Wednesday, 10 June 2020

சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து - அலட்சியத்தில் மக்கள்.😳😳

சென்னை துண்டிக்கப்படும் ஆபத்து - அலட்சியத்தில் மக்கள்.😳😳

மக்களுக்கு தொற்றின் தீவிரம் புரியவில்லை.😷😷

சினிமா பார்த்து மரத்து போன மண்டைகள்.

தமிழக நிலவரம் கொரோனாவில் மகா மோசமாக சென்று கொண்டிருப்பது சாதாரண விஷயமாக படவில்லை. உயிர்பலிகள் அதிர வைக்கின்றன‌😔😳

சென்னை இதுவரை மகா சிக்கல்களை, மிரட்டல்களை சந்தித்த நகரம் அல்ல. முதல் உலகபோரில் ஜெர்மன் நீர்மூழ்கி குண்டு வீசியதை தவிர எந்த மிரட்டலும் வந்ததில்லை.மழை வெள்ளம் மட்டும் மிரட்டும், வேறு எந்த பெரும் மிரட்டலும் பாதிப்பும் இதுவரை வந்ததில்லை

ஆனால் கொரோனா சென்னை வரலாற்றிலே மிகபெரும் சவாலாக உருவெடுத்து நிற்கின்றது, திரும்பும் இடமெல்லாம் கொரோனா என அது மிகபெரும் திகிலை கொடுக்கின்றது. அணுவெடிப்பு வேகத்தில் அதன் பரவல் இருப்பதுமிகபெரும் ஆபத்து.😱

குழந்தைக்கு கொரோனா,17 வயது மாணவி மரணம் இன்னும் சில பிரமுகர்கள் ரகசிய சிகிச்சையில் இருக்கின்றார்கள் என்பது கலங்க வைக்கும் விஷயம்

சென்னையிலும் இதர தமிழகத்திலும் மிக வேகமாக‌ பரவி கொண்டிருக்கும் கொரொனா தொற்று உலகை அதிர வைக்கின்றது, இந்திய அரசே சிறிது பதற்றத்தில் இருக்கின்றது.

மெல்ல உலகம் இயங்க ஆரம்பிக்கும் நேரமிது, ஜூன் 15க்கு பின் சர்வதேச போக்குவரத்துகள் தொடங்கபடலாம்

ஆனால் இனி உலகெல்லாம் இயங்க ஆரம்பிக்கும் பொழுது சென்னை துண்டிக்கபடும், சர்வதேச விமானங்களோ கப்பலோ சென்னைக்கு வராது.

இது பெரும் முடக்கத்தை கொடுக்கும்,இன்னும் சில நாட்களில்சென்னையின் கொரோனா அளவு மிக கடுமையாக இருக்கும் என்கின்றார்கள், அப்பொழுது சென்னை முழுவதும் துண்டிக்கபடலாம்

வேறு வழி இருப்பதாக தெரியவில்லை

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் நிலைமை சரியாக இல்லை, ஒருவித வேகமான கொரோனா அலை தெரிகின்றது.

நிச்சயம் மிக பெரிய நடவடிக்கை எடுத்து இன்னும் இருவாரங்களுக்கு மகா கடுமையான இறுக்கமான ஊரடங்கை அறிவிக்க வேண்டிய நேரமிது ஆனால் அரசு தயங்குகின்றது

அரசு வருமானம் பாதிக்கும், மாநில அரசு இயங்கமுடியாது எனும் சுயநலத்தில் மிகபெரிய விலை கொடுக்க தயாராகின்றது தமிழக அரசு

சென்னை மகா மோசமான நிலைக்குதள்ளபடுகின்றது, தமிழகத்தின் இதர சூழலும் சரியாக இல்லை, மிக பெரும் நெருக்கடியில் மாநிலம் சிக்க போகின்றது

பொறுப்பற்ற மக்கள் இருந்தால் அரசு உறுதியாய் இருந்து அடக்குதல் வேண்டும், அரசு பொறுப்பற்று இருந்தால் மக்கள் பொங்கி திருத்தவேண்டும்

இரண்டு தரப்புமே பொறுப்பற்று இருந்தால் ஒரு மாநிலம் எப்படி நாசமாகும் என்பதற்கு தமிழகமே சான்று

பலத்த எச்சரிக்கை தமிழகத்துக்கு விடபடும் நேரமிது, புயல் ஆபத்துக்கெல்லாம் ஓடி ஓடி பாதுகாக்கும் தமிழகம், கொரோனாவில் கோட்டை விட்டது மட்டுமல்ல இன்னும் ஆபத்தை உணர மறுப்பது சோகம்

இனி சர்வதேசம் இயங்கும் பொழுது துண்டிக்கபடுவதுசென்னையாக மட்டும் இராது,திருச்சி மதுரை போன்ற விமான நிலையங்களாக இருக்கலாம் தூத்துக்குடியாகவும் இருக்கலாம்

இப்பொழுது முடக்கினாலும் சென்னை மீள சில மாதமாகும் என்பதால் நிலைமையின் வீரியம் மகா ஆபத்தானது

சென்னை போலவே சிக்கியிருக்கும் இன்னொரு நகரம் மும்பை,அங்கு இனி பருவமழை தொடங்க போகின்றது மும்பையின் மழை சாதாரணம் அல்ல‌

அந்த கொடும் மழையில் தனித்திருத்தல் சமூக இடைவெளி சாத்தியமில்லை, மும்பைக்கு விடபட்டிருக்கும் எச்சரிக்கை சிகப்பு எச்சரிக்கை

தமிழக மக்கள் இனியும் விழித்து கொள்ளாவிட்டால் அதற்கு கொடுக்க போகும் விலை மிக மிக அதிகம்Best regards,