Saturday 13 July 2013

பேஸ்புக்கும் அதன் விளைவுகளும்..!!

பேஸ்புக்கும் அதன் விளைவுகளும்..!!

உணவு, உடை மற்றும் இருப்பிடம் இம்மொன்றும் மனிதனின் வாழ்விற்கு
இன்றியமையாததாக இருப்பது போல இணையதளமும் அத்தியாவசியமாகிவிட்டது இன்றைய
உலகில்.

அமெரிக்கர்களால் கண்டறியப்பட்ட இனைதளமானது தற்போது பட்டிதட்டிஎல்லாம்
பரவிக்கிடப்பதை நாம் பார்த்துகொண்டிருக்கிறோம். உலகில் நடக்கும் அத்துனை
நிகழ்வுகளையும் அமர்ந்த இடத்திலிருந்தே அறிந்துகொள்ள இணைத்தளம்
வழிவகுக்கிறது. உலகம் உன் கையில் என்ற வாசகம் இணையதளத்திற்கும் பொருந்தும்.

என்னதான் இணையத்தில் பற்பல விடயங்கள் இருந்தாலும் பெரும்பாலானோர்
(குறிப்பாக இளைகர்கள்) சமூக வலைதளங்களின் முகவரியையே பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைதளமானது உலகில் அனைத்து பகுதி மக்களிடமும் தொடர்புகொள்ளவும் தம்
உணர்வுகளையும் கருத்துக்களையும் வேண்டிய நபரிடம் பகிர்ந்துகொள்ளவும்
பழகவும் பயன்படுத்தபடுகிறது.

Orkut, Hi5, iBibo, facebook, myspace, twitter முதலிய இணையதள முகவரிகள் சமூக
வலைத்தளங்களில் அளப்பெரும் பங்குவகிக்கிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்
முகவரியில் தான் மற்ற சமூக வலைதள இணைய முகவரியை காட்டிலும் கணக்கு வைத்திருப்பவர்களின்
எண்ணிக்கை அதிகம்.

பேஸ்புக் இணையதளமானது 2003ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் நாள் மார்க் ஜுக்கர்பர்க் மற்றும் அவருடைய
நண்பர்கள் மூவரால் உருவாக்கப்பட்டது. இருவருடங்களிலேயே 5.5 மில்லியன் மக்கள் இணைந்தனர். 2010ன்
முடிவில் 608 மில்லியனாகவும் சென்ற ஆண்டின் முடிவில் சரசரவென உயர்ந்து 1.06 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது.
[Source: Associated Press – Wed, May 1, 2013]
இன்று உலகில் அனைத்து பகுதி மக்காளாலும் இது உபயோகப்படுத்தபடுகிறது.

இந்தியாவில் மட்டும் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்கு
உபகபடுத்தபடுகிறது. (இந்தியாவில் தான் போலி கணக்கு வைத்திருப்பவர்களின்
எண்ணிக்கை அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

பேஸ்புக்கால் விளையும் பயன்கள்:

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாம் தொடர்புகொள்ள விரும்பும் நபர்களை அவர்கள் எங்கிருந்தபோதிலும்
தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. இதற்க்கு பயணம் செய்யவோ பணம் செலவு செய்யவோ
வேண்டியதில்லை.

இப்படி பல பகுதி மக்களோடும் தொடர்பை ஏற்படுத்திகொள்வதால் அவர்களிடம் தனிப்பட்ட செய்தி வாயிலாகவும்
அவர்கள் இடும் பதிவுகள் வாயிலாகவும் அங்கு நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவுகிறது.

பேஸ்புக்கில் இணைய விளையாட்டு விளையாடவும், நண்பர்களோடு கதைக்கவும், நண்பர்களின்
புகைப்படத்தையும் வீடியோக்களையும் பார்த்து மகிழ்வதற்கும் பொழுதுபோக்கு கருவியாகவும் இருக்கிறது.
வீடியோ அழைப்பு வசதி அமைந்திருப்பதால் ஒரு நபரை அவர் எங்கிருந்தபோதிலும் நம் அருகில் அமர்ந்து
நேரடியாக உரையாடியது போல உணர்வுகளை தருகிறது.

