India gang rape victim's father:I want the world to know my daughter's name is Jyoti Singh Pandey . இங்கிலாந்திலிருந்து வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்தையான பத்ரிசிங் பாண்டே தெரிவித்தது :
" ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, கண்கள் மூடிய நிலையில் கட்டிலில் அவள் படுத்திருந்தாள். அவள் நெற்றியின் மீது என் கையை வைத்து, 'ஜோதி' என்று அழைத்தேன். மெதுவாக கண்விழித்த அவள், என்னை பார்த்ததும். 'வலிக்கிறது அப்பா' என்று கூறி, கதறி அழத்தொடங்கினாள். கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்ட நான்,'அழாதேம்மா... தைரியமா இரு. எல்லாம் சரியாயிடும்' என்று ஆறுதல் கூறினேன். அப்போது வரைக்கும் என் மகளுக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்கு தெரியாது. உடனே என் மனைவியையும், மகன்களையும் ஆஸ்பத்திரிக்கு வரவழைத்தேன்.
அவளது வாய்க்குள் உணவு செலுத்தும் குழாய் பொருத்தப்பட்டிருந்ததால், அவளால் பேச முடியவில்லை. ஓரிரு முறை செய்கையால் அவள் எங்களுடன் பேசினாள். உடல்நிலை தேறி, உயிர்பிழைத்து, எங்களுடன் வாழவிரும்புவதாக அவள் எழுதிக் காட்டினாள். தனக்கு நேர்ந்த அசம்பாவிதத்தை 2 முறை போலீசாரிடம் அவள் வாக்குமூலமாக பதிவு செய்தாள். அந்த கொடுமைகளை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருக்க எனது மனம் சகிக்கவில்லை. ஆனால், அந்த வாக்குமூலங்களை கேட்ட என் மனைவி, கதறித்துடித்து அழுதாள். அவளை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. என் மகள் கூறியதை என் மனைவி எனக்கு தெரியப்படுத்தினாள். அந்த சம்பவத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள்இல்லை. அந்த அனுபவம் எந்த பெண்ணுக்கும் வாய்க்கக்கூடாது என நான் விரும்புகின்றேன்.
டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் நண்பர் ‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்த பேட்டி கடந்த வாரம் ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் மாணவர் கூறியதாவது:-
" என்னையும் என் தோழியையும் அவர்கள் கடுமையாக திட்டினார்கள். இதனால் தகராறு முற்றியது. அப்போது மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் இருவரும் கையில் இரும்பு கம்பி வைத்திருந்தனர். கண் மூடித்தனமாக என் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை தடுத்த என் தோழிக்கும் இரும்பு கம்பியால் அடி விழுந்தது. அதன் பிறகுதான் அந்த பாவிகள் என்னை அடித்து தள்ளிவிட்டு என் தோழியை பலாத்காரம் செய்தனர். அவள் துணிச்சலாக போராடினாள். 3 வாலிபர்கள் சரமாரியாக மீண்டும் தாக்கியதில் அவள் நிலை குலைந்து போனாள்.
சுமார் 2 மணி நேரம் ஓடும் பஸ்சில் அவர்கள் என் தோழியை வேட்டையாடி விட்டனர். அதன் பிறகும் 6 பேருக்கும் எங்கள் மீது வெறி அடங்கவில்லை. எங்களை அடித்து நிர்வாணப் படுத்தினார்கள். நாங்கள் உதவி கேட்டு கதறியது வெளியில் கேட்கவில்லை.
பிறகு பஸ்சை திடீரென ஒரு இடத்தில் நிறுத்தி ரோட்டோரத்தில் எங்களை தள்ளிவிட்டனர் அந்த சமயத்திலும் என் தோழி துணிச்சலை இழக்காமல் அவர்களை எச்சரித்தாள். இதனால் அந்த 6 பேரும் மேலும் ஆத்திரம் அடைந்தனர். எங்களை பஸ் ஏற்றி கொல்ல முயன்றனர்.
நான் என் தோழியுடன் விலகிக் கொண்டதால் தப்பினோம். இரவு 11.30 மணி அளவில் நிர்வாண நிலையில் நாங்கள் தவித்தோம். என் தோழி ரத்த வெள்ளத்திலும் தரையில் சாய்ந்து விட்டாள். நான் அந்த வழியாக காரில் வந்தவர்களிடம் கையை காட்டி உதவி கேட்டேன். கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கரங்களில் அந்த வழியாக வந்த எல்லாரும் நான் கை காட்டியதும் வேகத்தை குறைத்தனர். நாங்கள் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து, பக்கத்தில் கூட வராமல் ஒதுங்கி சென்றுவிட்டனர். சிலர் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு எங்களுக்கு உதவி செய்யாமல் சென்றனர்.
