘பாவ்லா’ செய்யமுடியாது. அழுகையோ, சிரிப்போ உணர்வு பூர்வமான சூழலை மூளை உணர வேண்டும்.

 அதனால் ஒருவர் அழும்போது மூளையின் பல பகுதிகள் வேலை செய்கின்றன. இதன் காரணமாக, உடல்ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அழுகையோ, சிரிப்போ முகத்தின் தசைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இதயத் துடிப்பு, மூச்சுவிடும் அளவு இவை அதிகரிக்கின்றன. குரலும் மாறுகிறது.

ஆனால் சிலர் அதிகம் அழுவதற்கு என்ன காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. சமூகத் தாக்கம், சூழ்நிலைகளைக் காரணம் காட்டலாம்.

 பெண்களை விட ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புவதால், அவர்கள் அழுவதை சமூகம் என்றுக் கொள்ளுவதில்லை.

இதனாலேயே ஆண்கள் தங்களது மன அழுத்தத்தை சரி செய்ய நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

நமக்குப் பிடித்தவர்களின் அருகாமையில், அண்மையில் அழுது, நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவுகளை கொடுக்கும்.

ஒருவர் அதீதமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இதயத் துடிப்பு அதிகமாகிறது; வியர்வை பெருகுகிறது. அழுவது இதயத் துடிப்பை நிதானப் படுத்தி, அமைதியைக் கொடுக்கிறது.

மிக நெருங்கியவர்களின் மரணம், காதல் தோல்வி முதலியன ஆண்களை அழவைக்கின்றன.

ஆண்கள் அழுவதைப் பற்றி ஆண்கள் என்ன சொல்லுகிறார்கள்..?

ஆண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதைக் காண்பிப்பதாக 32% ஆண்கள் கூறுகிறார்கள்.

அழும் ஆண் உண்மையானவன் என்று 29% கூறுகிறார்கள்.

ஆண் அழுவதை ஏற்றுக் கொள்ளுவதாகவும் அழுவதால் தங்களது ஆண்மைக்கு இழுக்கு இல்லை என்றும் 20% கூறுகிறார்கள்.

அழுவது தங்களது பலவீனத்தைக் காட்டுகிறது என்று 19% சொல்லுகிறார்கள்.

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியுமா ?

தேவை இல்லை என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். உணர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து பின் அழுகையாக மாறுகிறது. அதனால் அழுகையை அடக்குவது சரியான செயல் அல்ல என்கிறார்கள்.

அழுவது நல்லது என்றாலும், நீண்ட நேரம் அல்லது நீண்ட நாட்கள் அழுவது நல்லதல்ல. இது மனச் சோர்வின் அறிகுறி.

அவ்வப்போது கண்ணீர் விடுவது நம் கண்களை கழுவி நமது வாழ்க்கையை நல்ல முறையில் பார்க்க உதவும்.


Best regards,

Sunday, 26 May 2019

தயவுசெஞ்சு இனிமேல் லுங்கி கட்டாதிங்க ?? வெள்ளை வேஷ்டிக்கு மாறுங்கள் !! என்ன விசயம்ன்னு தெரிஞ்சா அதிர்ச்சி ஆகிடுவிங்க !!

தயவுசெஞ்சு இனிமேல் லுங்கி கட்டாதிங்க ?? வெள்ளை வேஷ்டிக்கு மாறுங்கள் !! என்ன விசயம்ன்னு தெரிஞ்சா அதிர்ச்சி ஆகிடுவிங்க !!

லுங்கி அணியாதீர்கள். ஒரு லுங்கி தயாரிக்க சுமார் 4,000 லிட்டர் குடிக்கும் நீரில் சாயம் கலக்கப்பட்டு வீணாகிறதுஇந்த ஆடைமுறை தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யெமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆடைமுறையாகும்.. லுங்கி என்பது இந்திய-தமிழ் கலாச்சாரமே கிடையாது. நம் நாட்டு உயர் வெப்ப நிலைக்கு லுங்கி சரியான உடை கிடையாது. இதன் முனைகள் தைக்கபடுவதால் அதாவது மூட்டபடுவதால் காற்றோட்டம் தடைபடுகிறது. இது ஆரோக்கியமோ, மரியாதையோ கிடையாது.
மாறாக வெள்ளை வேஷ்டி, அதுவும் கைத்தறி வேஷ்டி சாயமிடாமல் கிடைக்கும். இதனால் குடிநீரில் சாயம் கலக்கபடும் என்ற பயம் இருக்காது, குடிநீரும் வீணாகாது..வீட்டில் இருக்கும்போது கட்டிக்கொள்ள பயன்படுத்தலாம். மூட்டுதலும் அதாவது முனைகள் தைக்கபடுதல் இங்கு இல்லை.. செலவும் மிக குறைவு. மிக நல்ல வேட்டி நூறு ரூபாய் விலைதான் இருக்கும். ஆனால் ஒரு நல்ல லுங்கி வாங்க முன்னூறு ருபாய் செலவு செய்ய வேண்டும்!
நீங்களே முடிவு செய்யுங்கள். மூன்று மடங்கு விலை கொடுத்து, பலர் குடிக்கும் நீரில் விஷம் கலந்து, ஆரோக்கியம் அற்ற வெளிநாட்டு உடை உடுத்துவதா..? அல்லது நம் பாரம்பரிய உடையை உடுத்துவதா..? இயற்கையை பாதிக்காததும், மரியாதை தரக்கூடியதும், உடலுக்கும் நல்லதான வேட்டியை மறுக்கலாமா..?எனவே தயவுசெய்து இனி லுங்கி கட்டுவதை நிறுத்திவிட்டு வெள்ளை வேஷ்டிக்கு மாறுங்கள்.

தமிழனின் பாரம்பரிய உடை வேட்டிதான்.
நம் முன்னோர்கள் வீட்டிலும் சரி,வெளியிலும் சரி வேட்டிதான் உபயோகபடுத்தினார்கள்.
இந்துக்களாகிய நாம் கோவிலுக்கு செல்லும் போது கண்டிப்பாக வேட்டிதான் உடுத்தி செல்ல வேண்டும்.நம் இந்து தர்ம பாரம்பரியத்தையும் காப்பாற்றியது போல் இருக்கும்,நாம் குடிக்கும் நீரையும் காப்பாற்றியது போல் இருக்கும்.மேலும் நம் சந்ததிக்கு தூய்மையான நீரை கொடுத்தது போல் இருக்கும்

Best regards,

Saturday, 25 May 2019

நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் பாரதிய ஜனதாக கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. எனினும், ஆந்திரா, கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக 1 தொகுதிகளில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, ஆந்திராவில் பாஜக போட்டியிட்ட 24 தொகுதிகளில், 18 தொகுதிகளில் நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவான பெற்று தோல்வியைத் தழுவியுள்ளது. வாக்கு சதவீதத்தை குறிப்பிடுகையில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது, அதிக பட்சமாக அரக்கு தொகுதியில் 17,867 வாக்குகளை பாஜகவும், 47,977 வாக்குகளை நோட்டாவும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக, நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் வாங்கிய தொகுதிகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதம் விவரம்:

ஆந்திர பிரதேசம்

1.அமலாபுரம் 

பாஜக- 11516 (0.94%)

நோட்டா -16,449 (1.34%)

2.அனக்காபள்ளி

பாஜக- 13276 (1.07%)

நோட்டா- 34,897 (2.82%)

3.அனந்தபூர்

பாஜக-7604 (0.57%)

நோட்டா - 16,466 (1.23%)

4.அரக்கு

பாஜக-17,867 (1.66%)
நோட்டா- 47,977 ( 4.46%)

5.பாபட்லா

பாஜக- 10,351 (0.82%)

நோட்டா- 13,218 (1.04%)

6.சித்தூர்

பாஜக- 10,496 (0.8%)
நோட்டா- 20,556 (1.56%)

7.எலுரு

பாஜக - 8,412 ( 0.63%)

நோட்டா - 23,880 (1.8%)

8.ஹீண்டுபூர்

பாஜக - 13,805 (1.03%)

நோட்டா - 17,428 (1.3%)

9.கடப்பா

பாஜக- 4,085 ( 0.33%)

நோட்டா - 14,692(1.2%)

10.காக்கிநாடா

பாஜக- 9,596 ( 0.78)

நோட்டா- 17,153 (1.3)

11.மச்சிலிபட்டணம்

பாஜக- 6,462 (0.52%)

நோட்டா- 14,077 (1.13%)

12.நந்யாள்

பிஜேபி- 9,066 (0.7%)

நோட்டா - 9,791 (0.75%)

13.நெல்லூர்

பாஜக- 12,513 (0.93%)

நோட்டா- 17,161 (1.33%)

14.ஒங்கோலெ

பாஜக- 8,229 (0.61)

நோட்டா- 20,865(1.55)

15.ராஜமுந்திரி

பாஜக- 12,334 (0.99)

நோட்டா- 18,087 (1.45)

16.ஸ்ரீகாக்குளம்

பாஜக- 8,390 (0.72)

நோட்டா- 25,545 (2.21)

17.திருப்பதி

பாஜக- 16125 (1.23)

நோட்டா- 25781 (1.96)

18.விழியநகரம்

பாஜக- 7,266 (0.6)

நோட்டா- 29,501 (2.42)

Best regards,

Monday, 20 May 2019

கெட்ட வார்த்தகளா? கேட்ட வார்த்தைகளா?

கெட்ட வார்த்தகளா?
கேட்ட வார்த்தைகளா?

😜😜😜பையன் அப்பாவிடம் சொன்னான் '😜😜 அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் '

😨' எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க ?"😳

🤣"கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..

9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு சொன்னேன் ..

அப்றம் 7 அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க ..அதே 🤦‍♀எழவு தானே🤦‍♀ வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "

" ஆமா 🤦‍♀அதே எழவு தானே🤦‍♀ வரும்...சரி ,சரி நாளைக்கு வரேன் "

😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்😜

"🤣 அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"🤣

"😨 இல்லடா நாளைக்கு வரேன்😳 "

😜" சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு "😜

"😳 எதுக்குடா ?😨

😜" drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..

அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்..ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..

அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்🤦‍♀ லூசு-ன்னு சொன்னேன்..🤦‍♀

உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..

" அதானே 🤦‍♀சரியான லூசு 🤦‍♀.சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "

😜அடுத்த நாள் பையன் அப்பாவிடம் கேட்டான்

" இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா "😜

😨" இல்லடா நாளைக்கு வரேன் "😳

"😜 நீ போக வேணாம் பா "😜

😳" ஏண்டா?"😨

" 😜என்னை ஸ்கூலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க "😜

"😳 என்னாச்சுடா?"😨

"😜 ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் ..😜

😜அங்க கணக்கு டீச்சர் ,பி.டி. டீச்சர் சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க "😜

"😳 சயின்ஸ் டீச்சரா ..!! 🤦‍♀அந்த நாய் ஏன்டா 🤦‍♀அங்க இருந்தான் ?"

" 😜அதே தான் பா நானும் கேட்டேன் .
டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க "😜

😂😂😂நீதி: குழந்தைகள் கெட்ட வார்தைகள் பேசுவதில்லை

கேட்ட வார்தைகளையே பேசுகிறார்கள்..

Best regards,

Sunday, 19 May 2019

மனிதனின் வெற்றிகள்

"மனிதனின்  வெற்றிகள்:"

1 −  வயதில்   வெற்றி  என்பது  பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .

4  −  வயதில்  வெற்றி  என்பது   ஜட்டியில்  சிறுநீர்  போகாமல்  இருப்பது . . .

8 − வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .

12 −  வயதில்  வெற்றி  என்பது  நல்ல   நண்பர்கள்  இருப்பது . . .

18 − வயதில்   வெற்றி   என்பது  ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . .

23 −  வயதில்  வெற்றி  என்பது   பல்கலைகழகத்தில்  பட்டம்   பெற்றிருப்பது . . .

25 − வயதில்  வெற்றி  என்பது  பணம்  சம்பாதிப்பது . . .

30 − வயதில்  வெற்றி  என்பது  குடும்பத் தலைவனாய் இருப்பது . . .

35 − வயதில்  வெற்றி  என்பது  பணத்தை உருவாக்குவது . . .

45 − வயதில்  வெற்றி என்பது  இளமையாய்  தோன்றுவது . . .

50 − வயதில்  வெற்றி  என்பது  பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .

55 − வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . . .

60 − வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  ஓட்டுநர்  உரிமம்  வைத்திருப்பது . . .

65 − வயதில்  வெற்றி  என்பது  நோயில்லாமல்  இருப்பது . . .

70 − வயதில்  வெற்றி என்பது  யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . .

75 − வயதில்  வெற்றி  என்பது  பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .

81 − வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி  தெரிவது . . .

86 − வயதில்  வெற்றி  என்பது   மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .

90 − வயதில்  வெற்றி  என்பது  யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

வாழ்க்கை என்பது  ஒரு வட்டம். . .


Best regards,

Saturday, 18 May 2019

ஐந்து முறை தோல்வி... ஒரு விஷயம்தான் மனசுல ஓடுச்சு!’’ சிவில் சர்வீஸில் வென்ற விழுப்புரம் சித்ரா

'ஐந்து முறை தோல்வி... ஒரு விஷயம்தான் மனசுல ஓடுச்சு!’’ சிவில் சர்வீஸில் வென்ற விழுப்புரம் சித்ரா

";எத்தனை முறை தோற்றாலும் என்னால் முடியும்னு மன தைரியத்துடன் போராடினால் நாம்தான் வெற்றியாளர்"; என புன்னகை பொங்க பேசுகிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் இன்ஜீனியர் சித்ரா. இவர் நடந்த முடிந்த சிவில்சர்வீஸ் தேர்வில் இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து சித்ராவிடம் பேசினோம்.
"; எனக்குச் சொந்த ஊர் விழுப்புரம். மிடில் க்ளாஸ் குடும்பம். படிச்சது எல்லாம் சாதாரண பள்ளியில்தான். அப்பா ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா இல்லத்தரசி. பி.டெக் இன்ஜீனியரிங் முடிச்சதும், சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்கப்போறேன்னு வீட்டில் சொன்னேன். மிடில் கிளாஸ் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் சராசரி கற்பனைக் கோட்டைத் தாண்டிய ஆசை என்னோடது என்றாலும்,  செலவை நாங்க பார்த்துக்கிறோம்னு அப்பா சொன்னாலும் என் குடும்ப நிலைமை எனக்குத் தெரியும்ங்கிறதுனால வேலைக்குப் போயிட்டே படிக்கிறேன்னு சொன்னேன். முழு நேரமும் படித்தால்தான் வெற்றி பெற முடியும்னு நிறைய பேர் சொன்னாங்க. அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துட்டே தேர்வுக்குப் படிக்க ஆரம்பிச்சேன். முதல் முறை தேர்வு எழுதும்போது தேர்வு பற்றி எந்தப் புரிதலும் இல்லை. எந்த கைடன்ஸும் இல்லாமல் தேர்வு... அதுமூலமா தேர்வு முறை பற்றி புரிதலை நானே வளர்த்துக்கொண்டேன். என்னுடைய விருப்பப் பாடம் தமிழ் என்பதால் தமிழுக்கும் நடப்புச் செய்திகளுக்கும் மட்டும் பயிற்சி வகுப்புகள் போக ஆரம்பிச்சேன். வேலைக்குப் போயிட்டு வந்து ஐந்து மணிநேரமாவது படிப்பேன். தனியார் நிறுவனம் என்பதால் தேர்வு சமயத்தில் படிக்கவும், தேர்வு எழுதவும் தொடர்ச்சியான விடுமுறை கிடைக்காது. அதனால் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு வரும் சமயத்தில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுட்டு எப்படியும் பாஸ் ஆயிருவேன் என்ற நம்பிக்கையில் படிக்க ஆரம்பிப்பேன்.
2013-ம் ஆண்டு முதல் முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் நான் எடுத்த மதிப்பெண் ரொம்பவே குறைவு. அடுத்ததா 2014ம் ஆண்டு தேர்வு எழுதினேன். 15 மதிப்பெண்ணில் வெற்றியை இழந்தேன். அதற்கடுத்த வருஷம் .03-யில் வாய்ப்பு பறிபோனது. போதும்டா இந்தப் படிப்புனு சோர்ந்துபோனது கிடையாது. ஜெயிச்சே ஆகணும்ங்கிற வெறி இருந்துட்டே இருந்தது. நான் பாஸ் ஆகலைன்னு தெயுற அந்த நிமிஷத்துலேருந்து அடுத்த வருடத் தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பேன். அந்த நம்பிக்கைதான் ஆறாவது முயற்சியில் எனக்கான வாய்ப்பை வசப்படுத்தியது.
பொதுவா பெண்கள் இந்த மாதிரியான ஒரு துறைக்கு வரணும்னா, அவங்க குடும்பம் முழு சப்போர்ட் பண்ணணும். அந்த கிஃப்ட் எனக்கு கிடைச்சுது. அப்பா என்னை படிச்சது போதும்னு ஒரு நாள்கூட சொன்னது கிடையாது. நான் சென்னையில் தங்கி வேலை பார்த்துக் கொண்டே தேர்வுக்குத் தயாராகிட்டு இருந்தேன். தேர்வு நெருங்கிருச்சுனா அப்பா, அம்மா என் கூடவே வந்து தங்கி கூடவே இருந்து தைரியம் கொடுப்பாங்க. நான் எக்ஸாம் ஹாலுக்குப் போயிட்டா மதிய சாப்பாட்டோடு எனக்காக காத்துட்டு இருப்பாங்க ரெண்டு பேரும். இந்த மாதிரியான எத்தனையோ வழிகளைத் தாண்டிதான் ஒரு வெற்றியாளராக உங்க முன்னாடி நிக்கிறேன்"; என்றவர்,
நான் பள்ளி படிப்பு வரை 60 சதவிகித மதிப்பெண்கள் எடுக்கும் சராசரி மாணவிதான். உண்மையைச் சொன்னா, பள்ளிப் படிப்புக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கிறதைப் புரிஞ்சுகிடணும். சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம்ங்கிறதுதான் ரொம்ப முக்கியம். பொதுஅறிவு, நடப்புச் செய்திகள் என எப்போதும் அப்டேட்டா இருக்கணும். சிவில் சர்வீஸ்க்கு ரெடியாகுறீங்கனா... முதல்ல ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வு முறைகளைப் பற்றியும், எப்படிப் படிக்கணும் என்பதையும் தெரிந்துகொண்டால் இன்னும் எளிதா வெற்றி பெறலாம். நண்பர்களுடனான குரூப் டிஸ்கஷன், மாதிரித் தேர்வுகள் போன்றவை தேர்வு நேரத்தில் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கும். பொதுவாக நேர்முகத்தேர்வு கொஞ்சம் சிரமமான ஒண்ணுதான். நம்முடைய ரெஸியூம்ல நாம சொல்லியிருக்கிற தகவல்களை வச்சுதான் கேள்விகள் கேட்பாங்க. அதை எதிர்கொள்வதற்குப் பயிற்சிகள் அவசியம்.
என்னிடம் ";ஏன் சாப்ட்ஃவேர் துறையை விட்டுவிட்டு இந்தத் துறையைத் தேர்வு செய்தீர்கள்' என்ற கேள்வியைக் கேட்டார்கள். ''தாமரையைச் செந்தழல் கொண்டு மலர வைக்க முடியாது, அதற்கு இயற்கையான சூரிய ஒளி வேண்டும். சூரிய ஒளி போன்றதுதான் எனக்கு இந்த ஆட்சிப்பணி''னு பதில் அளிச்சேன். ஆனா அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது எனக்கே இன்னும் ஆச்சர்யமாதான் இருக்கு. என்னோட ரேங்க் 296. எந்தத் துறையில எனக்கு போஸ்டிங் வரும்னு தெரியலை. ஆனா, எதுவா இருந்தாலும் அதுல தடம் பதிப்பேன்'' என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறார் சித்ரா.

Best regards,

Friday, 17 May 2019

கண்களை கலங்க வைத்த பதிவு

கண்களை கலங்க வைத்த பதிவு.
படித்தது, பிடித்தது.
அதனால் பகிர்கிறேன்.

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும்
வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.

அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்,

கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு,
சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் – பல வருடங்களுக்கு
முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.

கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

வாழ்க வளமுடன்.

Best regards,

Thursday, 16 May 2019

100 படிப்புகள் வேஸ்ட்: அரசாணை வெளியீடு!

100 படிப்புகள் வேஸ்ட்: அரசாணை வெளியீடு!


அரசுப் பணியில் சேர்க்கப்படுவோரின் பட்டப் படிப்புகள் மற்றொரு படிப்புக்கு இணையானவையா இல்லையா என்பதில் 100 பட்டப்படிப்புகள் இணையில்லாதவை(Non-Equivalence) என்று அரசு ஆணையிட்டுள்ளது.


அரசுப் பணிகளில் சேர்க்கப்படும் நபர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் பங்கேற்போர் அரசுப் பணிக்கு தகுதியானர்களா என்று நிர்ணயம் செய்வதில் அவர்கள் படித்துள்ள பட்டப் படிப்புகள் ஏற்புடையதா என்று தேர்வுக் குழுவினர் தெரிந்து கொள்ள வசதியாக எந்தெந்த படிப்புகள் எதற்கு இணையானவை(Equivalence) அல்லது இணை இல்லாதவை(Non-Equivalence) என்று முடிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி 60வது இணைக்குழு கூட்டம்(Equivalence Committee Meeting) நடந்தது.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர், இணைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.


அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி, பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பட்டப் படிப்புகள், இணையானவை, இணை இல்லாவை என 100 படிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது தொடர்பாக அரசாணை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர், இணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் அனுப்பிய பட்டில்களை அரசு கவனமுடன் பரிசீலித்து, அந்த பட்டிலுக்கு ஒப்புதல் அளித்து அரசாணை( எண் 66, 24.4.19) பிறப்பித்துள்ளது.

அந்த ஆணை அனைத்து பல்கலைக் கழகம், கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தற்போது பள்ளிக் கல்வித்துறைக்கும் இந்த பட்டியல் தொடர்பான அரசாணை வந்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள இணை மற்றும் இணையில்லா படிப்புகள் ஆசிரியர் பணி நியமனத்தின் போதும் பரிசீலிக்கப்பட உள்ளது


Best regards,

Tuesday, 14 May 2019

தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது....

தந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்தது....

சவுதி அரேபிய தலைநகரம் ரியாத் நீதிமன்றத்தில் 80 மற்றும் 70 வயதான இரண்டு சகோதரர்கள் நடத்திய வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.....

வழக்கிற்கான காரணம்தான் விசித்திரமானது.

100 வயதிற்கும் மேலான தனது தந்தையை கடந்த 40 வருடங்களுக்கும் மேல் கவனித்து வருவது தனது 80 வயதான அண்ணன் என்றும்,  இனியுள்ள காலம் தந்தையை நான் கவனித்து   
 கொள்கிறேன் என்று சொன்ன பிறகு அண்ணன் அனுமதிக்கவில்லை என்றும் எனவே நீதிமன்றம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் 70 வயதான சகோதரன் வழக்கு தொடர்ந்தார்...

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. என்ன வந்தாலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பை யாருக்கும் விட்டுத் தரமாட்டேன் என்று அண்ணனும், கடந்த 40 வருடங்களாக அண்ணன் தந்தையை கவனித்து வருவதால் இனிமேலுள்ள காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டும் என்று தம்பியும் வாதம் செய்தனர்.

நீதிபதிக்கு ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறினார். இருந்தாலும் ஒரு தீர்ப்பு சொல்லியாக வேண்டுமே....எனவே இனியுள்ள காலம் இரண்டு பேரும் தந்தையை மாறி மாறி கவனித்து கொள்ளலாமே என்ற கருத்தை சொன்னார். ஆனால் இதற்கு இரண்டு பேரும் உடன் படவில்லை.

நீதிபதி தந்தையிடம் கருத்து கேட்டார். தந்தை எனக்கு என்னுடைய மக்கள் எல்லாரும் சமம். அவர்களிடம் எனக்கு வேற்றுமை காண முடியாது என்று அழுது கொண்டே சொன்னார்.

நீதிபதி மீண்டும் குழப்பத்தில்.....
கடைசியில் நீதிபதி ஒரு முடிவுக்கு வந்து தனது தீர்ப்பைக் கூறினார்.  கடந்த 40 வருடங்களாக தந்தை பெரிய மகனின் கவனிப்பில் இருந்து வந்துள்ளார். இப்போது பெரிய மகனுக்கு 80 வயதாகி முதுமை அடைந்துள்ளதாலும், மேலும் தந்தையை கவனிக்கும் பொறுப்பு மக்கள் அனைவரின் கடமை என்பதாலும் இனிவரும் காலம் தந்தையை கவனிக்கும் பொறுப்பை இளைய மகனிடம் ஒப்படைக்கிறேன்.

தீர்ப்பைக் கேட்டு அழுது புலம்பிய பெரிய மகன்  நீதிபதியைப் பார்த்து, “ நீங்கள் சொர்க்க வாசலில் இருந்து என்னை அகற்றியுள்ளீர்கள்..
என்னுடைய சொர்க்க வழியை நீங்கள் அடைத்து விட்டீர்கள்....”

பெரிய மகனாகிய முதியவர் அழுது புலம்பும் இந்த காட்சியுடன் கூடிய செய்தியை சவுதி செய்தித் தாள்களும் ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன...

இந்த வழக்கு தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வேறுபட்ட வழக்கு என்றும், இந்த வழக்கில் தீர்ப்பு கூற தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் நீதிபதி கூறினார்....
இதையும் செய்தித் தாள்கள் வெளியிட்டன.

தாய் தந்தையரை கால்பந்தைப் போல் அங்கும், இங்கும் தட்டி விளையாடுவதும், முதியோர் இல்லங்களில் அநாதைகளைப் போல் கொண்டு தள்ளுவதும் நடக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அபூர்வமான வழக்கு வந்ததை பார்க்கும் போதுதான் இந்த வழக்கு ஏன் இவ்வளவு பிரபலமடைந்தது என்று தெரியும்.

