ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள்!!!
ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள்!!!
வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, ஆண்களுக்கும் தான்.
அதிலும் இத்தகயை வெட்கமானது பெண்களை விட, ஆண்களுக்கு அதிகம் இருந்தால், அது
பிரச்சனைகளுக்குத் தான் வழிவகுக்கும். ஆம், ஆண் எப்போதும் கம்பீரமாகவும்,
தைரியமாகவும், தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். அதை விட்டு,
எப்போதும் வெட்கப்பட்டு வெளிப்படுத்தாமல் இருந்தால், அது கருத்து
வேறுபாட்டினை ஏற்படுத்தி, பிரிவுக்கு வழிவகுக்கும்.
ஆகவே ஆண்கள்
எப்போதும் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை மறைக்காமல், சந்தோஷமான வாழ்க்கை
அமைய வேண்டுமெனில், எப்போதும் தெளிவாக பேசி, உணர்ச்சிகளை வெளிப்படுத்த
வேண்டும். இப்போது ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருந்தால்,
உறவுகளுக்குள் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று பார்ப்போம்.
* மனதில் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருந்தால், கருத்து வேறுபாடுகள்
ஏற்பட்டு, அடிக்கடி சண்டைகள் வரும். பெரும்பாலான பெண்கள், தனக்கு வருபவர்
வெளிப்படையான பேச்சு மற்றும் சந்தோஷப்படும் படியாக நடந்து கொள்ள
வேண்டுமென்றும் ஆசைப்படுவார்கள். இருப்பினும் துணையாக வந்துவிட்டப்
பின்னர், எவ்வளவு தான் புரிந்து கொண்டாலும், ஒருசில நேரங்களில்
பேசாவிட்டால், கோபமானது அதிகரித்து, தேவையில்லாத சண்டைகள் ஏற்படக்கூடும்.
இதனால் ஆரோக்கியமான உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும்.
* ஆண்கள்
வெட்கப்பட்டால், பெண்களுக்கு ஆண்களின் மீது ஆர்வக்குறைவானது ஏற்படும்.
ஆர்வக்குறைவு என்பது எங்கேனும் வெளியே செல்லும் போது துணை அழகான ஆடைகளை
அணிந்து கொண்டு வந்தால், அப்போது அவர்களிடம் " இந்த ஆடை உனக்கு அழகாக
உள்ளது" என்பது போன்றவற்றை சொல்ல வேண்டும். அதை விட்டு ரெடி ஆகி
வந்துவிட்டால், வாயை மூடிக் கொண்டு இருந்தால், பிறகு எப்போது வெளியே
அழைத்தாலும், வருவதற்கு ஆர்வம் இல்லாதவாறே பெண்கள் நடந்து கொள்வார்கள்.
* குறிப்பாக உணர்ச்சிகளை ஆண்கள் வெளிப்படுத்தாவிட்டால், காதலிக்கு
விரைவில் வேறு காதலன் கிடைத்துவிடுவான். பின் நாமம் தான் போட்டுக் கொண்டு
செல்ல வேண்டும். ஆகவே இப்போதிருந்தாவது, உங்கள் காதலியிடம் வெளிப்படையாக
பேச ஆரம்பியுங்கள். இல்லாவிட்டால், ஒரு நல்ல அழகான துணையை இழக்க நேரிடும்.
* பொதுவாக காதலியை மயக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால் அது பேச்சின்
மூலம் தான். அதிலும் மனதை வருடும் வகையில் பேசினால், பெண்களுக்கு மிகவும்
பிடிக்கும். ஆனால் அவ்வாறு வசீகரத்துடன் பேசாவிட்டால், எதற்காக காதல் செய்ய
வேண்டும். எனவே எப்போதும் வெளிப்படையாக பேசி, காதலியை மயக்குங்கள்.
இவையே வெளிப்படையாக பேசாமல், வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால்,
சந்திக்கக்கூடிய பிரச்சனைகள். இத்தகைய பிரச்சனையினால் ஆண்களுக்கு மட்டும்
கஷ்டம் ஏற்படுவதோடு, பெண்களுக்கும் பெரும் அவஸ்தையாக உள்ளது. எனவே முதலில்
காதலிக்கும் பெண்ணின் எதிர்பார்ப்பு என்னவென்று நன்கு தெரிந்து கொள்ள
முயற்சித்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள்.