Thursday, 3 January 2013

கமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Part 1 - Content suitable for ALL.



"மன்டைக்கனம் பிடித்தவன் கமல்" - ஆம் தவறில்லையே, மண்டைக்கு உள்ளேயும் வெளியேயும் மசாலா இல்லாமல் படம் எடுக்கும் ஒரு கூட்டம் அதனை தாங்கி பிடிக்கும் இன்னொரு கூட்டம் இதற்க்கு நடுவில் மண்டையில் கனம் உள்ளவன் தான் இந்த உண்மையான தமிழ் சினிமா காதலர்களுக்கு தேவை

"கமலஹாசன் திரையரங்குகள் அடியோடு அழிந்து போக வந்திருக்கும் அரக்கன்" - ஆம் குடி தண்ணீர் வீட்டுக்கு பிளாஸ்டிக் குடுவையில் டெலிவரி செய்யலாம், குண்டி துடைக்கும் காகிதம் வீட்டுக்கு டெலிவரி செய்யலாம் ஆனால் குடிதண்ணீர் கூட வீட்டில் இருந்து எடுத்து போகக்கூடாது என வாசலில் செக்யூரீட்டி ரீஸன் என பிடுங்கி, நாலு மடக்கு வரும் தண்ணீர் பாட்டிலை நாப்பது ரூவாய்க்கு விற்க்கும் நீங்கள்.......

"கமலஹாசன் இஸ்லாமியர்களை தாக்கும் விதமாக விஸ்வரூபத்தை எடுத்துள்ளார்"---- பிறப்பில் தான் ஒரு ஹிந்து ஆயினும் தன் தந்தைக்கு கட்டுபட்டு இஸ்லாமிய சகோதரனின் பெயரை தனக்கு மட்டுமல்ல தன் மூனு தலை முறை குடும்பத்துக்கும் "சர்" நேமாக (surname) வைத்திருக்கும் இவர், இந்த பெயரால் நியூ யார்க் - கனடா - விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமானங்கள் ஆயிரம் இருந்தும் இன்று அதை பேணிக்காக்கும் இவரா உங்கள் மதத்தை காயபடுத்தி காசு பண்ண போகிறார்......

"கமல் கலைஞர் ஆனால் வியாபாரத்தில் அனுபவம் பத்தாது" - ஆம் சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்யும் நான்கு பெயரில் இவர் இரண்டாமானவர், இவருக்கு முப்பது நிமடம் கவுரவ வேடத்தில் வரும் படத்தை 100 கோடிக்கு விற்க் தெரியாத வீணாய்ப்போனவர், இன்றைய டி டி ஹெச் முயற்ச்சி நாளை சினிமாவின் வளர்சிக்கு தன்னை வருத்தி கொன்டு போட்ட பிச்சை தான் இந்த முயற்ச்சி என்று காலம் சொல்லும்

"கமலஹாசன் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்" - ஆம் டாக்டர் பட்டம், பத்மஸ்ரீ பட்டத்தை தாங்கிய இவர், பட்டென்று பேசி பாவலாவோ பம்மாத்தோ பண்ண தெரியாத ஒரு பரமக்குடிக்காரர், உண்மையை சொல் அதையும் உரக்கச்சொல்லின் மூத்த குடிமகன் இன்னும் எவ்வளவோ இருக்கு....

இந்த பாகம் நாளை விஸ்வரூபம் எந்த வகையில் இன்டஸ்ட்ரிக்கும், வீட்ல இருக்கிற மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதை அக்குவேர் ஆணிவேராக தத்துபித்துவிற்க்கு பிறகு பார்ப்போம்.......

முரட்டு பக்தனின் கடைசி பக்தன் - முதல் வரிசையில்...