தாய் தந்தையருக்கு சேவை செய்து சுவர்க்கத்தை அடையும் நற்பாக்கியம் நம் அனைவருக்கும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

Best regards,

Monday, 13 May 2019

AC யின் சரியான பயன்பாடு:

AC யின் சரியான பயன்பாடு:
சூடான கோடை தொடங்கியுள்ளது. 
 நாம் தொடர்ந்து
ஏர் கண்டிஷனர்கள் பயன்படுத்துகிறோம்.
அதில் சரியான முறையை பின்பற்றுவோம்.

தமிழ்நாடு மின்சார வாரிய செயல் பொறியியலாளரால் அனுப்பப்பட்ட மிகவும் பயனுள்ள தகவல்.👇


பெரும்பாலான மக்கள் 20-22 டிகிரிகளில் தங்கள் ஏசியை இயக்கும் பழக்கம் உள்ளவர்கள்.  மேலும் குளிர்ச்சியாக இருக்கும்போது, ​​அவர்கள் போர்வையால் போர்த்தி கொள்கின்றனர்.
இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி ???

நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்று உங்களுக்குத் தெரியுமா? 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் சமாளிக்க முடியும்.
* இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.*

அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, ​​உடல் தும்மல், நடுக்கம், ஏற்படுகிறது.

நீங்கள் 19-20-21 டிகிரிகளில் ஏசியை இயக்கும்போது, ​​அறை வெப்பநிலையானது சாதாரண உடல் வெப்பநிலையைவிட மிகக் குறைவாகவும், உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் பாதிக்கவும் உடலில் உள்ள சிறுநீர்ப்பை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. கீல்வாதம் போன்ற நீண்ட கால  தீமைகள் பல ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் ஏசி இருக்கும் போது எந்த வியர்வையும் வெளிப்படுவது இல்லை. அதனால் உடலின் நச்சுகள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன், தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.

இது போன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏசி இயக்கும்போது, ​​அது 5 நட்சத்திர 
தரத்துடன் இருந்தாலும்கூட, தொடர்ந்து முழு சக்தியிலும் இயங்குகிறது, அதிகமான மின்சாரம் உறிஞ்சப்படுகிறது,

*ஏசி இயக்க சிறந்த வழி என்ன ?? *
25 டிகிரிக்கு வெப்பநிலை அமைக்கவும்.
 25+ டிகிரிகளில் ஏசி இயக்கவும்.
மெதுவான வேகத்தில் விசிறியை வைப்பது சிறந்தது.

இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உங்கள் உடல் வெப்பநிலையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.  மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.

இதில் மற்றொரு சாதகமாக, AC குறைந்த மின்சாரம் சாப்பிடுவதால், மூளையின் மீது இரத்த அழுத்தம் குறையும் மற்றும் சேமிப்புடன் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும். எப்படி ??

26 டிகிரியில்  ஏறத்தாழ 10 லட்சம் வீடுகள் ஏசி பயன்படுத்துவதன் மூலம் இரவில் ஏசி ஒன்றுக்கு சுமார் 5 யூனிட்களை நீங்கள் சேமிக்கலாம்.  எனில், நாளொன்றுக்கு 5 மில்லியன் யூனிட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

பிராந்திய அளவில் இந்த சேமிப்பு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான அலகுகள் இருக்கலாம்.

தயவு செய்து மேலே குறிப்பிட்டபடி, உங்கள் AC ஐ கீழே 25 டிகிரிகளுக்கு கீழ் இயக்க வேண்டாம். உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

பொது ஆர்வத்தில் முன்னனுப்பப்பட்டது.

சக்தி மற்றும் சக்தி அமைச்சகம்.
இந்திய அரசாங்கம்.

Best regards,

நன்றி சொல்வதன் முக்கியத்துவம்

நன்றி சொல்வதன் முக்கியத்துவம் 💗💗💗💗💗

நம்முடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதே போல் அந்த மாற்றம் விரைவாக நிகழ வேண்டும் என்றும் ஆசைப்படுவோம்.

ஆனால் அவசரம் என்பது கூட ஒரு எதிர்மறை உணர்வு தான்.

மாற்றங்கள் விரைவாக நிகழ வேண்டும் என்று சொன்னால் நாம் நன்றியுணர்வோடு வாழ வேண்டியது அவசியம்.

இதுவரை நீங்கள் நன்றியுணர்வோடு இருந்தீர்களா என்பது இப்போது விஷயமல்ல எனவே இந்த நொடியில் இருந்து நன்றியுணர்வோடு வாழ போகிறேன் என்று உறுதிமொழி எடுத்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கை படிப்படியாக மாறும் என்ற புரிதலோடு முன்னேறுங்கள்.

வாழ்க்கை உங்கள் வசமாகட்டும்.

உங்களுக்கு பயன்படும் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி செலுத்துங்கள் .

உங்கள் உறவுகளுக்கு நன்றி செலுத்துங்கள்.

நீங்கள் நன்றி செலுத்தும் அணைத்து விஷயங்களையும் பட்டியலிடுங்கள்.

ரகசியம் திரைப்படத்தில் கூறியது போல் அதன் மாயாஜாலத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது ,

நாம் ஒவ்வொரு வேளை உணவு உண்ண வேண்டும் என்று சொன்னால் அதன் பின்னால் எத்தனை மனிதர்களின் உழைப்பும் , இயற்கையின் கொடையும் இருக்கிறது என்று சிந்தித்து பார்க்கிறேன்...

எத்தனை நெற்பயிர்களின் தியாகம் இருக்கிறது என்பதை உணரும்போது...

ஒரு உயிரின் தியாகம் தான் மற்றோரு உயிரின் வாழ்க்கை.

நம்மை சுற்றி உள்ள அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை..

உண்மையில் நாம் நன்றி செலுத்தும் விஷயங்கள் தான் அதிகமே தவிர குறைகூறும் விஷயங்கள் அல்ல.

ஒரு செயலை துவங்கும்போதும் நன்றி என்று சொல்லுங்கள்.

முடிந்த பின்னும் நன்றி என்று சொல்லுங்கள்.

இனி செய்ய போகும் செயலுக்கும் நன்றி என்று சொல்லுங்கள்.

உங்களுடைய ஒரே பிரார்த்தனை நன்றி செலுத்துவது தான் என்றால் , அது போதும்.

நாம் நன்றியுணர்வுடன் வாழ துவங்கியதும் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் உணர முடியும். அதன் சக்தியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள் அது உங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் மாற்றும் வல்லமையை உங்களுக்கு கொடுக்கும்.

நாம் எதற்கு நன்றி செலுத்துகிறோமோ அதையே பெறுகிறோம். நீங்கள் நன்றி செலுத்தும் விஷயங்கள் உங்கள் வாழ்வில் அதிகரிக்க துவங்கும்.

நன்றியுணர்வு நீங்கள் எப்போதும் நல்ல உணர்வுடன் இருப்பதை உறுதி செய்து உங்கள் விருப்பங்கள் விரைவாக நிகழ அது வழி செய்யும்.

வாழ்க வளமுடன்....

Best regards,

Sunday, 12 May 2019

025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?

2025ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்?
என்னென்ன தொழில்கள் இருக்காது ??

தவறாமல் படியுங்கள்....
GOLDEN AGE COMING SOON?

நெலம இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!

1998ல தொடங்கின kodak (Photo) நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்க முடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.

பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்!.

தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD & ISD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??

எலக்ட்ரானிக் டைப்ரைட்டர், பேஜர், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்,  ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்,  வாக்மேன், டிவிடி  பிளேயர் என சொல்லி கொண்டே போகலாம். குண்டு பல்பும்,  டியூப் லைட்டும் போய் CFL பல்பும் போய், இப்ப LED பல்பு தான்.

எதனால ? ஏன் இப்படினு கேட்டா?

டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்பிளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையைவிட திறமையா செயல்படும் இதுங்கதான் மேலதிகமான காரணமா இருக்கும்.!

உதாரணத்துக்கு சொல்லணும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?

'Uber'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!

இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?

அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்:  உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு அவருடைய Fees வாங்குவாரு..! இல்லையா...!

இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே,  Section-னோட சரியான விவரங்கள Probabilities-டன் அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா?  நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...! வக்கீலுக்கே தெரியாத பல ஜெயித்த கேஸ்கள் பற்றி கம்ப்யூட்டர் தெளிவாக சொல்லும்.

IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு.  ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!

அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ? இது ஒரு உதாரணம்தான்!!!!

ஆடிட்டர்கள் வேலையை clear tax.in,  taxman.com போன்ற இணையதளம்!,

டாக்டர்கள் வேலையை Ada app!, 

ப்ரோக்கர்கள் வேலையை magic bricks, quickr, 99acres, இணையதளம்!, 

கார் விற்பனையை carwale.com, cars24 இணையதளம் !

என சேவை இலவசமாக தருகின்றன.

UBER OLA வந்தபிறகு சொந்தகார் தேவையில்லை.

