Friday 19 July 2013

‘தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை... என்னுயிர் பிரிவதை பார்த்திருந்தேன்...’

‘தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை... என்னுயிர் பிரிவதை பார்த்திருந்தேன்...’


அன்றாடம் உடலை
அலங்கரித்தது ஜிப்பா...
என்னாளும் நீ ஒருவார்த்தை
பேசியதில்லை தப்பா

தனக்குதானே நெற்றியில்
இட்டுகொண்டாய் நாமம்
தரணியில் யாருக்குமே
போடவில்லை நாமம்

எம்.ஜி.ஆர், கருணாநிதி
இருதுருவங்களை
இருபுருவங்களில் சுமந்தவன்...
ராமாபுரம், கோபாலபுரம்
இரண்டுக்கும் செல்லப்பிள்ளை... நீ

‘செத்து பிழைச்சவன்டா...’ என்ற உன்னுடைய
பாடலுக்கு
உதட்டசைத்த எம்.ஜி.ஆர்
உயிருடன் திரும்பினார்.
எழுதிக்கொடுத்த நீ...
ஏன் இறந்து போனாய்

நன்றி -
கடுகளவும் இல்லாத
கலையுலகில்
‘உன்னை சந்திக்கும்முன்
திங்கறதுக்கு சோறு இல்லை
சந்தித்த பின்
சோறு திங்க நேரமில்லை...’
என்று சொல்லி
எம்.எஸ்.வி காலில் நீ
சாஷ்டாங்கமாய் விழுந்தபோது
சரஸ்வதி சிலிர்த்தாள்...

பலத்தில் பாதியை
பறித்தவன்
ராமாயண வாலி...
பாடலில் முழுத்திறனையும்
அர்ப்பனித்தவன்
ராஜா அண்ணாமலைபுரம் வாலி..!

பாட்டுத் திறத்தில் மட்டுமல்ல
பழகும் விதத்திலும் _ நீ
கண்ணதாசனின்
க்ளாஸ்மெட்..!

எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு
எழுதிய கைகள்...
விடலை... ஹிரோக்களையும்
விடலை..!

‘தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை...
என்னுயிர் பிரிவதை பார்த்திருந்தேன்...’
என்று அன்று யாருக்கோ எழுதினாய்
இன்று உனக்கே உன் பாடல் APOLLOல் அமைந்துவிட்டது

-திருவாரூர் குணா