Tuesday, 23 April 2013

பளபளப்பான முகத்திற்கு ஏற்ற ஒயின் ஃபேஷியல்!!!

இதுவரை ஆல்கஹாலை குடிக்க மட்டும் தான் செய்திருப்போம். அதிவும் ஒயின் பழரசங்களால் ஆனதால், உடலுக்கு மிகவும் நல்லது. இத்தகைய ஆல்கஹாலில் ஒன்றான வைத்து ஒயினை வைத்து ஃபேசியல் செய்தால் சருமம் நன்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். மேலும் இந்த ஒயினை தலைவலி அதிகம் இருக்கும் போது அருந்தினால், உடனடியாக தலைவலி நீங்கிவிடும். ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளன.

மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் இருக்கும் டாக்ஸின்களை நீக்கிவிடுகிறது. மேலும் இந்த ஃபேஷியல் சருமத்தை இறுக்கமடையச் செய்கின்றன என்று அழகு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஒயினில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு ஒயினும் சருமத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்தால், நிறைய செலவாகும். சொல்லப்போனால், இதை வைத்து தான் முகத்திற்கு ஃபேஷியல் செய்வார்கள். ஆனால் இப்போது எப்படி வீட்டிலேயே அத்தகைய ஒயின் ஃபேஷியல் செய்வதென்று பார்ப்போமா!!!

* இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை ஊற்றி, கலந்து முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். இந்த ஃபேஷியலை வறண்ட சருமம் உள்ளவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

* 3 டேபிள் ஸ்ழுன் ரெட் ஒயினுடன், தயிர் மற்றும் 2 துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20-25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீங்கி, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீங்கும். இந்த ஃபேஷியல் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்றது.

* ரெட் ஒயினுடன், கற்றாழை ஜெல்லை கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். ஏனெனில் ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து பூசும் போது, அந்த கலவை சருமத்தில் ஊடுருவிச் சென்று பொலிவைத் தருகிறது. மேலும் இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும், சருமமும் குளிர்ச்சியுடன் இருக்கும்.

* போர்ட் ஒயினுடன் 2-3 டீஸ்பூன் தேனை ஊற்றி. கலந்து, சருமத்திற்கு தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் தேன் சருமத்தை பொலிவாக்குவதோடு, சரும செல்களை சரிசெய்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.