ஆன்லைனில் சாப்பாடு முதல் துணிமணிவரை கிடைப்பதால் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் ஈயடிக்கும்.

நெட்பிளிக்ஸ் வந்தபின் மேற்கத்திய நாடுகளில்  தியேட்டர்களில் படம் பார்ப்பவர்கள் இல்லை.

இப்பவே இந்திய லோக்கல் ரயில் டிக்கெட் கூட UTS app மூலம் எடுத்து கொள்ளலாம்.

 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும்.  'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!

2025ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.
2019 ஏப்ரல் மாதம் கூகுள் தானியங்கி சைக்கிள் விற்பனைக்கு வருகிறது.

அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்!.

அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா.. உங்க செல்லில் இருந்து.. ஒரு மிஸ் கால்.. இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க  முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.

இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான்.  சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.

Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி  கார்கள் இருக்கும். 

எல்லா மனிதர்களுக்கும் எஜமான் கூகுள் போன்ற ஒரு நிறுவனம்தான். இப்போதே கூகுளுக்கு  நீங்கள் எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும். உங்கள் சிந்தனையை,  நீங்கள் எடுக்கும் முடிவுகளை தீர்மானம் செய்வது கூகுள்தான்.

எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.

இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க... இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்.. குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு.  15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா??

சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?

முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.

அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்ம அடி வாங்கும்.

ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.

விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.

இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும். விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு  மாத்திரை தான் உணவு. 

காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.

'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது... 2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.

இப்பவே கூகுள் அசிஸ்டண்டும் Alexa வும், Siriயும், வேலைக்காரர், உதவியாளர், செகரட்டரி வேலைகளை செய்கிறது.

இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.

Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .


மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றத்திற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள மட்டுமே நம்மால் முடியும்.

நமது வாரிசுகள் படித்த பின் வேலைக்கு சென்று சம்பாதிக்க இப்போதைய படிப்புகள் ஒன்றும் உதவாமல் போகலாம்.

கடந்த நூறு வருடங்களில் நடந்ததை விட அதிவேக பாய்ச்சல் முன்னேற்றம் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும்.

சந்திக்க தயாராவோம். எதிர்காலம்  நம் கையில் இல்லை.  கடந்த காலமும் நிகழ்காலமும், நம் கையிலா இருந்தது என்கிறீர்களா

Best regards,

Saturday, 11 May 2019

தயவு செய்து திருமணமான பெண்கள் மட்டும்_படியுங்கள்…???!!!💌

தயவு செய்து  திருமணமான பெண்கள் மட்டும்_படியுங்கள்…???!!!💌

கல்யாணம் ஆன புதுசுல உங்க கணவர் சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்களை கட்டி அனைத்திருப்பார்… 💏

முத்தம் கொடுத்திருப்பப்பார் 💋

சமையலறைக்கு அடிக்கடி ஓடி வந்திருப்பப்பார் 🏃

உங்கள் பிறந்தநாளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்திருப்பப்பார்🎁

நள்ளிரவில் வாழ்த்தி இருப்பார்….🌙

திருமணநாளுக்கு புடவையோ நகையோ பரிசளித்திருப்பார்…. ஆனால்.. 👗💍

வருடங்கள் கூட கூட இதெல்லாம் குறைந்திருக்கும்…. 😢

உங்களை கட்டி அணைப்பதுவும், முத்தம் கொடுப்பதுவும் வெகுவாக குறைந்து போயிருக்கும்.. 🤔

சமயங்களில் அறவே நின்றுகூட போயிருக்கும்…. சமையலறை பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார்… 🤘

பிறந்தநாளை மறந்துகூட போயிருப்பார்… 🤔

எல்லா நாளையும் போல திருமண நாளையும் ஒரு சாதாரண நாளாக கடந்துகொண்டிருப்பார்😘..

#இதுதான்_எதார்த்தம்…..

ஆரம்பத்தில் ஓடி வந்து ஓடி வந்து கட்டிப்பிடித்தீர்களே… இப்போது நானாக அருகில் வந்தால் கூட கசகசன்னு இருக்குன்னு புரண்டு படுக்கிறீங்களே…. என்னோட பிறந்தநாள் எப்போன்னு கூட தெரியலையே…. என்பது போன்ற பல ஆரம்பகால விஷயங்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு அவரை குடைய தொடங்குவீர்கள்… 😱

உங்கள் கோபம் எரிச்சலாக வெளிப்படும்….. இந்த எரிச்சல் அவரை மேலும் மேலும் உங்களிடம் இருந்து விலக்குமே தவிர…. எந்த காலத்திலும் அந்த இன்ப நினைவுகளை மீண்டும் நிகழ்வில் கொண்டு வரவே வராது


ஒரு குடும்பத்தலைவனின் மனசு என்பது ஒரு இளம் மூங்கில் குருத்து போல….. ஆரம்ப காலங்களில் நீங்கள் அந்த குருத்துக்கு சப்போர்ட்டாக நிற்பீர்கள் என்று அந்த குருத்து ஆனந்திக்கும்😅

#ஆனால்….. 👎

அவரது சகோதரிகளுடன் முரண்பட்டு,

சகோதரர்களுடன் முரண்பாடு,

அப்பா-அம்மாவுடன் முரண்பாடு ,

பொருளாதார தேவைகள்

என தொடர்ச்சியாக நீங்கள் ஒவ்வொரு கல்லாக கட்டி கட்டி அந்த குருத்தில் கட்டும்போது,…..

அந்த குருத்து வளைந்து தரையை தொட்டிருக்கும்…..

உங்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல்….

உடன்பிறந்த, பெற்றோர்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல் , பொருளாதார தேவைகளை சமாளிக்கவும் திண்டாடி தன் சுயம் இழந்திருப்பார் அவர்….

இந்த சுய இழப்பு என்பது, இதெற்கெல்லாம் காரணம் என அவர் நினைக்கும் உங்கள் மீது எரிச்சலாய் திரும்பும்….

துரதிஷ்ட வசமாக அந்த எரிச்சலையும் கூட நேரடியாக காட்ட முடியாமல் தவித்து, உங்களை தவிர்ப்பார்….

நீங்களும் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதை போல… அவர் உங்களிடம் பேசும் இரண்டொரு நிமிடங்களில் கூட குறைகளையும், பிரச்சினைகளையும் மட்டுமே பேசுவீர்கள்….

#மாறாக…..

கிடைக்கும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் பழைய ஆனந்த வாழ்வை நினைவுகூர்ந்து மட்டும் பேசுங்கள்….

“நாம அங்க போனோமே…. அந்த ஹோட்டல்ல சாப்பிட்டோமே….

நம்ம பையன் பிறந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா…

நீங்க கொண்டாடி தீர்த்தீங்களே…..

நான் கன்சீவ் ஆனதை சொன்னன்னிக்கு நீங்க ரெக்கை கட்டி பறந்தீங்களே….. நாம வீட்டு வேலை ஆரம்பிக்கும்போது எப்படித்தான் சமாளிக்க போறீங்களோன்னு பயந்தேன்…. நல்லவேளை.. தெய்வம் கூட நின்னுச்சு.. நீங்க சாதிச்சுட்டீங்க…. அப்படி இப்படினு உங்கள் ஞாபக அடுக்கில் நிறைந்திருக்கும் ஏதாவது நல்ல நினைவுகளை மட்டும் பேசுங்கள்…..

முக்கியமாக…. நாம மொத மொதல்ல என்ன படம் பார்க்க போனோம்?? என் கல்யாண பட்டுப்புடவை என்ன கலர் என்பது மாதிரியான கேள்விக்கணைகளை அறவே தவிர்த்து…. அவைகளை நீங்களே சொல்லி நினைவுகூருங்கள்…

உங்களோடு அவர் பேசத்தொடங்குவார்…. பிறகு உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லுங்கள்…. நாம ஹனிமூன் போனோமே… அதே இடத்துக்கு நம்ம பிள்ளைகளை கூட்டிட்டு போகணும்ங்க…. உங்க அக்கா நம்ம வீட்ல வந்து சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு…. இந்த வாரம் வரச்சொல்லலாமா…. எங்க அம்மா கேட்டாங்க…. ஒரு நாளைக்கு கூட்டிட்டு வான்னு சொன்னாங்க…. நான்தான் “அவர் பாவம்மா.. ஒரு ஆள் எத்தனை இடத்துக்குத்தான் கிடந்து அலைவார்”ன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்…. அப்படி இப்படின்னு உங்கள் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நயமாக வெளிப்படுத்திடுங்கள்…

ஏதாவது பணப்பிரச்சினை என்றால் அதை பிரமாண்டமாய் விவரிக்காமல் மிகச்சாதாரண விஷயமாய் சொல்லுங்கள்…

கவலைப்படாதீங்க.. சமாளிப்போம்.. என்று பன்மையில்.. நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று உணர்த்துங்கள்…

#அவ்வளவுதான்….

