Monday 1 April 2013

பூஜ்ஜியம் ரூபாய் - லஞ்சத்தை ஒழிக்க


இந்தியாவை சேர்ந்த பிசிக்ஸ் புரபசர் ஒருவருக்கு டக்கென ஒரு ஐடியா உதித்தது..லஞ்சத்தை ஒழிக்க ஏன் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டை தயார் செய்ய கூடாது என நினைத்தார்.உடனே உருவாக்கியும் விட்டார்.


ப்ரின்டிங் பிரஸ்ஸில் இதை கலர் ப்ரின்ட் எடுத்தார். லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளிடம் இந்த நோட்டை லஞ்சமாக கொடுக்க சொல்லி நண்பர்கள், உறவினர்களிடம் சொன்னார். இந்த கான்செப்டுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.அவர் இதை யதேச்சையாய் ஐந்தாம் தூண் என்ற என்.ஜி.ஓ அமைப்பிடம் சொன்னார்.

அந்த அமைப்பின் தலைவர் விஜய் ஆனந்த் என்பவருக்கு இந்த ஐடியா பிடித்து போக உடனே அவர் 25,000 நோட்டுகளை அச்சடித்தார்.அதை வட இந்தியாவெங்கும் வினியோகம் செய்ய நோட்டுகள் பரபரவென மக்களிடையே பரவின.அதன் பின் நோட்டுகளை மக்கள் அதிக அளவில் கேட்க இதுவரை சுமார் பத்துலட்சம் நோட்டுக்களை அச்சடித்து மக்களிடையே வினியோகித்துள்ளது இந்த அமைப்பு

ரெவென்யு டிபார்ட்மெண்டில் லஞ்சம் கேட்டதால் நடையாய் நடந்து அலுத்த பெண் ஒருவர் லஞ்சம் கேட்ட அதிகாரி ஒருவரிடம் இந்த நோட்டை கொடுத்தார்.உடனே அந்த அதிகாரி சீட்டை விட்டு எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி இவரிடம் மன்னிப்பு கேட்டு வருடகணக்கில் நகராமல் இருந்த பைலை முடித்து கொடுத்தார்.இந்த நோட்டு இத்தனை பெரிய மாஜிக்கை ஏற்படுத்தும் என அந்த அம்மையார் நம்பவே இல்லை.

ஏன் இந்த நோட்டு வட இந்தியாவில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் இந்த நோட்டை பார்த்தால் முதலில் பயந்துவிடுகிறார்கள் என்கிறது உலகவங்கி.அடுத்து லஞ்சம் என்பது சட்டபடி தண்டனை கிடைக்கும் குற்றம்.லஞ்சம் கொடுக்க வசதியற்ற மக்கள் இழப்பதற்கு ஏதுமில்லை என்ர நிலையில் இந்த நோட்டை தருகின்றனர். அலுவலகங்களில் இப்படி ஏராளமான ஏழை எளிய மக்கள் இந்த நோட்டுக்களை அளித்து வருவதால் அதிர்ந்து போன அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தி விட்டு சொன்ன வேலையை செய்து தருகின்றனர்

இந்த பூஜ்ஜியம் ரூபாய் நோட்டு கான்செப்ட் தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது.