Sunday, 9 September 2018

இடையூறாக இருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்ற தாய்க்கு குழந்தைகளின் மடல் ...

இடையூறாக இருந்த இரண்டு குழந்தைகளையும் கொன்ற தாய்க்கு குழந்தைகளின் மடல் ...

Image result for biryani abirami and her 2 children images

#மனதைவருடியவரிகள்😭😭😭😭

#எங்கள்தாய்க்குஓர்_கடிதம்..!

தாய்ப்பாலை அமுதாக்கி
ஊட்டிய எங்கள் தாயே!
மார்மீது போட்டு
விளையாடிய தந்தையே!
நீங்கள் நலமா!?
நாங்கள் நலமாயிருக்கிறோம்!

பத்துமாதம் சுமந்தவளே
பிரசவ வலி அதிகம்
நாங்கள் தந்தோமா?

கள்ளிப்பால் கொண்டு
கலைத்திருக்கலாமே தாயே!
வெள்ளைப்பால் கொண்டு
கொன்றிருக்க வேண்டாமே!

எங்களை கருவில் சுமக்க
காரணமான என் தாயே!
வளர்ந்த பின்பு நாங்கள்
சுமைகள் ஆகிவிட்டோமா!?

அப்பா!
பாவம்! நல்ல ஜீவன்
நித்தமும் முத்தம் தந்து
செல்வீர்களே!
அழுதுக் கொண்டு இருக்கிறீர்களா?

எங்கள் விளையாட்டு தோழர்கள்
நாங்கள் இல்லாமல் விளையாடுகிறார்களா!?

எங்கள் பள்ளி ஆசிரியர்கள்
எங்களை கேட்டார்களா?
விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டீர்களா!?

மீண்டும் வகுப்புக்கு எப்போது போவது?
பள்ளி தோழர்களை எப்போது காண்பது?
கஷ்டமாக இருக்கிறது!

அருமையானவர்களே
காவலர்கள் எங்களை
நெஞ்சணைத்து
அமரர் ஊர்தியில்
கொண்டு சென்றனர்.
எங்களுக்கு பயமே இல்லை!
அன்பாக நடந்து கொண்டார்கள்!

எங்களுக்கு ஏதோ பரிசோதனையாம்!
நாங்கள் இறந்து விட்டோமாம்
பிரேத பரிசோதனையாம்!

ஒரு கல் மேஜை மீது கிடத்தினார்கள்
எங்கள் உடம்பில் துணிகள் இல்லை.
எல்லாமே வீட்டலமாரியில் உள்ளதால்
எடுத்து வர மறந்து விட்டார்கள்!

எங்களை சுற்றி இரண்டு
மருத்துவர்களும்
மருத்துவம் படிக்கும் என்
அண்ணன் அக்காக்களும்
ஏனோ அவர்கள் கண் கலங்கி நின்றனர்!

காக்கி உடை அணிந்த மாமா
ஒருவர் கத்தி கொண்டு
எக்கள் நெஞ்சு கிழித்தார்
எங்களுக்கு வலித்தது!
தலையை கீறியபோது
சற்று அதிகமாக வலித்தது.
பின்பு ஏதோ ஒன்று கொண்டு
தைத்தார் கிழிந்த கீறிய பாகங்களை.
பணம் எதுவும் வாங்க வில்லை
மனிதநேயம் உள்ள மாமா

பின்னர் குளிப்பாட்டி தலை துடைத்து புத்தாடை அணிவித்து
நம் சொந்தகாரரிடம் கொடுத்தார்.!
மாலை போட்டு மண்ணுக்குள்
வைத்து சென்றனர் எங்களை!

இனி எங்களுக்கு
தாய் தந்தை எவருமில்லையா!?
எங்கள்  உலகம் எங்கேயோ?
அங்கே உங்களை போன்ற
பெற்றோர்கள் கிடைப்பார்களா?

அன்பு பாசம் நேசம்
அனைத்தும் தந்தீர்கள்.!
மரப்பாச்சி பொம்மைகள்
மனம் நிறைய சந்தோஷங்கள்!
புத்தாடை புதுபுது  பலூன்கள்!
பிறந்தநாள் பண்டிகைநாள்
கொண்டாட்டங்கள்
எவ்வளவு இனிமையான நாட்கள்!

எங்கள் புகைப்படத்தை மட்டும்
வீட்டில் வைக்காதீர்கள்._அப்பா!
நல்ல மனம் கொண்டவர்.
அழுததழுதே அயர்ந்துவிடுவார்.

நாங்கள் இல்லாமல் தூங்காதவர்!
எங்களை அவர் உலகமாக எண்ணியவர்!
நல்ல மனிதர்!

அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால்
நீங்களே அப்பாவாக!
எங்கள் தாயே எங்கள் அம்மாவாக!
வரம் வேண்டியே இறைவனிடம்
பிரார்த்திப்போம்.!

ஏன் தெரியுமா?

அப்பா உங்கள் உதிரமும்
அம்மா உங்கள் தாய்ப்பாலும்
எங்களை உயிராக்கியது.

பெற்றக் கடன் தீர்க்க
செஞ்சோற்றுக் கடன் அடைக்க
உங்களுக்கே நாங்கள் மக்கள்
ஆக வேண்டும்.

அப்பா!
அலுவலகம் செல்லுங்கள்
அழுதழுது உடல் வருந்தாதீர்கள்.

அம்மா!
நீங்கள்தானே எங்கள் வாழ்க்கை.
நிம்மதி இழந்து விட்டீர்களோ?
நாங்கள் இடையூறாய்
இருந்து விட்டோமோ?

மன்னித்து விடுங்கள் அம்மா!

ஒரே ஒரு ஆசை எங்களுக்கு
இனி வருடம் வருடம்
இறந்தநாள் கொண்டாடுவீர்களா!?

உங்கள் நினைவுகளிலும்
வலிகளிலும்  இருந்து
நிவாரணம் பெற
நாங்கள் பிரார்த்திக்கிறோம்!.

விடை தாருங்கள் எங்கள்
அன்புள்ள பெற்றோரே!!!

Best regards,