உங்கள் திருமணமான புதிதில் இருந்த வசந்தம் மீட்டெடுக்கப்படும்…

ஐம்பதிலும் ஆசை வரும்… இளமை ஊஞ்சலாடும்….


Best regards,

Friday, 10 May 2019

‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’


‘‘அம்மா! நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’

‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’

‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள்.

‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார்.

பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார்.

‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’

பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள்.

அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள்.

‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’

‘‘இது எதுக்கும்மா?’’

‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள்.

பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள்.

அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள்.

‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள்.

பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர்.

பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள்.

‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக.

படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன்.

"உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள்.

பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள்.

வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார்.

‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை?

எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள்.

தன் பத்து வயது மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்.

Best regards,

Thursday, 9 May 2019

''மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..''?

''மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..''?
...........................................

உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத் தேடி அலை கின்றான்.

இதில் கிடைத்துவிடாதா அதில் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகின்றான்.

இறுதியில் அவனுக்குக் கிடைப்பது ஏமாற்றமே.
மகிழ்ச்சி என்பது வெளியே விலை கொடுத்து
வாங்கக் கூடிய பொருளோ, இடமோ அல்ல.
இது ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது.

இந்த உண்மையை மனிதன் எப்போது உணர்ந்து கொள்கின்றானோ,அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

அப்போது அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் குவிந்து கிடந்தன.ஆனால்,மகிழ்ச்சியும், நிம்மதியும்தான் இல்லை.

உள்ளூர்லதான் மகிழ்ச்சி கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்கும் என்று எண்ணி அதைத் தேடிப்போனான்…

ம்ஹூம் அங்கேயும் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு…

எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. பணப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடு வாங்களோங்கிற சந்தேகம்!

இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான்.

ஆனா ,அதிலும் நிம்மதி கிடைக்கல…சீ போதும் இந்த வாழ்க்கை…இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம் அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்க முடிவு செய்தான்..

அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம்,எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.

அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்து  இருந்தார்.

அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன்,அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு,

“குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு.இனி இவை எதுவும் எனக்கு வேணாம்.எனக்கு அமைதியும், மகிச்சியும்தான் வேணும்…அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…, என்று சொல்லி அவரை கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி,

உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார். அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக் கட்டா பணமும் இருந்தது…

துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி.

‘அடடா..இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான்.கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார்.தாவிக் குதிக்கிறார்…

ம்ஹூம். பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல.ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.

என்னப்பா பயந்துட்டியா…இந்தா உன் சொத்து மூட்டை…நீயே வச்சுக்க என்று திருப்பிக் கொடுத்தார். சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

ஒரே குதூகலமாயிட்டான்.முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா…புதுசா சிரிக்கிற…இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி உங்கிட்டதானே

ஆனால் ,அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல…இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான்.ஆனா மகிழ்ச்சியும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!”என்று கூறி விட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

ஆம்.,நண்பர்களே.,

மகிழ்ச்சியை வேறு எங்கும் தேட வேண்டாம் அது நம்மிடத்தில்தான் இருக்கிறது.


Best regards,

Wednesday, 8 May 2019

உலகத்திற்கு பெண்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்க கூடிய 10 குணங்கள்!!!

உலகத்திற்கு பெண்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்க கூடிய 10 குணங்கள்!!!👌

பெண்கள் என்றாலே சிறப்பு மிக்கவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

பெண்கள் என்றாலே ஈர்ப்பு மிக்கவர்கள். பல இடங்களில் பெண்கள் நசுக்கப்பட்டு அடக்கி ஆளப்பட்டு வந்தாலும், அவர்களை எதிலும் அடைத்து வைக்க முடியவில்லை.

தண்ணீரில் அடைக்கப்பட்ட பந்தை போல் வேகமாக மேலேறி வந்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து துறைகளில் அவர்களின் பங்களிப்பும், வளர்ச்சியும் அசாத்தியமானது.

அதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் சிறப்பான குணாதிசயங்களே.
பல சிறப்புகளை கொண்டதாலோ என்னவோ தான் அவர்களை தெய்வங்கள், நதிகள், மலைகள் என பல புனித ரூபங்களில் சித்தரித்துள்ளோம். இவை அனைத்திற்கும் மேல் உலகத்தில் சிறந்து விளங்கும் நம் தாய் என்பவளும் பெண் தானே.

அனைத்து மனிதர்களையும் கவனித்துக் கொள்ள கடவுளால் அனுப்பப்பட்ட இனிய, எளிமையானவர்கள் தான் அன்புள்ளம் கொண்ட பெண்கள். அவர்கள் சரிவர அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கூட, அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முடியாது. இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கும் சில அறிய குணங்களும் பெண்களிடம் மட்டுமே உள்ளது.

👌தியாகம்

பெண்கள் பல கண்ணோட்டத்தில் யோசிப்பார்கள். எப்போதும் உறவுகளை வலுப்படுத்த முற்படுவார்கள். பெரியதாக பொருள் சார்ந்து இல்லாமல் போனாலும் கூட அவர்களுக்கு மிகப்பெரிய தியாக உள்ளம் உள்ளது. பெற்றுக் கொள்வதை விட அதிகமாக வாரிக் கொடுப்பதையே அவர்கள் நம்புவார்கள்.
 
👌நிர்வாக திறன்கள்

அலுவலகம், வீடு, குழந்தைகள், கணவன், பெற்றோர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியவர்களை நிர்வாகம் செய்வதற்கு பெண்களை போல் யாராலும் முடியாது. பல வேலைகளை சுலபமாக இழுத்து போட்டு, திறம்பட செய்யக் கூடியவளே பெண். மேலும் மிகவும் கடினமான சூழ்நிலையை கூட சுலபமாக கையாளுவார்கள்.
 

👌திருப்திகரமான ஆற்றல்கள்

பாதிப்பை உண்டாக்குவது, ஆளுமை மற்றும் பிறரின் மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல்களை கொண்டவள் பெண். இது அவர்களுக்கு இயற்கையாகவே உள்ள குணங்களாகும். அனைத்தையும் திறமையாக கையாளுவதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள்.
 

👍கடின உழைப்பாளிகள்

கடினமான உழைப்பு மற்றும் போராட்டமே இன்றைய பெண்களுக்கான அடையாளமாக விளங்குகிறது. அவர்களின் கடின உழைப்பே அவர்களை சார்பற்ற நிலையில் வாழ உறுதுணையாக உதவுகிறது.

💐நன்கு பேசுபவர்கள்

பேரம் பேசுவதில் பெண்களை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. அது காய்கறி வாங்குவதாகட்டும், பலசரக்கு வாங்குவதாகட்டும் அல்லது ஆட்டோக்காரர்களிடம் வாடகை பேசுவதாகட்டும், பேரம் பேசுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
 
💐விசுவாசம்

உலகத்தில் நீங்கள் நம்பக்கூடிய முதல் நபர் பெண்ணே. நீண்ட நாள் உறவிற்கு அவர்களே குறியீடு இலக்காக விளங்குகின்றனர்.
 

💐அழகு உணர்வாளர்கள்

ஃபேஷன், உட்பகுதி, ஆடை அணியும் விதம் என பெண்களை பற்றிய அனைத்தும் கவர்ச்சியுடையதாகவே விளங்கும். தங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகுணர்வாளர்களாக விளங்கும் பெண்களை பார்த்து அதனால் தான் அனைவரும் அதிசயிக்கின்றனர்.
 
💐பொறுமை

பெண்களின் அமைதியும் பொறுமையும் உண்மையிலேயே மிக அற்புதமான குணங்களாகும். மிகவும் மோசமான சூழ்நிலைகளையும் கூட அவர்களால் பொறுமையுடன் சிறப்பாக கையாள முடியும். அதனால் தான் மூன்றாம் உலகப்போர் எழாமல் உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
 
💐உணர்ச்சி ரீதியான பலம்

ஆண்களை போல் உடல் ரீதியாக பலசாலிகள் அல்ல பெண்கள். ஆனால் உணர்ச்சி ரீதியாக பார்க்கையில் மூலையில் அமர்ந்து கொண்டிருப்பவள் அல்ல பெண். இதில் ஆண்களை தூக்கி சாப்பிட்டு விடுவாள் பெண். உணர்ச்சி ரீதியான விஷயங்கள் என்றால் அவைகளை மிகுந்த பலத்துடன் கையாளும் திறனை கொண்டவர்கள் பெண்கள்.
 
💐அனைத்து வேலைகளையும் செய்வது

வீட்டை கவனிக்கும் பெண்கள் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்துபவர்கள். அதற்கு காரணம் அனைத்து வேலைகளையும் அவர்களால் திறம்பட முடிக்க முடிகிறது. பாடல்களை கேட்டுக் கொண்டே அவர்களால் வீட்டு வேலைகளையும் செய்ய முடியும், குழந்தைகளையும் கவனிக்க முடியும்.

