Tuesday, 4 October 2011

Click and Type: மைக்ரோசாப்ட் வேர்டின் புதிய வசதி



வேர்ட் தொகுப்பில் பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர் நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம்.
இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும் வாக்கியங்கள் கொண்ட தொகுப்பினை அமைத்திடுவோம்.
ஆனால் டாகுமெண்ட் ஒன்றில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் உண்டு என்பதனைப் பலர் அறியாமல் இருப்பீர்கள்.
கிளிக் அன்ட் டைப்(Click and Type) என்ற இந்த வசதி வேர்ட் 2000 முதல் தரப்பட்டுள்ளது. இந்த வசதி பிரிண்ட் லே அவுட் மற்றும் வெப் லே அவுட்(Print Layout view or Web Layout) ஆகிய வியூவில் டாகுமெண்ட்டைப் பயன்படுத்து கையில் கிடைக்கும்.
இந்த வசதியின்படி மவுஸ் கர்சரை நீங்கள் விரும்பும் இடத்திற்குக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்தால் கர்சர் அங்கு அமைக்கப்பட்டு டைப் செய்யப்படும் சொற்கள், வரிகள் அங்கிருந்து தொடங்கப்படும். இதன் மூலம் போர்மட்டிங் பணியினைச் சற்று வேகமாக மேற்கொள்ளலாம்.
இந்த வசதி நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பில் இயக்கத்தில் உள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்வது? டாகுமெண்ட்டில் மவுஸ் கர்சர் ஒரு(I) டி பீம் போலக் காட்சி அளிக்கும். அதாவது ஆங்கில “I” எழுத்தின் மேல் கீழாக சிறிய கோடு இருப்பது போலத் தோன்றும்.
இதன் அருகே வலது பக்கத்தில் சில படுக்கை வசத்திலான சிறிய கோடுகள் இருந்தால் இந்த வசதி உங்கள் வேர்டில் இயக்கத்தில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். இந்த கோடுகள் நீங்கள் எந்த இடத்திலும் வரிகளை இணைக்கலாம் என்று காட்டுகின்றன.
இவ்வாறு வரிகளை நினைத்த இடத்தில் அமைக்கையில் அந்த வரிகள் எந்த வகையில் அமையும் என்பதை இந்த i பீம் அருகே உள்ள சிறிய கோடுகள் காட்டுகின்றன. இதில் நான்கு வகைகள் உள்ளன.
அந்த படுக்கை வரிகள், i பீம் அருகே மேல் வலது புறமாக அமைந்திருந்தால் மவுஸை இருமுறை கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, இடது வாகாக அலைன் செய்து அமைக்கப்படும்.
அந்த வரிகள் மேல் வலது புறமாக அமைந்து முதல் படுக்கை வரியின் இடது புறம் ஒரு சிறிய அம்புக் குறி இருந்தால் நாம் அமைக்கும் வரிகள் கொண்ட பாராவின் முதல் வரி, அதற்கான பாரா இடைவெளியுடன் அமைக்கப்படும்.
இந்த வரிகள் i பீம் நேர் கீழாக இருந்தால் நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா நடுவாக அமையும்.
இதே வரிகள் i பீம் இடது மேல் புறமாக அமைக்கப்பட்டால்நாம் இருமுறை மவுஸ் கிளிக் செய்து அமைக்கும் வரிகள் கொண்ட பாரா, வலது பக்கம் அலைன் செய்யப்பட்டு அமையும்.
இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வசதி அமைக்கப்படும் டாகுமெண்ட்டிற்கான வியூ, பிரிண்ட் லே அவுட் அல்லது வெப் லே அவுட் என்ற முறையில் இருந்தாலே இந்த வசதி கிடைக்கும்.
எனக்கு இந்த வசதி எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவரா நீங்கள். இதனை நீக்கும் வழியும் இங்கு உண்டு. நீங்கள் வேர்ட் 2000, 2002 அல்லது 2003 பயன்படுத்துபவராக இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. Tools மெனுவில் இருந்து Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் எடிட் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு Enable Click and Type என்ற செக் பாக்ஸ் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்து விட்டால் இந்த வசதி இயக்கப்பட மாட்டாது.
4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Office பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. டயலாக் பாக்ஸின் இடப்பக்கத்தில், Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. டயலாக் பாக்ஸின் எடிட்டிங் பகுதியில் உள்ள Enable Click and Type என்ற செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
4. பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.



