Tuesday 4 October 2011

உடலை பாதிக்கும் ”ஹை ஹீல்ஸ்”




நவநாகரீக பெண்கள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் தோன்றுவதற்கு விரும்பி அணிபவை `ஹை ஹீல்ஸ்எனப்படும் குதிகால் உயர்ந்த காலணிகள்.ஆனால் இந்த `நெட்டைக் கொக்குகாலணிகளால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

* “
குதிகால் உயர்ந்த காலணிகளால் முன்னங்கால்களுக்கு அதிகரிக்கும் அழுத்தமானது மயிரிழை எலும்பு முறிவு, கட்டை விரல் வீக்கம், கால் விரல்கள் முன்புறம் வீங்குவது போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. `ஹை ஹீல்ஸ்அணியும் பெண்களுக்கு பொது வாக மூட்டு வலியும் காணபடுகிறதுஎன்று கூறு கிறார் மூட்டு சிகிச்சை நிபுணரான அஷிஷ் ஜெயின்.

காலணியின் அதிக உயரமானது மூட்டு இணைப்புக்கும் அதனுடன் இணைந்த இழை களுக்கும் அதிக கஷ்டத்தை ஏற் படுத்துகிறது. தொடையின் முன்பகுதியில் உள்ள தசைகள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது.

* `
மூட்டுக் கிண்ணத் தில்’ 26 சதவீதம் அளவுக்கு அழுத்தம் கூடுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், மூட்டுகளில் தசை கிழிவது, தசைகள் பாதிக்கபடுவது போன்ற நிலைகள் ஏற்படலாம்என்கிறார் அவர்.பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. காலணியின் உயரம் தொடர்ந்து உயர்த்த படும்போது, ஆடுதசை மற்றும் குதிகாலில் இருந்து மேலே செல்லும் `ஆச்சிலஸ்இழை போன்றவை சுருங்குகின்றன.

*
தொடர்ந்து குதிகால் உயர்ந்த காலணிகளை அணியும் பெண்களால் சாதாரண செருப்பை அணிய முடியாது போகலாம். சில நேரத்தில் `ஆச்சிலஸ்இழையை நீட்டிக்க அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

*
சிலநேரங்களில் இறுக்கமான `ஹை ஹீல்ஸ்அணியும்போது கால் விரல்கள் பாதிக்க படுகின்றன. தோலை தடிக்கவும் வைக்கலாம். பாத மூட்டுக்கும், கால்விரல்களுக்கும் இடையே உள்ள எலும்புகள், தங்களுக்கு இடையே செல்லும் நரம்புகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

* “
தற்போது பெண்கள், ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் வலியை போக்க பாத பகுதியில் `டெர்மல் பில்லர் இன்ஜெக்ஷன்களைபோட்டுக் கொள்கின்றனர். அது இன்னும் ஆபத்தானதுஎன்று எச்சரிக்கிறார், தோல் சிகிச்சை நிபுணரான சதீஷ் பாட்டியா.

* “
ரூ. 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விலைள்ள அந்த ஊசிமருந்துகள் ஆறேழு மாதங்களுக்கு மட்டுமே பயன் தரும்என்கிறார் இவர்.

குதிகால் உயர்ந்த காலணிகளை அணிவதால் ஏற்படும் வலியைத் தவிர்பதற்கான ஒரே வழி, அவற்றை அணியாமல் இருப்பதுதான். அது முடியாமல் போனால், ஒரு `இஞ்சுக்கு மேல் இல்லாத `ஹை ஹீல்சைஅணியலாம் என்பது மருத்துவர் களின் முடிவான கருத்து.