Best regards,

Tuesday, 7 May 2019

அன்பான வங்கி வாடிக்கையாளர்களே:

அன்பான வங்கி வாடிக்கையாளர்களே:

தயவுசெய்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகையை மாதாமாதம் திரும்ப எடுத்து விடுங்கள்.
பணமில்லா (டிஜிட்டல்)  பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விட்டு, முழுவதும் பண பரிவர்த்தனைகள் செய்யுங்கள். இப்படி செய்யும் போது, எல்லாவிதமான (அனாவசியமாக) சேவை கட்டணங்களையும் தவிர்க்கலாம். வங்கியாளர்களுக்கு ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்கலாம். வங்கிகள் தான் வாடிக்கையாளர்ளை சார்ந்து இருக்கிறது. வாடிக்கையாளர்கள் வங்கிகளை சார்ந்து இல்லை.

மக்களுடைய வலிமை என்ன என்பதை காட்டுவோம்...

கேள்வி:
பணமில்லா பரிவர்த்தனை செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

பதில்:
சார், ஒரு 100 ரூபாய் 1,00,000 முறை கைமாற்றம் செய்யப்படுகிறது என்று வைத்து கொள்வோம். இதன் மூலம் யாருக்கும் எந்த கமிஷனும் போகாத பட்சத்தில், இந்ந தொகையின் மதிப்பு அப்படியே தான் இருக்கும்.

இதையே, பணமில்லா பரிவர்த்தனை மூலம் அந்த தொகையை பரிமாற்றம் செய்தால், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 2.5% கமிஷன் பிடிக்கபடும். அப்படியானால் 1,00,000 முறை 2.5% = 2500%. அதாவது 2,50,000 ரூபாய் ( இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) Paytm அல்லது Jio Money போன்ற பல்வேறு சேவை வழங்குபவர்களுக்கு சென்றடைகிறது. வெறும் 100 ரூபாய்க்கே இப்படி.

ஒரு கும்பலுக்கு நிரந்தரமாக தங்க முட்டையிடும் வாத்து பரிசாக கிடைத்தது போன்ற காரியம் இது.

ஆகவே தான் இது கொள்ளையிலும் மகா பெரிய கொள்ளை. மிக முக்கியமான புள்ளி விவரங்கள் இது. தயவுசெய்து படித்து புரிந்து கொள்ளவும். இதில் அரசியல் இருக்காது.

உங்களுக்கு தெரியுமா..

1) ஒவ்வொரு பண பரிமாற்றத்திற்கும் விற்பனையாளரிடமிருந்தும், பணம் பெறுபவரிடமிருந்தும் debit cards என்று சொல்லப்படும் பற்று அட்டை 0.5%ல் இருந்து 1% வரை வசூலிக்கிறது.

2) ஒவ்வொரு பண பரிமாற்றத்திதிற்கும் விற்பனையாளரிடமிருந்தும், பணம் பெறுபவரிடமிருந்தும் credit cards என்று சொல்லப்படும் கடன் அட்டை 1.5%ல் இருந்து 2.5% வரை வசூலிக்கிறது.

3) உங்களது e-walletல் உள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், PayTM/Freecharge/Jio Money போன்ற பல்வேறு e-wallets 2.5%ல் இருந்து 3.5% வரை வசூலிக்கிறது.

ஒவ்வொரு மாதமும் ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள ATMல் இருந்தும் 2.25 லட்சம் கோடி பணம் எடுக்கப்படுகிறது (வருடத்திற்கு 25-30 லட்சம் கோடி) என்று RBI தகவல் தெரிவிக்கிறது. மேலும், வங்கியிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் பணத்தை சேர்த்து (ATM மற்றும் வங்கியில் இருந்து) வருடம் தோறும் மொத்தம் 75 லட்சம் கோடி ரூபாய் எடுக்கப்படுகிறது என்று மதிப்பிடப்படுகிறது.
இப்படி எடுக்கப்படுகிற பணம் எல்லாமே,  கணக்கில் போடப்படும்/வரியாக செலுத்தப்படும் பணமே. தற்போது, 3% பண பரிமாற்றங்கள் மின்னணு முறையில் தான் இருக்கிறது...

அப்படியே இந்ந 75 லட்சம் கோடி ரூபாயும் மின்னணு முறையில் பரிமாற்றம் (பணமில்லா பரிவர்த்தனை) செய்யப்பட்டால், கம்பெனிகள் எவ்வளவு தூரம் சம்பாதிக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.. ( 75 லட்சம் கோடி ரூபாய் x 2%) சராசரியாக வைத்து பார்த்தாலே, வருடத்திற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய்!.
விளையாட்டு இல்லைங்க!

இது தான் மிக பெரிய பகல் கொள்ளை. Reliance, PayTM, e-Banks etc போன்ற பெருநிறுவனங்களுக்கு  வருடத்திற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் நேரடியாகவே சென்றடைகிறது...

அப்படியானால் Demonetization (பணமதிப்பிறக்கம் செய்தல்) செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? கருப்பு பணத்தை ஒழிக்கவா அல்லது பெருநிறுவனங்களை தீனி போட்டு வளர்க்கவா? ஒரே ஆச்சரியமாக இருக்கிறது.

Best regards,

Monday, 6 May 2019

ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்

ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்.

முதன்முறை படித்த போது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம்
புரியவில்லை.

பிறகு தான் புரிந்தது அவர் Capitonym பற்றிக் கேட்கிறார் என்று.

அதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது.

இது போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள்.

அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றி விட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறி விடும்.

சில சமயம் உச்சரிப்பு கூட மாறி விடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே.

August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.

மாறாக august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக் கூடிய என்பதாகும்..

அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது. I was in an august company என்றோ It was an august performance என்றோ குறிப்பிடலாம்.

வேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. March என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

மாறாக march என்பது ராணுவத்தில் நடப்பது போல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.

மேற்கூறியவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட வார்த்தைகள் (august, march ஆகியவை) வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றால் என்ன செய்வது என்கிறீர்களா? (வாக்கியத் தொடக்க எழுத்து capital letterல் தானே எழுதப்பட வேண்டும்!)

அப்படி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தான். நான் கூட அதனால் தான் ‘மாறாக’ என்ற வார்த்தையை இடம் பெறச் செய்திருக்கிறேன்.

சில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் Capitonym பயன்படும்.

பிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட sun என்றும் பூமி போன்ற கிரகங்கள் சுற்றும் சூரியனை Sun என்றும் குறிப்பிடுவார்கள்.

அதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் Moon என்று ஸ்பெஷல் அந்தஸ்து.

பிற கிரகங்களைச் சுற்றும் பொருள் moon. இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.

Church என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி church என்றால் அது ஒரு கட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.

Liberal என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக liberal என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.

Cancer என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க cancer என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின்
ரீமாசென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா?)

Titanic என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி titanic என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள்.

இந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
A turkey may march in Turkey in May or March!

(Turkey என்பது துருக்கி நாட்டையும் turkey என்பது வான்கோழியையும் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும் தானே?)

VERBATIM
Verb என்பதற்கும் verbatim என்பதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். தொடர்பு உண்டு யார் சொன்னது?

Verbatim என்ற வார்த்தையைக் கொஞ்சம் விரிவாகவே விளக்கினால் தெளிவாகப் புரியும்.

அப்பாவும் மகனும் ஒரு கண்காட்சிக்குப் போனார்கள். அங்கே நயாகரா பற்றி ஒரு குறும்படம் காட்டப்பட்டது. வீட்டுக்கு வந்ததும் அப்பா தன் மனைவியிடம் இப்படிக் கூறினார். அந்தக் குறும்படத்தின் தொடக்கத்திலே ஒரு ஸ்லைடு போட்டாங்க கீதா. நயாகரா பத்தி இப்படித் தொடங்கினாங்க. “அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே..’’.

அப்பா இப்படி ஆரம்பித்தவுடனேயே மகன் குறுக்கிட்டான். “தப்பாச் சொல்றீங்க அப்பா. ‘அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே’ கிடையாது. ‘கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே’ன்னுதான் சொன்னாங்க’’ என்று திருத்தினான். .

அப்பா ஒப்புக் கொண்டு தன் வாக்கியத்தை மாற்றிச் சொன்னார்.

“கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நீர்வீழ்ச்சி ..’’. இப்படித் தொடரும் போது “தப்பு தப்பு’’ என்று குறுக்கிட்டான் மகன். “நீர்வீழ்ச்சின்னு அவங்க சொல்லலை. அருவின்னு தான் சொன்னாங்க’’ என்றான்.

