இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும்,
வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம்
சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலைய
ை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை
பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனா
கிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி.
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.
நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.