Tuesday, 25 September 2018

மூட்டு வலிக்கு 5 ரூபாயில் ஓரு சிறந்த மருந்து :-

மூட்டு வலிக்கு 5 ரூபாயில் ஓரு சிறந்த மருந்து :-
++++++++++++++++++++++++++++++++++++++++++++

நமது உடம்பில நாளுக்கு நாள் கொழுப்பு சத்து சேர்ந்து கிட்டுதான் இருக்கு.
முறையா உடற்பயிற்ச்சி செய்யும் போது அது தானா குறையும் .
அப்படி இல்லாமப்போகும் போது அது ரத்தத்தில சேர்ந்துகிட்டே இருக்கும் .
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமா சேரும் போதுதான் ஹார்ட் அட்டாக் வரை போகும் ..
ஆனா அதுல வர மிகக் குறைந்த அளவுதான் மூட்டு வலி .
ஏன் அந்த இடங்களில் சில மெல்லிய ரத்தகுழாய்களில் கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தை தடை செய்திடும்...
ஆரம்ப காலத்தில மறத்து போனமாதிரி தெரியும் ..
சிலருக்கு கால் கை உப்பிப்போகும்...
உட்கார்ந்தே இருப்பாங்க

இந்த மூட்டு வலி சிலருக்கு மாச,
ஏன் சிலருக்கு வருஷ கணக்குல கூட இருக்கும் .
எத்தனையோ டாக்டர் ( ஒரிஜினல் ) கிட்ட போய் காட்டினாலும் அவர் சில பல டெஸ்ட் செய்ய சொல்லி ஆட்டோமேடிக்கா நமது பர்ஸை குறைச்சி பல்ஸை அதிகமாக்கி பட்டை பட்டையா மருந்து மாத்திரையை குடுத்து அனுப்புவார் . அப்போதைக்கி சரியாகி கொஞ்ச நாள் கழிச்சி திரும்பவும் வந்துடும்..
நாமளும் பழைய டாக்டரை ( ஒரிஜினல் ) நல்லா திட்டிட்டு வேற புது டாக்டரை பார்க்க போயிடுவோம் ..
இது ஒரு தொடர் கதையாகி போகும்..
இது வீட்டில் இருப்பவங்களுக்கு ..
இதே வெளியே வேலைக்கு போகும் ஆண்களா இருந்தா ரொம்பவும் பாவம்.
சிலருக்கு அலைய முடியாமல் வேலையே போகும் பரிதாப நிலையும் வரலாம் .

இதை செலவே இல்லாமல் குணமாக்க முடியும்..அதுவும் வீட்டில் இருக்கும் பொருளைக்கொண்டே ..
என்ன ஆச்சிரியமா இருக்கா...
!! இதுப்போல எத்தனையோ பொருட்கள் இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை புரிவதில்லை..
என் கூட வேலை பார்க்கும் ஒருவரின் உறவினருக்கு இந்த பிரச்சனையால் நடக்கவே சிரமப்பட்டார்.. அப்போது நான் சொன்னேன் .
இது மாதிரி செய்யுங்க போதுமுன்னு..
சந்தேகத்தோடவே போனார் அடுத்த நாள் பயங்கர சந்தோஷத்தோட வந்து சொன்னார்..
இது கடந்த மூனு வருஷமா இருக்கு ஆனா இன்னைக்கி காலையில எழுந்திருச்சதும் பார்த்தேன் .
ரொம்ப நன்றி என் வாழ்க்கையில மூட்டு வலியே வந்ததில்லை போல உணர்ந்தேன் என்றார் நான் சொன்னேன் எப்பவாவது திரும்ப வருவது மாதிரி இருந்தா இதை திரும்பவும் செய்யுங்க போதுமுன்னேன் ...

விஷயம் இதுதான்
வீட்டில் இருக்கும்
வெள்ளை பூண்டு
நாலு அதாவது நாலு பல் எடுத்து அதை கத்தியால் சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும்.
அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது.
இரவு தூங்கப்போகும் போது அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..
தட்ஸ் ஆல்.....
மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் ..

காரணம் இது ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை சாதாரனமாகவே பம்ப் செய்வதால் .
ரத்தம் உடல் முழுக்க அதன் முழு பலத்துடன் பாய்வதால் மூட்டுக்களில் தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைந்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது ..
நான்கு பூண்டுப்பல் ஒரு விலையே இல்லை அப்படியே இருந்தாலும் அது அதிகபட்சம் ஐந்து ரூபாய் வருமா..?
அடுத்த தடவை யாருக்காவது மூட்டு வலி மாதிரி இருந்தால் ,
தெரிந்தால் டக்டரிடம் போவதுக்கு முன் இதை செய்யுங்கள்..
தெரியாத வருக்கும் தெரியப்படுத்துங்கள்.!
காலத்தே தரப்படும் சில அனுபவ மருந்துகள் விலைமதிப்பில்லாதது.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!
இயற்கையோடு இணைந்து வாழ்வோம் !!!

Best regards,