டேப்ளட் கணணிகள் தரும் புத்தம் புதிய வசதிகள்



பெர்சனல் கணணியின் இடத்தை விரைவில் பிடித்துவிடும் என அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு சாதனம் டேப்ளட் பிசி. இன்று இது ஒரு புதிய சாதனம் அல்ல.
கைகளில் எடுத்துச் சென்று எங்கும் பயன்படுத்தக் கூடிய மிகச் சிறந்த சாதனமாக டேப்ளட் பிசி உருவாகியுள்ளது. நமக்குப் பிடித்த செய்தி சேனல்களைப் பார்க்கலாம், பிரியமான திரைப்படங்களைப் பார்க்கலாம், மின்னஞ்சல்களைப் பார்க்கலாம், அனுப்பலாம், கேம்ஸ் விளையாடலாம், இசையை ரசிக்கலாம்.
இப்படி இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டிய அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். முதலில் வெளியான டேப்ளட் கணணிகள் பயன்படுத்த மிகவும் கடினமாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருந்தன.
ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் பற்றரிகள் தங்கள் மின் சக்தியை இழந்தன. அதனால் லேப்டாப் கணணியே போதும் என்று மக்கள் அவ்வளவாக இதன் மீது அக்கறை காட்டாமல் இருந்தனர்.
தற்போது இதன் அனைத்து குறைகளும் களையப்பட்டு சிறப்பான பயன்பாட்டினைத் தரும் பல அம்சங்களை இவை கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள சில அனுகூலங்களை இங்கு காணலாம்.
1. டேப்ளட் பிசி என்பது முழுமையான ஒரு பெர்சனல் கணணி என்று சொல்லலாம். இன்றைக்கு கணணி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை இன்டர்நெட் பிரவுஸ் செய்திடவும், வீடியோ மற்றும் ஓடியோ ரசிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்த செயல்களை பெர்சனல் கணணிகளில் மேற்கொள்கையில் கட்டாயமாக அதன் முன் அமர்ந்து தான் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு டேப்ளட் கணணியில் நமக்கு வசதியான இடத்தில் நின்று கொண்டோ, படுத்துக் கொண்டோ, அமர்ந்தோ, சுகவாசியாக டேப்ளட் பிசியைப் பயன்படுத்தலாம்.
2. டேப்ளட் பிசியைக் கையாள்வது மிக இயற்கையான ஒரு செயலாக உள்ளது. குறிப்பாக அதன் தொடுதிரையைத் தொட்டுச் செயல்படுவது, மவுஸினைக் கையாள்வதனைக் காட்டிலும் எளிதாகவும், இயற்கையாகவும் உள்ளது. மேலும் டேப்ளட் பிசியைப் பயன்படுத்த, சிறப்பாக எந்த பயிற்சியும் தேவையில்லை. ஒரு குழந்தை கூட எளிதாக இதனைப் பயன்படுத்த முடியும்.
3. டேப்ளட் பிசி மிகவும் வேகமாகச் செயல்படுகிறது. இன்டர்நெட் பிரவுஸ் செய்வதில் இதன் வேகம் பெர்சனல் கணணியையும் மிஞ்சி விடுகிறது.
4. நண்பர்களுடன் வீடியோ சேட் செயல்களில் ஈடுபடுவது, பெர்சனல் கணணிகளில் முடியும் என்றாலும் ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்வது இன்னும் இயற்கையாக ஒரு நெருக்கத்தினை நண்பர்களுடன் ஏற்படுத்துகிறது.
5. ஒரு டேப்ளட் பிசியில் ஆயிரக்கணக்கான மின் நூல் பக்கங்களை சேவ் செய்து நாம் விருப்பப்படும் நேரத்தில் படிக்க இயலும். தனியாக இதற்கென ஒரு இ–ரீடர் என்னும் சாதனத்தினை வாங்க வேண்டியதில்லை.
6. டேப்ளட் பிசியை எந்த ஒரு சாதனமாகவும் இயக்க பல அப்ளிகேஷன்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதற்கென அப்ளிகேஷன் ஸ்டோர்கள் இணையத்தில் நிறைய இயங்குகின்றன. கமெரா, நூல்கள், மியூசிக் பிளேயர், பருவ இதழ்கள் எனப் பல வசதிகள் கிடைக்கின்றன.
7. பெர்சனல் கணணி பயன்படுத்துவதில் மொனிட்டர் மூலம் நம் கண்களுக்கு ஏற்படும் இடையூறுகள், ஒரு டேப்ளட் பிசியைப் பயன்படுத்துகையில் அறவே நீக்கப்படுகின்றன. இதனை எந்தக் கோணத்திலும் வைத்துப் பயன்படுத்தலாம். நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் கூட இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
8. டேப்ளட் பிசிக்கள் வந்த புதிதில், ஒரு பெர்சனல் கணணி விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. இப்போது பல நிறுவனங்கள் இந்த சந்தையில் இயங்குவதால் இவற்றின் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒரு பெர்சனல் மற்றும் லேப்டாப் கணணியைக் காட்டிலும் குறைவான விலையில் இதனை வாங்கிப் பயன்படுத்த முடியும்.