அந்த மகன் சரியான Verbatim-காரன்! அதாவது ஒருவர் சொன்னதை “வார்த்தைக்கு வார்த்தை அச்சுப் பிசகாமல்’’ சொல்வதோ எழுதுவதோ தான் VERBATIM.
REFUSE REFUTE REBUT

Refuse என்றால் மறுப்பது. He refused the invitation. I refuse to accept your view.

Refute என்பதை ஆதாரத்துடன் மறுப்பது என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். The testimony of the witness was refuted.

Rebut என்றால் விவாதம் செய்து ஒன்றை மறுப்பது.

Examples of pairs of capitonyms are:

Turkey (the country) and turkey (the bird)
China (the country) and china (as in porcelain).

Best regards,

Sunday, 5 May 2019

‘ஹேக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திணறும் சைபர் கிரைம்

 ‘ஹேக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திணறும் சைபர் கிரைம்: போலீஸார் வங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல்

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி டெபிட், கிரெடிட் கார்டுகளின் தகவலை கேட்டு, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது எந்த தகவலையுமே கேட்காமல், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நவீன தொழில்நுட்பத்தை கொள்ளையர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகம். எச்டிஎஃப்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். ஆன்லைன் மூலம் வாங்கிய பொருளுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக வங்கியின் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு தனது கார்டை ‘பிளாக்’ செய்துள்ளார்.

பின்னர் வங்கி அதிகாரிகளிடம் சென்று முறையிட்டபோது, “ஆன்லைன்மூலம் செய்யப்பட்ட பணப் பரிமாற்றத்துக்கு முறைப்படி உங்களது செல்போன் எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் (ஓடிபி) அனுப்பப்பட்டுள்ளது.

அந்த ஓடிபியைப் பயன்படுத்திய பிறகே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் தனது செல்போனை பரிசோதனை செய்ய, அதில் ‘எம்ஐ பேயூ’ (mi payU) என்ற பெயரில் ஒரு செயலி பதிவிறக்கமாகி இருப்பதை பார்த்திருக்கிறார்.

அது ஒரு ஹேக்கர் செயலி என்பதையும், அதன் மூலம் செல்போனை ‘ஹேக்’ செய்து பணப்பரிமாற்றத்துக்கான ஓடிபியை ஹேக்கர் கள் தெரிந்து கொண்டதும் அவருக்கு தெரியவந்தது. உடனே அந்தச் செயலியை செல்போனில் இருந்து ‘அன்இன்ஸ்டால்’ செய்துள்ளார்.

பின்னர் தனது பெயரில் இருந்த 3 வங்கி கணக்குகளை பிளாக் செய்து விட்டு, அவசர தேவைக்காக இந்தியன் வங்கியில் உள்ள ஒரே ஒரு கணக்கை மட்டும் பிளாக் செய்யாமல் விட்டுள்ளார்.

10 நாள் இடைவெளியில் இந்தியன் வங்கி கணக்கில் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளில் ரூ.20 ஆயிரம் ஆன்லைன் மூலம் திருடப்பட, அதிர்ச்சி அடைந்த சண்முகம் அந்த வங்கிக் கணக்கையும் பிளாக் செய்துள்ளார்.

பின்னர் தனது செல்போனை சோதனை செய்ய, ஏற்கெனவே ‘அன்இன்ஸ்டால்’ செய்த ‘எம்ஐ பேயூ’ என்ற செயலி மீண்டும் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதை பார்த்து, செல்போனையே ‘பேக்டரி டேட்டா ரீ செட்’ செய்திருக்கிறார்.

ஒரு நபர் வெவ்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு விவரங்களை எப்படி எடுக்க முடிந்தது, அதை வைத்து எப்படி பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் கேட்டபோது, “வங்கிகளின் நெட் பேங்கிங் பக்கத்தில் ‘யூபிஐ’ என்ற பிரிவு சமீப காலமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். அதாவது, ஒரு நபரின் பெயரில் இருக்கும் வெவ்வேறு வங்கி கணக்கு விவரங்கள் அனைத்தும் இந்த யூபிஐ அக்கவுண்டில் இணைக்கப்பட்டிருக்கும்.

ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்குக்கு, எந்தவிதமான சேவைக்கட்டணமும் இன்றிபணத்தை உடனடியாக மாற்றுவதற்காக இந்த யூபிஐ அக்கவுண்ட் பயன்படுகிறது.

இந்த யூபிஐ அக்கவுண்ட்டில் ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். சிக்கலே இங்கேதான் ஆரம்பிக்கிறது.

வங்கி அதிகாரி பேசுவதாக கூறியும், டெபிட் - கிரெடிட் கார்டுகளின் விவரங்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணைத் தெரிந்து கொண்டு பணத்தைத் திருடி வந்த கொள்ளையர்கள், தற்போது ஹேக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கின்றனர்.

அனைத்து வங்கி கணக்குகளுடனும் ஆதார் எண்ணை இணைத்திருப்பதால், நமது ஆதார் எண் மூலம் யூபிஐ அக்கவுண்ட்டுக்குள் நுழையும் ஹேக்கர்கள், ஒரு நபரின் அனைத்து வங்கி கணக்கு விவரங்களையும் எடுத்து விடுகின்றனர்.

பின்னர், நமது செல்போனுக்கு குறுஞ்செய்தி அல்லது விளம்பரம் மூலம் ஹேக்கிங் செயலியைச் செலுத்தி, நமது செல்போனுக்கு வரும் ஓடிபி தகவல்களை அவர்களுக்கு வரும்படி செய்து, வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இதுபோல 2,100 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஒரு நபரைக்கூட பிடிக்க முடியவில்லை.

வங்கிக் கணக்கில் இருந்து கொள்ளையடிக்கப்படும் பணம் கொள்ளையர்களின் வங்கி கணக்குகளுக்குத்தான் அனுப்பப்படும். பின்னர் அடுத்தடுத்து 4 அல்லது 6 வங்கி கணக்குக்கு அந்த பணம் மாற்றப்பட்டு, ஏதாவது ஒரு இடத்தில் பணத்தை எடுத்துவிடுவார்கள்.

அனைத்து வங்கி கணக்குகளும் போலி முகவரியால், அடையாளம் தெரியாத நபரால் தொடங்கப்பட்டிருக்கும். அந்த நபர்களைக் கண்டுபிடிப்பது சிரமம். தொடர் விசாரணை மற்றும் வெளிமாநிலங்களில் தங்கி தேடுதல் வேட்டை நடத்தினால் மோசடி நபர்களைப் பிடிக்க முடியும். ஆனால், அதற்கு அதிக பொருட்செலவு ஏற்படும் என்பதால் காவல் துறையினர் யாரும் அதை செய்வதில்லை” என்றனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃபிராங்கோ கூறும்போது, “வங்கி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது தேவையற்றது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள 27 வழக்குகளில் நானும் ஒரு வழக்கைப் பதிவு செய்து இருக்கிறேன்.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பவர்கள், வங்கிக்கு கடிதம் கொடுத்து ஆதார் எண்ணை நீக்கச் சொல்ல வேண்டும்” என்றார்.

எக்ஸ்னோரா நிர்மல் கூறும்போது, “வரும்காலத்தில் ஆதார் தகவல்களைத் திருடித்தான் மிகப்பெரிய மோசடிகள் நடத்தப்படும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ராணுவ இணையதளங்களையே ஹேக்கர்கள் முடக்கி விட்டனர்.

இணையதளம் முடக்கப்பட்டதால் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை 4 நாட்கள் வெளிவரவில்லை. இதையெல்லாம் செய்த ஹேக்கர் களுக்கு ஆதார் தகவல்களைத் திருடுவது சவாலாக இருக்காது. எனவே, ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைப்பது ஆபத்தானது” என்றார்.

சாதாரண தொழில்நுட்பங்களை மட்டும் வைத்துக் கொண்டு, தொழில்நுட்ப குற்றங்களைத் தடுக்கவும் முடியாது, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் முடியாது. ஹேக்கர்களைக் கண்டுபிடிக்க, ஹேக்கிங் தொழில்நுட்பம் தெரிந்த நபர்களை சைபர் கிரைம் பணியில் சேர்க்க வேண்டும்.

அவர்களை வைத்து மட்டுமே ஹேக்கர்களைப் பிடிக்க முடியும். வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் திருடுபோனால் அதற்கு வங்கியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Best regards,

Saturday, 4 May 2019

வியாபாரி

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து
வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு
அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு
ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை
செய்கிறேன். ஆனால் நான் செய்யும்
வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.

மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட
வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது
உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே
சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.

பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை
மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று
வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம்
மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.

கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது.

அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்
திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின
உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான்.

“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்
அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.

வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.
உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.

வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்
மாட்டிற்கு கண்களில் நீர் வர
தொடங்கியது. “எஜமான்! நீங்கள்
செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.
இல்லாவிடில் நான் நீண்ட காலம்
ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.

அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது
துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில்
சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு
இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்
தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் √

Best regards,