Monday 24 September 2018

குடி

சும்மா எடுத்தோம் குடித்தோம் படுத்தோம் என்று திருப்திப்பட்டுவிட்டுப் போகமுடிகிறதா? அதற்கும் எத்தனை கதைகளை யோசித்து யோசித்துச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள் முன்னோடிகள். எவ்வளவு பொறுப்புணர்ச்சி!!👌👌👌

குடிக்காதவர்களைப் பற்றி பரிதாபப்படுகிறேன். அவர்கள் காலையில் எழுந்ததும் அவர்கள் என்ன உணர்கிறார்களோ அதனைத்தான் நாள் முழுவதும் உணரவேண்டும்

- ப்ராங்க் சினாட்ரா

ஒரு புத்திசாலியான ஆள் சில நேரங்களில் முட்டாள்களுடன் நேரத்தை செலவழிப்பதற்காக குடிக்கும்படி ஆகிவிடுகிறது

- எர்னஸ்ட் ஹெமிங்வே

24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பியரில் 24 பியர் போத்தல்கள். தற்செயலா என்ன?

- ஸ்டீபன் ரைட்

நாம் குடிக்கும்போது, போதை ஏறுகிறது. நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்.

- ப்ரையன் ஓ-ரோர்க்கே

கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகிறார் என்பதற்கும் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதற்கு பியரே அத்தாட்சி

- பெஞ்சமின் ப்ராங்க்ளின்

குடிப்பது எல்லா உயிர்க்கும் பொது. குடிகாரனாவது மனிதன் மட்டும்தான்.

- ஹென்றி ஃபீல்டிங்

குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை

- ஹென்றி யங்மேன்

இதுவரை நான் குடித்த பியர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பியர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பியரை நான் குடிக்காமல் இருந்தால், அவர்களது கனவுகள் அனைத்தும் சுக்குநூறாகும். பிறகு நான் என்னிடமே சொல்லிக்கொள்கிறேன், "சுயநலத்துடன் என்னுடைய ஈரலைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இந்த பியரை குடித்து அவர்களின் கனவை நிறைவேற்றுவதே சிறந்தது என்று முடிவெடுக்கிறேன்".

- ஜாக் ஹாண்டி

Best regards,