உடலை பாதிக்கும் ”ஹை ஹீல்ஸ்”




நவநாகரீக பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் தோன்றுவதற்கு விரும்பி அணிபவை `ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயர்ந்த காலணிகள்.ஆனால் இந்த `நெட்டைக் கொக்கு’ காலணிகளால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

* “
குதிகால் உயர்ந்த காலணிகளால் முன்னங்கால்களுக்கு அதிகரிக்கும் அழுத்தமானது மயிரிழை எலும்பு முறிவு, கட்டை விரல் வீக்கம், கால் விரல்கள் முன்புறம் வீங்குவது போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. `ஹை ஹீல்ஸ்’ அணியும் பெண்களுக்கு பொது வாக மூட்டு வலியும் காணபடுகிறது” என்று கூறு கிறார் மூட்டு சிகிச்சை நிபுணரான அஷிஷ் ஜெயின்.

“
காலணியின் அதிக உயரமானது மூட்டு இணைப்புக்கும் அதனுடன் இணைந்த இழை களுக்கும் அதிக கஷ்டத்தை ஏற் படுத்துகிறது. தொடையின் முன்பகுதியில் உள்ள தசைகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

* `
மூட்டுக் கிண்ணத் தில்’ 26 சதவீதம் அளவுக்கு அழுத்தம் கூடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், மூட்டுகளில் தசை கிழிவது, தசைகள் பாதிக்கபடுவது போன்ற நிலைகள் ஏற்படலாம்” என்கிறார் அவர்.பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. காலணியின் உயரம் தொடர்ந்து உயர்த்த படும்போது, ஆடுதசை மற்றும் குதிகாலில் இருந்து மேலே செல்லும் `ஆச்சிலஸ்’ இழை போன்றவை சுருங்குகின்றன.

*
தொடர்ந்து குதிகால் உயர்ந்த காலணிகளை அணியும் பெண்களால் சாதாரண செருப்பை அணிய முடியாது போகலாம். சில நேரத்தில் `ஆச்சிலஸ்’ இழையை நீட்டிக்க அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

*
சிலநேரங்களில் இறுக்கமான `ஹை ஹீல்ஸ்’ அணியும்போது கால் விரல்கள் பாதிக்க படுகின்றன. தோலை தடிக்கவும் வைக்கலாம். பாத மூட்டுக்கும், கால்விரல்களுக்கும் இடையே உள்ள எலும்புகள், தங்களுக்கு இடையே செல்லும் நரம்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

* “
தற்போது பெண்கள், ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் வலியை போக்க பாத பகுதியில் `டெர்மல் பில்லர் இன்ஜெக்ஷன்களை’ போட்டுக் கொள்கின்றனர். அது இன்னும் ஆபத்தானது” என்று எச்சரிக்கிறார், தோல் சிகிச்சை நிபுணரான சதீஷ் பாட்டியா.

* “
ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலைள்ள அந்த ஊசிமருந்துகள் ஆறேழு மாதங்களுக்கு மட்டுமே பயன் தரும்” என்கிறார் இவர்.

குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதால் ஏற்படும் வலியைத் தவிர்பதற்கான ஒரே வழி, அவற்றை அணியாமல் இருப்பதுதான். அது முடியாமல் போனால், ஒரு `இஞ்சு’க்கு மேல் இல்லாத `ஹை ஹீல்சை’ அணியலாம் என்பது மருத்துவர் களின் முடிவான கருத்து.