Monday 8 July 2013

மதுவினால் ஏற்படும் தீமைகள்:

மதுவினால் ஏற்படும் தீமைகள்:

மதுவினால் ஏற்படும் தீமைகள்:
****************************
  1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.

2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.

3 நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.

4 நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.

5 நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.

6 நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய‌ வருமானம் பாழாகும்.

7 மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.

8 குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.

9 இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.

பழமொழிகள் கூறுவது:

1 குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.

2 மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.

3 கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது.

2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை இராது
****************

உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்

கள்காதல் கொண்டுஒழுகு வார்.

குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாணம் விலகிவிடும்
*******************
நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

======பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை!!!.