இப்படி ரோட்டோரத்தில் சுமார் 2 மணி நேரம் தவித்தோம். கடைசியில் யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 3 வேன்களில் போலீசார் வந்தனர்.ஆனால் அவர்களுக்குள் எல்லைத் தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசாருக்கும் நாங்கள் தள்ளப்பட்டு கிடந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. நிர்வாணமாக கிடந்த எங்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் சுமார் 45 நிமிடம் எல்லை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் இரக்க குணம் கொண்ட ஒரு போலீஸ்காரர் மட்டும் எங்கிருந்தோ ஒரு துணி எடுத்து வந்து என் தோழி மீது போர்த்தி விட்டார். பிறகு எல்லை பிரச்சினை ஓய்ந்து எங்களை போலீஸ் வேனில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது கூட அவர்கள் என் தோழிக்கு உதவ வில்லை. நான்தான் அவளை தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினேன்.
எங்களை போலீசார் அருகில் உள்ள ஏதாவது ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கலாம். நீண்ட தூரத்தில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மயங்கிய நிலையில் இருந்த என் தோழிக்கு உடனடி சிகிச்சை கொடுக்க தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர். அப்போதும் நான் நிர்வாண நிலையில் வெளியில் தரையில் கிடந்தேன். அன்றே என் தோழி செத்து இருக்கலாம்.
அவர் மிகவும் சித்ர வதையை அனுபவித்து விட்டாள். அடுத்த 4 நாட்கள் நான் ஸ்டெச்சரில்தான் கிடந்தேன். தனியார் மருத்துவமனைக்கு சென்று நான் சிகிச்சை பெற்றதால் பிழைத்தேன். என்தோழி மிகவும் துணிச்சல் கொண்டவள். எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாதது அவளுக்கு நடந்து விட்டது. அவ்வளவு நடந்த பிறகும் அவள் நம்பிக்கையுடன் உயிர் வாழ ஆசைப்பட்டாள்.அவளைப் பார்க்க நான் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, என்னை பார்த்ததும் லேசாக சிரித்தாள். அவ்வளவு வலி, வேதனையிலும் அவள் என்னை பார்த்து சிரித்ததும் நான் துடித்துப் போனேன். ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு செலவாகிறது என்று அடிக்கடி கேட்டாள். தன் தாய்க்கு அவள் தைரியம் கொடுத்தாள். அவள் நிலையில் வேறு எந்த பெண்ணாலும் அப்படி இருந்திருக்க முடியாது. தன்னை நாசம் செய்த குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்களா? என்று அடிக்கடி கேட்டாள். 6 குற்றவாளிகளையும் உயிரோடு தீ வைத்து எரிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினாள். அவளிடம் பெண் மாஜிஸ்திரேட் 2 தடவை வாக்குமூலம் வாங்கினார். அந்த 2 தடவையும் அவள் துணிச்சலாக எல்லா தகவல்களையும் தெரிவித்தாள். வேறு எந்த பெண்ணாலும் இப்படி சொல்ல இயலாது.
என் தோழிக்கு முதலில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் சிறப்பாக இருந்தன. முதல் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவள் தெளிவாக பேசினாள். அவள் இறந்து விடுவாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.என் தோழி சாவில் என்ன நடந்தது என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மன சாட்சியுடன் நடந்து கொண்டாலே போதும். என் தோழி மரணத்துக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவதால் எந்த புண்ணியமும் இல்லை. அதுபோல சட்டத்துக்கு என் தோழி பெயர் சூட்டப்படுவதால் என்ன நடந்து விடும்? நம்மிடம் போதுமான சட்டங்கள் உள்ளது. ஆனால் அவை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அந்த சட்டங்கள் பற்றி மக்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.”என்று மாணவியின் நண்பர் கூறினார்.
மாணவி நண்பர்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஆவார். அவர் வெளியிட்ட தகவல்களை இதுவரை டெல்லி போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். அது அம்பலமாக்கப்பட்டு விட்டதற்காக ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திகைக்க வைக்கும் கேள்விகள் :
போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மன சாட்சியுடன் நடந்து கொண்டாலே போதும் என்று ஏன் அவரின் நண்பர் சொல்ல வேண்டும் ?
அவர் அனுபவித்த வலிகளை தானே சொல்கிறார் . உண்மையை வெளியுடுவது தானே ஊடகத்தின் வேலை ?அதற்கு ஏன் காவல் துறை வழக்கு பதிவு செய்கிறேர்கள்?
கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே தமிழகத்தில் ஸ்ரீவைகுண்டம் புனிதா, சென்னையில் வினோதினி என்ற பெண் மீது ஆசிட் ஊற்றியது, சேலத்தில் வேலைக்கார பெண்களை பாலியல் தொந்தரவு செய்தது, சென்னையருகே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது,கடலூர் விருத்தாச்சலம் அருகே நண்பருடன் சென்ற பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான செய்திகளும் ..... மனதை வருத்தமுறவே செய்கிறது
இந்திய புள்ளிவிவர அறிக்கை படி (national crime records bureau)ஒவ்வொரு 20 நிமிடங்களில் ஒரு இந்திய பெண்ணின் மீது பாலியல் கொடுமை நிகழ்த்த படுகிறது .கடந்த ஆண்டுகளை நோக்குகளை சென்னையில் 2009ல் 39 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன பின்னர் . 2010ல் , 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. பின்னர் . 2011ல் , 76 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் என்ன சொல்லுகிறது என்றால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட பெண் அதனை நிருபிக்கும் ஆவணத்தை போலீசிடம் / நீதிமன்றத்தில் தருவிக்க தவறுகிறாள் என்றால் அவளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது ரெண்டுமே சேர்த்தோ தண்டனையாக கிடைக்கும்
SECTION 175 IPC :175. Omission to produce 1[document or electronic record] to public servant by person legally bound to produce it.—Whoever, being legally bound to produce or deliver up any 1[document or electronic record] of any public servant, as such, intentionally omits so to produce or deliver up the same, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both,or, if the 1[document or electronic record] is to be produced or delivered up to a Court of Justice, with simple imprisonment for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.
UNTIL UNLESS THIS LOOPHOLE IN SECTION 175 IPC THAT IS WORKING AGAINST INTEREST OF WOMEN IS FIXED BY THE CRIMINAL LAW (AMENDMENT) BILL 2012 ....இந்த ஷரத்து இருக்கும் வரை இருக்கும் வரை பெண்களுக்கு நியாயம் கிடப்பது அறிய கனவாகி போய் கொண்டே இருக்கும்
விந்தையாக இருக்கிறது பாலியல் சட்டங்கள் நமக்கு சொல்லி தந்து கொண்டு இருக்கும் பாடங்கள் ..... குற்ற எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது . ஆனால் எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கை பற்றிய தகவலை சொல்ல முடியாத காரணத்தை அறிவதோ அல்லது களை எடுப்பதே தான் பெண்கள் மீது தொடர்ந்து கூடி கொண்டு இருக்கும் பாலியல் கொடுமைக்கு ஒரு நிரந்திர தீர்வாக அமைய முடியும் .
இதனை இப்படியே தொடர்ந்து கொண்டு போனால் இனி மேல பாலியல் கொடுமைக்கு உட்படும் ஒவ்வொரு பெண்ணும் அதனை எதிர்ப்பதை விட்டு விட்டு அந்த நேரத்தில் ஆதாரத்தை சேமித்து வைத்து கொள்ள தானே முற்படவேண்டும் .?!!விளங்கவில்லை ., விளங்கவில்லை ., நாம் எங்கே செல்கிறோம்?
சரி என்ன தான் செய்யலாம் ?
1)பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் செலவை நீதிமன்றமே ஏற்க வேண்டும் !
2) குற்றதை நிருபிக்கும் பொறுப்பு investigation officer இடமே தரப்பட வேண்டும்
3) அதிக பட்ச தண்டனையாக குற்றம் செய்த ஆணின் விறைப்பு தன்மை அறுக்கப்பட (Castigation)வேண்டும்
4)பாலியல் கொடுமைக்கு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இந்த வழக்குகள் எல்லாம் மிக அதிகபட்சமாக ஆறு மாதத்தில் முடிக்க சட்டத்தில் வகை செய்ய வேண்டும்
உடனடியாக நாடாளுமன்றத்தைகூட்டுங்கள் . குற்றவாளிகள் தப்பி செல்லும் சட்டத்தின் ஓட்டைகளை அடையுங்கள் . இப்போது மாற்றம் காணாவிட்டால் பின்னர் எப்போது ?
ஆகஸ்ட் இல் பிறந்த அமெரிக்க இலக்கியவாதி James Arthur Baldwin சொன்னதிலே எனக்கு பிடித்தது " Not everything that is faced can be changed but nothing can be changed until is faced "
நீங்கள் செலவழித்த மணித்துளிகளுக்கு நன்றி !