நாம் சொல்லவிரும்பும் கருத்துக்களை பலருக்கு கொண்டுசெல்லக்கூடிய கருவியாகவுன் பயன்படுத்தலாம்.
பேஸ்புக்கில் தமக்கென்று துவங்கிகொண்டு அதன் மூலம் நம் கருத்துக்களை பிறருக்கு எத்திவைக்க உதவுகிறது.
பேஸ்புக் சக்திவாய்ந்த கருவி. சமூக பிரச்சினைகளை எதிர்க்கொள்ளக்கூடிய ஊடக வலிமைபெற்றது. மக்கள் மத்தியில் ஒரு
செய்தியை பரப்பிவதில் பேஸ்புக் அனைத்து பத்திரிக்கைகளையும் தொலைகாட்சிகளையும் கூட விஞ்சிவிடும்.
(இதனுடைய ஊடக வலிமையை அரபு வசந்தம் மூலம் அறிந்துகொள்ளலாம்)

மேலே சொல்லப்பட்டது போல பல நன்மைகள் இருந்தாலும் இதில் பல தீங்குகளும் இருக்கவே செய்கிறது.

பேஸ்புக்கால் விளையும் தீங்குகள்:

பேஸ்புக்கில் நம் சுயவிவரத்தையும் நம்முடைய புகைப்படத்தையும் நம் குடும்ப விவரங்களையும் பகிர்ந்துகொள்வதால்
சில சமயங்களில் அதை பிறர் துஸ்பிரயோகம் செய்யவும் வாய்ப்புகளுள்ளது.
தம் சொந்த விடயத்தை காட்டிலும் பிறருடைய விடயத்தில் ஆர்வம்காட்டுவது மனிதனின் இயல்பு. இது பேஸ்புக்கிர்க்கும் பொருந்தும்.
தம்முடைய சொந்த விடயங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்வதால் பிறர் கவனத்தை ஈர்க்ககூடியதாக அமைகிறது.
ஒருவரின் அனைத்து நிகழ்வுகளையும் பொதுவாக வெளிபடுத்துவது அபாயகரமான ஒன்றாகும்.

பேஸ்புக் நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளக்கூடிய தகவல்கள் பயனற்றதாக இருந்தால்
அது நேரத்தை பாழ்படுத்தக் கூடியதாக அமைகிறது. ஏனென்றால் சில செய்திகள் பயனற்றதாக இருக்கும்
ஆனால் அது பிறருடைய கவனத்தை ஈர்க்கும் (உதாரணமாக சினிமா செய்திகளை சொல்லலாம்)

இதை அதிகளவு பயன்படுத்துவதின் விளைவாக நண்பர்களையும் உறவினர்களையும் நேரடியாக சந்தித்து பழகும் வழக்கம் சரிந்துவருகிறது.
இளைகர்கள் ஓடி விளையாடுவதும் குறைந்துவிட்டது. இதுபோல சில சிக்கல்களால் உடலும் மனமும் பாதிக்கபடுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கவனிக்கவேண்டியது பேஸ்புக் சிலரை அடிமையாக்குகிறது என்பதுதான்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பிசினஸ் பள்ளி இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியது. அதில் பேஸ்புக், டிவிட்டர், பிளாக்பெர்ரி
உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் நபர்களை வைத்து ஆய்வு நடத்தினர். 7 நாட்கள் இந்த ஆய்வு நடந்தது. ஆன்லைன் மூலமாக நடந்த
இந்த சர்வேயில் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் செக்ஸ், சிகரெட் பழக்கத்தை விட மிக மோசமான முறையில் பேஸ்புக், டிவிட்டர்
உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மக்கள் அடிமையாகிக் கிடப்பது தெரிய வந்ததாம். ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறையாவது பேஸ்புக்,
டிவிட்டர் பக்கம் போய் விடுகின்றனராம் அதற்கு அடிமையானவர்கள். சிகரட் பழக்கத்திற்கு கூட இப்படி மெனக்கெடுவதில்லையாம்.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், சிகரெட், போதைப் பழக்கம், விளையாட்டு என அனைத்தையும் தகர்த்து்த் தரைமட்டமாக்கும் அளவுக்கு இந்த பேஸ்புக், டிவிட்டர் பழக்கம் விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக கூறியுள்ளனர்.

முடிவுரை:

கத்தி என்பது ஒரு ஆயுதம் அதை பயன்படுத்தி ஆப்பிளும் வெட்டலாம் கொலையும் செய்யலாம் என்பார்கள் அதுபோல
பேஸ்புக்கை நாம் எப்படி பயன்படுத்திகொல்கிறோம் என்பதில் தான் அதனுடைய நன்மைகளும் தீமைகளும் அமைந்திருக்கிறது.